ரேப் ராபின் கேரள பாதிரி 600 டீன்-ஏஜ் பெண்களை கனடாவுக்கு அனுப்பி வைத்தானா, கண்ணூர் எம்பி கூறுவது உண்மையா?

ரேப் ராபின் கேரள பாதிரி 600 டீன்ஏஜ் பெண்களை கனடாவுக்கு அனுப்பி வைத்தானாகண்ணூர் எம்பி கூறுவது உண்மையா?

christu-raja-hospital-thokkilangadi-kuthuparamba

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேராவூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவியை,  மீண்டுநோக்கி செயின்ட் செபாஸ்டியன் ஆலய பாதிரியார் ராபின் (48) பலாத்காரம்  செய்ததால், கர்ப்பம் அடைந்த மாணவி குழந்தையை குத்துபரம்பாவிற்கு அருகில் உள்ள “கிருஸ்து ராஜ்” மருத்துவமனையில் பெற்றெடுத்தாள்[1]. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த பாதிரியார் திருச்சூர் அருகே சாலக்குடியில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சிறுமி பலாத்கார வழக்கை மூடி மறைத்த கிறிஸ்தவ சபைக்கு எதிராக விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுமி பிரசவித்த விவரத்தை மூடி மறைத்த மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. குழந்தை பிறந்த இரண்டே நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள, வைநாடில் உள்ள வைத்ரி ஒரு “கான்வென்ட்” நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சின் மேலிடத்தின் ஆணையினால், எந்த விவரமும் வெளியிடப்படவில்லை[2]. அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களும் போலீசாரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.

robin-rape-christu-raja-hospital-clarification-issued

பெற்ற தந்தை, புனைந்த மகள்இவர்களை பணம் கொடுத்து சரிகட்டப் பார்த்த ராபின் பாதிரி: பெற்ற தந்தைக்கே பணம் கொடுத்து, தான் தான், தன் பெண்ணின் குழந்தைக்கு தாய் என்று சொல்லுமாறு வற்புருத்தப்பட்டது[3]. அவளது தந்தையும் அவ்வாறே ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. விவசாய வேலையில் வேலை செய்து வந்த பெற்றோர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றன. ராபின், அவளது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன், எல்லோருக்கும் வேலை வாங்கித் தருகிறேன், என்றெல்லாம் வாக்குக் கொடுத்ததால், ஆரம்பித்தில் அவ்வாறே சொல்லியதால், விசரணையில் தேக்கம் ஏற்பட்டது. அதேபோல அவளுக்கு 18-வயதாகி விட்டது என்று சொல்லிதான், கிருஸ்துராஜா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்[4]. ஆஸ்பத்திரி செலவு முழுவதையும் ராபினே ஏற்றுக் கொண்டு பணம் கொடுத்தான். ஆனால், பிறகு, அவர்களது முரண்பட்ட பேச்சுகளால், உண்மை தெரிய வந்தது, போலீஸாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டனர்[5]. மாணவி பிரசவித்த தனியார் மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாணவியை பரிசோதித்தபோது அவருக்கு பிரசவ வலி என தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனை பிரசவ வார்டுக்கு அனுமதித்தோம். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த மாணவி அழைத்து வந்தபோது 18 வயது ஆகிவிட்டதாக பெற்றோர் கூறினர். இதனால்தான் தாங்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை,” என்று கூறப்பட்டுள்ளது.

robin-smuggled-many-girls-out-of-india-03-03-2017-dinakaranமேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுவது உண்மையா?: இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன.  இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வளிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.  கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து  தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

immigration-jubilee-memorial-school-robinரேப் ராபின் பாதிரி எப்படி கனடாவில் சொத்து வைத்திருக்க முடியும்?: பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்துள்ளது[6]. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி  தோட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார்[7]. தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாக இருக்கும் அவனிடம் அவ்வாறு கோடிக் கணக்கில் சொத்து எப்படி இருக்க முடியும் என்பதெல்லாம் புதிராக உள்ளன. மேலும், அயல்நாட்டி சொத்து வைத்திருந்தால், இந்திய அரசு ஆவணங்கள் பலவற்றில் அவ்விவரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக, இவற்றையெல்லாம் மீறி அதாவது, சட்டப்படியே செய்திருக்கிறான் என்றால், இதற்குப் பிறகு, பலர் இருப்பது புலப்படுகிறது.

immigration-jubilee-memorial-school-robin-vadakkencherilரேப் ராபின் பாதிரி துபாய்க்கு அல்லது கனடாவிற்குத் தப்பிச் செல்ல முயன்றது: இதனிடையே பாதிரியார் ராபினிடம் போலீசார் நடத்தி விசாரணையில், ராபின் நேற்று கொச்சியில் இருந்து துபாய்க்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.  கனடாவிக்குத் தப்பிச் செல்ல முயன்றான், ஏற்கெனவே கனடாவுக்கு பலமுறை சென்றுள்ளான் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை தலச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிரியார் ராபினை போலீசார் கண்ணூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாதிரியார் ராபினை, கோட்டியூர் ஐ.ஜே.எம். உயர்நிலைப் பள்ளி மேலாளர் பொறுப்பில் இருந்தும், பாதிரியார் பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளதாக மானந்தவாடி சேகரம் அறிவித்துள்ளது[8].

p-k-sreemathy-accuses-robin-of-women-traffickingகண்ணூர் எம்பி மற்றும் ஐட்வா தலைவி ஶ்ரீமதி கூறிய விவரங்கள்: இதற்கிடையே இந்த சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணூர் எம்பி ஶ்ரீமதி கூறியுள்ளார்[9]. இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘கண்ணூர் மாவட்டத்தில் இருந்து பிளஸ்2 படித்த ஏராளமான மாணவிகளை பாதிரியார் ராபின் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியதாகவும் தகவல் வந்துள்ளது[10]. இந்த மாணவிகளின் பெற்றோரை ஏமாற்றி அவர்களை கடத்தியது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும்[11]. மாணவி படித்த பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[12]திருமணமாகாத சிறுமி குழந்தை பெற்ற விவரத்தை மூடி மறைத்த மருத்துவமனை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்[13]. தவிர, ஐட்வாவின் தேசிய தலைவராஜகவும் உள்ள அவர், பெண்ணின் பெற்றொர்களை சந்தித்து, கிருஸ்துராஜா மருத்துவமனை மற்றும் சர்ச் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டியில் கோரிக்கை வைத்தார். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்ற போர்வையில் சுமார் 600 டீன் ஏஜ் பெண்களை கேரளா, குஜராத் மாநிலங்களிலிருந்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக குற்றஞ்சாட்டினார்[14].

catholic-priest-accuses-girls-for-rape-for-wearing-jeansசெக்ஸ் மற்றும் மனித உறுப்புகள் வியாபாரத்திற்காக கடத்தப் படுகிறார்கள்[15]:
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள், பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக கடத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் 16 முதல் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். இவர்கள் பாலியல் தொழில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கு கடத்தப்படுகிறார்கள். ஆகவே, இவ்வாற்று நூற்றுக்கணக்கில் இளம்பெண்களை அனுப்பியுள்ளான் எனும் போது, எப்படி அதனை சாதாரணமான விசயமாக எடுத்துக் கொள்ள முடியும்? பணம், அதிகாரம் இருக்கின்றன என்பதினால் சர்ச் மேலிருந்து, கீழ் வரை உண்மைகளை மறைக்க முயல்கிறது. இதனால், கொக்கோக-காம இச்சைகளுடன் அலையும் பாதிரிகள், பெண்களைக் குறிவைத்து அலைகிறார்கள். அடங்காத அப்பாதிரிகள் எல்லா சட்டங்களையும் மீறி செயல்படுகிறார்கள்[16]. கத்தோலிக்கச் சர்ச்சுகளுக்கு இந்த செக்ஸ்-பாதிரிகளால் பிரச்சினைகள் வருகின்றன என்றால்[17], கடுமையாக அவர்கள் தண்டிக்கப்படாமல், தப்பிக்க வைக்கிறது என்றாகிறது. பிறகு, அவை விளைவுகளை சந்தித்து தான் ஆகவேண்டும்.

© வேதபிரகாஷ்

04-03-2017

[1] The girl had given birth to a baby boy at Christhu Raj hospital near Koothuparamba 20 days back.  The hospital authorities did not inform the girl’s relatives. They also did not follow the procedures that should be conducted in such cases.

Mathrubhumi, Peravoor sexual abuse case: Priest confesses to crime, Published: Feb 28, 2017, 12:43 PM IST

[2] Upon investigation, the police found the baby in an orphanage run by nuns at Vythiri in Wayanad.   Police doubt that all the matters were concealed due to top level intervention.

http://english.mathrubhumi.com/news/kerala/peravoor-sexual-abuse-case-priest-confesses-to-crime-1.1764063

[3] Indian Express, Kerala minor rape:  Priest promised cash to dad for taking blame, written by Sgalu Philip, Thiruvanathapuram, Updated: March 1, 2017, &:04 am.

[4] http://indianexpress.com/article/india/kerala-minor-rape-priest-promised-cash-to-dad-for-taking-blame-4548719/

[5] The Kerala Catholic priest, who allegedly raped a minor, had tried to foist the paternity of the child born to the victim on her own father, police said Tuesday (21-02-2017). An investigating officer of Kannur police said that in return Father Robin Vadakkancheril had promised to look after the family’s financial requirements in future. The girl, who earlier this month 07-02-2017 gave birth to a boy, had initially said her own father was the parent of the newborn. “The priest gave money to pay the hospital bills after the delivery. The victim’s parents are farm workers and have five children, all minors. The priest also assured them he would look after the family’s future financial requirements. The girl’s father was not aware of the harsh laws and what was in store for him,” said the officer, adding that the father’s “loyalty towards the priest” also prompted him to shoulder the blame of the vicar’s alleged crime. he police said initially the girl told the investigators she was sexually exploited by her father. “When we caught the father, he repeated the same story. But he was forced to disclose the involvement of the priest during a detailed interrogation,’’ the investigating officer said.

http://indianexpress.com/article/india/kerala-minor-rape-priest-promised-cash-to-dad-for-taking-blame-4548719/

[6] தினகரன், கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள், 2017-03-02@ 02:31:15.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=284115

[8] A police team led by Peravoor circle inspector N Sunil Kumar nabbed Fr. Robin Vadakkumchery, a priest at Neendunokki St. Sebastians Church in Kottiyoor. Fr. Vadakkumcherry is also the manager of IJM higher secondary school in Kottiyoor.

[9] தினகரன், பலாத்கார வழக்கில் கைதான பாதிரியார் ஏராளமான மாணவிகளை வெளிநாட்டுக்கு கடத்தியுள்ளார்: மார்க்சிஸ்ட் எம்பி பகீர் குற்றச்சாட்டு, 2017-03-02@ 01:37:16.

[10] news.webindia123, CPI (M) women’s wing demands probe against Priest for impregnating minor, Tuesday, Feb 28 2017 IST

[11] http://news.webindia123.com/news/Articles/India/20170228/3065090.html

[12] kaumudi.com, CPI (M) women’s wing demands probe against priest for impregnating minor, Posted on :09:26:40 Mar 1, 2017; Last edited on:09:26:40 Mar 1, 2017.

[13] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=283848

[14]  Member of Parliament and AIDWA national leader P K Sreemathy demanded a probe against the arrested priest of St Sebastian Church for impregnating a 16-year-old girl, who gave recently birth to a baby. Sreemathy visited the family of the girl at Kottiyoor and said the incident was a disgrace to Kerala. She demanded that the police examine the computer and laptop of the priest and take strong action against him. This is not an isolated incident related to Priest Robin, who was allegedly trafficking poor girls of Kannur in the name of job opportunities, to different parts of India and overseas. Talking to the newspersons at a press conference here, Sreemathy said the allegations of human trafficking were reported after the arrest of Priest Robin. Around 600 teenage girls have been sent to Canada, Gujarat and Bangalore by the priest-led team, on the promise of job. He also regularly visited Canada and other parts of the country. She also said there was no justification on part of the hospital authorities (Christhu Raja Hospital at Thokkilanghadi), which failed to inform the police during the delivery of the child of the unwed girl at the hospital on February 7.Moreover, they cooperated to shift the new-born baby to an orphanage at Vythiri in Wayanad. The parents have five children, but the mother said they were compelled to say that the father was responsible for the minor’s pregnancy. Later, the victim and her father disclosed to the police about the involvement of the priest and led to his arrest. M P Sreemathy also said she would give a memorandum to the government demanding registration of the sexual offenders to protect women from sexual harassment. http://www.kaumudi.com/innerpage1.php?newsid=88496

[15] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=284115

[16] Hindustan Times, ‘Wayward priests’ accused of sexual crimes trouble Kerala’s Catholic churches, Updated: Mar 02, 2017 19:06 IST

[17] http://www.hindustantimes.com/india-news/wayward-priests-accused-of-sexual-crimes-trouble-kerala-s-catholic-churches/story-IBQaofsaeF0cP3DUPxzhDL.html

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: