செக்ஸ் பாதிரி சாமுவேல் ஆரோன் கைது – இரண்டு பெண்கள் புகார்கள் கொடுத்தனர் – ஆனால், பல பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார்!

செக்ஸ் பாதிரி சாமுவேல் ஆரோன் கைது – இரண்டு பெண்கள் புகார்கள் கொடுத்தனர் – ஆனால், பல பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார்!

AG church Samuel Aron arrested 15-03-2016செக்கினா அசெம்பிளி’  ஏஜிதிருச்சபை பாதிரியின் பாலியல் புகார்கள்: நாமக்கல்–திருச்சி சாலை குப்பம்பாளையத்தில் ‘செக்கினா அசெம்பிளி’  ‘ஏஜி’ திருச்சபை என்ற பெயரில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த சாமுவேல் ஆரோன் (வயது40) என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மதபோதகராக வேலைப்பார்த்து வந்தார். அப்படியென்றால், 15 ஆண்டுகள் எத்தனை சில்மிஷங்கள் செய்துள்ளான் என்று கர்த்தரைத்தான் கேட்டுத் தெருந்து கொள்ள வேண்டும். அவர், திருச்சபைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.   ஆனால், நிர்மலா மட்டும் தான் புகார் கொடுத்திர்ப்பது தெரிகிறது. சர்ச் பிஷப்புகள், இதனையடுத்து அவர் தேவாலயத்தில் இருந்து கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியேற்றப்பட்டார்[1].

சாமுவேல் ஆரோன்.1இரண்டு பெண்களிடமிருந்து புகார்கள் உள்ளன, மற்ற பெண்கள் புகார்கள் கொடுக்கவில்லை: இவரது வீட்டில் நிர்மலா (வயது 31) என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்தார். கடந்தாண்டு, மே, 14ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நிர்மலாவை, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அதனால், அதிர்ச்சி அடைந்தவர் அவரிடம் இருந்து தப்பி வெளியேறினார். ஆனால், போதர் சாமுவேல் ஆரோன், ‘வெளியே சொல்லக்கூடாது’ என, மிரட்டியதுடன், அடிக்கடி தொலைபேசியிலும், வழியிலும் மிரட்டி, மீண்டும் வேலைக்கு வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கிடையில், கடந்த மாதம் பிப்ரவரி 2016, நாமக்கல் வந்த கோவையை சேர்ந்த போதகர் வேலுசாமி, ‘போதகர் சாமுவேல் ஆரோன், என் மனைவியை மயக்கி சீரழித்து கெடுத்து விட்டார்’ என, நிர்மலாவிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், தொடர்ந்து பல பெண்களை சீரழித்த சாமுவேல் ஆரோன் மீது, நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில், நிர்மலா புகார் செய்தார். ஆக இரண்டு புகார்கள் உள்ளன, மற்ற பெண்கள் புகார்கள் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

சாமுவேல் ஆரோன்.4நிர்மலா கொடுத்த புகாரின் விவரங்கள்: மதபோதகர் சாமுவேல் ஆரோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நிர்மலா கடந்தாண்டு மதபோதகர் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால், உள்ளூர் போலீஸ்காரர்கள் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக  எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால்[2], மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது[3]: “எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் செங்கல் சூளையில் வேலை செய்கிறார். எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாமுவேல் ஆரோனின் வீட்டிற்கு வேலை செய்ய சென்றேன். 2 ஆண்டுகள் நான் அவர் வீட்டில் வேலை பார்த்தேன். கடந்த 2015–ம் ஆண்டு மே மாதம் 14–ந் தேதி காலை வேலைக்கு சென்றேன். அவரது வீட்டில் அன்று அவரது மனைவி, மாமனார் மற்றும் குழந்தைகள் வெளியே சென்று விட்டனர். அந்த தனிமையை பயன்படுத்தி கொண்டு சாமுவேல் ஆரோன், என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவரை தள்ளிவிட்டு அன்றைய தினமே எனது வீட்டுக்கு வந்து விட்டேன். அதன்பிறகு, நான் அவரது வீட்டிற்கு வேலைக்கு செல்லவில்லை. ஆனால் அவர் போனில் தொடர்பு கொண்டு என்னை மீண்டும் வேலைக்கு வா என்றும், இல்லை எனில் உன் மீது வீண் குற்றச்சாட்டுகளை சொல்லி, உன்னை ஜெயிலில் தள்ளி மானத்தை வாங்குவேன் எனவும் மிரட்டினார். மேலும் அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு, செக்ஸ் தொந்தரவு செய்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்[4]. இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவிட்டார்.

AG church Samuel Aron - The Hindu way of reporting 16-03-2016விசாரணையில் தான் செய்த தவறை மதபோதகர் சாமுவேல் ஆரோன் ஒப்புக் கொண்டார்:  இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட மதபோதகர் சாமுவேல் ஆரோன், அவர் மீது புகார் தெரிவித்த பெண் ஆகிய இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்[5]. மேலும், வேறு ஏதேனும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாரா?, தேவாலய நிர்வாகத்தில் ஊழல் செய்தாரா? என்பன போன்ற கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தான் செய்த தவறை மதபோதகர் சாமுவேல் ஆரோன் ஒப்புக் கொண்டார்[6]. அதனைத்தொடர்ந்து, பெண்ணை மானபங்கம் செய்தல், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மதபோதகர் சாமுவேல் ஆரோனை கைது செய்தனர். இதையடுத்து நாமக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மதபோதகர் சாமுவேல் ஆரோன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் மதபோதகர் சாமுவேல் ஆரோனை வேனில் ஏற்றி அழைத்து வந்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்[7].

Samuel Aron - The Hindu way of reporting 16-03-2016ஊடகங்களின் பாரபரட்சம் மிக்க செய்தி வெளியீடுகள்: சிறையில் அடைக்கப்பட்ட மதபோதகர் மீது மேலும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது[8]. மேலேயே இரண்டு பெண்களின் புகார்கள் உள்ளன, மற்ற பெண்கள் புகார்கள் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த மாதம் மதபோதகர் சாமுவேல் ஆரோன் மீது கோவையை சேர்ந்த மற்றொரு மதபோதகர் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார். இதனால் மதபோதகருக்கும், அங்கு வழிபாடு நடத்த வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது[9]. இதைத் தொடர்ந்து மதபோதகர் தேவாலயத்தை பூட்டிவிட்டு சென்று விட்டதாக கூறியும், தேவாலயத்தை திறக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. “தி இந்துவின்” செய்தி மிகச்சிறியதாக இருக்கிறது[10]. பல பெண்கள் என்பதனை “many woman” என்று குறிப்பிட்டு[11] தமாஷ் செய்தது!

© வேதபிரகாஷ்

[1] நியூஸ்.7, பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டபாதிரியாரை கண்டித்து தர்ணா போராட்டம், Updated on March 06, 2016

[2] நியூஸ்.7, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கிறிஸ்துவ மத போதகர் கைது, Updated on March 16, 2016.

[3] சென்னை.ஆன்லைன், வீட்டு வேலைக்கார பெண்ணை கற்பழிக்க முயன்ற கிறிஸ்தவ பாதிரியார் கைது, Published On : Mar 16, 2016.

[4] http://tamil.chennaionline.com/news/tamilnadu/newsitem.aspx?NEWSID=c7bb5421-1d1b-43a6-bd48-a3fae865537f&CATEGORYNAME=TTN

[5] http://ns7.tv/ta/christian-preacher-arrested-sex-crime.html

[6] மாலைமலர், வேலைக்காரியிடம் பாலியல் பலாத்கார முயற்சி: கைதான மதபோதகர் நாமக்கல் கிளை சிறையில் அடைப்பு, பதிவு செய்த நாள் : புதன்கிழமை, மார்ச் 16, 10:01 AM IST.

[7] http://www.maalaimalar.com/2016/03/16100111/try-to-molested-maid-arrested.html

[8] தினமலர், பாலியல் பலாத்கார முயற்சி: ‘ஏஜிகிறிஸ்துவ திருச்சபை மத போதகர் கைது, மார்ச்.16, 2016.07.52

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1479731

[10] The Hindu, Priest arrested, March 16, 2016.

[11] Samuel Aroan (40), who had been the priest at Shekinah AG Church in Kuppampalayam on Tiruchi Main Road for the past 15 years, was held on charges of rape and sexual harassment of a housemaid on Tuesday 08-03-2016. It is said that he sexually abused many woman who came to the church. – Staff Reporter

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-arrested/article8358735.ece

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: