வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – எல்லாமே ஜொனாதன் ராபின்ஸன், ரூ.2.31 கோடிகளுக்கு வீடு வாங்கினாராம் (2)

வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர்எல்லாமே ஜொனாதன் ராபின்ஸன், ரூ.2.31 கோடிகளுக்கு வீடு வாங்கினாராம் (2)

The Grail trust targeting Tamilnadu- Trustees of Indian and England trusts

நியீல் பேர்லாம்ப், ஜோனாதன் ராபின்ஸன் இயக்குனர் இல்லை என்றறிவித்தன் மர்மம்:  நியீல் பேர்லாம்ப் [Neil Fairlamb] என்ற அந்த டிரஸ்டின் இன்னொரு இயக்குனர், ஜான்ஸனுக்கும், அந்த டிரஸ்டிற்கும், இனிமேல் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்[1]. அதாவது, இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்றாகிறது. இதெல்லாம், குற்றம் நடந்த பிறகு நாங்கள் உத்தமமானவர்கள் என்றும், தமக்கும் இந்த பிடோபைல் விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் காட்டிக் கொள்ள செய்யும் முயற்சி தான் இது. இந்நிலையில் பாதிரியார் ஜோனதன் ராபின்சன் இங்கிலாந்திற்கு தப்பி ஓடினார். அவர்களே ஒரு வருடத்திற்கு இரண்டு முறை வந்துவிட்டு செல்லலாம் என்று சலுகைக் கொடுத்திருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்வதற்கு முன்பே இங்கிலாந்துக்கு ஜோனதான் ராபின்சன் சென்றுவிட்டதால், அவரை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை[2] என்று “தி இந்து” குறிப்பிட்டுள்ளது.  இதையடுத்து, அந்தச் சிறுவனை  பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது பாதுகாப்பில் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து, பாதிரியார் மீது வள்ளியூர் காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்[3].

 child-house-3

2014ல் ரூ. 2.31 கோடிகளுக்கு ராபின்ஸன் வீடு வாங்கியது: 1960களிலிருந்து சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக ராபின்ஸன் லண்டன், சர்ரே, பாத், ஹெர்ட்போர்ட்சையர் பல சர்ச்சுகளில் வேலை பார்த்திருக்கிறார். 2001ல் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு அயல்நாடுகளில் இவ்வேலையை அரம்பிக்கிறார்கள் போலும். 2011ல் ஹெர்ட்போர்டுக்கு திரும்பி மடாலய சமியார்களுக்கு பொறுப்பாளராக இருந்தார். மான்ட்கோமரி, வேல்ஸ்ல் பல்லாண்டுகளாக தனது மனைவி கிரிஸ்டைனுடன் வாழ்ந்து வந்தார். பிப்ரவரி 2014ல் இங்கு வந்தபோது, மார்டோக் கிராமம், சோமர்செட்டில் ஐந்து படுக்கையறைக் கொண்ட ஒரு வீட்டை  £330,000 க்கு . சுமார் ரூ.2.31 கோடிகளுக்கு வாங்கினார்[4] என்று ஒரு இங்கிலாந்து நாளிதழ் செய்தியில் வெளியிட்டாலும், அவர் எப்படி அப்பணத்தைப் பெற்றார் என்று சொல்லவில்லை. பிடோபைலாக இருந்து சம்பாதித்தாரா அல்லது வேறுமுறைகளில் பணம் வந்ததா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதற்குள் பிரச்சினை பெரிதாகி, இன்டர்போல் வரை சென்று விட்டதால், மரியாதையைக் காப்பற்றிக் கொள்ள நினைத்தனர் போலும்.  சென்ற வாரம் – நவம்பர், 2015 சிறுவர் வாழ்வு நலம் அமைப்பின் இயக்குனர் கிரிஸ்டைன் பெட்டோ என்பவர் சந்தித்து, அவரை இந்தியாவுக்குச் சென்று, அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினார்[5]. உள்ளூர் போலீஸாரும், இங்கிலாந்து வளியுறவுத்துறையும் அவ்வாறே ஆணையிட்டன[6]. அதன்படியே, இந்தியாவுக்குச் செல்ல ராபின்ஸன் தீர்மானித்தார்[7]. ஏற்கெனவே, இங்கிலாந்து பல பிடோபைல்கள் வழக்குகள் இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

 Grail Trust - Chinnammalpuram, 627 101- what activists say

இந்திய சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது, நாடுகடத்தும் ஆணை பிறப்பித்து இந்தியாவிற்குள் வந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்[8]: இங்கிலாந்தில், விபச்சாரம், குழந்தை பாலியல் குற்றறங்கள் முதலியவற்றைக் கண்காணிக்கும் அமைப்பின் இயக்குனரான கிரிஸ்டைன் பெடோ [Christine Beddoe] என்ற பெண்மணி கூறுவதாவது, “இந்திய மாஜிஸ்ட்ரேட் பிடிவரண் கொடுத்து விட்டால் மட்டும் போறாது, ஏனெனில், இந்திய சட்டம், இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும். இங்கிலாந்தில் உள்ளவர்களுக்குப் பொறுந்தாது. இந்திய அரசு நாடு கடத்தும் ஆணையை பிறப்பிக்க வேண்டும் இங்கிலாந்திற்கு முறைப்படி அத்தகைய நாடுகடத்தும் ஆணையைப் பிறப்பித்தால், ராபின்ஸன் இந்தியாவுக்கு வந்தே ஆக வேண்டும். ராபின்ஸன், ஓடி ஒளிந்து கொள்ளவில்லை, வேல்ஸில் தனது வீட்டில் வசித்து கொண்டு, தனது வேலையை செய்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்து அரசும், இந்திய அரசின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது”, என்று தனது கருத்தைத் தெரிவித்தார். இந்த பெண்மணி, இங்கிலாந்து பிடோபைல்களின் சார்பில் இந்தியாவில் ஆஜராகியுள்ளார். இதெல்லாம், இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களுக்கு, அரசு வக்கில்களுக்கு தெரியாமலா இருக்கும்?

 Grail Trust - Chinnammalpuram, 627 101- woman there

தமிழக மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகின்றனவா?[9]: மத்திய மற்றும் மாநில அரசுகள், உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். வள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் பிடிவாரண்ட் கொடுத்து விட்டார். போலீஸார் “சிகப்பு எச்சரிக்கை அறிவுப்பு”, இன்டர்போல் மூலம் கொடுத்து விட்டது. ஆனால், இவை மட்டும் ராபின்ஸனை இந்திவிற்குள் கொண்டுவர முடியுமா? வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசு மௌனம் காக்கிறது. ஆனால், இதைப் பற்றிய அறிக்கையை உள்துறைக்கு அனுப்பியதா என்று தெரியவில்லை. பி. மனோரமா போன்ற சமூக ஆர்வலர்கள் அரசுகள் தாமதிக்கின்றன என்பது போல கருத்து கூறுகின்றனர். ஆனால், நீனா நாயக், தேசிய சிறுவர்கள் உரிமைகள் கமிஷன் உறுப்பினர், உள்துறை அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுத்தாகி விட்டது, ராபின்ஸன், கூடிய சீக்கிரத்தில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றார்.

 child_abuse_uk Jonathan Robinson

2011ல் பிடிவாரண்ட் பிறப்பிப்பு: இந்த வழக்கு வள்ளியூரிலுள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஜோனதான் ராபின்சனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் சர்வதேச தேடுதல் அறிவிக்கையை இவருக்கு எதிராக காவல்துறை அக்டோபர் 2014ல் வெளியிட்டது[10]. ஆகஸ்ட் 2011ல் இவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று விட்டார். இவரை சிலர் இங்கிலாந்தில் தொடர்பு கொண்டபோது, அங்கு வருவதற்கு விருப்பம் இல்லை என்று சொன்னதாகத் தெரிகிறது[11]. வேல்ஸில் தங்கியிருந்த ராபின்சனுக்கு தெரியவர முறைப்படி வழக்கை சந்திக்க முடிவு செய்தார். இதையடுத்து தன் மீதான முதல் தகவல் அறிக்கையையும், வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜோனதான் ராபின்சன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரத்தில் ஜோனதான் ராபின்சன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவாதம் அளித்ததால், அவருக்கு எதிரான சர்வதேச தேடுதல் அறிவிக்கையை திரும்பப் பெறுமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

valliyur_courtஜோனதான் ராபின்சன்

அக்டோபர் 2014 – ஜொனாதன் ராபின்சன் மனு விவாதிக்கப்பட்டது: நீதிபதி கிருபாகரன், மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினை இவ்வழக்கில் சேர்த்து, சிறார்களை காப்பதற்கு என்ன செய்ய போவதாக கேட்டார்[12]. என்.ஜி.ஓக்கள் நடத்தும் அனாதை இல்லங்கள், சிறார் காப்பகக்கள் முதலியன சிறார்-சிறுமிகளை ஒழுங்காகப் பாதுகாப்பதில்லை, மாறாக பாலியல் குற்றாங்களுக்குட்படுத்தப் படுகிறார்கள். படிப்பு சொல்லித்தருகிறோம், தத்து எடுத்துக்கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லித்தான் இவர்கள் தங்களது சேவைகளை ஆரம்பிக்கிறார்கள். ஜோனாதன் ராபின்ஸன் தொடுத்த மனுவின் மீதான வாதங்களைக் கேட்கும் நேரத்தில் தான், இவ்வாறு கேள்விகளை கேட்டார்[13]. மேலும் கடந்த ஆண்டுகளில் இவ்வாறு அந்நியநாட்டினரால், இந்திய சிறுவர்-சிறுமியர் எத்தனை பேர், எங்கெங்கு, பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார்கள் என்ற விவரங்களை அளிக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையைக் கேட்டுக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

29-11-2015

[1] Reverend Neil Fairlamb from The Grail Trust said Robinson “has now no official connection” with the organisation.

http://www.dailystar.co.uk/news/latest-news/271338/Kids-home-boy-claimed-he-was-molested

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/article7922595.ece

[3]http://www.dinamani.com/edition_thirunelveli/thirunelveli/2015/11/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/article3149270.ece

[4] Over a 40-year career Robinson held posts at churches in London, Surrey, Bath and Herefordshire before retiring in 2001. In 2011 he returned to duties in Hereford as a non stipendiary ‘priest in charge’. He and his wife Christine lived for many years in Montgomery, Wales but in February they bought a £330,000 five-bedroom home in the village of Martock, Somerset.

http://www.virtueonline.org/church-england-vicar-accused-sexually-assaulting-15-year-old-boy-india-urged-return-there-face-trial

[5] Last night Christine Beddoe, a former director of the children’s charity ECPAT UK, urged him to ‘fully co-operate with the authorities’ and volunteer to go to India.
http://www.dailymail.co.uk/news/article-3327998/Church-England-vicar-accused-sexually-assaulting-15-year-old-boy-India-urged-return-face-trial.html

[6] Dailymail, Church of England vicar accused of sexually assaulting 15-year-old boy in India is urged to return there to face trial, By CHRISTIAN GYSIN and LEE SORRELL FOR THE DAILY MAIL, November 20, 2015.

http://www.dailymail.co.uk/news/

[7] http://www.virtueonline.org/church-england-vicar-accused-sexually-assaulting-15-year-old-boy-india-urged-return-there-face-trial

[8] http://www.timesnow.tv/Where-is-Jonathan-Robinson/videoshow/4412243.cms

[9] http://www.timesnow.tv/Where-is-Jonathan-Robinson/videoshow/4412243.cms

[10] http://zeenews.india.com/news/nation/interpols-help-sought-for-tracing-british-child-abuse-suspect_834682.html

[11] http://www.ibnlive.com/news/india/facing-trial-in-india-for-child-sex-abuse-uk-national-says-he-is-unwilling-to-return-1159792.html

[12] http://www.dnaindia.com/india/report-madras-high-court-asks-centre-about-steps-taken-for-protection-of-orphans-2031060

[13] Hearing a petition filed by British national Jonathan Robinson, accused of sexually abusing children at an orphanage in Tirunelveli, Justice N Kirubakaran suo motu impleaded the Union Ministry of Women and Child Development while seeking the steps to protect the children.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: