ஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை! (2)

ஜான் ஜோசப்செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை! (2)

John Joseph with co-accused 07-03-2018

போலீஸ் அதிகாரிகளின் மீது கன்னியாஸ்திரீக்கள் வழக்குப்போட்டது [1997-2002]: 1997ல் பிரேம் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரண்டு SPக்கள் [Superintendents of Police – Premkumar and Panneerselvam] கஸ்டடியில் இருக்கும் போது, சஹாய ராணி மற்றும் பெமினா ரோஸ் [Sahaya Rani and Femina Rose] என்ற கன்னியாஸ்திரிக்களை பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று புகார் கொடுக்கப்பட்டது[1]. அதாவது புடவை-ரவிக்கை எல்லாம் அவிழ்த்து பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக, அவ்விரு கன்னியாஸ்திரீக்கள் வழக்கு போட்டார்கள். அவர்களிடம் வற்புருத்தி வாக்குமூலங்கள் வாங்கப் பட்டன என்றும் சொல்லப்பட்டது. இதனால், அக்டோபர் 2002ல் விசாரித்த, நீதிபதி கற்பகவிநாயகம், போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க ஆணையிட்டார்[2]. இரண்டு SPக்களும் மிருகத்தனமாக, நடந்து கொண்டுள்ள படியால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[3]. இவ்வழக்கை சிபி-சி.ஐ.டி விசாரித்தாலே போதும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆணையிட்டார்[4]. ஆனால், அதே நேரத்தில், மற்ற விவாகரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதே பிரேம் குமாரை வைத்து தான், ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வழக்கும் விசாரிக்கப் பட்டது. பன்னீர்செல்வம் 2004ல் ஆவடிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்[5].

John Joseph released 04-03-2018-Dinakaran

கைது செய்யப் பட்டவர்களில் இருவர் மரணம்: இது தொடர்பாக அப்போது குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆபாஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ஜோசப், அவரது தங்கை கணவர் சந்தனராஜன், இன்னொரு பாதிரியார் மரியஜான், பெண் சீடர்களான ராணி (56), பெமினா என்ற பெமி (43) ஆகிய 5 பேரை அக்டோபர் 1997ல் கைது செய்தனர்.  அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே சந்தனராஜன், மரியஜான் ஆகியோர் இறந்து விட்டனர். கில்பர்ட், ராஜேஸ் போன்று இவர்களும் இறந்து விட்டனர் போலும். போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப் பட்டனர். இதனால் பாதிரியார் ஜான் ஜோசப், பெண் சீடர்கள் ராணி, பெமி ஆகிய 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது.

John Joseph released 04-03-2018. Dinakaran

21 ஆண்டுக்கு பிறகு பாதிரிகன்னியாஸ்திரீக்கள் விடுவிக்கப் பட்டனர்: இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு 04-03-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார்[6]. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பாதிரியார் ஜான் ஜோசப், ராணி, பெமி ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்[7]. நிச்சயமாக அவர் ஆடியோ-வீடியோ வாக்குமூலங்கள், உயர்நீதி மன்ற தீர்ப்புகள், முதலியவற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் தரப்பில் வக்கீல்கள் ராபர்ட் புரூஸ், ஜான்சன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ராபர்ட் புரூஸ் கூறும்போது ‘இந்த வழக்கை பொருத்தவரை போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இயற்கை மரணத்தையே கொலை வழக்காக சித்தரித்து இருந்தனர். இதை நாங்கள் முறையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் கோர்ட்டு மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார். ஊடகங்கள்,.மிகச் சுருக்கமாக செய்தியை வெளியிட்டுள்ளன. இங்கு கூட, பாதிரி வக்கீல்கள் சொன்னதை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளனவே அன்றி, அரசு தரப்பில், போலீஸ் தரப்பிக் என்ன நினைக்கிறார்கள்ரவர்களுடைய நிலைப்பாடு என்ன, பாதிக்கப் பட்டவர்களிம் நிலை என்ன போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஆனால், இதற்கு மேல்-முறையீடு என்றெல்லாம் இருக்காதா அல்லது போலீஸார் அப்படியே அமுக்கிவிடுவார்களா? கில்பர்ட் கொலை / மரணம், ராஜேஸ் மரணம் / கொலை முதலியவை எல்லாம் மர்மமாகத்தான் இருக்கின்றன.

John Joseph - Charimatic centre-singing dancing-saffron

சட்டப்படி எடுக்கப் படும் நட்டவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகள் முதலியன: மாஜிஸ்ட்ரேட் அளவில் தான், குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டுள்ள்னர். ஆகவே, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று அப்பீல் சம்பிரதாயங்கள் பின்பற்றப் படலாம். சட்டப்படி நட்டவடிக்கைகள் எடுக்கப் படும் போது, சட்டரீதியாக, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுவிக்கப் படுவது என்பது, சமீபத்தில், இந்தியாவில் தொடர்ச்சியாக நடை பெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சமய ரீதியில் உள்ள தீர்ப்புகள், ஆரம்பத்தில் பெரியாளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பிறகு, அது மறக்க, மறைக்க அல்லது மறுக்கப் படுகிறது. இவ்விசயத்தில், இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு அல்லது போலீஸ் துறை மேல்-முறையீடு செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கையிடவில்லை. ஒருவேளை, அரசியல் நிர்பந்தத்தினால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கூட, போலீஸ் துறையில் உள்ள சட்டப்பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வழக்கில், ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நீதி மன்றத்தில் ஆணையிடப் பட்டுள்ளது.

John Joseph - Charimatic centre-singing dancing

செக்யூலரிஸத்தில் சட்டமுறைகள் நீர்த்துப் போகின்றன: நித்தியானந்தா விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் சன்–டிவி, இதைப் பற்றி, நாள் முழுவதும் 24×7 ரீதியில், போட்டதையே போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. “நக்கீரன்” போன்றவை, அதனை வியாபாரமாக்கி, சம்பாதித்தது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்று அவர் விடுவிக்கப் பட்ட பிறகும், அவரை கேலிச் சித்திரமாக்கி, அச்சு-ஊடகம் மற்றும் திரைப்படங்களில் ஏய்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் போன்ற விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. சன்–டிவி, “நக்கீரன்” இதைப் பற்றி செய்திகள் வெளியிடுவதும் இல்லை, சிறப்பு இதழ்கள் போட்டு வியாபாரமும் செய்யவில்லை. கிருத்துவ செக்ஸ் விவகாரங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மறைத்தாலும், அவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் மறக்க மாட்டார்கள். மேலும், செக்யூலரிஸம் என்ற சித்தாந்தம் வரும் போது, மைனாரிடி மதங்கள் என்று வரும் போது, பெரும்பாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது தான், சிறந்த வழி என்பது போல கடைப் பிடித்து வருகிறார்கள். சட்டத்தை “செக்யூலரிஸமாக்க” முடியுமா என்று பலதடவை கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதை, மைனாரிடி மதங்களுக்கு எதிர் என்பது போல சித்தரிக்கப் பட்டு, தடுக்கப் பட்டு வந்த்ள்ளது. இனி என்ன நடக்கும் என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

21-03-2018


John Joseph - Charimatic centre-webmat-1

[1] Madras High Court, Sis Rani Alias Sahayarani … vs State Rep. By Inspector Of Police on 22 December, 1997, Equivalent citations: 1998 CriLJ 1741; Bench: M Karpagavinayagam

[2] https://indiankanoon.org/doc/875618/

[3] The Hindu, High Court orders CB-CID prosecution against SPs, By A. Subramani, Thursday, Oct 10, 2002

[4] http://www.thehindu.com/2002/10/10/stories/2002101002210500.htm

[5] According official information, Davidson had sought leave and it was granted. However, Premkumar’s appointment as Kancheepuram SP seem permanent as the Cuddalore SP post has been filled by the Commandant of Regimental Centre Avadi S. Pannerselvam.

https://timesofindia.indiatimes.com/Premkumar-back-in-Kancheepuram/articleshow/937562.cms

[6] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்கார வழக்கில் இருந்து பாதிரியார் விடுதலைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு, Posted By: KMK ESAKKIRAJAN Updated: Sunday, March 4, 2018, 16:05 [IST].

[7] https://tamil.oneindia.com/news/tamilnadu/nagercoil-church-father-released-in-rape-case-313248.html

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: