நாமக்கல் ஷெக்கினா ஏ.ஜி. கிறிஸ்தவ திருச்சபை சாமுவேல் ஆரோனின் செக்ஸ் திருவிளையாடல்கள்: பாதிக்கப் பட்ட பெண் புகார், பதவி நீக்கம், போராட்டம் முதலியன!

நாமக்கல் ஷெக்கினா .ஜி. கிறிஸ்தவ திருச்சபை சாமுவேல் ஆரோனின் செக்ஸ் திருவிளையாடல்கள்: பாதிக்கப் பட்ட பெண் புகார், பதவி நீக்கம், போராட்டம் முதலியன!

நாமக்கல் பாதிரி செக்ஸ் மார்ச் 2016 தினமணி

தினமணி செய்தி

ஷெக்கினா ஏஜி கிறிஸ்தவ திருச்சபை சாமுவேல் ஆரோனின் திருவிளையாடல்கள்: நாமக்கல்-திருச்சி சாலை குப்பம்பாளையத்தில், ஷெக்கினா ஏஜி கிறிஸ்தவ திருச்சபை உள்ளது[1]. அதன் போதகராக, கடந்த, 15 ஆண்டுகளாக சாமுவேல் ஆரோன் இருந்து வருகிறார். இவர், திருச்சபைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது[2]. அப்படியென்றால், 15 ஆண்டுகள் எத்தனை சில்மிஷங்கள் செய்துள்ளான் என்று கர்த்தரைத்தான் கேட்டுத் தெருந்து கொள்ள வேண்டும். சர்ச் பிஷப்புகள், இதனையடுத்து அவர் தேவாலயத்தில் இருந்து கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியேற்றப்பட்டார்[3].  இருப்பினும் இந்நிலையில் இன்று காலை வழிபாட்டுக்கு வந்தவர்களிடம் சாமுவேல் ஆரோன், ஆட்களுடன் வந்து, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது[4]. திருச்சபையில் 42 வயது போதகர், ஒருவர், 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் திருச்சபையை முற்றுகையிட்டனர்[5]. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது[6]. பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர் இவ்வாறு செக்ஸ், பாலியல், கற்பழிப்பு, என்று தொடர்ந்து ஈடுபட்டு வருவது வாடிக்கையான விசயமாகி விட்டது. இதைப் பற்றிப் பொறுப்புள்ள கிருத்துவர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது கேவலமாகவே இருந்து வருகிறது. நித்தியானந்தாவை கேலிசெய்து கேளிக்கைப் பொப்ருளாக மாற்றிய ஊடகங்கள், சினிமா முதலியவை இவர்களில் கொக்கோக, காமக் களியாட்டங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவற்றின் அப்படமான பாரபட்சத்தனத்தை எடுத்துக் காட்டுகிறது.

நாமக்கல் பாதிரி செக்ஸ் மார்ச் 2016 samuel Aroon Indian Expressபுகார் கொடுத்த நிர்மலாவை மிரட்டிய பலான போதகர்[7]: இதுகுறித்து, எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்த நிர்மலா, நாமக்கல் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “ஷெக்கினா ஏஜி சபை போதகர் சாமுவேல் ஆரோன் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்தேன். பாலியல் தொந்தரவுகளால் அவதிப்பட்டேன். பலாத்காரம் செய்ய முயன்றதால், வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டேன். அடிக்கடி தொலைபேசியிலும், வழியிலும் மிரட்டி, மீண்டும் வேலைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்[8]. கடந்த மாதம் ஜனவரி, 9ம் தேதி, தன் மனைவியை, ஆரோன் மயக்கி கெடுத்து விட்டதாக, கோவையை சேர்ந்த போதகர் வேலுசாமி கண்ணீர்மல்க என்னிடம் கதறினார். எனக்கு ஏற்பட்ட பாதிப்பை சபையினர் முன் தெரிவித்தேன். நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தேன். ஆனால், இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாமுவேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது[9]. நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அங்கிருக்கும் பெண்போலீஸாரும் உடந்தை எனத்தெரிகிறது. அல்லது ஏதோ ஒரு சலுகை பெற்று பலான பாதிரிக்குத் துணைப் போகிறார்கள் என்று தெரிகிறது.

நியூஸ்7 புகைப்படம் நாமக்கல் போதகர்செக்ஸ்பாதிரி சர்ச்சைப் பூட்டி ஆடிய ஆட்டம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (06-03-2016) என்பதால், கிறிஸ்தவ மக்கள் திருச்சபைக்கு சென்றனர். அப்போது, திருச்சபைக்கு பூட்டு போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் சிலர் சபையின் கதவை பூட்டியிருந்தனர்[10]. அவர்கள் சாமுவேல் ஆரோனின் ஆட்கள் என்று தெர்ய வந்ததால், ஆத்திரமடைந்த அவர்கள், திருச்சபையை முற்றுகையிட்டு, ‘போதகர் சாமுவேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவரிடம் இருந்து சபையை மீட்டுத்தர வேண்டும்’ என, கோஷம் எழுப்பினர்[11]. நாமக்கல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், ‘சாமு வேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்[12]. இது கூட வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், இப்பொழுது போலீசார், ‘சாமு வேல் ஆரோன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதி அளித்ததும் சென்று விட்டார்கள் என்றால் என்ன அர்த்தம் சோரம் போன பெண்களுக்கு திரும்ப வந்துவிடுமா? கர்த்தர் எல்லோரையும் மன்னித்து விடுவாரா? பாதிக்கப்பட்ட பெண்கள் புனிதமாகி விடுவார்களா?

நாமக்கல் பாதிரி செக்ஸ் மார்ச் 2016 samuel Aroonஜனவரி 9, 2016:கடந்த மாதம் ஜனவரி, 9ம் தேதி, தன் மனைவியை, ஆரோன் மயக்கி கெடுத்து விட்டதாக, கோவையை சேர்ந்த போதகர் வேலுசாமி கண்ணீர்மல்க என்னிடம் கதறினார்”, என்று , எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்த நிர்மலா, நாமக்கல் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருக்கிறார். கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியேற்றப்பட்டார்[13] என்று தினமணி எடுத்துக் காட்டியுள்ளது. அப்படியென்றால், சாம் ஆரோனின் லீலைகள் மேலிடத்திற்கு நன்றாகவேத் தெரிந்துள்ளது என்றாகிறது. அனுபவிக்கும் வரை அனுபவிக்கட்டும், பிரச்சினை வெளியில் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்ற போக்கில் தான், இந்திய சர்ச்சுகள் செக்ஸ் விசயங்களில் நடந்து கொண்டு வருவதை காணமுடிகிறது. ஊட்டிப் பாதிரி லீலைகள், அவன் தப்பித்துக் கொண்ட விதம், இத்தகைய கொக்க்கோக காமுகர்களை நன்றாகவே உசுப்பியுள்ளது தெரிகிறது.

A Sam Aron AG Shekkinah Church Namakkal-2போலீஸார் மெத்தனமாக செயல்படுவது ஏன்?: ஷெகினா டையோசிஸைச் சேர்ந்த  இந்த ஷெக்கினா ஏஜி கிறிஸ்தவ திருச்சபை நாமக்கல்-திருச்சி சாலை குப்பம்பாளையத்தில் 15 ஆண்டுகளாக உள்ளது என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது[14]. அதன் போதகராக, கடந்த, சாமுவேல் ஆரோன் இருந்து வருகிறார். இருப்பினும் சிலர் ஆரோனின் மீது பாலியல் புகார்களை சொல்லி வருகின்றனர் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது[15]. நிர்மலா புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. ஆகவே, போலீஸார் இவ்விவகாரங்களுக்கு துணைபோவது சந்தேகமாக உள்ளது. போலீஸார் சொன்னதும், கிருத்துவர்கள் கலைந்து சென்றார்கள் என்பதும் புதிராக உள்ளது[16]. அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடும் சமயத்தில், இத்தகைய விவகாரங்கள் வெளிவருவது, மேரியால் மன்னிக்கப்படுமா என்று தெரியவில்லை!

A Sam Aron AG Shekkinah Church Namakkal© வேதபிரகாஷ்

08-03-2016

[1] http://allchurchonline.com/Shehkinah-AG-Church-273.html

[2] The residents of Kuppampalayam here staged a dharna in front of a Diocese Society on Sunday (06-03-2016), demanding action against a priest, for allegedly sexually harassing women.

New Indian Express, Kuppampalayam Residents Want Action Against Priest for Sexual Harassment, By Express News Service, Published: 07th March 2016 03:47 AM; Last Updated: 07th March 2016 05:35 AM.

[3] நியூஸ்.7, பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பாதிரியாரை கண்டித்து தர்ணா போராட்டம், Updated on March 06, 2016

[4] http://ns7.tv/ta/pasteur-behaves-badly-ladies-namakkal.html

[5] தினமலர், போதகர் மீது பாலியல் புகார், மார்ச்.06, 2016: 11.09.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1472869

[7] தினமலர், போதகர் மீது பாலியல் பலாத்கார புகார் திருச்சபை முன் மக்கள் ஆர்ப்பாட்டம், மார்ச்.07, 2016: 02.26.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1473200&Print=1

[9] http://m.dinamalar.com/detail.php?id=1472869

[10]http://www.dinamani.com/edition_dharmapuri/namakkal/2016/03/07/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/article3314556.ece

[11] தினமணி, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு:பாதிரியார் மீது நடவடிக்கை கோரி போராட்டம், By நாமக்கல், First Published : 07 March 2016 04:43 AM IST.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1473200

[13] நியூஸ்.7, பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பாதிரியாரை கண்டித்து தர்ணா போராட்டம், Updated on March 06, 2016

[14] According to police, Shekhina Diocese Society was functioning at Kuppampalayam on the Namakkal-Tiruchy road for over 15 years. Samuvel Aaron was the priest there.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Kuppampalayam-Residents-Want-Action-Against-Priest-for-Sexual-Harassment/2016/03/07/article3313932.ece1

[15] However, some residents alleged that he was sexually harassing women who came there. Last month some residents had lodged a complaint with the police in this regard.

[16] On Sunday, the residents came to the Diocese for prayer but found it locked. Shocked over this, they staged a dharna in front of the Diocese. The Namakkal police held talks and assured action against Samuvel, following which the stir was called off.

New Indian Express, Kuppampalayam Residents Want Action Against Priest for Sexual Harassment, By Express News Service, Published: 07th March 2016 03:47 AM; Last Updated: 07th March 2016 05:35 AM.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: