மாணவியை கடத்தி கூடலூர் சர்ச்சில் போலி திருமணம் செய்து பாஸ்டர் உதவியுடன் கற்பழிப்பு: காமுகர் மூன்று பேருக்கும் ஆயுள்!

மாணவியை கடத்தி கூடலூர் சர்ச்சில் போலி திருமணம் செய்து பாஸ்டர் உதவியுடன் கற்பழிப்பு: காமுகர் மூன்று பேருக்கும் ஆயுள்!

Raping by three christians- imprisonment - 07-10-2017

கன்னியாகுமரிலிருந்து ஈரோடு வந்த கிருத்துவக் குடும்பம்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வசந்தகுமாரி. கன்னியாகுமரியில் வசித்து வரும் இவரது அண்ணன் ஏசுதாஸ் என்பவரின் மகன் விஜயகுமார் (37)[1]. அதாவது, இவர்கள் எல்லோரும் கிருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கஸ்பாநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவருடைய தங்கைக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கடத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் விஜயகுமார் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். விஜயகுமார் வாரத்தில் ஒரு நாள் வசந்தகுமாரியின் வீட்டிற்கு வருவது வழக்கம்[2]. அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் விஜயகுமார் பழகி உள்ளார்[3]. அந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். அந்த சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி விஜயகுமார் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிஉள்ளார். அப்பெண்ணின் மற்ற விவரங்கள் தெரியவில்லை.

Raping by three christians- imprisonment - 06-10-2017-TOI

கிறிஸ்தவ தேவாலயத்தில் விஜயகுமார் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது: பருவத்தின் கோளாறினால், அப்பெண் விஜயகுமாரை நம்பி, ஒப்புக் கொண்டு அவனை ஹிருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளாள். இதைத்தொடர்ந்து கடந்த 23–8–2016 அன்று மாணவியை விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு கடத்தி சென்றார். கூடலூர் சாவடிபேட்டை பொன்வயல் பகுதியை சேர்ந்த மதபோதகரான முனியாண்டி என்கிற ரமேஷ் (41) என்பருவடைய வீட்டில் வைத்து / கிறிஸ்தவ தேவாலயத்தில்[4] கடத்தி வந்த மாணவியின் கழுத்தில் விஜயகுமார் தாலி கட்டினார். அப்படியென்றால், இது கிருத்துவ முறைப்படி நடந்துள்ள விவாகம் என்று தெரிகிறது. ஒருவேளை அப்பெண் இந்து என்றால், அவள் மதமாற்றம் செய்யப் பட்டிருக்க வேண்டும். இவர்களின் கிருத்துவ பின்னணீயும் உறுதியாகிறது / விஜயகுமாருக்கு உதவியாக அவருடைய நண்பரான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா அழகியபாண்டிபுரத்தை சேர்ந்த ஜோசப்ராஜா (27) உடனிருந்தார்[5]. அதன் பின்னர் விஜயகுமாரும், அந்த மாணவியும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்கள். ஜோசப்ராஜா மற்றும் பாஸ்டர் ரமேஷ் முதலியோரும் அவளைக் கற்பழித்துள்ளனர்[6]. கல்யாணம் செய்து கொண்ட மனைவியை, எந்த கணவனாவது அடுத்துவன் கூட படுக்க அனுமதிப்பானா என்று கவனித்தாலே, அவன் திருமணம் செய்து கொண்டதே பொய்யானது, மோசடியானது, கடவுளை-தாம்பத்தியத்தை ஏமாற்றுவது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

Raping by three christians- imprisonment - 07-10-2017-DD

 பெண்ணை காணாத பெற்றோர் விவரமறிந்து புகார் கொடுத்தது: இந்தநிலையில் மாணவியின் பெற்றோர், தங்களது மகளை விஜயகுமார் கடத்தி சென்றுவிட்டதாக கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வ்விவரம் அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்று புரியவில்லை. ஊடகங்களும் விவரிக்கவில்லை. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற விஜயகுமாரை தேடி வந்தனர். அதாவது, விவகாரம் தெரிந்திருக்கிறது, ஆனால், அமுக்கி ஆசிக்கப் படுகிறது போலும். விசாரணையில் விஜய்குமார், முனியாண்டி, ஜோசப்ராஜா உதலியோரின் வக்கிர செயல் தெரிய வந்தது. பிறகு கூடலூரில் இருந்த மாணவியை போலீசார் மீட்டதுடன், அவரை கடத்திய விஜயகுமார் மற்றும் அவருக்கு உதவியதாக இருந்த முனியாண்டி, ஜோசப்ராஜா ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கடத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஒரு வருடத்திர்குப் பிறகு, இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் நடந்து வந்தது.

Raping by three christians- imprisonment - 07-10-2017-Dinamani

பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனை: வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, விவரங்களை நன்றாகவே ஆராய்ந்துள்ளார். பெண்ணை ஏமாற்றி, போலித் தனமாக திருமணம் செய்து கோண்டு ஊட்டுக் கற்பழிப்பு நடத்தியதை அறிந்து, அந்த காமுகர்களுக்கு சரியான தண்டனை அளித்துள்ளார். 05-11-2017 அன்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், மாணவிக்கு தாலிகட்டிய குற்றத்திற்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

Raping by three christians- imprisonment - 07-10-2017-Tamilmurasu

பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக முனியாண்டி, ஜோசப்ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை: மேலும் பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக முனியாண்டி, ஜோசப்ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.பத்தாயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனையும், தாலி கட்டியதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதால் விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், மொத்தம் ரூ.மூவாயிரம் அபராதமும், முனியாண்டி, ஜோசப்ராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. இருபதாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி திருநாவுக்கரசு பரிந்துரை செய்து உள்ளார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்[8].

Vijauyakumar and his friends get life-for raping a girl-Dinakaran-07-11-2017

பெண்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க அடிப்படை விசயங்கள் தெரிவிக்கப் படவேண்டும்: இவ்வழக்கைப் பொறுத்த வரையில், ஈரோடு பாஸ்ட் டிராக் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பது பாராட்டத் தக்கது. ஆனால், ஊடகங்கள் மூலம், முழு விவரங்கள் கிடைக்கவில்லை. தமிழக ஊடகத்தார், மற்ற விசயங்களில் ஏதோ முக்கியமான விசயம் போல, துருவி ஆராய்ந்து விவரங்களைக் கொடுக்கின்றன. தேவையில்லாத விசயத்தை  வைத்துக் கொண்டு, தினம்-தினம் டிவிக்களில் விவாதங்கள் நடத்துகின்றன. ஆனால், பெண்கள் இவ்வாறு கற்பழிக்கப் படுவது பற்றி, பல விசயங்களில் விசயங்களை மறைக்கவே முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆகவே, விழிப்புணர்வு கொள்ள குறைந்த பட்சம், அடிப்படை விசயங்கள் தெரிவிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பட்க்கும் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

© வேதபிரகாஷ்

08-11-2017

Raping by three christians- imprisonment - 06-10-2017-church-tali etc

[1] தமிழ்முரசு, மாணவியை கடத்தி பலாத்காரம்: மூன்று பேருக்கு ஆயுள், 11/7/2017: 4:09:31 PM

[2] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=110851

[3] தினத்தந்தி, பள்ளிக்கூட மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தொழிலாளி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை, நவம்பர் 07, 2017, 04:30 AM

[4] கிறிஸ்தவ தேவாலயத்தில் – என்கிறது, தமிழ் முரசு.

[5] http://www.dailythanthi.com/News/Districts/2017/11/07010310/Kidnapping-school-student-Life-imprisonment-for-3.vpf

 

[6] Times of India, Three men sentenced to life imprisonment for raping minor girl in TN, V Senthil Kumaran| TNN | Nov 6, 2017, 20:28 IST.

https://timesofindia.indiatimes.com/city/chennai/three-men-sentenced-to-life-imprisonment-for-raping-minor-girl-in-tn/articleshow/61534130.cms

The Erode district sessions court on Monday 06-11-2017, sentenced three people to life imprisonment for raping a 15-year old girl in 2016. Judge N Thirunavukkarasu of the mahila court awarded the sentence to Y Vijayakumar, 31, and his friend F Joseph Raja, 27, of Pandipuram in Kanyakumari district, as well as Muniandi alias Ramesh, 41, a pastor from Gudalur in the Nilgiris district. Vijayakumar, who was working as a contract worker in Sulur, Coimbatore, used to visit his sister, Y Vasanthakumari, at Ukkaram near Nambiyur in Erode district regularly. “He developed contact with the minor girl living near his sister’s house. He promised the girl that he will marry her,” said court officials. Later, Vijayakumar abducted the girl to Gudalur, where he married her on August 25, 2016, with help of the pastor and his friend Joseph Raja. They raped her after the marriage.

[7] தினமணி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை, By DIN  |   Published on : 07th November 2017 07:31 AM.

[8] http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/nov/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2803266.html

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: