ராபின், கத்தோலிக்க பிஷப் / பாதிரி 17 வயது பெண்னை கற்பழித்து குழந்தை பெற்றெடுக்க செய்து, நாட்டை விட்டு, ஓடும் போது கைது!

ராபின், த்தோலிக்க பிஷப் / பாதிரி 17 வயது பெண்னை கற்பழித்து குழந்தை பெற்றெடுக்க செய்து, நாட்டை விட்டு, ஓடும் போது கைது!

rape-robin-vaddakumchiryil-arrested-supporting-varghese-vallikkatt

கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது”, என்ற கொள்கையை பின்பற்றும் காமரேடுகளும் கத்தோலிக்கர்களும்: “கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது”, என்று ஈ.கே. நாயனார் கூறியதை காம்ரேடுகள் மட்டுமல்ல கத்தோல்லிக்க சர்ச்சும் கடந்ந்த 70 ஆண்டுகளாக மெய்ப்பித்து வருகின்றது. பாவனா கற்பழிப்பு குறித்து சட்டசபையில் ரகளை செய்து வரும் நிலையில், ஒரு பாதிரி / பிஷப் கற்பழித்த கொக்கோகம் வெளிப்பட்டுள்ளது. இதைப்பற்றியும் சட்டசபையில் விவாதிப்பார்களா என்று தெரியவில்லை. தில்லி பல்கலைக்கழக சிறுப் பிரச்சினைப் பற்றி தேசிய ஊடகங்கள் கவலைக் கொண்டுள்ள நேரத்தில், இத்தகைய கற்பழிப்புகள் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் போலும். அதிலும் கத்தோலிக்க பிஷப் எனும் போது, ஒன்றும் தெரியாதது போலத்த்யான் இருப்பார்கள். கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான, பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான, ராபின் வடக்கும்சிரில் [Father Robin Vaddakumchiryil, 48 ] சிரியோ-மலபார் சர்ச்சின் பாதிரியாரை போலீசார், பாலியல் குற்றங்கள்ளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில், வவழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டான்[1].

bishop-rape-robin-vaddakumchiryil-arrested-supporting-varghese-vallikkatt

ஊருக்கு உபதேசம் செய்த பாதிரி இளம்பெண்ணிற்கு வலைவீசி கற்பழித்துள்ளான்: கோட்டியூர் என்ற இடத்தில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சின் பிஷப்பாக / விகாராக பொறுப்பில் இருந்துள்ளான்[2]. கேரளா மாநிலம், கண்ணூார் மாவட்டம் கொட்டியூர் நீண்டுநோக்கி சர்ச் பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி, 48, என்கிறது தினமலர். இவன் அப்பகுதியில், பள்ளி மேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தான். அதுமட்டுமல்லாது, சர்ர்ச்சின் ஊடக விசயங்களில் பொறுப்பாளராக இருந்து, “தீபிகா” என்ற கத்தோலிக்க நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தான்[3]. பசுத்தோல் போர்த்திய புலியாக வலம் வந்துள்ளான் என்று தெரிகிறது. போதாகுறைக்கு, குழந்தைகளைக் கற்பழிப்பது தவறு என்றெல்லாம் பேசியுள்ளான். அதாவது, ஊருக்குத் தான் உபதேசம், உள்ளே கொக்கோக சல்லாபம் போலும். “குழந்தை” என்று இவர்கள் சொல்வதே ஆலாதியான விசயமாக இருக்கிறது. ஆமாம், 18 வ்வயதுக்குக் கீழ் இருந்தால்,, குழந்தை என்று 17-வரைய்யில் உள்ள இளம்பெண்களை கற்பழித்து வருகிறார்கள்.

father-robin-vaddakumchiryil-arrested-28-02-2017

மே 2016ல் கற்பழித்து, ஜனவரி 2017ல் டெலிவரிக்கு ஏற்பாடு செய்து, குழந்தை பிறந்தததும் அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளான்: கடந்த ஆண்டு, மே மாதம் 2016 அந்த பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவியிடம் பாதிரியார் நெருங்கி பழகி பலாத்காரம் செய்தான்[4]. சர்ச் கம்ப்யூடர் வகுப்புகள் நடத்துகின்றது. அதில் வந்த இளம் மாணவியர்களுக்கு வலை வீசியதில், இப்பெண் அவனிடம் மாட்டிக் கொண்டாள்[5]. இதில், மாணவி கர்ப்பம் ஆனார்[6]. இதுபற்றி மாணவியின் பெற்றோர், சர்ச் நிர்வாகத்திடமும், குழந்தைகள் நல வாரியத்திலும் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதெல்லாம் வழக்கம் போன்ற விவகாரங்கள் என்றுதான் தெரிகின்றது. முதலில் பணம் கொடுப்பது, வேலை வாங்கிக் கொடுப்பது, இல்லை வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைப்பது என்றெல்லாம் ஆசைக் காட்டுவார்கள். முடியாது என்றால் மிரட்டுவார்கள். இங்கு மசியாதலால், அப்பெண்ணை, அவளது தந்தையே கர்ப்பமாக்கினார் என்று ராபின் ஆரம்பித்தான். ராபின் அப்பெண் கர்ப்பமுற்றதற்கு, அவள் தந்தையே காரணம் என்று, மாட்ட வைத்து தப்பிக்கப் பார்த்தான். அவர்கள் மிகவும் ஏழைகள் என்பதனால், அவ்வாற்று சரிகட்டலாம் என்று மிரட்டிப் பார்த்தான்.

rape-father-robin-vaddakumchiryil-arrested-28-02-2017

இந்நிலையில், சென்ற ஜனவரி மாதம் 2017ல் மாணவி கூத்துபறம்பு பகுதி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றாள். உடனடியாக, சிலர் குழந்தையை எடுத்துச் சென்று, வயநாட்டில் உள்ள தனியார் அனாதை இல்லத்தில் சேர்த்தனர், அதாவது, அக்குழந்தையைப் பெற்ற தந்தை ராபினே அவ்வாறு ஏற்பாடு செய்தான். கற்பழித்து, கர்ப்பமாக்கி, குழந்தை பெற்றெடுக்க வைத்து, பெண்ணின் தந்தையை சிக்க வைத்து முய்ற்சித்து, குழந்தையை பிறக்க வைத்து,, பச்சிளம் குழந்தை பிறந்ததும், தாயிடமிருந்து பிரித்து அனாதை இல்லத்திற்கு சேர்த்து, பிறகு இந்தியாவை விட்டு தப்பிச் செல்லவும் திட்டம் போட்டான். இவ்வளவ்விற்கும் சர்ச் ஆதாரவ்வாக இருந்தது, அதை விட கேவலமான விசயம்.  இதனால், மனமுடைந்த அப்பெண் “ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் புகார் செய்யும் தொலைபேசி எண்ணிற்கு” தொடர்பு கொண்டு விசயத்தை கூறியிருக்கிறாள். அவர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்கள்[7].

robin-vaddakumchiryil-arrested-supporting-varghese-vallikkatt

கற்பழிப்பு பிஷப்பைக் காப்பாற்ற கத்தோலிக்க சர்ச் என்னவேண்டுமானாலும் செய்யுமாம்: இந்த சம்பவம் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து, உஷாரான பாதிரியார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றான்[8]. அப்போது, பரவூர் போலீசார், பாதிரியார் ராபினை கைது செய்தனர். இதையடுத்து, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ராபின்விடுவிக்கப்பட்டு விட்டதாக தலசேரி டையோசிஸ் பாதிரி ஒருவர் [Thalasserry diocese ] அறிவித்துள்ளார். பாதிரி வர்கீஸ் வல்லிகட் [Father Varghese Vallikkatt], “குற்றஞ்சாட்டப் பட்ட பாதிரியை காப்பாற்ற சர்ச் என்ன முயற்சி வேண்டுமானாலும் செய்யும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்”, என்றது[9] திகைப்பாக உள்ளது. அதாவது, அயல்நாட்டிற்கு தப்பிச் செல்லக் கூட சர்ச் தான் உதவுகிறது என்று தெரிகிறது. இவர் கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ளார்[10]. ஒரு 17-18 வயது பெண் கற்பழிக்கப் பட்டுள்ளாள், மற்றும் குழந்தையையும் பெற்றூள்ளாள் என்பதைப் பற்றி கவலைப்படாமல்,, கற்பழித்த பாதனுக்கு என்னவேண்டுமானாலும் செய்வோம் என்று வாதிப்பது, வாடிகன் கொடுக்கும் ஆதரவே என்று புலப்படுகிறது. பள்ளி மாணவி பலாத்கார சம்பவத்தில், ஒரு ஆண்டு வரை நடவடிக்கை எடுக்காதது கேரளாவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவ்விவரங்களை பொலீஸார் 28-02-2017 (செவ்வாய் கிழமை) அன்று தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

28-02-2017

robin-vaddakumchiryil-arrested-28-02-2017-supporting-varghese-vallikkatt

[1] Father Robin Vaddakumchiryil (48), the bishop of St Sebastian church has confessed to the crime. He is the manager of the school where the girl studies. The Father has been charged under stringent provisions of the Prevention of Children from Sexual Offences Act (Pocso) and IPC.

http://indiatoday.intoday.in/story/kerala-teenager-raped-priest-delivers-baby/1/893170.html

[2] India Today, Kerala priest arrested for raping 17-year-old, survivor delivered a child last week, Revathi Rajeevan | Posted by Nivedita Dash, Thiruvaanthapuram, February 28, 2017.UPDATED 13:52 IST.

[3] Father Vadakkancheril was active in church media affairs, including as managing director of Deepika, a Catholic daily.

[4] தினமலர், குழந்தை பெற்றார் மாணவி : பலாத்கார பாதிரியார் கைது, பதிவு செய்த நாள். மார்ச், 01, 2017, 00.02.

[5] The church official had allegedly abused the girl at the computer class provided by the church, police said.

The Hindusthan Times, Kerala priest who spoke against child abuse arrested for raping minor girl, Updated: Feb 28, 2017 16:37 IST.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1720927

[7] Father Robin Vaddakumchiryil (48), the vicar of St Sebastian church in Kottiyoor, was arrested after the girl narrated the incident to officials of childline, a telephone helpline for children in distress. Childline officials then tipped off police.

 http://www.hindustantimes.com/india-news/kerala-vicar-arrested-for-raping-minor-who-attended-church-run-computer-classes/story-R6BA4dXZP5UAvZdJw4BWXL.html

[8] Outlook, Kerala Catholic priest arrested on rape charhes while trying to leave the country, February 28, 2017.UPDATED 11:05 IST.

http://www.outlookindia.com/website/story/kerala-catholic-priest-arrested-on-rape-charges-while-trying-to-leave-the-countr/298081

[9] “The church will not make any attempt to protect the accused (priest). The church will cooperate with the investigation,” Father Varghese Vallikkatt, deputy secretary general of the Kerala Catholic Bishops’ Council, told Catholic News Service from Cochin Feb 28. “The church has to be vigilant and take timely action to prevent recurrence of such shocking cases,” Father Vallikkatt added.

https://www.ncronline.org/news/accountability/priest-arrested-charged-rape-kerala-after-teen-delivers-child

[10] National Catholic Registry,  Priest arrested, charged with rape in Kerala after teen delivers child, by Catholic News Service, Feb.28, 1017.

https://www.ncronline.org/news/accountability/priest-arrested-charged-rape-kerala-after-teen-delivers-child

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: