வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – எல்லாமே மிகவும் மரியாதைக்குரிய Vicar – the Most Reverend ஜொனாதன் ராபின்ஸன் (3)

வள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர்எல்லாமே மிகவும் மரியாதைக்குரிய Vicar – the Most Reverend ஜொனாதன் ராபின்ஸன் (3)

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கிறிஸ்தவ போதகர் ஜோனதான் ராபின்சன் - டெயிலி மெயில் - இங்கிலாந்து27-11-2015 அன்று ஆஜராக உத்தரவு[1]: வள்ளியூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 2016 ஜனவரி 4-ம் தேதி அன்று வரவிருந்தது[2]. இந்நிலையில் மாஜிஸ்திரேட் ரஸ்கின்ராஜ் முன்னிலையில் அவரது வழக்குரைஞர் கிரகோரி ரத்னராஜுடன், ஜோனதான் ராபின்சன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்[3]. அப்போது தன் மீதான வழக்கு விசாரணையை 2016 ஜனவரி 4-ம் தேதிக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரி அவர் மனு தாக்கல் செய்தார்[4]. இந்த வழக்கை மாஜிஸ்திரேட் ரஸ்கின்ராஜ் வெள்ளிக் கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜோனதான் ராபின்சனுக்கு உத்தரவிடப்பட்டது[5].  வள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் வெள்ளிக்கிழமை 27-11-2015 அன்று ராபின்ஸனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் கொடுக்கப்பட்டன. அவர் தரப்பில் வாதங்களைக் கேட்டபிறகு, வழக்கை நவம்பர் 30, 2015 வரை ஒத்தி வைத்தார்[6].

Derek Sladeஇங்கிலாந்து மற்றும் இந்திய ஊடகங்களின் போக்கு: இங்கிலாந்து ஊடகங்கள் இவர்களை விகார் (Vicar) / மோஸ்ட் ரெவெரென்ட் (Most Reverend) என்றெல்லாம் குறிப்பிட்டாலும், பிடோபைல் என்பதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இந்திய ஆங்கில ஊடகங்கள் சில “பிடோபைல்” என்ற வார்த்தையினை உபயோகப்படுத்தியுள்ளன. ஆனால், தமிழக ஊடகங்கள், இன்னும் அத்தகைய குற்றத்தை அடையாளம் காணவில்லை என்றே தெரிகிறது. நான் “குழந்தைக் கற்பழிப்பாளி” என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தியுள்ளேன். ஆனால், குழந்தை என்றால், சிறிய வயதைக் குறிப்பிடுகிறது. இங்கு பாலியல் குற்றங்களில். வன்புணர்ச்சிகளில், கற்பழிப்புகளில் சிக்கியவர்கள் “டீன்-ஜில்”, 13 முதல் 19 வரையில் உள்ளனர். நிச்சயமாக அவர்களைக் குழந்தை என்று சொல்லமுடியாது.  குறிப்பாக இவர்கள் எல்லோருமே மதகுருக்கள், மடாலய சாமியார்கள், கத்தோலிக்க அல்லது புரொடெஸ்டென்ட் / ஆங்கிலிகென் சந்நியாசிகள் என்பதனைக் குறிப்பிடுவதில்லை. நித்தியானந்தா விசயத்தில் அவ்வளவு எகிறிகுதித்த ஊடகங்கள், தினம்-தினம் இவ்வாறான விவகாரங்கள் தெரியவரும் போது, ஊடகங்கள் அதே போன்ற முறையில் அதிரடியாக செய்திகளை வெளியிடுவது, வீடியோக்களை தினமும் போட்டுக் காண்பிப்பது, சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று அதிரடியாக செய்திகளை சேகரித்து வெளியிடுவது முதக்லியவற்றைச் செய்வது கிடையாது.

பாலியல் குற்றங்க

Trio.jpg

Trio.jpg

ளினால், இந்திய சமூகம் மனோதத்துவ ரீதியில் பாதிக்கப்படுவது: இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் செக்ஸ் விசயத்தில் தாராளமாக இருப்பதினால், அவர்களுக்கு அத்தகைய உணர்ச்சிகள் 60-80 வயதுகளில் கூட இருப்பது தெரிகிறது. இதனால், தங்களின் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அறியாத பருவத்தில் உள்ள குழந்தைகளை, சிறுவர்களை, சிறுமிகளை தங்களது காமப்பசிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலும். வயதுக்கு வராத சிறுமியை புணர்வதினால், கர்ப்பம் ஏற்படாது என்ற நிலையில் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறர்கள் போலும். வயதுக்கு வந்த நிலையில், கர்ப்பம் ஆனாலும், பணம், வேலை மற்ற உதவிகளை செய்து கர்ப்பத்தைக் கலைத்து விடுகின்றனர். சிறுவர்கள் என்று வரும்போது, பெரும்பாலும் ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்கிறார்கள். அறியாத வயதில், அவர்கள் அது ஏதோ விளையாட்டாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நாளாக-ஆக, மனத்தளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், குற்றவாளிகளாகக் கூட மாறுகிறார்கள். மனோதத்துவரீதியில் அவர்கள் அடையும் கொடுமைகளை, வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது, விவாதிக்கப்படுவதும் இல்லை. மேலும், இத்தகைய காமப்பிறழ்ச்சிகள், கொக்கோக கோணாங்கித்தனங்கள் இந்திய சமூகத்திற்கு புதியதாக இருக்கிறது எனலாம்.Derek Slade - church priest prowled on Indian children and students

இடைக்காலத்திலிருந்து, ஐரோப்பியர் ஆட்சியில் தொடர்ந்து, சுதந்திர இந்தியாவிலும் நடந்து கொண்டிருப்பது: இடைக்காலத்தில், முகமதியர்களின் காமத்தொல்லையால், கொக்கோகக் குற்றங்களினால், இந்திய சமூகம் அதிகமாகவே பாதிக்கப்பட்டது. போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் சரியாக ஆராயப்படவில்லை. ஆனால், விளைவுகள் மூலம் சமூகப்பிறழ்ச்சிகளை அறிய நேர்கிறது. “ஆங்கிலோ-இந்திய சமூகம்” என்று சொல்லிக் கொண்டாலும், அது அத்தகைய கலவையினால் உண்டாக்கப்பட்டதேயாகும். போர்ச்சுகீசியர்களின் குரூரம் அவர்களது அடிமை வியாபாரம், செக்ஸ்-விவகாரங்கள் முதலியவற்றின் மூலம் தெரிய வருகின்றது. இப்பொழுது, செக்ஸ்-டூரிஸம், போன்ற போர்வைகளை வைத்துக் கொண்டு அதேபோன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைக்கு, எம்.என்.சி கம்பெனிகளில் உள்ள அந்நியநாட்டவர்களுக்கு எல்லாவற்றையும் சப்ளை செய்யவேண்டியுள்ளது.jhonson_robinson-1

நவீனகாலத்தில் நடந்து வரும் கொக்கோக விவகாரங்கள், மறைக்கப்படும் முறைகள்: பெங்களூரு, புனே, மும்பை அவர்களுக்கு மாறியுள்ளது போல, எல்லா இடங்களும் மாறவில்லை. அதனால், மிஷினரிகளின் பள்ளிகள், கல்லூரிகள், அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கான்வென்டுகள் முதலியவை, இவர்களது இச்சைகளுக்கு பூர்த்திசெய்ய அனுப்பும் இடங்களாக மாறியுள்ளன. ஏதோ பொதுப்படையாக, எல்லாவற்றையும் ஒன்றாக பாவிப்பது போல, எந்தவித தப்பெண்ணத்தினால், இவ்வாறு கூறவில்லை. தொடர்ந்து நடந்து வரும் செக்ஸ் குற்றங்களின் ஆதாராமாக, அதன் பின்னணியை வைத்துக் கொண்டு சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களின் வழக்குகள் மற்றும் தீர்ப்ப்புகளில் இவ்விவரங்கள் பதிவாகியுள்ளன. அதனால் தான், அத்தீர்ப்புகளில் பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; தீர்ப்புகள் அச்சில் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; மறைக்கப்படுகின்றன; சில காலத்தில் மறைக்கப்படுகின்றன; பிறகு மறக்கப்படுகின்றன. இவ்வாறு உண்மை குழித்தோண்டிப் புதைக்கப்படுகிறது.duncan-grant-and-allan-waters-british-pedophiles-goa

இங்கிலாந்து பிடோபைல்கள் தொல்லை இந்தியாவில் அதிகமாகவே இருந்துள்ளன[7]: இங்கிலாந்து பிடோபைல்கள் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து, வாழ்ந்து, பாலியல் குற்றங்களைச் செய்துள்ளனர். விவரங்கள் பின்வருமாறு[8]:

எண் பெயர் வேலை / குற்றம் செய்த இடம் ஆங்கிலத்தில்
1 டெரக் ஸ்லேட் குஜராத்தில் ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் Derek Slade — Headmaster, Anglo-Kutchi Medium School, Gujarat
2 ஜோனாதன் ராபின்சன் கிரையில் டிரஸ்ட், நிதியுதவியாளர், திருநெல்வேலி Jonathan Robinson — Funder, Grail Trust Child Care home, Tirunelveli.

 

3 பாட்ரிக் மாத்யூஸ் செயின் ஜியார்ஜ் பள்ளி, சென்னை. Patrick Matthews — volunteer and sports tutor, St. George’s Anglo-Indian School, Chennai.

 

4 ஆலன் வாட்டர்ச் மும்பயில் இணைப்பு அனாதை இல்லம் நடத்தியவன் Allan Waters – former British Navy officers who ran Anchorage Orphanage in Mumbai.

 

5 டன்கேன் கிராண்ட் மும்பயில் இணைப்பு அனாதை இல்லம் நடத்தியவன் Duncan Grant – former British Navy officers who ran Anchorage Orphanage in Mumbai.

 

6 ராபர்ட் டன்டோ பாபிஸ்ட் சர்ச் தலைவர், கோவாவில் குழந்தை செக்ஸில் மாட்டிக் கொண்டார். Robert Dando — Baptist Minister who was arrested in the U.S. on child sex charges. He worked with a children’s charity in Goa.

 

7 பால் மிகீன் ன்டிரியோஸ் இன்டெர்நேஷனல் ஸ்கூல், பங்களூரு Paul Meekin —– Principal, Trios International School, Bangalore.

 

முன்னரே குறிப்பிட்டப்படி, காமன்வெல்த் கூட்டமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் இருப்பதினால், அவர்கள் இந்தியாவில் அளவுக்கு அதிகமாக சலுகைகளைப் பெற்றுவருகின்றனர் என்று தெரிகிது.

© வேதபிரகாஷ்

29-11-2015

[1] நியூஸ்.செவன், பாலியல் வழக்கில் தேடப்பட்ட இங்கிலாந்து பாதிரியார் வள்ளியூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர், Updated on November 27, 2015.

[2] தினமலர், சிறுவருக்கு பாலியல் தொந்தரவு இங்கிலாந்து பாதிரியார் ஆஜர், : 27 November 2015 04:57 AM IST.

[3] தினமணி, சிறுவனிடம் பாலியல் தொந்தரவு வள்ளியூர் நீதிமன்றத்தில் இங்கிலாந்து பாதிரியார் ஆஜர், By வள்ளியூர், First Published : 27 November 2015 05:32 AM IST.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1396762&Print=1

[5]http://www.dinamani.com/tamilnadu/2015/11/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/article3148350.ece

[6] http://www.thehindu.com/news/national/tamil-nadu/charge-sheet-served-to-accused-from-uk/article7925955.ece

[7] The Hindu, Known cases of U.K. nationals, October 22, 2012

[8] http://www.thehindu.com/todays-paper/tp-national/known-cases-of-uk-nationals/article4020740.ece

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: