“சர்ச் ஆப் பெதஸ்தா”வின் பாஸ்டர் ஐஸக் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, கைதானது!

சர்ச் ஆப் பெதஸ்தாவின் பாஸ்டர் ஐஸக் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, கைதானது!

Pastor Isaac, at the Church of Bethesda in Sanganoor.

கிருத்துவ பாதிரிகள், பாஸ்டர்கள், மடாதிபதிகளின் செக்ஸ் விளையாட்டுகள்: கிருத்துவ பாதிரியர்களின் செக்ஸ் தொல்லைகள் தாங்கமுடியவில்லை என்ற அளவுக்கு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. இப்படி மேய்ந்து வரும் கருப்பு, நீளம், பச்சை, சிவப்பு போன்ற ஆடுகளைக் கண்காணிக்க ஆயர்கள் யாரும் இல்லை போன்றிருக்கிறது. இப்பொழுதெல்லாம் ஆயர்களே மேய்ந்து வருகிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள் என்ற நிலையும் உள்ளது. இனி ஆயர்களை, எந்த ஆயர்கள் மேற்பார்வை இடுவார்கள்? அப்படி பார்த்தால் அந்தரங்கள் எல்லாம், அசிங்கம், ஆபாசம், பாலியல் வக்கிரங்கள் ஏன்றாகி விடாதா? கிருத்துவ சர்ச், பிரிவுகள் மற்றும் குழுக்கள் இவ்வாறு பலவித செக்ஸ்-வக்கிரங்களில் சிறந்து விளங்குகிறது.

Evangelical sexசர்ச் ஆப் பெதஸ்தாவின் பின்னணி என்ன?: “சர்ச் ஆப் பெதஸ்தா” என்பது, அமெரிக்காவில், மேரிலான்டில், 19ம் நூற்றாண்டில் பெதஸ்தா என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சின் பெயராகும்[1]. இது கத்தோலிக்கர்-அல்லாத கிருத்துவமதப் பிரிவைச் சார்ந்தது. இங்குள்ள சர்ச்சுகள், மனிதர்கள் செக்ஸ்-தேவை மற்றும் போதைகளினால் மனவுளைச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால், செக்ஸ் மூலம் நோய் தீர்க்கலாம் போன்ற விசித்திரமான “ஹீலிங்” குழுக்கள் பெதஸ்தா நகரில் வேலைசெய்து வருகின்றன[2]. “செக்ஸ்-தெராபிஸ்டுகள்” என்றே “செக்ஸ்-மனோதத்துவ” வல்லுனர்கள் அங்குள்ளனர்[3]. அத்தகைய சர்ச் தான் “சர்ச் ஆப் பெதஸ்தா” என்பது. அமெரிக்காவிலிருந்து வரும் பணவுதவியுடன், இச்சர்ச் கோயம்புத்தூரில், சாங்கனூர் என்ற இடத்தில் ஒரு சர்ச்சை ஆரம்பித்துள்ளனர். இங்கு, பி ஐசக் என்ற பாஸ்டர் வேலைசெய்து வருகிறார்.

Isaac arrested - thudiyalur police stationகிருத்துவர்கள் செக்ஸை இறையியல் ரீதியில் நியாயப்படுத்துவது ஏன்?: கோவையில் வயிற்று வலிக்கு சிறப்பு பிரார்த்தனை செய்வதாக கூறி இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் ஜெப கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று ஊடகங்கள் வெளியிட்டாலும், அப்பாதிரியார், எனப்படி பாதகத்தை செய்தார், அவ்வாறு பாலியல் வன்முறையை அவருக்கு உண்டானது எப்படி, செக்ஸ்-வக்கிரத்தை இறையியல் ரீதியில் நியாயப்படுத்துவது ஏன் என்ற கேள்விகளுக்கு அவை பதில் சொல்வதில்லை. ஊடகக்காரர்களே சித்தாந்த, கட்சி, ஜாதி முதலியவற்றால் பிரிந்து கிடப்பதாலும், ஆற்றிற்கு துணைபோவதாலும், அவ்வாறு நடந்து கொள்வதினால், தகுந்த முறையில் கவனித்துக் கொள்வதினாலும், அவர்கள் பாரபட்சத்துடன் தான் செய்ல்பட்டு வருகிறார்கள்.

பாதிரி ஐசக் கைது 09-02-2016 - The Hindu way of reportingவிசேஷ பிரார்த்தனை, ஆராதனை மூலம் உனது வயிற்று வலியைப் போக்குவார் என்று ஆலோசனை கொடுத்த ராணி: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள சாந்திமேடு பகுதியை சேர்ந்த / ஜோதிபுரத்தைச் சேர்ந்த (தினமலர்[4]) தனியார் நிறுவன ஊழியரின் மனைவி கடந்த ஒரு வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது[5]. அப்பெண்ணின் வீட்டின் அருகே உள்ள ராணி என்பவர் சங்கனூர் ரோடு, கண்ணப்ப நகரில் உள்ள சர்ச் ஆப் பெதஸ்தா [The Church of Bethesda in Sanganoor] என்ற ஜப விடுதி ஒன்றுள்ளது, அங்கு ஐஸக் என்ற பாஸ்டர் இருக்கிறார் அவர் விசேஷ பிரார்த்தனை, ஆராதனை மூலம் உனது வயிற்று வலியைப் போக்குவார் என்று கூறியிருக்கிறார்[6]. ராணியின் ஆலோசனைப்படி, நம்பி தனது சொந்தக்காரர்களுடன் சென்றுள்ளார்[7]. அங்கு பாதிரியார் பி. ஐசக் அல்லது பலனிசாமி [Isaac alias Palanisamy, 57] வயிற்று வலியை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என கூறியதன் பேரில், அப்பெண் முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்[8].

பாதிரி ஐசக் கைது 09-02-2016கோயம்புத்தூருல் ஒரு இளம்பெண் கிருத்துவ செக்ஸ் வக்கிரகத்திற்கு பலியானது எப்படி?: சிறப்பு பிரார்த்தனை செய்ய ஜெப கூடத்திற்கு அப்பெண்ணை 07-02-2016 இரவு அழைத்த பாதிரியார் ஐசக், ‘விடிய விடிய ஜெபம் செய்தால் குணமாகும்’ என, ஜெபம் செய்வது போல ஆரம்பித்தார். பிறகு விசேஷ பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்றார். கைகளைப் பிடித்து, தலை மீது கைவைத்தார். தலை மீது கை வைத்து தடவ ஆரம்பித்தார். அது வரை அப்பெண் வித்தியாசமாக நினைக்கவில்லை.. ஆனால், மெதுவாகக் கட்டியணைக்க ஆரம்பித்தார். அப்பொழுது, என்ன இப்படி எல்லாம் செய்கிறீர்களே, என்று கேட்டபோது, வயிற்று வலி என்பதால், வயிறைத் தடவ வேண்டும் என்று ஆரம்ப்பித்தார். இதனால், உஷாரான, அவள் பாதிரியைத் தள்ளினார். இவ்வாறு “ஜெபம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, அவரிடமிருந்து தப்பிய பெண், வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். பாதிரியார் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கணவனிடம் கூறியுள்ளார்.  இதை அறிந்த, அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த ஜெப மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த அவர்கள் ஜெப மையத்தில் இருந்த பாதிரியாரை தாக்க முயன்றனர். தகவலறிந்து வந்த துடியலூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பாதிரியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து,  துடியலுார் போலீசார், மதபோதகரை கைது செய்தனர்” என்று தினமலர் கூறுகிறது[9].

Pope and Cristina Fernández de Kirchner

Pope and Cristina Fernández de Kirchner

வயிற்று வலி போக்க ரூ.30,000/- என்று கேட்டு, ரூ.15,000/- அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட கிருத்துவ பாதிரி: ஒரு பெண் ரூ.30,000/- க்கு ஒப்புக்கொண்டு, ரூ.15,000/- முன்பணம் கொடுத்து, அபத்தமாக இப்படி, சர்ச்சிற்குள், ஒரு பாதிரியிடம் சிகிச்சை மூலம் வயிற்று வலி நோயை குணப்படுத்த முடியும் என்று ஒரு இளம் பெண் சென்றுள்ளது திகைப்பாக உள்ளது. ராணிக்கும் ஐஸக்கிற்கும் என்ன தொடர்பு? அவள் ஏன் ஐஸக்கிடம் செல்லுமாறு பரிந்துரைக்க வேண்டும் போன்ற கேள்விகளும் எழுகின்றன. ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர் கூட, இந்த அளவுக்கு பணம் வாங்க மாட்டார். ஆகவே, இதில், மேலும் ஏதோ விவகாரம் உள்ளது என்று தெரிகிறது. கிருத்துவர்களைப் பொறுத்த வரையில், ஒரு பக்கம் ஆஸ்பத்திரிகளைக் கட்டிக் கொண்டு, சேவை செய்கிறோம் என்று, அங்கும் மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே வேலை செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கமோ பிரார்த்தனை, பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி வருகிறார்கள். குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் என்றெல்லாம் தடாலடி, அதிரடி, சுகமளிக்கும் கூட்டங்கள் போட்டு, ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். அப்படி, சுகமளிக்கும், கூட்டங்களினால் நோய்கள் தீர்க்கப்படும் என்றால், ஆஸ்பத்திரிகள் தேவையில்லையே?

© வேதபிரகாஷ்

11-02-2016

[1] Our street address is:    5033 Wilson Lane,    Bethesda, MD 20814; USA; http://www.churchinbethesda.org/;

[2] http://www.bethesdaworkshops.org/

[3] https://therapists.psychologytoday.com/rms/prof_results.php?city=Bethesda&spec=17

[4] தினமலர், ஜெபம் செய்வதாகசில்மிஷம்‘: 50 வயது மதபோதகர் கைது, பதிவு செய்த நாள்: பிப் 09,2016 20:34

[5] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/christian-pastor-arrested-over-allegations-sexual-harrasment-116021000051_1.html

[6] வெப்துனியா, இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியார் கைது, Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (17:30 IST).

[7] Times of India, Church priest arrested for harassing woman, TNN | Feb 10, 2016, 10.16 AM IST; http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Church-priest-arrested-for-harassing-woman/articleshow/50926323.cms

[8]தமிழ்.ஒன்.இந்தியா, இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார்போலீஸ் விசாரணை !, Posted by: Karthikeyan, Updated: Wednesday, February 10, 2016, 1:20 [IST].

[9] http://m.dinamalar.com/detail.php?id=1453029

குறிச்சொற்கள்: , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: