கிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு!

கிடியோன் ஜேக்கப் – பிடோபைல் குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு!

Gideo Jacb arrested-pedophile 27-10-2017-The Hindu

பிடோபைல் என்றால்குழந்தை கற்பழிப்பாளிஅதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழிப்பது: வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், அது ஏதோ சாதாரணமான விசயம் போலத்தான் சிறியதாக செய்தி வெளியிட்டு அடங்கி விடுகின்றன. “பிடோபைல்” [pedophile] கற்பழிப்பு பற்றி ரஜினி, கமல், கஸ்தூரி போன்றோர் ஏன் டுவீட் செய்வதில்லை, என்று தெரியவில்லை. சமூக பிரச்சினைகள் என்று மூக்கை நுழைக்கும் இவர்கள் இத்தகைய உண்மையான, மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற குற்றங்களைப் பற்றி பேசுவதும் இல்லை, தங்களது திரைப்படங்களில் எடுத்துக் காட்டுவதும் இல்லை. பிடோபைல் என்றால் “குழந்தை கற்பழிப்பாளி” அதாவது 18 வயதுக்கு கீழுள்ள இளம் பெண்களை கற்பழித்தலும் அடங்கும், இருப்பினும் இவ்வுண்மையினை மறைத்தே செய்திகள் வெளியிடப்படுகின்றன.  திருச்சியில் மேசே மினிஸ்ட்ரி எனும் பெயரில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததாக, பாதிரியார் கிடியன் ஜேக்கப் என்பவர்மீது குற்றம் சாட்டப்பட்டது[1], என்று தான் விகடன் இன்றும் சொல்கிறது. ஏற்கெனவே, அரசு இதை ஏற்று நடத்தி வந்ததைப் பற்றி குறிப்பிடவில்லை.

Mose Ministries-2015- taken over by the Social welfare Ministry TN

மோசே மினிஸ்ட்ரிஎனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்; கிதியோன் ஜேக்கப், தேனி மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பெண் குழந்தைகளைக் கொண்டுவந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ‘மோசே மினிஸ்ட்ரி’ எனும் பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்திவருகிறார்[2]. குழந்தைகள் எப்படி அவ்வாறு எடுத்து வரமுடியும் என்றும் விளக்கவில்லை. குழந்தைகள் என்ன ஜடப்பொருட்களா, ஒரு இடத்திலிருந்து, அப்படியே இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு? இதன் நிர்வாகியும் பாதிரியாருமான இவர், அங்கிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன[3].  லெனின் போன்றோர் யாரும் இங்கு சென்று வீடியோ எல்லாம் எடுக்கவில்லை போலும். நித்தியானந்தா என்றால் மட்டும் தான், அத்தகைய உஷார் தனம் வரும் போலும். திரைப்படங்களிலும் சாமியார் என்று இந்து சாமியார்களைக் காட்டி, ஜோக், சிரிப்பு காட்சிகளை சேர்க்கிறார்களே தவிர, இது போன்ற நூற்றுக்கணக்கான் செய்திகள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள்.

mose-ministries-trichy-gideon-jacob-evangelist-carries-on-the-work-of-his-father1

ஜெர்மனிக்கு திருட்டுத் தனமாக சென்றதும், கைதானதும்: இதையடுத்து  – புகார்களை – அந்த காப்பகத்தில் ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகம் உரிய அனுமதியின்றி செயல்படுவதைக் கண்டறிந்து, திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்[4]. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற கிதியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது[5]. கடந்த ஒருவருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார், 27-10-2017 அன்று ஜெர்மன் நாட்டிலிருந்து திருச்சி வந்தார்[6]. எப்படி அவன் திருச்சியிலிருந்து ஜெர்மனிக்குச் செல்ல முடிந்தது என்றும் விளக்க வில்லை. அவரை சென்னை சி.பி.ஐ போலீஸார் கைதுசெய்தனர்[7], என்று திடீரென்று சொன்னால், எப்படி படிப்பவர்களுக்குப் புரியும் என்று மெத்தப் படித்த நிருபர்கள், ஊடக ஆசிரியர்கள், வித்தகர்கள் விளக்கக் காணோம்.. பின்னர், சனிக்கிழமை அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[8]. அதாவது, மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜராக்கப் பட்டு, சட்ட மீறல்கள், குற்றங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாதிரியார் கிடியன் ஜேக்கப்  கைது, அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[9]. ஏன், எதற்கு பரபரப்பு ஏற்பட வேண்டும்[10], அந்த பரபரப்பு, எந்த விதமானது – பாவி மாட்டிக் கொண்டான் என்றா,  இல்லை, வேறு மாதிரியா, என்று சொல்லாததும் வேடிக்கைதான்.

mose-ministries-trichy-gideon-jacob-evangelist

தேடப்பட்ட குற்றவாளி செய்துள்ள சட்டமீறல்கள்: சிபிஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டு, நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. 28-10-2017 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் கொண்டுசெல்லப்பட்டு, 15 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டான்[11]. பிறகு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டான்.

  1. குற்ற சதிதிட்டம் போட்டது [Section 120 B (criminal conspiracy)],
  2. கடத்தி- சட்டத்திற்கு புறம்பாக தத்து என்று வைத்துக் கொண்டது [361 (kidnapping and unlawful guardianship),
  3. கடத்தப் பட்ட மற்றும் தூக்கி வரப்பட்டவர்களை மறைத்து-ஒளித்து வைத்தல் [368 (concealing and confinement of kidnapped or abducted persons)],
  4. ஆதாரங்களை மறைய செய்தல் [201 (causing disappearance of evidences of offence)],
  5. சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல் [340 (wrongful confinement)],
  6. அடிமையாக மனிதரை வாங்குவது மற்றும் விற்பது [370 (buying or disposing any person as a slave]) முதலிய இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் [of Indian Penal Code (IPC)] மற்றும்
  7. சிறுவர் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் [and a few other sections of Juvenile Justice Act.] வழக்குகள் செய்யப்பட்டுள்ளன[12].

ஆங்கில நாளிதழ்களில், கிருத்துவ அனாதை இல்லத்து முதலாளி, பாஸ்டர், பெண்களைக் கடத்தி விற்றதில் மாட்டிக் கொண்டான், தத்து எடுப்பு என்ற போர்வையில், அவ்வாறு குழந்தைகளை வளர்த்து விற்றான் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டன[13]. அவனது வக்கீல், அவனது குற்றங்களை மறுத்தான் என்று ரீட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டாலும், அது உண்மைக்கு புறம்பானது என்பது 2015லிருந்தே தெரிந்த விசயமாக இருக்கிறது[14].

mose-ministries-trichy-cwc-official-enter-to-verify-02-09-2015

பெண் சிசு கொலை போர்வையில் கிருத்துவ மிஷனரிகள் ஆட்டம்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.

mose-ministries-trichy-gideon-jacob

தொட்டில் குழந்தை திட்டமும்மிஷனரிகளும்தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் 1992ல் இது முதன்முறையாக அறிமுகப்படுத்தி, கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட இத்திட்டம், 2001ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வந்தன. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டதால், பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் சென்றனர். அக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்பட்டன. இதனால் பெண்குழந்தை விகிதம் அதிகரித்தது[15]:

  • சேலம் – 851 லிருந்து 917
  • மதுரை – 926 லிருந்து 939
  • தேனி – 891 லிருந்து 937
  • திண்டுக்கல் – 930 லிருந்து 942
  • தருமபுரி – 826 லிருந்து 911

mose-ministries-trichy-gideon-jacob-evangelist-different-postures

அப்பொழுது காப்பகங்கள் நடத்த பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு உயிர் பிழைத்து அவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தத்து கொடுக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்[16].  அத்தகைய தத்தெடுப்பு விவகாரங்களிலும் பல மோசடிகளை செய்துள்ளனர்[17]. இப்பகுதிகளில் பாதிரிகளே குழந்தைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[18].சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[19]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[20].

© வேதபிரகாஷ்

31-10-2017

new-year-2014-good-shepherd-world-prayer-center-trichy-girls-singing-at-2

[1] விகடன், சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது!, Posted Date : 16:40 (29/10/2017), Last updated : 09:11 (30/10/2017).

[2] http://www.vikatan.com/news/tamilnadu/106249-priest-gideon-jacob-arrested-in-running-illegal-children-home-case.html

[3] தினகரன், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 2017-10-28@ 15:34:43

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=346717

 

[5] நியூஸ்.7.செய்தி, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது!, By  news7paper, October 29, 2017.

[6]https://www.news7paper.com/news/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81/

[7] நியூஸ்.எக்ஸ்பிரஸ், திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தியர் கைது, 28.10.2017 03:34:00 pm

[8] http://totalnewsexpress.in/n/829129

[9] தமிழ்நாடு.எவிரிடே, சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகள் காப்பகம் நடத்திய பாதிரியார் கைது!, 29 October 2017 05:01

[10] http://tamilnadu.indiaeveryday.com/news——1281-4042773.htm

[11] The Hindu, CBI arrests founder of trichi home for children, C. Jaisankar, TIRUCHI , OCTOBER 28, 2017 23:29 IST, UPDATED: OCTOBER 28, 2017 23:29 IST

[12] http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbi-arrests-founder-of-tiruchi-home-for-children/article19941563.ece

[13] Reuters, Head of Christian-run orphanage in India arrested in trafficking investigation, Anuradha Nagaraj, OCTOBER 30, 2017 / 3:38 PM / UPDATED. 4.00 pm.

[14] https://www.reuters.com/article/us-india-trafficking-children/head-of-christian-run-orphanage-in-india-arrested-in-trafficking-investigation-idUSKBN1CZ0Z5

[15] http://www.dinamani.com/tamilnadu/article767703.ece

[16] http://www.maalaimalar.com/2012/03/05174840/Cradle-Child-Centre-in-Dharmap.html

[17]https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/

[18]https://christianityindia.wordpress.com/2010/05/25/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/

[19] Hindusthan times, CBI wants to probe adoption case again, Sep.11 2009, http://www.hindustantimes.com/CBI-wants-to-probe-adoption-case-again/Article1-452521.aspx

http://ibnlive.in.com/tag/topic/Preet+Mandir.html

http://ibnlive.in.com/news/cbi-confirms-cnnibns-report-on-illegal-adoption/54491-3.html

http://ibnlive.in.com/CBIReport_full1.pdf

[20] Times of India, Juvinile Act provides for Adoption: HChttp://timesofindia.indiatimes.com/NEWS/City/Chennai/Juvenile-Act-provides-for-adoptions-HC/articleshow/4831787.cms

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “கிடியோன் ஜேக்கப் – பிடோபைல் – “குழந்தை கற்பழிப்பாளி”: பெண் குழந்தைகளை வாங்கி விற்றதாக வழக்குப் பதிவு!”

  1. வேதம் வேதபிரகாஷ் Says:

    CBI arrests founder of Tiruchi home for children
    C. Jaisankar TIRUCHI , OCTOBER 28, 2017 23:29 IST
    UPDATED: OCTOBER 28, 2017 23:29 IST

    The Central Bureau of Investigation (CBI) has arrested Pastor A. Gideon Jacob, founder of Mose Ministries Home for Children in Tiruchi.

    Mr. Jacob has been evading arrest ever since a case against him was registered for running the unregistered home for girls in August 2015. A lookout notice was issued against him. The pastor was reportedly arrested in Chennai on Friday night soon after he arrived from Germany, sources said.

    A CBI team brought him by road from Chennai and produced him before the Chief Judicial Magistrate in Tiruchi on Saturday, who remanded him to 15 days judicial custody. Mr. Jacob was then lodged in Tiruchi Central Prison.

    Several Sections

    He has been booked under Section 120 B (criminal conspiracy), 361 (kidnapping and unlawful guardianship), 368 (concealing and confinement of kidnapped or abducted persons), 201 (causing disappearance of evidences of offence), 340 (wrongful confinement), 370 (buying or disposing any person as a slave) of Indian Penal Code (IPC) and a few other sections of Juvenile Justice Act.

    The Madurai Bench of Madras High Court had ordered the CBI to probe the affairs of the unregistered home run by Mr. Jacob, where 89 girls, mostly minors, were staying.

    The Mose Ministries Home for Children had claimed that they were rescued from female infanticide in Andipatti and neighbouring villages since 1994 after they were abandoned by their parents.

    The High Court had passed the order on a public interest litigation filed by an NGO that alleged that the girls were illegally kept in the home without the knowledge of their parents.

    Following a High Court order DNA tests were conducted on 82 of them, who had attained the age of 18 years, and were allowed to decide their future.

    http://www.thehindu.com/…/cbi…/article19941563.ece

  2. வேதம் வேதபிரகாஷ் Says:

    http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbi-arrests-founder-of-tiruchi-home-for-children/article19941563.ece

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: