பாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள், அவர்களது உரிமைகளைப் பாராட்டாதீர்கள் – நீதீபதி அறிவுரை (5)

 

பாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள், அவர்களது உரிமைகளைப் பாராட்டாதீர்கள்நீதீபதி அறிவுரை (5)

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கிறிஸ்தவ போதகர் ஜோனதான் ராபின்சன். படம்-அ.ஷேக்முகைதீன்.

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பு பாராட்டுங்கள். ஆறுதல் அளியுங்கள். அதைவிடுத்து குற்றவாளியிடம் கருணை காட்ட வேண்டாம்: இந்த வழக்கு 24-10-2015 அன்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது[1].  அப்போது நீதிபதி கிருபாகரன், ”குழந்தைகளிடமும் சிறார்களிடமும் பாலியல் உறவு கொள்வது காட்டுமிராண்டித்தனமானது. கற்கால மனிதர்கள் போல நடத்தைக் கொண்டது. ஆனால் தற்போதுள்ள சட்டத்திட்டங்களால் இது போன்ற குற்றங்களை குறைத்து விட முடியாது. காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்களுக்கு காட்டுமிராண்டித்தனமான சட்டத்திட்டங்கள்தான் தேவை. அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதுஇதனால் சிறார்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வது குறித்து சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித்தனம்  குறைய வாய்ப்புண்டு . தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த 2012-ம் ஆண்டு 38 ஆயிரத்து 172 பாலியல் குற்றங்கள் சிறார்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதுவே 2014-ம் ஆண்டு அதுவே 89 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களில் வெறும் 2.4 சதவீதம் பேரே தண்டனைக்குள்ளாகின்றனர். அமெரிக்கா, போலந்து, தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் சிறார்களிடம் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய சட்டங்கள் உள்ளன. இந்த பரிந்துரையை  ‘மனித உரிமை மீறல்என்ற பெயரில்  எதிர்க்கப்போகும் சமூக ஆர்வலர்கள் முதலில், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி  அன்பு பாராட்டுங்கள். ஆறுதல் அளியுங்கள். அதைவிடுத்து உங்கள் கருணையை குற்றவாளியிடம் காட்ட வேண்டாம்“, என்று கருத்து தெரிவித்தார்[2].

 child-house-1

அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்தண்டனையையும் வழங்கவேண்டும்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 9-ந் தேதி டெல்லியில், ஒரு குழந்தையை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கிற சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையுடன், கூடுதலாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்’ தண்டனையையும் வழங்கவேண்டும்.  இப்படி ஒரு கருத்தை இந்த ஐகோர்ட்டு தெரிவிப்பதை கண்டிப்பாக பலர் எதிர்பார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, கற்காலத்துக்கு அழைத்து செல்வது, மனித தன்மை இல்லாதது என்றெல்லாம் கூறுவார்கள். இது எனக்கு நன்றாக தெரியும். மாஜிஸ்திரேட்டு முன்பு மாணவன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தன்னை டேவிட் வில்லியம்ஸ் பாலியல் கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். எனவே, டேவிட் வில்லியம்ஸ் மீதான குற்றச்சாட்டின் உண்மை நிலவரம், நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையின் மூலமே தெரியவரும். எனவே, டேவிட் வில்லியம்ஸ் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், அவரை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், அவர் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே, தேடப்படும் நபர் என்ற அறிவிப்புக்கு மட்டும் தடை விதிக்கின்றேன். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

 child-house-2

கடுமையான குற்றாத்தீர்கு, கடுமையான தண்டனை தேவை: கற்பழிப்பு குற்றத்துக்கு ஆண்மை அகற்றும் தண்டனை காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இருக்கலாம். ஆனால், காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு, காட்டுமிராண்டித்தனமான தண்டனைத்தான் நிச்சயமாக வழங்க வேண்டும். ஆனால், பலர் இதை ஏற்க மாட்டார்கள். ஆனால், சமுதாயத்தில் நடைபெறும் கொடூர குற்றங்களை தடுக்க இதுபோன்ற தண்டனையை மக்கள் ஆதரிக்கவேண்டும். கடுமையான தண்டனைகள்தான், குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே, இதுகுறித்து கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டியவர்கள், இதுகுறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த கடுமையான தண்டனை சமுதாயத்துக்கு தேவைப்படுகிறது. மனித உரிமைகள் என்று காரணம் கூறி, இந்த கடுமையான தண்டனையை ஒதுக்கி வைக்கக்கூடாது. போலாந்து, ரஷியா, அமெரிக்காவில் கலிபோர்னியா உள்ளிட்ட 9 மாகாணங்களில் இதுபோன்ற தண்டனை வழங்கப்படுகிறது. ஆசியா கண்டத்தில் தென்கொரியா நாடு இந்த தண்டனையை அமல்படுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதால், இந்த கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

ஜோனாதன், சாமுவேல்

நீதிபதியின் பல பரிந்துரைகள்: அதே நேரம் பாலியல் கல்வி என்பது தற்போது அவசியமாகுகிறது[3]. பொதுவாக நமது சமுதாயத்தில் ‘செக்ஸ்’ என்பது தேவையற்ற, ஒழுக்கக் கேடான, நியாயமற்ற ஒரு செயலாக கருதும் எண்ணம் உள்ளது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும். வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்கள், தேவைகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், இணையதளங்கள், திரைப்படங்கள் மூலம் ‘செக்ஸ்’ பற்றி தவறாக மாணவர்கள் புரிந்துகொள்வார்கள். அதனால், குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறுகிறது. எனவே, கீழ் கண்ட பரிந்துரைகளை செய்கிறேன். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏதாவது தெரிந்தால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து போலீசார் பணியாற்றி, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

dgs dhinakaran family

கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும்: தற்போது பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டுச் செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளின் நலன் கருதி கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் மது போன்ற போதை பழக்கங்களினால்தான் அதிக அளவு நடைபெறுகின்றன. எனவே, மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பிய, மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்[4].

இந்த பரிந்துரைகளை தவிர, கீழ் கண்ட உத்தரவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கின்றேன்.

  1. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இருக்கின்ற சட்டத்தில் உள்ள தண்டனைகள் போக, கூடுதல் தண்டனையாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் முறையை’ சட்டமாக கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
  2. மேலும், பள்ளி மாணவர்களுக்கு கட்டாய செக்ஸ் கல்வி வழங்கும் முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  3. வெளிநாட்டினருக்கு விசா வழங்கும்போது அவர்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை மத்திய அரசு பெறவேண்டும்.
  4. இந்தியாவில் அனாதை காப்பகம் தொடங்க வரும் வெளிநாட்டினரின் குற்றப்பின்னணியை சர்வதேச போலீசார் மூலம் விசாரித்து அறிக்கை பெறவேண்டும்.
  5. மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் பாலியல் கொடுமை குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும்.
  6. பள்ளிப்பாடத்தில் ஒழுக்கம், கலாசாரம், சமூகத்தில் குழந்தைகளில் முக்கியத்துவம் உள்ளிட்ட விவரங்களை சேர்க்கவேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.
  7. குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்,

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[5].

© வேதபிரகாஷ்

29-11-2015

[1]  விகடன், ஆண்மை நீக்கம்: காட்டுமிராண்டிகளுக்கு காட்டு மிராண்டித்தனமான சட்டங்கள்தான் தேவை என்கிறார் நீதிபதி, Posted Date : 12:29 (26/10/2015), Last updated : 12:29 (26/10/2015)

[2] http://www.vikatan.com/news/article.php?aid=54223

[3]  தினத்தந்தி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை, மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 26,2015, 5:30 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 26,2015, 5:30 AM IST.

[4] http://www.dailythanthi.com/News/State/2015/10/26053020/Sexual-crimes-against-children-surgery-to-remove-the.vpf

[5] http://www.maalaimalar.com/2015/10/26084601/offense-High-Court-Judge-n-kir.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: