ஆசீர்வாதம் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று, கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டியதால், பாதிரி உட்பட பலர் கற்களால் அடித்து கொலையுண்டது – ஊடகங்களில் முரண்பட்ட செய்தி வெளியீடு!
பல வித்தியாசங்களுடன் வெளி வந்த “ரவுடி/ரௌடி கொலை” செய்தி (19-06-2016): மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக கற்களால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. வழக்கம்போல, பொறுமையாகப் படித்தபோது, நிறைய வேறுபாடுகள் காணப்பட்டன. இதுதொடர்பாக, கிறிஸ்தவ போதகர், மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டாலும், அதற்குண்டான சம்பந்தத்தை விளக்காமல் சாதாரண “ரௌடி மிரட்டல்” என்றதில் முடித்து விட்டன. ஆசீர்வாதத்தின் வயது, கலாட்டா செய்த விதம் (குடித்து வந்தானா-இல்லையா), வயது 35 அல்லது 40 என்று வேறுபாடுகள் காணப்படுகின்றன. செங்கல்பட்டு கே.கே. நகரில் ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர் என்று லைவ்.டே என்ற இணைதளம் கூறுகிறது[1]. சரி, இனி விவகாரத்தைப் பார்ப்போம்[2].
ஆசிர் என்ற ஆசிர்வாதம் யார்?: செங்கல்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் ஆசீர் (எ) ஆசீர்வாதம் (35) என்கிறது தினகரன். வயது 40 என்கிறது மாலைமலர்[3]. செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் ஆசீர் என்ற ஆசீர்வாதம், 35; ரவுடி என்கிறது தினமலர். இவரது தாய் சுசீலா. மனைவி மேரி. பிரபல ரவுடியான ஆசீர் மீது கொலை முயற்சி வழக்கு, கொள்ளை, மிரட்டல், ஆள் கடத்தல், கடைகளில் சென்று, மாமூல் கேட்டு மிரட்டியதாக,உள்ளிட்ட 11 வழக்குகள் உள்ளன[4]. செங்கல்பட்டு தாலுகா போலீஸ் மற்றும் செங்கல்பட்டு நகர போலீசில், 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 2015ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்துவிட்டு, தற்போதுதான் வெளியே வந்திருந்தார்[5]. ஆக, ஆசீர்வாதம் ரௌடி, ஜெயிலுக்கு போய் வந்தவன்…….என்றாலும் கிருத்துவன். பிறகு, அவன், சர்ச்சிடமே வந்து எப்படி மாமூல் கேட்டான் என்று தெரியவில்லை. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படவில்லை போலும்.
ராஜ்–டிவியின் பேட்டியின் படி, மக்கள் அவன் எப்படியாவது பணத்தைக் கறக்கும் பேர்வழி என்று தெரிகிறது: அந்த பகுதியில் யாரிடத்தில் அதிகமாக பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வான், பிறகு, அவர்களிடத்தில் சென்று மிரட்டி பணம் கேட்பான். இப்படி மாமூல் கேட்பதையே வேலையாகக் கொண்டிருந்தான். எல்லோரிடத்திலும் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்பான். சிறுவர்கள் என்று கூட பார்க்க மாட்டான், கத்தியால் கீறி பயமுறுத்தி பணம் பரிப்பான். பெண்களாக இருந்தால், அசிங்கமாக-ஆபாசமாக பேசி மிரட்டுவான். ஏன் நிர்வாணமாக கூட இருந்து தொல்லைக் கொடுத்து பணம் கறப்பான், என்று அங்குள்ள பெண்கள் கூறுவதை “ராஜ்டிவி” பதிவு செய்துள்ளது[6]. ஒரு ஆண் பேசும்போது, பணத்திற்காக மிரட்டுவதை விளக்கி விட்டு, இப்படி அடிக்கடி வந்து கேட்டால் கோபம் வரும், அப்பொழுது அடிக்க பார்ப்பார்கள், பலர் சேரும் போது, இவ்வாறு ஆகிவிடுகிறது, ஆனால், அவன் இறந்து விடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண்களையும் சேர்த்து தான், போலீஸார் கூட்டி செல்ல முயன்றனர். ஆனால், பிறகு, அவர்களை விட்டுவிட்டு ஐந்து பேரை கூட்டி சென்றனர் என்று விவரித்தார்[7]. ராஜ்-டிவியின் “ரவுடிகள் உருவாகும் விதம்” அலசல் நண்ராக இருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை சர்ச்சில் பிரார்த்தனை நேரத்தில் வந்து மிரட்டிய ஆசிர்வாதம்: இம்மானுவேல் பிரகாஷ் [Immanuel Prakash] என்ற பாஸ்டர் / மதபோதகர் தனது வீட்டின் அருகில், இந்த ஜெபகூடத்தை நடத்தி வந்தார். இடம் – மேலமை ஊராட்சி, கே.கெ.நகர், அம்பேத்கர் 2வது தெரு, வார்டு எண். 9. இந்நிலையில், 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணியளவில் (தினகரன்) / 10.15 மணிக்கு (தினமலர்) ஆசீர் செங்கல்பட்டு அடுத்த கேகே நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு கே.கே., நகர் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று (தினமலர்) / திடீரென சென்றார்[8]. சாதாரணமாக சென்றார், திடீரென்று சென்றார், குடித்து விட்டு சென்றார் – என்று காணப்படுகிறது. பின்னர் போதகர் இம்மானுவேல் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளார்[9]. அதற்கு போதகர், ‘வார வாரம் வந்து மாமூல் கேட்கிறாய், தர முடியாது’ என்று கூறியுள்ளார்[10]. உடனே ஆசீர், ‘நான் பிரபல ரவுடி. எனக்கு மாமூல் தரமாட்டியா. நீ எப்படி சபை நடத்துகிறாய் என பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஆவேசமாக கூறி அடிக்க பாய்ந்துள்ளார்[11]. இதனை கண்டித்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் மற்றும் பிரார்த்தனைக்கு வந்தவர்களை ஆசீர்வாதம் கத்தியை காட்டி மிரட்டினார்[12]. மேலும் போதகர் இம்மானுவேல் பிரகாசிடம் மாமூல் கேட்டு எச்சரித்தார்[13].
ஊடகங்கள் விவரித்தது (20-06-2016): ஆசிர்வாதம் கத்தியுடன் ஜெபகூடத்திற்குள் சென்றான் இம்மானுவேலை கத்தி காட்டி மிரட்ட ஆரம்பித்து பணம் கேட்டான். ஜெபகூட்டத்தில் இருந்த சுமார் 50 பக்தர்களுக்கு[14] எதிராகவே கத்தி காண்பித்து சுழற்றி மிரட்டினான். இவ்வாறு, தினமும் மாமூல் கேட்டு வந்தான்[15]. இதனால், அவனை வெளியே போகும்படி சொன்னார்கள். ஆனால், அவனோ, எல்லோரையும் கத்தி காட்டி மிரட்டினான்[16]. பிறகு அப்படியே வெளியே சென்றான். அப்பொழுது, பக்தர்கள் அவன் மீது பாய்ந்து, கற்களால் அடித்து, வளைத்துப் பிடிக்க முயன்றனர்[17]. ஆனால், அவனோ கத்தியை வைத்து, சுற்றி வந்து, குத்தி விடுவது போல பாய்ந்து, பாய்ந்து நடந்து கொண்டிருந்தான். ஆனால், கற்கள் அவனது மார்பு மற்றும் தலைமீது தாக்கப்பட்டதில் மயங்கி விழுந்தான். ஒரு பெரிய கல் அவன் தலையில் பட்டதில், அங்கேயே இறந்து விழுந்தான்[18]. அவ்வாறு டெக்கான் குரோனிகல் விவரித்தது[19].
© வேதபிரகாஷ்
08-07-2016
[1] http://liveday.in/chennai-online-tamil-news/criminal-murder/
[2] விவரங்களை அலசி இதனை பதிவு செய்ய வேண்டும் என்று தாமத்தித்தில், மற்ற விவகாரங்கள் வந்துவிட, இதனை மறக்கும் படி ஆகிவிட்டது. இருப்பினும், முக்கியத்துவம் குறித்து, இப்பொழுது பதிவு செய்யப்படுகிறது.
[3] மாலைமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்–மகன் உள்பட 5 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2016 12:38
[4] தினகரன், மாமூல் கேட்டு மிரட்டியதால் பயங்கரம் பட்டப்பகலில் மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து ரவுடி படுகொலை போதகர், மகன் உள்பட 5 பேர் கைது, Date: 2016-06-20 12:51:29
[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=586671&cat=504
[6] கோப்பியம் (ராஜ் டிவி), Koppiyam – Rowdy Hacked To Death In Chengalpattu – பாதிரியார் உட்பட 5 பேர் கைது !!, Published on Jun 24, 2016
[7] https://www.youtube.com/watch?v=B2sIXu35CtQ
[8] நியூஸ்.7.டிவி, பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கல்லால் அடித்து கொலை செய்த பொது மக்கள் !, June 19, 2016
[9] http://ns7.tv/ta/rowdy-nabbed-public-threatening-father-money.html
[10] தினகரன், பட்டப்பகலில் மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து ரவுடி படுகொலை, Date: 2016-06-20@ 01:16:19.
[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=225349
[12] மாலைமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்–மகன் உள்பட 5 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2016 12:38
[13] http://www.maalaimalar.com/News/District/2016/06/20123825/1020145/Rowdy-struck-and-killed-in-Chengalpattu.vpf
[14] The Times of India, Thug tried to extort money from pastor, TNN | Jun 20, 2016, 04.44 AM IST
[15] http://timesofindia.indiatimes.com/city/chennai/Thug-tried-to-extort-money-from-pastor/articleshow/52825565.cms
[16] New Indian Express, Unforgiving: Church drama leaves former convict dead in Chengalpet, By Express News Service, Published: 20th June 2016 04:07 AM, Last Updated: 20th June 2016 10:21 AM.
[17] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Unforgiving-Church-drama-leaves-former-convict-dead-in-Chengalpet/2016/06/20/article3490680.ece
[18] Ashirvadam allegedly went inside the prayer hall with a knife and started threatening the preacher, demanding money. He demanded mamool daily at knifepoint in front of devotees, who suggested that he get out of the prayer hall. Paying no heed, he continued to threaten the preacher. He said that if Immanuel Prakash failed to give him money daily he would be forced to use the knife. When Ashirvadam refused to listen to the request of the devotees to get out, some of them tried to overpower him. He then pointed knife at them. Swinging knife at them in a threatening manner, he came out of the prayer hall. While devotees were shocked over the incident, Immanuel Prakash, his son, brother and two others surrounded Ashirvadam and attacked him by pelting big stones at him as he continued his stabbing actions with knife. He collapsed after he was hit on his head and chest.
[19] Deccan chronicle, Chennai: Preacher, kin stone ex-convict to death, Published Jun 20, 2016, 6:40 am IST; Updated Jun 20, 2016, 6:40 am IST.
குறிச்சொற்கள்: ஆசிர். ஆசீர்வாதம், இம்மானுவேல் பிரகாஷ், ஏசு, கடைசி காலம், கல், கல்லெரிந்து கொலை, கிருத்துவம், சியோன், செங்கல்பட்டு, ஜியோன், பாதிரி, மாமூல், மிரட்டல், ரவுடி, ரௌடி, வியாபாரம்
மறுமொழியொன்றை இடுங்கள்