வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – எல்லாமே ஜொனாதன் ராபின்ஸன் தான் (1)

வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர்எல்லாமே ஜொனாதன் ராபின்ஸன் தான் (1)


The Grail trust targeting Tamilnadu-home page

1995ல் ஆரம்பிக்கப்பட்டதி கிரைல் டிரஸ்ட்” (The Grail Trust): நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயல் / கிரையல் / கிரைல் என்ற டிரஸ்ட் சார்பில் குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டு வந்தது. இதனை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனதன் ராபின்சன் என்பவர் நடத்திவந்தார். இந்த காப்பகம் கடந்த 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் தங்கி வள்ளியூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர். இறுதியாக (2011) இங்கு 10 சிறுமிகள், 23 சிறுவர்கள் தங்கி படித்துவந்தனர். அப்படியென்றால், 1995லிருந்து 2011 வரை எத்தனை சிறுவர்-சிறுமியர்கள் இருந்தனர், அவர்களின் நிலையென்ன முதலிய விவரங்களைப் பற்றி ஊடகங்கள் கவலைப்படவில்லை. குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகி ஜோனதன் ராபின்சன் இங்கிலாந்து நாட்டில் தான் வசித்து வருகிறார். எப்போதாவது வள்ளியூரில் உள்ள தனது காப்பகத்துக்கு வந்து செல்வார். அப்போது காப்பகத்தில் உள்ள சிறுவர்களில் யாராவது ஒருவரை தன்னுடன் அழைத்துச்சென்று அவர்களுக்கு “செக்ஸ்” டார்ச்சர் கொடுத்தார் என்று ஜோனதன் ராபின்சன் மீது புகார் எழுந்தது[1].

The Grail trust targeting Tamilnadu- Neil Fatlam and Jonathan robinson1995லிருந்து 2011 வரை நடந்தது என்ன?: “தி கிரைல் டிரஸ்ட்” (The Grail Trust), 1995ல் ஆரம்பிக்கப்பட்டது, பதிவு எண்.496/95, அப்படியென்றால், அன்றைய டிரஸ்டிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுதான் பதிவு செய்யப்பட்டிருக்கும். 2011ல் நியீல் பேர்லாம்ப் [Neil Fairlamb] என்ற அந்த டிரஸ்டின் இன்னொரு இயக்குனர், ஜான்ஸனுக்கும், அந்த டிரஸ்டிற்கும், இனிமேல் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்[2]. அப்படியென்றால், ஆறாண்டுகள் இருவரும் டிரஸ்டிகளாக இருந்துள்ளனர். ராபின்ஸன் ஆண்டுக்கு இருமுறை அங்கு வருவார், பதினைந்து நாட்கள் தங்குவார், சிறுவர்களை வெளியே கூட்டிச் செல்வார், மார்ச் 2014ல் அங்கு வந்திருந்தார் என்றேல்லாம் அங்கிருக்கும் ஒரு பெண்மணி, டைம்ஸ்-நௌ நிருபரிடம் கூறுகிறார்[3].  அப்படியென்றால், ஆறுவருடங்களில் 12 முறை வந்திருப்பார், குறைந்த பட்சம் 12 சிறுவர்களைக் கூட்டிச் சென்றிருப்பார். பிறகு நியீல் பேர்லாம்ப் கேட்டிருக்கலாமே, “என்ன ராபின்சன், சிறுவர்களை எங்கே கூட்டி செல்கிறாய்?” என்று. அவருக்கு என்ன தெரியாதா, பிடோபைல் பிரச்சினை இங்கிலாந்திலும் உள்ளது, அதனால், இந்தியாவில் வந்து தங்களது இச்சைகளை சுலபமாகத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று! தட்டிக் கேட்டிருக்கலாம், தடுத்திருக்கிறலாம் அல்லது ஒத்துப் போயிருக்கலாம்!

Grail Trust - Chinnammalpuram, 627 101சிறுவனை தத்தெடுத்துக் கொண்டு இங்கிலாந்திற்கு கூட்டிச் சென்றாரா?: காப்பகத்தில் இருந்த ஒரு சிறுவனை தன்னுடன் இங்கிலாந்து நாட்டில் வைத்திருக்கிறார். அப்படியென்றால், பாஸ்போர்ட், விசா ஆவணங்களில் யார் சென்றது என்பது நன்றாகவே தெரிந்திருக்குமே? சாதாரணமாக ஒரு இந்திய குடிமகன் இங்கிலாந்திற்குச் செல்ல வேண்டும் என்றால், முறைப்படி ஆவணங்களை சமர்ப்பித்தாக வேண்டும். அப்படியென்றால், அச்சிறுவனுக்கு வேண்டிய ஆவணங்களை ராபின்ஸன் கொடுத்துள்ளார் என்றாகிறது. வெறுமன அழைத்துச் சென்றாரா அல்லது தத்து எடுத்து அழைத்துச் சென்றாரா என்பது தெரியவில்லை. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 2011 வள்ளியூர் காப்பகத்துக்கு வந்த ஜோனதன் ராபின்சன், அங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம் கொங்க ராயகுறிச்சியை சேர்ந்த சாமுவேல் என்ற சிறுவனை தன்னுடன் சிம்லாவுக்கு அழைத்துச்சென்று “செக்ஸ்” டார்ச்சர் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பெங்களூரில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று விசாரணை மேற்கொண்டது. அவர்களது விசாரணையில் ஜோனதன் ராபின்சனின் சில்மிஷம் அம்பலமானது. இதனைத்தொடர்ந்து சிறுவன் சாமுவேல் மீட்கப்பட்டான். பின்பு ஜோனதன் ராபின்சன் மீது வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் பெங்களூர் தொண்டு நிறுவனம் புகார் செய்தது. அதன்பேரில் அவர்மீது வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Jonathan Robinson, British pedophile at Tirunelveli05-09-2011 அன்று கிரைல் டிரஸ்ட் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது: ஆதாரங்கள் கிடைத்ததால், அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வந்ததனர். இந்நிலையில் அந்தகாப்பகத்தில் உள்ள மற்ற குழந்தைளும் செக்ஸ் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆகவே அந்த காப்பகத்தை சீல் வைக்க நெல்லை மாவட்ட சமூகநலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 05-09-2011 அன்று நள்ளிரவு நெல்லை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமாதேவி தலைமையிலான குழுவினர் அந்த காப்பகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த 10 சிறுமிகள், 21 சிறுவர்கள் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள சரணாலயம் காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்பு அந்த காப்பகத்தை மூடி சீல் வைத்தனர். குழந்தைகள் காப்பக நிர்வாகி தற்போது எந்த நாட்டில் இருக்கிறார்? என்பதை அறிந்து அவரை பிடிக்க போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்[4].

தி கிரைல் டிரஸ்டின் பின்னணி என்ன?: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் கிறிஸ்தவ போதகர்  / ஓய்வு பெற்ற பாதிரியார்  வில்லியம் மூரீல் மகன் ஜோனதான் ராபின்சன் (Jonathan Robinson, 70) 26-11-2015 அன்று சரணடைந்தார்[5]. வள்ளியூர் அருகே சின்னம்மாள்புரத்தை சேர்ந்த வில்லியம் மகன் ஜோனதான் ராபின்சன். சின்னம்மாள்புரத்தில்  1995–ம் ஆண்டு கிங்ஸ் வேர்ல்ட் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் கிரேல் டிரஸ்ட் [The Grail Trust[6]] என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை நடத்திவந்தார். இது இங்கிலாந்தில் உள்ள கிரைல் டிரஸ்ட்டின் ஒரு அங்கமாகும்[7]. இந்தக் காப்பகத்தில், வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் அனாதை குழந்தைகள் பலர் தங்கிக் கல்வி பயின்று வந்தனர் என்றெல்லாம் ஊடகங்கள் சாதாரணமாக செய்தியில் வெளியிட்டாலும், அதன் இணைதளத்தை பார்த்தால், அதன் இலக்கு, தமிழகம் தான் என்று தெரிகிறது. இங்கிலாந்தின் டிரஸ்டில் உள்ளவர்கள் ஆங்கிலேயர்கள். அதில் ஒருவர் நீல் பார்லேம்ப் என்பவர். இவர்தான் ஜோனதான் ராபின்சன் பற்றிய விவரங்களை போலிஸாரிடம் கொடுத்தவர். இந்திய கிரைல் டிரஸ்டில் இருப்பவர்கள் இந்தியர்கள் என்று காணப்படுகிறது[8]. கிரைல் டிரஸ்டின் இணைதளம் படி, அலைஸ் லெஸ்லி என்ற பெண்மணி தான் [Mrs Alice Leslie WIdow of Doctor Leslie, founder of Grail Trust India] இதனை நிறுவினார் என்றுள்ளது. இதற்கும் “கிங்ஸ் ஸ்கூல்” என்ற பள்ளிக்கும் தொடர்புள்ளது.

Grail Trust accounts - 2009-2013இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் நலப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்குப் புகார் சென்றது: இங்கிலாந்திலேயே பிடோபைல்களின் தொல்லை அதிகமாகத்தான் உள்ளது. பணம் அதிகமாக இருப்பதினால், இப்படி இந்தியாவில் ஏழைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்று ஆரம்பிக்கிறார்கள். அப்படிதான், கிரைல் டிரஸ்ட் உருவானது. அந்நிலையில், காப்பகத்தில் ராபின்சன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் நலப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்குப் புகார் சென்றது[9]. அதாவது ஜோனாதன் ராபின்ஸன் தான் பிடோபைலாக இருந்திருக்கிறார் என்று தெரிந்துள்ளது. எனவே அவரைப் பற்றி அவர்களுக்கு ஜோசப் ஜான்ஸன் என்ற பாதிரி ராபின்ஸனின் விவரங்களை போலீஸாருக்கு கொடுத்தார்[10]. மேலிடமும் அடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டது. குறிப்பாக உள்ள குழந்தைகளை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது[11].  2012 ஆகஸ்ட்டில், இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை / சாமுவேலை சென்னை, புதுடெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று ஜோனதான் ராபின்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களூரிலுள்ள “ஜஸ்டிஸ் அன்ட் கேர்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் வள்ளியூர் போலீஸில் புகார் அளித்திருந்தது. இந்த புகாரின்பேரில் ஜோனதான் ராபின்சன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காப்பகத்தை மூடப்பட்டது.

© வேதபிரகாஷ்

29-11-2015

[1] மாலைமலர், நெல்லை அருகேசெக்ஸ்புகார் கூறப்பட்ட குழந்தைகள் காப்பகத்துக்குசீல், மாற்றம் செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 06, 4:11 PM ISTஇ பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 06, 2011, 4:06 PM IST

[2] Reverend Neil Fairlamb from The Grail Trust said Robinson “has now no official connection” with the organisation.

http://www.dailystar.co.uk/news/latest-news/271338/Kids-home-boy-claimed-he-was-molested

[3] http://www.timesnow.tv/Where-is-Jonathan-Robinson/videoshow/4412243.cms

[4] http://cinema.maalaimalar.com/2011/09/06160634/We-reported-to-the-Childrens.html

[5]  தி இந்து, சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: நீதிமன்றத்தில் கிறிஸ்தவ போதகர் சரண், Published: November 27, 2015 09:13 ISTUpdated: November 27, 2015 09:14 IST.

[6] The Grail Trust, a British-based charity, founded by the clergyman, which supports “disadvantaged children”.  Robinson, director.

http://www.dailystar.co.uk/news/latest-news/271338/Kids-home-boy-claimed-he-was-molested

[7] The project was run by a sister arm of The Grail Trust UK, a British-based charity founded by Robinson and he would visit about twice a year. Read more: http://www.dailymail.co.uk/news/article-3327998/Church-England-vicar-accused-sexually-assaulting-15-year-old-boy-India-urged-return-face-trial.html#ixzz3sfqDQ64n
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[8] http://www.grailtrust.org/#/trustees/4578795184

[9] தினத்தந்தி, பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து நாட்டு பாதிரியார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர், மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 27,2015, 4:15 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 27,2015, 2:34 AM IST.

[10] Father Joseph Johnson, director of a ­local child welfare committee, said he passed the boy’s allegations to Indian ­police.

http://www.dailystar.co.uk/news/latest-news/271338/Kids-home-boy-claimed-he-was-molested

[11] http://ns7.tv/ta/england-pasteur-appear-nellai-court-sex-abuse-case.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: