பாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]

பாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]

Five catholic piests sexploit married woman with confession - 26-06-2018

ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான வேலைகள்: கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா ஆசாரமான சர்ச்-தேவாலயம் [Malankara Orthodox Church (MOC)] ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்[1]. பாவம், பாவ மன்னிப்பு, பாவ நிராகரணம், தூய்மை என்றெல்லாம் ஏகப்பட்ட சரத்துகளுடன், இந்த சர்ச் நம்பிக்கையாளர்களுக்கு வலை வீசுகிறது[2]. இந்த  தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்[3]. அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது[4]. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்[5]. அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார். ஆனால், அவனோ தனது மதத்தின் விசுவாசத்தை விடுத்து, காமுகனாக மாற்றி, அப்பெண்ணை  கற்பழிக்கத் துணிந்தான்.

5 Catholic sex priests-Tamil-Dinakaran cutting

பாவ மன்னிப்பு பேச்சை பதிவு செய்தது, வலை விரித்தது: பாவமன்னிப்பின் போது, அந்தப் பெண் கூறியதை பாதிரியார் பதிவு செய்துள்ளான். அவ்வாறு செய்யலாமா-கூடாதா என்று அந்த புண்ணியவான்கள் தான் கூறவேண்டும். அதை அவள் அடுத்த முறை சர்ச்சிற்கு வரும் போது, கேட்க வைத்து மிரட்டியுள்ளான். அதனை அவருடைய கணவரிடம் சொல்வேன் என்றும் மிரட்டலை நீட்டியுள்ளான். பிறகு, படுக்கைக்கு அழைத்து, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

Malankara orthodox confession , etc

கேரளாவில் கிருத்துவ செக்ஸ் குற்றங்கள் அதிகமாகி வருவது: கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் மாவட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார். நடவடிக்கை தேவை “கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Kerala 5 pastor rape - Tamil

ஐந்தல்ல, எட்டு பாதிரிகள்: இது தொடர்பாக கணவன் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது ஐந்து பாதிரியார்கள் என கருதினேன். ஆனால் மேலும் மூன்று பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது[6]. மெயில் பரிமாற்றத்தை வைத்து பார்க்கும் போது எட்டு பாதிரிகளின் தொடர்புகள் இருப்பது தெரிய வருகிறது[7]…..இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும்”, என்றார்[8]. அதாவது, தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதனால், கூறவில்லையா அல்லது சர்ச்சின் அழுத்தத்தினால், மறைக்கப் படுகிறதா என்று தெரியவில்லை[9]. இருப்பினும், இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு இளம்பெண்ணை, எப்படி, இந்த கத்தோலிக்க பாதிரிகள் இப்படி கற்பழிப்பார்கள் என்று தெரியவில்லை. நினைத்தாலே, அருவருப்பு, கோபம், திகைப்பு, வருத்தம் என்று எல்லாவற்றையும் தூண்டும், இந்நிகழ்ச்சி அசாதரணமானது. ஆனால், எதுவுமே நடக்காதது போல, அனைவரும் பொத்திக் கொண்டு இருப்பது திகைப்பாக-அதிர்ச்சியாக இருக்கிறது. அட கருமாந்திரமே, இப்படியுமா இருப்பார்கள், என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அம்மிருகங்கள் வெட்கப் பட்டது போல தெரியவில்லை.

malankara-orthodox-holy-confession-sex-etc

உணர்ச்சியற்ற ஆங்கில ஊடகங்களின் செய்தி வெளியீடு: NDTV சொல்கிறது[10], “கேரளா மனிதன் மனைவியை சாமியார்கள் பலத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறான்: சர்ச் விசாரணை செய்யும்படி ஆணையிடுகிறது [“Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe”!] என்று செய்தி வெளியிட்டுள்ளது. PTI செய்தியை அப்படியே வெளியிட்டு, தமது பத்திரிகா தர்மத்தை சுருக்கிக் கொண்டது. ஆனால், இவைதான், புலன் விசாரணை ஜார்னலிஸம், போர் நடக்கும் இடத்திலேயே நின்று செய்திகளை சேகரிக்கும் மாவீர சாகசம், என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன[11]. ஆகையால், கத்தோலிக்க / கிருத்துவ சாமியார்கள் கற்பழித்தால், சர்ச் ஆணையிடும் அவ்வளவே தான், வேரொன்றும் இல்லை என்பது போன்று செய்தி வெளியிடுகின்றன. அதே போக, ஒரு கிருத்துவ சாமியாருக்கு இடமாற்றம் வேண்டுமென்றால், ஒரு பெண்ணைக் கற்பழிக்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், கிருத்துவர்களும், ஊடகங்களும் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்!

Malankara orthodox HOLY confession , sex, etc-allowed

செக்யூலரிஸ போதையில், செக்யுலரிஸ ரேப்பான கதை: அஸிபா பானு என்று ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம், இப்பொழுது காணாமல் போய் விட்டனர். கற்பில் நிறம் பார்க்கின்றனரோ, பெண்மையில் தரம் பிரிக்கின்றனரோ, நம்பிக்கை என்று சோரம் போனவர்களுக்கு சமாதி கட்டுகின்றனரோ? கந்தமால் ரேப் போல நாறிவிட்டதால், அமுக்கப் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, ஜார்கன்ட் ரேப் வேறு சேர்ந்து விட்டது. ஆக, கிருத்துவ ரேப் என்பது, ஏதோ சாதாரண விசயம் போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். மெத்தப் படித்த மேதாவிகளும், அறிவிஜீவிகள், பெண்ணிய பேராங்கனைகள், நாரிமணிகள் முதலியோரும் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். ரேப்பிற்குக் கூட மதம் பார்ப்பது கலாட்டா செய்வது என்பதெல்லாம், செக்யூலரிஸ போதை இந்தியாவில் தான் கடைபிடிக்கப் படும் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

29-06-2018

Malankara orthodox HOLY SEX

[1] மாலைமுரசு, பாவமன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் பாலியல் தொல்லை, பதிவு: ஜூன் 27, 2018 11:34.

[2] http://www.malankara.com/node/206

[3] https://www.maalaimalar.com/News/National/2018/06/27113449/1172882/Kerala-church-priests-harassment-of-women.vpf

[4] தினத்தந்தி, பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் 5 பாதிரியார்கள் இடைநீக்கம், திருவனந்தபுரம், ஜூன் 27, 2018, 02:16 PM

[5] https://www.dailythanthi.com/News/India/2018/06/27141631/5-Kerala-church-priests-sexually-abuse-blackmail-married.vpf

[6] தினகரன், இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு, 2018-06-28@ 01:33:29.

[7] Business Stanard, Man alleges priests sexually abused wife; church orders probe, Press Trust of India | Kottayam (Ker), Last Updated at June 26, 2018 18:15 IST

Although the man, who came to know about the alleged sexual abuse and blackmailing by priests after checking his wife’s e-mail account, has levelled allegations against eight priests, he has reportedly named only five priests as the role of three others in the incident could not be established.

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=415465

[9] https://www.business-standard.com/article/pti-stories/man-alleges-priests-sexually-abused-wife-church-orders-probe-118062600879_1.html

[10] NDTV, Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe, Kerala | Press Trust of India | Updated: June 26, 2018 22:55 IST.

[11] https://www.ndtv.com/kerala-news/kerala-man-alleges-priests-sexually-abused-wife-church-orders-probe-1873679

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “பாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]”

  1. vedaprakash Says:

    விகடன், பாவமன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம் – குற்றப்பிரிவு போலீஸார் விசாணைக்கு உத்தரவு!
    சிந்து ஆர், Posted Date : 02:30 (30/06/2018)Last updated : 02:30 (30/06/2018)

    https://www.vikatan.com/news/tamilnadu/129278-crime-branch-inquiry-order-of-the-prosecution-accused.html

    கேரள மாநிலம் கோட்டயத்தில், பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து, குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபை

    கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபையில் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற திருமணம் ஆன பெண்ணை, பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்தப் பெண் செய்த தவற்றை அவரது கணவனிடம் கூறிவிடுவதாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்தப் பாதிரியார். பெண்ணுடன் தனியாக இருக்கும் புகைப்படத்தை மேலும் 4 பாதிரியார்களுக்கு அனுப்பியதால், அவர்களும் அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பியிருக்கிறது சர்ச் நிர்வாகம். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சர்ச் நிர்வாகி ஒருவருடன் பேசும் ஒரு ஆடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. அதில், “எனது மனைவிக்கு ஏற்பட்ட பிரச்னைபோன்று இனி யாருக்கும் ஏற்படக் கூடாது. சர்ச்சில் பெண்கள் நம்பிக்கையுடன் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். குற்றம் செய்த பாதிரியார்கள் இனி சர்ச்சுக்கு வராமல் இருக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக நான் எந்தத் தியாகமும் செய்யத் தயார்” என்று கூறியுள்ளார்.

    பாலியல் பலாத்காரம்

    இந்த நிலையில், பாதிரியார்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொள்ள கேரள டி.ஜி.பி-க்கு முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் எழுதியிருந்த கடிதத்தில், “பாதிக்கப்பட்ட பெண், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கவில்லை என்றும், அவர் கணவன் சர்ச் நிர்வாகத்துக்கு மட்டுமே புகார் அளித்தார் என்றும் கூறுவதை ஏற்க முடியாது. இது, கேரள காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும். எனவே, ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் வழக்கை விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, இந்தச் சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவு போலீஸார் வழக்கை விசாரணை செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாவமன்னிப்பு கேட்கவந்த பெண்ணை ஓட்டலில் அறை எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார், அந்தப் பெண்ணை வைத்தே அறை வாடகையைக் கொடுக்கவைத்துள்ளார். கணவரின் டெபிட் கார்டு மூலம் ஓட்டலுக்கு பணம் செலுத்தியிருக்கிறார் அந்த பெண். பணம் செலுத்தப்பட்டதுகுறித்த குறுஞ்செய்தி, பெண்ணின் கணவரின் மொபைல் போனுக்கு சென்றதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

  2. vedaprakash Says:

    தி.இந்து, பாவ மன்னிப்பு கோர வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள்: விசாரணைக்கு கேரள முதல்வர் உத்தரவு, Published : 29 Jun 2018 16:00 IST
    Updated : 29 Jun 2018 17:33 IST; ஏஎன்ஐ
    http://tamil.thehindu.com/india/article24289790.ece

    கேரளாவில் மலங்காரா ஆர்த்தோடக்ஸ் சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி 5 பாதிரியார்கள் பாலியல் முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள முதல்வர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார்கள் 5 பேர் மீதான போலீஸ் விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டக் கடிதம் மாநில காவல்துறை தலைவருக்கு வந்தது. விசாரணையை உடனடியாக முடுக்கிவிடும்பொருட்டு காவல்துறை தலைவர் , குற்றப்பிரிவு உயரதிகாரிகளிடம் நேரடியாக ஒப்படைத்துள்ளார்.

    முன்னதாக இப்பாதிரியார்கள் மீது தேவாலயத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது.இருப்பினும் காவல்துறை விசாரணையில் அவர்கள் மீது சட்டப்படி தண்டனை வழங்க ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    பாதிரியார்கள் பேசிய ஆடியோ

    சர்ச்சில் உறுப்பினராக உள்ள ஒருவரின் மனைவி பாவமன்னிப்பு கேட்கவந்தபோது, அவரை மிரட்டி அங்குள்ள பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அப்பெண்ணின் திருமணத்திற்கு முன்பே கூட இப்படியான பாலியல் வன்கொடுமையை பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

    பாதிக்கப்பட்டவரின் கணவர் பாதிரியார்கள் பேசிய ஆடியோ கிளிப்பை கண்டுபிடித்து வெளியிட்ட பிறகு இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையில் சர்ச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண் பாவமன்னிப்புக்காக தனது ரகசியங்களை பேசியதை வைத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் இந்தப் பாதிரியார்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

    புகார் கடிதம் பெறப்பட்டபிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பாதிரியார்களும் சர்ச்சிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

  3. vedaprakash Says:

    The Hindu, Sex scandal rocks Orthodox Church in Kerala
    George Jacob KOTTAYAM , JUNE 28, 2018 17:50 IST
    UPDATED: JUNE 29, 2018 08:23 IST

    https://www.thehindu.com/news/national/kerala/sex-scandal-rocks-orthodox-church/article24279976.ece

    Man alleges misuse of ‘confession’ by priests to sexually exploit his wife
    The Malankara Orthodox Syrian Church, which has been enjoying a comfortable public positioning in recent times, especially after the recent Supreme Court verdict in the more-than-a-century-old legal battle with the Syrian Jacobite Church, now finds itself in the vortex of a storm following a sex scandal in which five of its priests have been named and ‘confession’, one of the seven sacraments of the Church, brought under a cloud.

    The issue had come up before the Church authorities in mid-May when one of the members of the Niranam diocese, in central Travancore, complained to the diocesan head that at least five priests of the Church were sexually exploiting his wife, a mother of two kids, by blackmailing her making use of the secret confession she had made to them on separate occasions.

    He came to know about it when he checked his wife’s mails for a different purpose and found copies of hotel bills mailed to her. On being questioned, his wife told him that she was blackmailed and forced to offer sexual favours by a priest before who she had confessed to a premarital relationship with a priest of the Church, who was also her relative and neighbour.

    According to the husband, she had named five priests in all, four of them connected with same diocese and another from the neighbouring diocese of Thumpamon. He also alleged that his wife had confessed to her relationship with two others, both outside the religion.

    The husband also produced a ‘statement’ by the wife which he had elicited from her. The issue remained at the diocesan level and the diocesan authorities had put the five priests under suspension and denied them the right to discharge their ecclesiastical duties.

    However, with the issue getting widely discussed in the social and visual media, and the National Women’s Commission taking up the matter, the Church authorities were forced come up with a response on Wednesday. Church Priest Trusty M.O. John told The Hindu that the Church had appointed a Commission consisting of priests and legal personalities to look into the issue.

    If true, the misuse of confessional information, whether for sexual or other favours, was a grave issue . The Church would like the whole truth to come out, he said.

    On Thursday, the woman’s husband appeared before the panel at the Niranam diocesan headquarters and gave evidence before the panel. One of his key demands is that ‘confession’ as a sacrament should be put an end to as it was being misused by priests.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: