பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பதுஇவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றனகிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).

மோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015

மோசஸ் மினிஸ்ட்ரீஸ், திருச்சி செப்டம்பர் 2015

கிதியோன் ஜேக்கப் காப்பகம், விசாரணை, தலைமறைவு (செப்டம்பர்.2015): திருச்சி சுப்பிரமணியபுரம், அண்ணாநகர், முதல் தெருவில் மோஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் [ஆகஸ்ட்.2014] திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் உஷா ஆய்வு செய்தார். அரசு அனுமதியின்றியும், குழந்தைகளின் விவரங்கள் முழுமையாக இல்லாமலும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் இல்லாமலும் காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது. இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு காப்பகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஜேக்கப் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் விவரங்களைக் கேட்டு எப்பொழுது சென்றாலும் ஒத்துழைக்காமல், வேண்டுமென்றால் புகார் கொடுத்து அந்த இல்லத்தையே மூடிவிடுங்கள் என்று தூண்டியுள்ளனர். ஓராண்டாகியும் உரிய பதில் அளிக்காததால், சமூக நல அலுவலர் உஷா முறைப்படி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணைக்குப் பிறகு, உண்மை விவரங்கள் தெரிய வந்ததால், அரசு அனுமதியின்றியும், இளைஞர் நீதிச் சட்டத்தை பின்பற்றாமலும் காப்பகத்தை நடத்தியதாக அதன் நிர்வாகி கிதியோன் ஜேக்கப் மீது அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது[1]. உள்ள சட்டங்களில் பல பிரிவுகளை மீறி அந்த காப்பகம் உள்ளதாக தெரிந்தது. இதனால், தமிழ்நாடு ஹாஸ்டல் மற்றும் பெண்கள் சிறார் இருப்பிடம் முறைப்படுத்தும் சட்டம் 2014 மற்றும் இளம்சிறார் நீதி சட்டம் 2000 முதலியவற்றின் பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது[2], வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன[3].

Gideon Jacob - photo

Gideon Jacob – photo

தலைமறைவான ஜேக்கப், ஆனால், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்படல்: போலீஸ் விசாரணை என்று வந்த பிறகு, ஜேக்கப் மறைந்தது விசித்திரமாக உள்ளது. கிதியான் ஜேக்கப் மெத்தப் படித்தவர், பல பட்டங்களைப் பெற்றவர், பல நாடுகளுக்கு விஜயம் செய்தவர், ஜெர்மனி-ஹாம்பர்கில் கூட வாழ்ந்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி விவரிக்கப்படுகின்றன. அத்தகையவர் எப்படி மறைந்தார் என்று தெரியவில்லை. இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது, என்ற விசயமும் தெரிய வந்தது. இதுபற்றி கே.கே.நகர் போலீஸாரிடம் கேட்டதற்கு, “நாங்கள் நடத்திய விசாரணையில் 89 குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கிதியோன் ஜேக்கப்பை தேடி வருகிறோம். அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளோம்” என்றனர்[4]. பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு, இவ்வாறு செய்கிறார்கள் போலும். ரசுல் ராஜ் விசயத்திலும், இது போலவே, நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது நினைவில் கொள்ளலாம்.

New Year 2014 - Good Shepherd World Prayer Center, Trichy - girls singing at

New Year 2014 – Good Shepherd World Prayer Center, Trichy – girls singing at

நியூஸ்.7.டிவி தரும் விவரங்கள்[5]: வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது பழமொழி. குழந்தைகள் காப்பகங்களில் தங்கியுள்ள குழந்தைகள் விஷயத்தில் அது தொடர்கதையாகி வருகிறது. குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மாணவர்கள் சொல்வது என்ன? இனியாவது விழித்துக் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள்?  திருச்சி மற்றும் மதுரையில் இயங்கி வரும் மோஸே மினிஸ்ட்ரீஸ் மற்றும் லவ் அண்டு கேர் 333 இந்தியா குழந்தைகள் காப்பகங்களில், உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திடுக்கிடும் தகவல், ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேரடி ஆய்வில் தெரிய வந்தது. ஆனால், எந்த கல்லூரி என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த குழந்தைகளை, சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியதும் அம்பலமானது. அங்கிருந்த 2 குழந்தைகளின் தற்போதைய நிலை பற்றி தகவல் இல்லை.  இங்கெல்லாம் “குழந்தைகள்” என்று குறிப்பிடப்பட்டவர்கள் எல்லோரும் “டீன்-ஏஜ்” பெண்கள் ஆவர்.

Good Shepherd World Prayer Center, Trichy - girls dancing

Good Shepherd World Prayer Center, Trichy – girls dancing

சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகள்: இந்த காப்பகங்கள் பற்றி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்து வழக்குகளை அடுத்து, சமூக நல அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு நடத்தினர். இதுபோன்ற கண்துடைப்பு ஆய்வு மட்டும் போதாது என்று சொல்லும் பாடம் நாராயணன், அங்குள்ள குழந்தைகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இவர் தொடுத்துள்ள வழக்குகள் பற்றிய விவரங்களும் கிடைக்கவில்லை. திருச்சி காப்பகத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவர்.  இதே போல், மதுரை காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாணவியும், காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்கூடாகப் பார்த்ததாகக் சொல்கிறார்.  இந்நிலையில், திருச்சி காப்பகத்தை நடத்தி வந்த ஜேக்கப் ஜெர்மனிக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6]. இப்போதாவது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழந்தைகளைக் காப்பாற்றுவார்களா என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Mose Ministries Trichy - CWC official enter to verify 02-09-2015

Mose Ministries Trichy – CWC official enter to verify 02-09-2015

02-09-2015 அன்று குழந்தை சமூகநலத்துறை அதிகாரிகள் விஜயம் செய்தது: திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்ட, மோஸே தொண்டு நிறுவன காப்பகத்தில், 02-09-2015 அன்று, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். அதில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கான ஆவணங்கள் முறையாக இல்லாததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காப்பகத்தில் இருந்த குழந்தைகளை வேறு காப்பகத்துக்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்[7]. இந்நிலையில், 02-09-2015 அன்று மதியம், 12.30 மணிக்கு காப்பகத்துக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திராகாந்தி மற்றும் அதிகாரிகள், காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய், குழந்தைகளுக்கான கல்வி ஆலோசனை அலுவலர் ஜெசி இன்ஃபெண்டா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் இந்திரா காந்தி, காப்பகத்தின் மேற்பார்வையாளர் கிடியான் ஜெய் மற்றும் காப்பகத்தின் கல்வி ஆலோசனை அலுவலர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். ஆனால், காப்பகத்தை நிர்வகித்து வந்தவர்கள், கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினர்.

வேதபிரகாஷ்

© 08-09-2015

[1] தமிழ்.இந்து, புகாரில் சிக்கிய திருச்சி தனியார் காப்பகம் விரைவில் மூடல்: 89 பெண் குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம், Published: September 3, 2015 09:14 ISTUpdated: September 3, 2015 10:15 IST.

[2] As the home failed to reply to the notice issued in May 2015, a complaint was lodged with the K.K. Nagar police station seeking to rescue the children and register a case against the home. Upon conducting a preliminary inquiry, the K.K. Nagar police booked a case against the founder of the Home Gideon Jacob under the Juvenile Justice Act, 2000. The case was booked under Section 20 (2) of the Tamil Nadu Hostels and Homes For Women and Children (Regulation) Act, 2014 and under section 23 of the Juvenile Justice Act, 2000.

http://www.thehindu.com/todays-paper/tiruchi-childrens-home-asked-to-hand-over-minor-girls-to-cwc/article7614736.ece

[3] http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/case-booked-against-founder-of-unregistered-children-home/article7593240.ece

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-89-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7610572.ece

[5] நியூஸ்.7.டிவி, வேலியே பயிரை மேய்ந்த கதையாகும் குழந்தைகள் காப்பகங்கள், Updated on August 26, 2015.

[6] http://www.ns7.tv/ta/india-childrens-homes-children-sexually-harassed-startling-information.html

[7] http://www.dinamalar.com/district_detail.asp?id=1334358

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (3).”

  1. Wolfgang Mueller Says:

    Ulrike erzählt von der Kirche in Trichy, die von Pastor Gideon Jacob und seiner Frau Ute geleitet wird und 3000 Mitglieder hat. Beide sind mit dem CZA Elmshorn sehr verbunden und haben die Reise organisiert.

    Vier Gottesdienste werden dort Sonntag für Sonntag angeboten: um 6 Uhr, 9 Uhr, 15 Uhr und 18 Uhr. Ein anerkennendes Raunen geht durch die Lornsenstraße 53 in Elmshorn. Vier Gottesdienste an einem Tag kann man sich hier nur schwer vorstellen.

    Dann berichtet Ulrike über die von den Jacobs gegründeten Heimen „Mose Ministries“, in denen Mädchen aufgenommen werden, die von ihren Familien ausgestoßen oder schwer misshandelt wurden. Sie habe sich mit den Mädchen unterhalten können, so Ulrike, und sei überrascht gewesen, wie viel
    Lebensfreude diese jungen Frauen trotz allem Erlebten ausstrahlen.
    Denn für Mädchen ist die Situation in Indien oft ein Dilemma. 99 % der Kinder, die abgetrieben, getötet oder ausgesetzt werden, sind Mädchen. Sie sind für ihre Familien wertlos. Die meisten dürfen bis zu ihrer Heirat das Haus nicht verlassen, lernen nicht lesen oder schreiben, müssen ausschließlich Hausarbeiten erledigen und ihre Eltern müssen für sie eine hohe Mitgift zahlen, damit jemand sie
    überhaupt heiratet. ‘Ein Mädchen großzuziehen ist so, als würde man die Blumen seines Nachbarn wässern’, dies sei ein indisches Sprichwort, das die Situation der weiblichen Bevölkerung gut beschreibe,
    erzählt Ulrike, und erinnert daran, dass auch in Deutschland erst Ende der 50er Jahre das Grundgesetz geändert wurde, um Frauen das Recht auf Selbstbestimmung zu geben.

  2. வேதம் வேதபிரகாஷ் Says:

    CBI arrests founder of Tiruchi home for children
    C. Jaisankar TIRUCHI , OCTOBER 28, 2017 23:29 IST
    UPDATED: OCTOBER 28, 2017 23:29 IST

    The Central Bureau of Investigation (CBI) has arrested Pastor A. Gideon Jacob, founder of Mose Ministries Home for Children in Tiruchi.

    Mr. Jacob has been evading arrest ever since a case against him was registered for running the unregistered home for girls in August 2015. A lookout notice was issued against him. The pastor was reportedly arrested in Chennai on Friday night soon after he arrived from Germany, sources said.

    A CBI team brought him by road from Chennai and produced him before the Chief Judicial Magistrate in Tiruchi on Saturday, who remanded him to 15 days judicial custody. Mr. Jacob was then lodged in Tiruchi Central Prison.

    Several Sections

    He has been booked under Section 120 B (criminal conspiracy), 361 (kidnapping and unlawful guardianship), 368 (concealing and confinement of kidnapped or abducted persons), 201 (causing disappearance of evidences of offence), 340 (wrongful confinement), 370 (buying or disposing any person as a slave) of Indian Penal Code (IPC) and a few other sections of Juvenile Justice Act.

    The Madurai Bench of Madras High Court had ordered the CBI to probe the affairs of the unregistered home run by Mr. Jacob, where 89 girls, mostly minors, were staying.

    The Mose Ministries Home for Children had claimed that they were rescued from female infanticide in Andipatti and neighbouring villages since 1994 after they were abandoned by their parents.

    The High Court had passed the order on a public interest litigation filed by an NGO that alleged that the girls were illegally kept in the home without the knowledge of their parents.

    Following a High Court order DNA tests were conducted on 82 of them, who had attained the age of 18 years, and were allowed to decide their future.

    http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbi-arrests-founder-of-tiruchi-home-for-children/article19941563.ece

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.