பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (7).

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பதுஇவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றனகிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (7).

New Year 2014 - Good Shepherd World Prayer Center, Trichy - girls singing at.4

New Year 2014 – Good Shepherd World Prayer Center, Trichy – girls singing at.4

 “சைலோம் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட்”,  “ குட் ஷெப்பர்ட் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட்”, என்று மாறியது: குட் ஷெப்பர்ட் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட் [Good Shepherd Evangelical Mission Private Limited] கம்பனியின் இயக்குனர்களாக கிடியோன் ஜேகப் மற்றும் உதே ஜேகப் உள்ளனர். அவர்கள் முறையே மேனேஜிங் டைரக்டர் [DIN Number – 02544348] மற்றும் டைரக்டர் [02748062] என்ற நிலையில் 16 May 1974 மற்றும் 20 Sep 1991 தேதிகளிலிருந்து பொறுப்பு வகித்து வருகின்றனர்[1].  ஆனால், இக்கம்பெனி மீனாக்ஷி ஆச்சி என்ற பெண்மணியிடமிருந்து சொத்து வாங்கியதில் பிரச்சினை ஏற்பட்டு, இக்கம்பெனியின் மீது வழக்குத் தொடரப்பட்டது[2]. அதாவது, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அச்சொத்தினை முறையற்ற முறையில் வாங்கியதாக வழக்குப் போடப்பட்டது. முதலில் இக்கம்பெனியின் பெயர் சைலோம் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட் [“The Siloam Evangelical Mission Private Limited”] என்றிருந்ததாம், பிறகு, அப்பெயரை “குட் ஷெப்பர்ட் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட்” என்று மாற்றப்பட்டது, ஆனால், வாடிகள் அதனை தெரிவிக்கவில்லை. வாதிகளுக்கு சாதமாக, அதாவது கம்பெனிக்கு எதிராக தீர்ப்பானது. மேல்முறையீட்டில் இக்கம்பெனியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது[3]. சொத்துகள், இடங்கள் வாங்கும் இடங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் எதற்காக பெயரை மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு ஒருவேளை மைக்கேல் பெர்குன்டே புத்தகத்தில் உள்ள விவரங்கள் உதவும் போலிருக்கிறது.

கிடியோன் ஜேகப் - பேஸ் புக் படம்.2

கிடியோன் ஜேகப் – பேஸ் புக் படம்.2

ஜெர்மானிய தொடர்பு எப்படி வேலை செய்கிறது[4]: மைக்கேல் பெர்குன்டே என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன. அவர் எழுதியுள்ளாதாவது, “கார்ல் பெக்கர் [Karl Becker] 1972ல் . ஜேகப்பை [A. Jacob] திருச்சியில் சந்தித்தார். அவர் மூலமாக பென்டகோஸ்டல் மிஷன் வளர்க்க முயற்சி செய்தார். அதற்காக நிதியுதவி கொடுத்து சைலோம் [Siloam] என்ற சர்ச் மற்றும் இயக்கம் உருவாக்க பாடுபட்டார். ஜேகப்பிற்கு ஒரு ஜெர்மானிய பெண்ணையும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது. 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது. அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு . ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேகப் தொடர்ந்து செய்து வருகிறார்.”  பொதுவாக ஜெர்மானிய மிஷனரிகள் நேரிடையாக இத்தகைய காரியங்களில் ஈடுபடாது என்றலும், இப்பொழுது இவ்வாறு தீவிரமாக வேலை செய்வது கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஜீஜன்பால்கு வந்தபோதே, பற்பல சர்ச்சைகளில், பாலியல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டு, திரும்ப அழைக்கப்பட்டனர்.

ideon Jacob evangelist carries on the work of his father A. Jacob

ideon Jacob evangelist carries on the work of his father A. Jacob

பாஸ்டர்களின் விசுவாசமும், மதம் மாறுபவர்களின் விசுவாசமும்: பணத்தின் அடிப்படையில் தான் பாஸ்டர்களுக்கே விசுவாசம் இருக்கிறது என்றால், இவர்களை நம்பி, மதம் மாறி வருபவர்களின் விசுவாசம் எதன் மீது இருக்கும்? சரி, இந்திய “கருப்பு ஆடுகள்” தாம் அப்படி இருக்கின்றன என்றால், அந்த எஜமானர்களான, “வெள்ளை ஆடுகளின்” நிலை என்ன? இதோ, கார்ல் பெக்கரே சொல்கிறார், “அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.” ஆக இதெல்லாம் பரஸ்பர விவகாரங்கள் போலும். ஆமாம், அங்கே கட்டுப்படுத்த முடியாததால் தான், நடவடிக்கை என்றால், இங்கு என்ன செய்ய முடியும்? அதனால் தான் தொடர்ந்து கூறியுள்ளார், “பிறகு . ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேகப் தொடர்ந்து செய்து வருகிறார்”! பாஸ்டர் ஏ. ஜேக்கப் மே.11, 2014 அன்று இறந்ததாக, “தி இந்துவில்” மே.13.20215ம் தேதி அன்று “ஆர்பிஜுவரி / காலமானார்” அறிவிப்பு கீழ் வந்தது. இறுதி சடங்குகள் மே.14, 2015 அன்று குட் ஷெப்பர்ட் உலக பிராத்தனை மையத்தில் நடப்பதாக அறிவித்தது. ஆக, இனிமேல் தந்தையா ஏ. ஜேக்கப் எந்த கதையும் சொல்லமாட்டார்.

Mose Ministries- Trichy - Gideon Jacob evangelist carries on the work of his father

Mose Ministries- Trichy – Gideon Jacob evangelist carries on the work of his father

1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது: ஏ. ஜேக்கப் ஜெர்மானிய மிஷினால் அத்தனை உதவிகள் செய்தும் ஏன் நிதிமுறைக்கேடு உண்டாகும் வகையில் இருந்தார்? ஜேகப்பின் நிறுவனங்கள் என்றால், எத்தனை நிறுவனங்களை அவர் வைத்திருந்தார்? 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்றால், அவர் என்னதான் அப்படி குளறுபடிகள், மோசடிகள் என்று யாதாவது செய்தார், அதனால், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைகள் மேற்கொள்ளும் அளவிற்கு செய்தால், யார் சோதனைகள் செய்தது? கார்ல் பெக்கர், “…., அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது,” என்று அதற்கு முன்னால் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. “நம்பிக்கை” எனும்போது, இவர்களுக்கு இடையிலேயே, அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை கவனிக்கலாம்.

Dr. Karl Becker -Director of Siloam Mission.

Dr. Karl Becker -Director of Siloam Mission.

கார்ல் பெக்கரும் (1916-2012), இந்தியாவும்: கார் பெக்கர் என்பவர் ஜெர்மானியர், அங்கு சைலோம் [Siloam] என்ற அமைப்பின் தலைவராக / இயக்குனராக இருக்கிறார். 1951லிருந்து, எவாஞ்சிலஸத்தில் / மதம் பரப்புவதில் ஈடுபட்டுள்ளார். ஜெர்மன் எவாஞ்சிலிகல் கான்பரன்ஸ் என்ற அமைப்பில் காரியதரிசியாகவும், ஆய்வாளராகவும் வேலை செய்தார்[5]. பிறகு சைலோம் மிஷன் என்றதை ஆரம்பித்தார். அதன் கீழ் கண்ணில்லாதோர், தொழு நோயாளோர் முதலியோருக்க உதவிகள் செய்து வருகிறார்[6]. 1971 கோயம்புத்தூரில் மானுவேல் என்ற கண் மருத்துவருடன் வேலை செய்தார். 1972ல் திருச்சியில் ஏ. ஜேக்கப்பை சந்தித்தார். அப்பொழுது தான், சைலோம் சர்ச் ஆரம்பிக்க அவருடன் பேசினார். ஆனால், 1980களில் அவர் ஒப்புக் கொண்டபடியே பணமோசடிகளில் சிக்கி, அந்த சர்ச் மறைந்து விட்டது. ஆந்திராவில் ஒரு கண் மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளார்[7]. இவர் பிப்ரவரி 2012ல் காலமானார். வேவை என்று செய்தாலும், தனது மதத்தைப் பரப்ப வேண்டும் என்ற வேகம் இருந்தது என்பது அவரது பேச்சு, நடவடிக்கைகளில் நன்றாகவே தெரிந்தது. இனி கிதியோன் ஜேக்கப் இவ்விருவருக்கும் (ஏ. ஜேக்கப் மற்றும் கார்ல் பெக்கர்) பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர்களது கதைகளும் அவர்களுடனே மறைந்து விடும் [Dead men tell no tales].

Dr Karl Beckar 1916-2012

Dr Karl Beckar 1916-2012

சைலோம் ஆந்திராவில் பரவியது .ஜேக்கப்பின் நிதியுதவி மோசடிகளாலா அல்லது பரிசுத்த ஆவியின் திருவிளையாடலா?: கார்ல் பெக்கர் என்னத்தான் உதவி செய்கிறேன் என்றாலும் உள்நோக்கம் மதமாற்றம் தான் என்று நன்றாகவே தெரிகிறது. ஏ. ஜேக்கப்பின் பிரச்சினையால் தமிழகத்தில், அவபெயர் ஏற்பட்டு விட்டது, சைலோம் பெயர் நீதிமன்ற வழக்குகளில் அடிபட்டு விட்டது என்று, ஏ. ஜேக்கப்பிடம் அப்பெயரை இனிமேல் உபயோகிக்காதே என்று கூறியிருக்கலாம். அதனால் தான், கம்பெனியின் பெயர் மாற்றம் ஏற்பட்டது போலும். இல்லை, அத்தகைய பெயர் மாற்றத்தை வைத்துக் கொண்டு, மீனாக்ஷி ஆட்சியிடமிருந்து சொத்துகளை வாங்கிய வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள செய்தனரா என்றும் நோக்கத்தக்கது. இருப்பினும், கார்ல் பெக்கர் ஆந்திராவில் கவனத்தை செல்லுத்தியது நோக்கத்தக்கது. அங்கு நிதியுதவி அளித்து கண் ஆஸ்பத்திரியை திறந்து வத்துள்ளார்.

பாஸ்டர் ஏ. ஜேகப் மே.11, 2014 அன்று இறந்ததாக, தி இந்துவில் மே.13.2015.

பாஸ்டர் ஏ. ஜேகப் மே.11, 2014 அன்று இறந்ததாக, தி இந்துவில் மே.13.2015.

வேதபிரகாஷ்

© 08-09-2015

[1] No.9 Renganagar, Subramaniyapuram, Tiruchirapalli, 620020, Tamil Nadu, India.

http://saverisk.com/company/0xFC9787ED55913AF68F029C7AC4464FB7/good%20shepherd%20evangelical%20mission%20private%20limited/current%20directors

[2] Good Shepherd Evangelical Mission Private Limited, formerly known as “The Siloam Evangelical Mission Private Limited”,…………………….”The Siloam Evangelical Mission Private Limited” (10th defendant in C.S.No.686 of 2000), claiming itself to have purchased about an extent of 26.49 Acres from Meenakshi Sundaram (25th defendant),……………….that the appellant Good Shepherd Evangelical Mission Private Limited has never been in the scene and the appellant has never stated that Siloam Evangelical Mission Private Limited has been converted as Good Shepherd Evangelical Mission Private Limited and, therefore, the status of the appellant is dubious;……………when proceedings were pending, Andiappan (7th defendant in C.S.No.83 of 1965) has fraudulently sold the properties to the non-sharers, who are not entitled to any share in the estate, under two sale deeds dated 10.2.1970 and 9.6.1970 and at the time of sale,………………35. In that view of the matter, we are not impressed by the contentions raised on behalf of the appellant to interfere with the order of the learned Judge. It is true that the issue has not been elaborately discussed, but the decision arrived at by the learned Judge cannot be said to be inappropriate. We are of the firm opinion that the appellant is not entitled to any relief claimed and there is absolutely no reason warranting interference of this Court with the order of the learned Single Judge. For the foregoing reasons, the appeals stand dismissed and the order of the learned Single Judge stands confirmed. No costs. Consequently, M.P.Nos.1 of 2011 (3 petitions) are closed.

[3] Madras High Court – Good Shepherd Evangelical … vs Meenakshi Achi on 9 February, 2012;

http://indiankanoon.org/doc/99087881/

[4]  Michael Bergunde, The South Indian Pentecostal Movement in the Twentieth Century, Wm.B. Eerdmans Publishing Co., U.K, 2008,  p.76.

[5] http://www.zoominfo.com/p/Karl-Becker/25657804

[6] Professor Becker has been involved in world the German since 1951. He has worked with the German Evangelists Conference and has served mas Mission Secretary and Mission Inspector. Professor Becker is the founder of the Siloam Mission to the Blind and Lepers and also a member of the International Conference of Confession Fellowships. Member, International Conference of Confession Fellowships, Founder, Siloam Eyecare Hospital

[7] http://www.siloam.org.uk/httpdocs/051.htm

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (7).”

  1. Wolfgang Mueller Says:

    Ulrike erzählt von der Kirche in Trichy, die von Pastor Gideon Jacob und seiner Frau Ute geleitet wird und 3000 Mitglieder hat. Beide sind mit dem CZA Elmshorn sehr verbunden und haben die Reise organisiert.

    Vier Gottesdienste werden dort Sonntag für Sonntag angeboten: um 6 Uhr, 9 Uhr, 15 Uhr und 18 Uhr. Ein anerkennendes Raunen geht durch die Lornsenstraße 53 in Elmshorn. Vier Gottesdienste an einem Tag kann man sich hier nur schwer vorstellen.

    Dann berichtet Ulrike über die von den Jacobs gegründeten Heimen „Mose Ministries“, in denen Mädchen aufgenommen werden, die von ihren Familien ausgestoßen oder schwer misshandelt wurden. Sie habe sich mit den Mädchen unterhalten können, so Ulrike, und sei überrascht gewesen, wie viel
    Lebensfreude diese jungen Frauen trotz allem Erlebten ausstrahlen.
    Denn für Mädchen ist die Situation in Indien oft ein Dilemma. 99 % der Kinder, die abgetrieben, getötet oder ausgesetzt werden, sind Mädchen. Sie sind für ihre Familien wertlos. Die meisten dürfen bis zu ihrer Heirat das Haus nicht verlassen, lernen nicht lesen oder schreiben, müssen ausschließlich Hausarbeiten erledigen und ihre Eltern müssen für sie eine hohe Mitgift zahlen, damit jemand sie
    überhaupt heiratet. ‘Ein Mädchen großzuziehen ist so, als würde man die Blumen seines Nachbarn wässern’, dies sei ein indisches Sprichwort, das die Situation der weiblichen Bevölkerung gut beschreibe,
    erzählt Ulrike, und erinnert daran, dass auch in Deutschland erst Ende der 50er Jahre das Grundgesetz geändert wurde, um Frauen das Recht auf Selbstbestimmung zu geben.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: