வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் என்றிருந்தும் – கடுமையாக குற்றங்களைப் புரிந்தவர்களின் பெயர்களை நீதிமன்றம் மறைப்பது ஏன்? (4)

வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் என்றிருந்தும்கடுமையாக குற்றங்களைப் புரிந்தவர்களின் பெயர்களை நீதிமன்றம் மறைப்பது ஏன்? (4)

The Grail trust targeting Tamilnadu- Vicar Jonathan Robinsonபிடோபைல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெயர் குறிப்பிடப்படாதது வியப்பாக இருக்கிறது: சென்ற மாதம் அட்டோபர் 16, 2015ல் ஜஸ்டிஸ் என். கிருபாகரன் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தபோது, அதிரடியாக கில கருத்துகளை வெளியிட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், அவ்வழக்கில் மனுதாரரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன[1]. ஆனால், ஆங்கில ஊடகங்களில் மனுதாரரின் பெயர் வெளிப்படையாகப் போட்டுள்ளனர். மேலும், 27-11-2015 அன்று வள்ளியூரில் மாஜிஸ்ட்ரேட் முன்பு தோன்றியபோது, அந்நபரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Madras High Court – Crl.O.P.(Md)No. 11735 Of 2014 And … vs State Represented By on 16 October, 2015

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT               DATED: 16.10.2015

CORAM

THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN

Crl.O.P.(MD)No. 11735 of 2014 and MP(MD) Nos.1 to 8 of 2014

Xxxxxxxxx             (Name   withheld)                                                          … Petitioner

 

Versus

 

இவ்வாறு மறைக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. பொதுவாக பாதிக்கப்பட்ட, பலிகாடா ஆக்கப்பட்ட, வேட்டையாடப்பட்டவர்களின் அடையாளம் தெரியக் கூடாது என்று தான், அவர்களின் பெயர்களை குறிப்பிடப்படாமல் இருக்கும், ஆனால், இங்கோ, மாறாக குற்றம் புரிந்தவனின் பெயரைக் குறிப்பிடமால் இருப்பது வியப்பக உள்ளது. இந்தியா இன்னும் காலனியக் கட்டுப்பாட்டில், ஆதிக்கக் கட்டுப்பாடில், காமன்வெல்த் அடிமைத்தளையில் சிக்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.  இதனால், குழந்தை கற்பழிப்பாளி ஜொனாதன் ராபின்சனா [Jonathan Robinson — Funder, Grail Trust Child Care home, Tirunelveli] அல்லது பாட்ரிக் மாத்யூஸ் [Patrick Matthews — volunteer and sports tutor, St. George’s Anglo-Indian School, Chennai] என்ற குழப்பம் உள்ளது. ஏனெனில், இருவர் வழக்கும் ஒரே மாதியாக இருக்கிறது.

alex-thompson-of-bateman-defending-patrick-matthews-2009பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்ட் 2009ல் கைது[2]: பாட்ரிக் மாத்யூஸ் 2003லிருந்து 2006 வரை செயின்ட் ஜியாஜ் பள்ளியில் குறைந்தது நான்கு பையன்களிடம் ஓரினச்சேர்க்கைக் கொண்டுள்ளான். கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராக வேலை செய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[3] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அனாதைகளுக்காக உருவாக்கப் பட்டது. இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[4]. அங்கு பையன்களைக் கூட்டிச் சென்று புணர்ந்துள்ளான். சென்னையில் உள்ள செயின்ட் ஜியார்ஜ் பள்ளி மற்றும் மகாபலிபுரத்தில் இவ்வாறு பல சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொண்ட கொடூரனை, சென்னை போலீஸார் தப்பிச் செல்ல விட்டுவிட்டனர். ஆனால், இங்கிலாந்திலிருந்து போலீஸ் வந்து, விசாரித்து விவரங்களை சேகரித்துச் சென்றுள்ளனர். கோவலத்தில் உள்ள ஒரு கிருத்துவ ரிட்ரீட் மையத்திலதொன்பது பையன்களைப் புணர்ந்துள்ளான் என்று தெரிகிறது[5]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விசயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கிளௌசெஸ்டர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது.  ஆகவே, அக்டோபர் 2015 வழக்கு இவனுடையது அல்ல என்று தெரிகிறது. எனவே, ஊடகங்கள் அவனது பெயரை ஜோனாதன் ராபின்சன் என்று குறிப்பிடாமல், டேவிட வில்லியம்ஸ் என்று குறிப்பிட்டன போலும். ஒருவேளை அந்த பெயரில் இன்னொரு பிடோபைல் இருந்திருக்கிறானோ என்னமோ?

The Batman trust, UK

ஆண்மை அகற்ற சட்டம் பிடோபைலுக்கு தண்டனை: குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆண்மை அகற்ற சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ்[6], தமிழகத்தில் ஏழை மாணவர்கள் காப்பகம் ஒன்றுக்கு, 2011ல் வந்தார். அந்த காப்பகத்தில் இருந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, படிக்க வைப்பதாக கூறி, 2011–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந் தேதி டில்லிக்கு அழைத்துச் சென்றார்[7]. மேலும், மாணவனின் தாய்க்கு, பண உதவியும் செய்துள்ளார். டில்லி, ஒய்.எம்.சி.ஏ., விடுதியில், தங்கியிருந்த போது, மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, இயற்கைக்கு மாறாக உறவு கொண்டார்[8]. பின்னர், மாணவனை அங்கேயே விட்டு விட்டு, லண்டனுக்கு சென்று விட்டார். பிறகு, அந்த மாணவன், சிலர் செய்த பண உதவியால், சென்னைக்கு திரும்பினான். மாணவனுக்கு நடந்த கொடுமையை அறிந்த, குழந்தைகள் நல அமைப்பு ஒன்று, ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற நிறுவனத்தின் மூலம் (Justice and Care Organisation[9]),  2011-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி  போலீசில் புகார் கொடுக்கப்பட்டது[10]. புகாரை பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், வில்லியம்ஸ் மீது குற்றம்சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்[11].

mathews-abused-9-students-toi-june-17-2009டேவிட் வில்லியம்ஸ் ரத்து செய்ய கோரி மனு: வில்லியம்ஸ் மீது, கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்தது.  இதன் அடிப்படையில், வில்லியம்சை, தேடப்படும் குற்றவாளி என, இன்டர்போல் என்கிற சர்வதேச போலீஸ் அறிவித்தது[12]. தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரன்டையும், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதையும், ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில், வில்லியம்ஸ் மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘டில்லியில் நடந்த சம்பவத்துக்கு, தமிழக போலீசார், வழக்கு பதிவு செய்ய முடியாது, தமிழக கோர்ட்டுக்கு விசாரிக்கவும் அதிகாரம் இல்லை. மாணவனிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தைகள் நல அமைப்பு உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது’ என கூறியிருந்தார்.

© வேதபிரகாஷ்

29-11-2015

[1] http://indiankanoon.org/doc/154136594/

[2] Times of Inda, Abuser of city school kids held in UK, Aruna Ram, August.1, 2009, 12.21AM IST.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[3]  http://www.batemans.org.uk/

[4]http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Mathews+sexually+abused+9+students&artid=NMIqdTdvmew=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=St+George%E2%80%99s+Anglo+Indian+Higher+Secondary+School&SectionName=rSY|6QYp3kQ=

[5] After interviewing 14 children and 16 adults, the team concluded that Matthews, who worked as a volunteer in the school, had sexually abused at least nine students. The UK-based Batemans Trust, through which Mathews had come to the school as a volunteer, had filed a complaint alleging that he sexually abused students at the school.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[6]  தினமலர் டேவிட் வில்லியம்ஸ் என்று பெயரை போட்டிருக்கிறது, ஆனால், இங்கு, ஜொனாதன் ராபின்சன் தான் மனுதாரர் என்பது மற்ற ஊடகக் குறிப்புகளிலிருந்து தெளிவாகிறது.

[7]  தி இந்து, குழந்தைகளை பலாத்காரம் செய்வோரின் ஆண்மையை அகற்ற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை, Published: October 26, 2015 11:09 ISTUpdated: October 27, 2015 08:32 IST.

[8] தினமலர், குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு: குற்றவாளிகளுக்கு ஆண்மை அகற்ற பரிந்துரை, அக்டோபர் 26.2015:03.08.

[9] Justice and Care, PO Box 42, Dak Khanna,Gole Dal Khanna, New Delhi, 110001, India; Phone: +91 80 64561113; Email: info@justiceandcare.org

[10]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article7805388.ece

[11]  மாலைமலர், பாலியல் குற்றம்: ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 8:46 AM IST.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1372482

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: