சிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை! இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா?

சிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை! இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா?

Sanil K James who has been sentenced for 40 years RI

மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை பாஸ்டரின் காமக்களியாட்டங்கள்: திருச்சூரில் 12 வயது சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த பாஸ்டருக்கு நீதிமன்றம் 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கியது. கேரள மாநிலம் கோட்டையம் கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சனில் கே. ஜேம்ஸ் (Sanil K James 37). திருச்சூர் மாவட்டம் பீச்சி பாயிகண்டம் பகுதி / பீச்சில் உள்ள சால்வேஷன் ஆர்மி சர்ச்  [the Salvation Army] / இரட்சணிய சேனை சர்ச்சில்  பாஸ்டராக உள்ளார். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று பிரார்த்தனை செய்வது இவரது வழக்கம். இவ்வாறு செல்லும் போது மனைவியுடன் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் இவர் தனியாக செல்வது உண்டு. முதலில் இவர் திருமணம் ஆனவரா இல்லையா என்பது தெரிவிக்கபொபடவில்லை. இந்த கிராம குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு சென்று விடுவர். ஆரம்பத்தில் எல்லா குடும்பத்திலும் நன்றாக பழகி அனைவரது நன்மதிப்பை பெற்றார்[1]. பின்னர் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் தனது லீலைகளை தொடங்கியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு ஆசை காட்டியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னை பற்றி வெளியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவரை மேலும் மேலும் இந்த செயலை செய்ய செய்துள்ளது[2].

Salvation army, dress etc -

செக்ஸ் அவதூறு, துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு முதலிய செயல்களில்  அகப்பட்டு வரும் சால்வேஷன் ஆர்மி: “சால்வேஷன் ஆர்மி” (மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை) என்ற பொரொட்டஸ்டன்ட் கிருத்துவ சர்ச், செக்ஸ் என்பதை ஆண்டவனுடைய திட்டமிட்ட செயல் என்று நம்புகிறார்கள்[3]. செக்ஸை வைத்துக் கொண்டு மதம் பரப்புவது, மதமாற்றம் செய்வது புண்ணியம் என்றும் நினைக்கிறார்கள். இவர்கள் ஜோடி-ஜோடியாக ரயில்களில், பஸ்களில் ஏன் விமானங்களில் கூட பயணிப்பத்தைப் பார்த்திருக்கலாம். புருஷன் பெண்டாட்டி போல நெருக்கமாக பழகிக் கொண்டிருப்பர், கேட்டால், நாங்கள் சாமியார்கள் / ஊழியக்காரர்கள் / ஏசுப்படையினர் என்றெல்லாம் சொல்லிக்கொள்வர். மேனாடுகளில் செக்ஸ் அவதூறு[4], துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு[5] முதலிய செயல்களில் அதிகமாகவே, இந்த குழுவினர்கள் அகப்பட்டுள்ளனர்[6].  சிறுமியர்-சிறுவர் செக்ஸ்-கற்பழிபைப் பற்றி கேட்கவே வேண்டாம்[7]. இங்கிலாந்தில் பலமுறை விசாரணைகு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[8]. “சால்வேஷன் ஆர்மி” செக்ஸ் தான் என்ற அளவுக்கு நினைக்க வைக்கும் அளவுக்கு, அவர்களது களியாட்டங்கள் வெளிவந்தன. 2010ல் ஹோசூரில் நடந்த செக்ஸ் மீறல்கள் மறைக்கப்பட்டுவிட்டன.  2011ல் நாகர்கோவில், கன்யாகுமரி பகுதிகளில் தலைதூக்க ஆரம்பித்து, பிறகு கேரளாவுக்கு பரவியதா அல்லது அங்கிருந்து தமிழகத்திற்கு வந்ததா என்று ஆராய வேண்டியுள்ளது.

Pastor gets 40 years RI Indian express

கற்பழிப்புகளில் ஈடுபட்ட உல்லாச பாஸ்டர்: அந்த சர்ச்சில் உள்ள ஒரு அறையில் இவர் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சர்ச்சுக்கு வந்த அவர், அங்கிருந்த 12 வயது  சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார்[9]. ஏப்ரல் 2014ல் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, டிவியின் சப்தத்தை பெரிதாக வைத்து கற்பழித்தான்[10]. அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்[11]. இதுவும் வழக்கம் போல கிருத்துவப் பாதிரிகள் கடைபிபிடிக்கும் முறையாகவே இருந்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமி தனது பள்ளி தோழி ஒருவரிடம் கூறி அழுதார்[12].  இப்படி எத்தனை சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று விவரங்கள் இல்லை. இதுவும் வழக்கம் போல, சர்ச்சின் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்ற மறைப்பு வேலையாகவே உள்ளது.

Pastor gets 40 years RI - Indian express photo

டைம்ஸ் ஆப் இந்தியா கொடுத்துள்ள புகைப்படம் வேறுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

கவுன்சிலிங் மூலம் வெளியான விவகாரங்கள்: நான் ஏசு போன்றவன், கர்த்தரின் பிரதிநிதி, உனக்கு நல்லதைக் கொடுக்கவே இவ்வாறு செய்கிறேன், அதனால், என்னிடம் வா என்று மூளைசலவை செய்து, சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், இளம் பெண்கள் முதலில் வெளியில் சொல்லவில்லை, விவரங்கள் வெளியாகவில்லை. குழந்தைநலத்துறை கமிட்டி மூலம் ஆலோசனைக் குழுவால் கவுன்சிலிங் மூலம் விசாரித்த போது, விவரங்கள் தெரியவந்தன[13]. அதுகூட, பல அமைவுகளுக்குப் பிறகு அச்சிறுமிகள் விவகாரங்களை சொல்ல ஆரம்பித்தனர். இது குறித்து அந்த சிறுமி பள்ளியில் தன்னுடன் படிக்கும் தோழியிடம் கூறியுள்ளார். அப்போது தன்னையும் அந்த பாஸ்டர் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்தார்[14]. இந்த தகவல் அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்[15]. அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதில் எந்த அளவுக்கு சர்ச் ஈடுபட்டுள்ளது தனால், தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதன அறிந்து கொள்ளலாம். செக்ஸ் வக்கிரகங்கள் எல்லைகளை கட்டுக்கடங்காமல் மீறும் போது தான், புகார், போலீஸ், வழக்கு என்று வருவதை கவனிக்கலாம். அதாவது, சர்ச்சுகள் பெரும்பாலும், திகாரம், பணம், மிரட்டல் போன்ற யுக்திகளை கையாண்டுதான், பாலியல் வன்புணர்ச்சி, செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றை மறைத்து வருகின்றன என்பதும் உறுதியாகின்றது.

 salvation army enquired for sexual abuses

2014ல் ஆரம்பித்து 2016ல் முடிந்த வழக்கு: 2014-ல் இந்த சம்பவம் நடைபெற்றாலும், பிப்ரவரி.7, 2015 அன்று தான் கைது செய்யப்பட்டார். போலீசார், பாஸ்டர் சனில் கே.ஜேம்சை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூர் மாவட்ட செசன்ஸ்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இறுதிகட்ட விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி சுபீர், பாஸ்டர்  சனில் கே.ஜேம்ஸ் குற்றவாளி என்று அறிவித்தார். தீர்ப்பின் முழு விபரத்தை நேற்று அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று பாஸ்டர் சனில் கே.ஜேம்சுக்கு 40  வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு கொடுக்க [ POCSO (Protection of Children from Sexual Offences Act)] விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்[16]. இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஏதிரான குற்றங்கள் தடுப்பு சட்டம் [offences under IPC 376(2)(f) and POCSO section 6] பிரிவுகளில் 20 மற்றும் 20, மொத்தம் 40 40  வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது[17]. இது தவிர SC/ST  சிறுமியை பாலியல் ரீதியில் துன்புருத்தியதற்கு இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது[18].

salvation army enquired for sexual abuses - Sanil K James

© வேதபிரகாஷ்

30-03-2016

[1] தினமலர்,  வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகருக்கு 40 ஆண்டு கடுங்காவல், மார்ச்.2, 2016.04.14.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1469371

[3] The Salvation Army recognizes that the battle between flesh and spirit is never easy, but believes that the sex drive is designed by God to lead to the highest expression of human love only within the holy estate of matrimony, and that when it is expressed outside of that relationship, it will inevitably lead to misery of self and others.

http://www.bbc.co.uk/religion/religions/christianity/subdivisions/salvationarmy_1.shtml

[4] http://www.cbc.ca/news/canada/newfoundland-labrador/story/2007/11/16/salvation-army.html

[5] http://dutroux.blogspot.com/2010/12/kids-raped-by-salvation-army.html

[6] http://www.firstcoastnews.com/news/local/story.aspx?storyid=26304

[7] http://www.hiddenmysteries.org/religion/christianity/christianpedofile.shtml

[8] https://salvos.org.au/scribe/sites/auesalvos/files/documents/royal-commission/Royal_Commission_Sept_Pipeline.pdf

[9] தினகரன், திருச்சூரில் சர்ச்சுக்குள் சிறுமியை மிரட்டி பலாத்காரம் பாஸ்டருக்கு 40 வருடம் கடுங்காவல், மார்ச். 2, 2016.00.59.34.

[10] The pastor was convicted of raping the girl in his quarters in April 2014, when she had come there along with her siblings. James reportedly turned on the TV to distract the others and took the girl to an adjacent room, where he raped her.

http://indianexpress.com/article/india/india-news-india/kerala-priest-gets-40-years-jail-term-for-raping-minor/

[11] தினத்தந்தி, 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மத போதகருக்கு 40 ஆண்டுகள் சிறை, மாற்றம் செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST; பதிவு செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST

[12] http://www.dailythanthi.com/News/India/2016/03/02123937/Kerala-priest-gets-40-years-jail-term-for-raping-minor.vpf

[13] Indian express, Kerala priest gets 40 years jail term for raping minor, Written by Arun Janardhanan | Chennai | Published:March 2, 2016 1:18 am

[14] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=199681

[15]http://www.newindianews.com/view.php?20eOlTdbcU40624e3UMQ3022YmD2ddcfDm420eWqAKae4q04A4cb3lOm23

[16] நியூ.இந்தியா.நியூஸ், தேவாலயத்துக்குள் சிறுமியை பலாத்காரம் செய்த பாஸ்டர் , புதன்கிழமை, 02 மார்ச் 2016, 06:07.34 AM GMT +05:30 ]

[17] http://www.thequint.com/hot-wire/2016/03/01/kerala-court-awards-pastor-40-years-jail-term-for-raping-minor

[18] http://www.dnaindia.com/india/report-kerala-pastor-gets-40-years-rigoruous-imprisonment-for-sexual-abuse-of-minor-2184640

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: