1996லிருந்து, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள் – பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (1)!

1996லிருந்து, குன்றுகள் ஆக்கிரமிப்பு, சட்டமீறல், என்று கலாட்டா செய்து வரும் கிருத்துவர்கள்பொய்களை மறைத்து பிரச்சாரம் செய்யும் முறை (1)!

Sogandi tamasha - Indian Express -om-cross-15-04-2017

குன்றுகளை ஆக்கிரமித்து சர்ச்சுகள் கட்டும் கிருத்துவர்கள்: சமீபகாலமாக கிருத்துவர்கள் வேண்டுமென்றே, மலைப்பகுதிகளில் உள்ள மேடுகள், சிறு குன்றுகள்,  குன்றுகள், முதலிய இடங்களில் முதலில் கான்கிரீட் சிலை வைத்தல், பத்து-பதினைந்து பேர் வந்து வழிபடுதல், பிறகு, 50-100 என்று ஆட்களை வரவழைத்து, பிரதி ஞாயிற்றுக்கிழமை என்று ஜெபம் செய்தல், படிப்படியாக கூரை போடுதல், ஒலை / தகடுகள் வைத்து கூடம் கட்டுதல், பிறகு சுவர்கட்டி, அறை போன்றாக்குதல், ஒரு ஆளை தக்க வைத்தல், மின்னிணைப்புப் பெறுதல், என்று படிப்படியாக அவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். திண்டிவனத்திற்கு போகும் வழியில் உள்ள அச்சிறும்பாக்கம் சிவன் கோவில் மலையை அவ்வாறு ஆக்கிரமித்து, பட்டிப்படியாக கட்டிடங்கள் கட்டி, இன்றைக்கு அதனை, ஒரு அனைத்துலக கிருத்துவர்கள் உல்லாச சுற்றுலா இடமாக மாற்றி விட்டனர். மேரி அம்மலை மீது காட்சியளித்ததாக, புது-புது கதைகளைக் கட்டி, அயல்நாட்டவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தையும் வசூலித்து, அந்த இடத்தினையே மாற்றிவிட்டனர். அத்தகைய முயற்சிகள் தாம் மற்ற இடங்களிலும் கையாண்டு வருகின்றனர். இது, செங்கல்பட்டு அடுத்த சோகன்டி கிராமத்துக்கும், அருகில் உள்ள அழகுசமுத்திரம் கிராமத்துக்கும் இடையே காப்பு காடு மற்றும் மலை இடங்களில் வெளிப்பட்டு வருகிறது.

Sogandi tamasha - stage managed-2

மாதா ஆலயம் கட்டி பிரச்சினை ஆரம்பித்து வைப்பது (2016): மாதா சிலை அமைத்து வழிபடுவதால், இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. தாசில்தார் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. செங்கல்பட்டு அடுத்த சோகன்டி கிராமத்துக்கும், அருகில் உள்ள அழகுசமுத்திரம் கிராமத்துக்கும் இடையே காப்பு காடு மற்றும் மலை உள்ளது. இந்த காப்பு காடு, அழகு சமுத்திரம் கிராமத்துக்கு உட்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் சோகன்டி கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் சிலர், மலை அடிவாரத்தில் சிறியதாக மாதா ஆலயம் கட்டி வழிபட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி 2016 கிறிஸ்துமஸ் என்பதால், இந்த ஆலயத்தில் விழா குழுவினர் சிலர், மலை மீது சென்று சிலுவை அமைத்து, கொடி நட்டு, பந்தல் போட்டனர். மேலும், கிறிஸ்துமஸ் விழாவை அங்கே கொண்டாடினர். இதையறிந்த அழகு சமுத்திரம் கிராம மக்கள், 27-12-2016 அன்று அங்கு சென்றனர். இது எங்கள் கிராமத்துக்கு சொந்தமான மலை. இங்கு சிலுவை நடுவது தவறு. வேண்டுமானால், உங்கள் கிராமத்தில் வைத்து கொள்ளுங்கள் என கூறி, அதனை அகற்ற வேண்டும் என்றனர். இதற்கு, கிறிஸ்தவ குழுவினர் மறுப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து அழகு சமுத்திர கிராம மக்கள் 100க்கு மேற்பட்டோர் சோகன்டி – திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, நேரில் வந்து சமரசம் செய்தார். அப்போது,  இரு தரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கலாம். தற்போது மறியலை கைவிடுங்கள் என தாசில்தார் சீதா கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Christians attack on Hindus - 17-04-2017

ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, அகம்பாவத்துடன் இருந்த கிருத்துவர்கள்: இந்நிலையில் 28-12-2016 அன்று மாலை திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பு மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, டிஎஸ்பிக்கள் மாமல்லபுரம் சேகர், செங்கல்பட்டு மதிவாணன், இன்ஸ்பெக்டர்கள் திருக்கழுக்குன்றம் அனுமந்தன், செங்கல்பட்டு ருக்மாங்கதன் ஆகியோர் தனித்தனியே, இருதரப்பு மக்களிடம் கருத்துகளை கேட்டனர். அதில், அழகு சமுத்திரம் மக்கள், மேற்கண்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலையை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், சோகன்டி மக்கள், சிலை அமைத்துவிட்டோம். நாங்கள் அங்கேயே வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர். இதனால், 27-12-2016 அன்று இரவு வரை அவர்களுடன் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை[1]. இரு கிராம மக்கள் இடையே நடந்த பேச்சு வார்த்தையால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது[2].

_Hindu-leaders-in-Training-Demonstration_Ambasamudram enroachment by christians

இந்து முன்னணி இராம கோபாலன் கூறுவது[3]: “காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள அழகு சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட மகா சக்தி பொன்னியம்மன் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாள் மலை மீது ஆண்டுதோறும் கண்ணபிரான் உற்சவம் நடைபெற்று வருகிறது. மலை மீது பெருமாளின் திருமண் இட்டு இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் இவ்வூர் மக்கள். இக்கோயில் மலை அழகுசமுத்திரம் பஞ்சாயத்திற்கு சொந்தமானதென செங்கல்பட்டு நீதிமன்றத்தால் 18.10.1996இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இம்மலையில் சிலுவையை நட்டனர். உடனடியாக கிராம நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்குப்பட்டுஅது அகற்றப்பட்டது. 2006இல் மலையில் திடீரென்று சர்ச் கட்ட ஊரில் கலவரம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிரி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார். அச்சிரபாக்கம் பாதிரி ஜேக்கப்ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்வழியை கால்வாயை மூடி அதன் மீது சர்ச்க்கு அடிக்கல் நாட்டினார்.”

Sogandi tamasha - christians creating ruckus with police 15-04-2017

04-03-2017 அன்று கிருத்துவர்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியது: “திடீரென்று, 24.12.2016 இரவு பெருமாள் மலை முழுவதையும் ஆக்கிரமித்து வனத்துறையால் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை ஜெ.சி.பி. இயந்திரம் கொண்டு வேரோடு அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களான பொம்மைகளை அமைத்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள்இந்து முன்னணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டார். ஆர்.டி.ஓ. ஜெயசீலன்கடைசி பொம்மையை அகற்றவிடாமல் தடுத்துவிட்டார். இதனை எதிர்த்து தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் 4.3.2017 வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை பஜனை ஊர்வலத்தின் போது சோகண்டியை சார்ந்த கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பக்தர்கள் மீது மோதியதுடன்ஆயுதங்களால் தாக்கியும்சாமியை அவதூறாக பேசியும்மிரட்டினர். ஊர் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்குக் காரணமான மதமோதல்களை உருவாக்கி கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஜேக்கப் பாதிரியை விட்டுவிட்டது.”

dINAKARA CUTTING

ஆர்.டி.ஓ. ஜெயசீலன் கிருத்துவர்களுக்கு சார்பாக செயல்படுவது: “இதுபோன்ற தேசவிரோதமதவெறி செயலைக் கண்டித்து இந்துக்கள் 6.3.2017 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 7.3.2017 பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஆர்.டி.ஓ. ஜெயசீலன்கிராம மக்களிடம் தான் எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்திட நிர்பந்தித்துள்ளார். மீறினால், 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை அகற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இந்த ஜனநாயக விரோதசட்டவிரோதமாக செயல்படும் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் மீது துறை ரீதியாலன நடவடிக்கை எடுக்கவும்கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்யவும்அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும்சிலுவையை நட்டு மலைகளை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ சதியை முறியடிக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசைமாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்”, என்றும் தேசிய, தெய்வீகப் பணியில் (இராம கோபாலன்).

Christian sogandi malious propaganda 1

ஏப்ரல் 2017ல் ஆக்கிரமிப்பு முயற்சி[4]: ஆக்கிரமிப்பு மலை பிரச்னை தொடர்பாக, மோதல் ஏற்படலாம் என்பதால், அழகுசமுத்திரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் உள்ளது. இக்கிராமத்தை ஒட்டியே சோகண்டி கிராமத்தில், அழகுசமுத்திர மலையை ஆக்கிரமித்து, ஒரு சமூகத்தினர் வழிபாடு தலம் உருவாக்கினர். தொடர்ந்து வழிபட்டு வந்தனர். இதற்கு, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, கடந்த டிசம்பர் மாதம் 2016, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், ஆக்கிரமிப்பை அகற்ற உத்திரவிட்டார். தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றி, வருவாய் துறையினர் அறிவிப்பு பலகை வைத்தனர். இந்நிலையில், 6-04-2017 அன்று நடந்த விழாவுக்காக, மேற்கண்ட சமூகத்தினர், மலையில் அமைக்கப்பட்டுள்ள வழிபாடு தலம் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதற்கு, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. மேலும், பிரச்னை ஏற்படாமல் இருக்க, செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார், அந்த பகுதியில் குவிக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையிடம் கேட்டபோது ‘அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

cHRISTIANS ARGUE WITH POLICE

2016 டிசம்பரில் நடந்த ஆக்கிரமிப்பு முயற்சி: டிசம்பரில் காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட அழகுசமுத்திரம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் அந்த பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் விழாக்காலங்களில் பாரிவேட்டை நடத்தி பெருமாள் நாமத்தை வரைந்து வழிபட்டு வருவது வழக்கத்திலுள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியிலுள்ள பரிவட்டகுன்று என்று அழைக்கப்படும் குன்றின் ஒரு பகுதியில் அழகுசமுத்திரம் ஊராட்சிக்கு அருகிலுள்ள சோகண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்த சிலர் சில ஆண்டுகளாக சிலுவை மற்றும் சிலைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர்[6]. இந்த நிலையில் 350 ஏக்கர் பரப்பரளவுடைய இந்த மலைக்குன்றில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் பகுதியில் இயற்கை வளங்கள் சிதைக்கப்பட்டு மலைப்பகுதியில் மேலும் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்காங்கே புதிதாக சிலுவைகள் மற்றும் சிலைகள் வைத்து மலைக்குன்றை ஆக்கிரமிப்பு செய்தனர்[7].

Sogandi tamasha - Indian Express 15-04-2017

இது மதப்பிரச்சினையா, ஜாதிப்பிரச்சினையா?: இந்தியன் எக்ஸ்பிரஸ் இதற்கு ஒரு ஜாதி-விளக்கம் கொடுத்துள்ளது[8]. தலித்-கிருத்துவர்களுக்கும், ஜாதி-இந்துக்களுக்கும் இடையிலான போராட்டம் போல சித்தரித்துள்ளது. மத சின்னங்களுக்கு இடையில் உள்ள போர் உச்சக்கட்டத்தை எட்டியது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[9].  ஆக்கிரமிப்பு என்று ஒப்புக்கொண்டாலும், அத்தகைய சட்டமீறல், அத்து மீறல், முதலியவற்றை விடுத்து, ஜாதிப் பிரச்சினை போன்று விவரிப்பதும் திகைப்பாக இருக்கிறது[10]. கத்தோலிக்க இணைதளமே, இதனை, மதப்பிரச்சினையாகக் கருதுகின்றதே தவிர, ஜாதிப்பிரச்சினையாக குறிப்பிடவில்லை. அந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் அவ்வாறான விளக்கம் கொடுத்துள்ளது, வேடிக்கையா இருக்கின்றது.

© வேதபிரகாஷ்

20-04-2017

[1] தினகரன், மலை மீது மாதா சிலை அமைத்ததற்கு எதிர்ப்பு இரு தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு, 12/28/2016 11:36:56 AM

[2] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=665931

[3] https://hindumunnani.org.in/news/?p=712

[4] தினமலர், மலை ஆக்கிரமிப்பு மோதல் தடுக்க போலீஸ் குவிப்பு, பதிவு செய்த நாள். ஏப்ரல்.17, 2017. 00:45.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1752834

[6] தினத்தந்தி, திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் மலைக்குன்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீசார் குவிப்பு, ஜனவரி 01, 2017, 05:18 AM

[7] http://www.dailythanthi.com/News/Districts/2017/01/01051825/The-elimination-of-encroachmentsPolice-concentrated.vpf

[8] Indian Express, Religious symbol war between two villages touches a new high, By Ram M Sundaram, Express News Service, Published: 19th March 2017 01:28 AM, Last Updated: 19th March 2017 05:26 AM

[9] http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/19/religious-symbol-war-between-two-villages-touches-a-new-high-1583034–1.html

[10] http://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/19/religious-symbol-war-between-two-villages-touches-a-new-high-1583034–2.html

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: