பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (1).

பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (1).

T. Russel Raj, his wife Jeyakumari and mother-in-law Kanaka Joy arrested in June 2015

T. Russel Raj, his wife Jeyakumari and mother-in-law Kanaka Joy arrested in June 2015

குழந்தை காப்பகங்கள் மலிந்துள்ள மாடம்பாக்கம்: மாடம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றுள் பதிவு செய்தும், செய்யாமலும் உள்ள இல்லங்களும் உள்ளன. இதனால், அடிக்கடி, இந்த இல்லங்களின் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தை அடுத்த ஜெய்வந்த்புரம் பகுதியில் வயதான தம்பதியிடமிருந்து 3 பெண் குழந்தைகளை குழந்தைகள் நலக் குழுமத்தினர் ஜூன்.20, 2015 சனிக்கிழமை மீட்டனர்[1]. ஜெய்வந்த்புரத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி, வயதான தம்பதியினர் 3 பெண் குழந்தைகளை வைத்திருப்பதாக, காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்துக்குத் தகவல் கிடைத்தது[2]. இதையடுத்து, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் மணிகண்டன், உறுப்பினர் ஜகீருதீன் முகமது [Zaheeruddin Mohammed], சமூகநலத் துறை அலுவலர் சற்குணா ஆகியோர் ஜெய்வந்த்புரம் பகுதியில் உள்ள சீமோன் (60) மற்றும் கனகஜாய் (55) தம்பதியின் வீட்டில் சனிக்கிழமை 20-06-2015 அன்று ஆய்வு நடத்தினர்[3]. அப்போது, அவர்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 3 வயதுக்கு உள்பட்ட 3 பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது[4]. விசாரித்தபோது, அவர்கள் திருப்தியான பதில்களை சொல்லவில்லை.

20-06-2-15 மாடம்பாக்கத்தில் மீட்டெடுத்த மூன்று குழந்தைகள் - மாலைமலர் போட்டோ

20-06-2-15 மாடம்பாக்கத்தில் மீட்டெடுத்த மூன்று குழந்தைகள் – மாலைமலர் போட்டோ

ஆதரவற்றோர் தர்ம டிரஸ்ட் இல்லம் நடத்திவந்த ரஸ்ஸல் ராஜ் / ரசுல் ராஜ்[5]: டி. ரஸ்ஸல் ராஜ் [T. Russel Raj] என்பவர் ஆதரவற்றோர் தர்ம டிரஸ்ட் இல்லம் [Destitute Charitable Trust Home ] என்பதனை அனுமதி இல்லாமல் நடத்தி வருகிறார். குழந்தைகளை கடத்தி கொண்டு வருதல் முதலிய காரியங்களில் ஈடுபடுவதாக குழந்தை நல கமிட்டிக்கு தகவல்கள் வந்தன. இதனால், அவரது இல்லத்தை சோதனை இட்டனர். ஆனால், அங்கிருக்கும் குழந்தைகளை மீட்க முடியவில்லை. ஏனெனில், அதற்குள் அவர் சென்னை உயர்நீதி மன்றத்திற்குச் சென்று தடை உத்திரவை வாங்கி வந்துள்ளார்[6]. அவர் தாம் இந்த மூன்று குழந்தைகளை சீமோன் – கனக ஜாய் தம்பதியரிடம் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது[7].

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.3

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.3

ரஸ்ஸல் ராஜின் / ரசுல் ராஜின் மாமியார் வீட்டில் தான் அந்த மூன்று குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டன (ஜூன்.2015): இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர் ஜகிருதீன் கூறியதாவது[8]: “வயதான தம்பதியரிடம் விசாரணை நடத்தியதில், பெற்றோர் வெளிநாட்டில் இருப்ப தால் தங்களிடம் குழந்தை களை பார்க்கச் சொல்லி விட்டுச் சென்றதாக முதலில் தெரிவித்தனர். அதன்பின் குழந்தைகளின் பெற்றோர் மதுரையில் இருப்பதாகவும், அந்த குழந்தைகள் தங்களின் பேத்திகள் என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து அவர் களிடமிருந்து குழந்தைகளை மீட்டோம். மீட்கப்பட்ட குழந்தைகளின் வயது 3 வயதுக் குள்தான் இருக்கும். இந்த தம்பதியின் மகள் ஜெயாவின் கணவர் ரஷல்ராஜ் என்பவர், அப்பகுதியில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லம் [Destitute Charitable Trust ] நடத்தி வருகிறார்[9]. அந்த இல்லத்தில் பல ஆண்டுகளாக 9 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளன. அந்த குழந்தைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதால், குழந்தைகளை மீட்க முடிய வில்லை”, இவ்வாறு அவர் கூறினார். குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது[10]. இதைத் தொடர்ந்து, அந்தத் தம்பதியிடமிருந்து 3 பெண் குழந்தைகளையும் குழந்தைகள் நலக் குழுமத்தினர் மீட்டனர்[11]. அக்குழந்தைகள் அங்கு கடந்த ஒரு வருடமாக இருக்கின்றன[12]. அதன்பின் மணப் பாக்கத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இல்லத்தில் அந்த குழந்தைகளை ஒப்படைத்தனர்[13]. பிறகு போலீஸாரிடம் புகார் கொடுக்க அவர்களிடம் விசாரணையும் நடந்தது[14].அதிகாரிகள் கூறுகையில், ‘’குழந்தைகளுக்கான உரிய ஆவணங்கள் தம்பதியினரிடம் இல்லை. மீட்கப்பட்ட குழந்தைகள் கடத்தி வரப்பட்டதா? என விசாரித்து வருகிறோம்’’ என்றனர்[15].

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.2

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.2

ரஸ்ஸல் ராஜை / ரசூல் ராஜைப் பற்றி போலீசாரின் விசாரணையில் தெரியவந்த பகீர் தகவல்கள் (ஜூலை.2015): பெண் சிசு கொலைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களுக்கு இந்த காப்பகத்தினர் செல்வார்கள். அங்கு, பெண் குழந்தைகளை நாங்கள் எங்கள் காப்பகத்தில் சிறப்பாக வளர்ப்போம். வெளிநாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு தத்து கொடுத்தால், உங்கள் குழந்தைகளுக்கு வளமான வாழ்வு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். பெண் குழந்தையை கொல்ல மனமில்லாத சில பெண்கள், அந்த குழந்தைகளை இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி ஒப்படைத்துள்ளனர்[16]. இதற்காக உசிலம்பட்டியில் பெண் சிசு கொல்லுவதை தடுக்கும் சிறப்பு முகாம் நடத்தினர்[17]. அதற்கு சில அரசியல்வாதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை அனுசரித்து நடந்தனர். இதுபோன்ற முகாம்களை நடத்த தமிழகத்தில் யாருக்கும் அரசு அனுமதி வழங்க வில்லை. குழந்தை வேண்டாம் என்றால் தொட்டில் குழந்தை திட்டத்தில்தான் போட வேண்டும். ஆனால், இவர்கள் இந்த குழந்தைகளை இலவசமாக வாங்கி வந்து, பெரிய பணக்காரர்கள் மற்றும் குழந்தை இல்லாத வெளிநாட்டு தம்பதிகளுக்கு பல லட்சம் விலை நிர்ணயித்து விற்றுள்ளனர். இதற்கு சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே, சட்டவிரோதமாக குழந்தைகளை காப்பகத்தில் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து ரசுல் ராஜ், அவரது மனைவி ஜெயகுமாரி (48), மாமியார் கனகஜாய் (55) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.1

ரசுல் ராஜ், ஜெயகுமாரி, கனக ஜாய் கைது ஜூலை.1

டி. ரஸ்ஸல் ராஜ், இந்த ரஸ்ஸல் ராஜ், ரசுல் ராஜ் எல்லொரும் ஒன்றா?: ரஸ்ஸல் ராஜ் என்று ஆங்கிலத்தில் உள்ள பெயரை தமிழ் ஊடகங்கள் ரசுல் ராஜ் என்று குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில் டி. ரஸ்ஸல் ராஜ் என்ற பெயர் 2003லும், இன்னொரு வார இதழ் நடத்தும் விசயத்திலும் காணக்கடுகிறது. டி. ரஸ்ஸல் ராஜ் என்பவர் தியாகராஜன் என்பவர் தன்னை ஏமாற்றியதாக போலீஸாரால் புகார் கொடுத்தார்[18]. பொலீஸ் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[19]. தவிர செய்திதாள்கள்,பத்திரிக்கைகள் பதிவாளர்கள் இணைதளத்தில் இதே பெயர் கொண்டவர், “சென்னை குடிமகன்” என்ற வார இதழை நடத்துவதாக விவரம் உள்ளது[20]. அதன் சொந்தக்காரர் மற்றும் ஆசிரியர் T. RUSSEL RAJ என்றுள்ளது[21]. இந்த குழந்தை காப்பகம் விசயத்தில் உள்ளவரின் பெயரும் T. Russel Raj என்றுள்ளது. இவர்கள் எல்லோருமே வெவ்வேறான நபர்களா, ஒரே நபரா என்று தெரியவில்லை. இந்த T. Russel Rajஐப் பொறுத்த வரைக்கும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு எல்லாம் வாங்கியிருக்கிறார் என்றால் அவர் விவரமானர் என்றே தெரிகிறது. எனினும், ஜூலை.2015ல் கைதானார் எனும்போது, தடை நீக்கம் செய்யப்பட்டது, போலீஸார் புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றாகிறது.

வேதபிரகாஷ்

© 06-09-2015

[1] தினமணி, 3 பெண் குழந்தைகள் மீட்பு, By காஞ்சிபுரம், First Published : 22 June 2015 12:05 AM IST.

[2] மாலைமலர், வயதான தம்பதிகளிடம் இருந்து 3 பெண் குழந்தைகள் மீட்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21, 3:43 PM IST

[3] திமனமலர், மூன்று பெண் குழந்தைகள் மீட்பு, ஜூன்.21,2015.00.00.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1279402

[5] தமிழ் ஊடகங்கள் T. Russel Raj என்ற பெயரை ரசுல் ராஜ் என்று குறிப்பிடுகின்றன. இப்பிரச்சினையைப் பொறுத்த வரையிலும், ரஸ்ஸல் ராஜும், ரசுல் ராஜும் ஒரே நபர் தான் என்று தெரிகிறது.

[6] Divya Chandrababu, Child rescued from unlicensed home in Chennai, fourth in three days, TNN ,  Jun 24, 2015, 01.00 PM IST.

[7] http://timesofindia.indiatimes.com/city/chennai/Child-rescued-from-unlicensed-home-in-Chennai-fourth-in-three-days/articleshow/47797478.cms

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7341382.ece

[9] “We suspect the involvement of another unlicensed child care home — Destitute Charitable Trust Children’s Home — in the same locality that is run by the elderly woman’s son-in-law. There are only girls in the home and the owner has obtained a stay from the Madras high court in a case filed against the home,” Mohammed said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/3-girls-illegally-kept-in-house-at-Madambakkam-rescued/articleshow/47752237.cms

[10]  தினகரன், கடத்தி வரப்பட்டவர்களா? முதியவரின் வீட்டில் இருந்த 3 பெண் குழந்தைகள் மீட்பு, பதிவு செய்த நேரம்:2015-06-22 10:42:04.

[11] http://www.dinamani.com/edition_chennai/kanchipuram/2015/06/22/3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article2879333.ece

[12] Divya Chandrababu, 3 girls illegally kept in house at Madambakkam rescued, TNN, Jun 21, 2015, 01.57 AM IST.

[13] தமிழ்.இந்து, மாடம்பாக்கத்தில் வயதான தம்பதி வீட்டில் இருந்த 3 பெண் குழந்தைகள் மீட்பு, Published: June 22, 2015 07:24 ISTUpdated: June 22, 2015 07:24 IST

[14] http://www.maalaimalar.com/2015/06/21154356/3-year-old-girl-from-the-child.html

[15] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=465415&cat=504

[16] http://tamil.oneindia.com/news/tamilnadu/three-people-arrested-child-abduction-230606.html

[17] தமிழ்.ஒன்.இந்தியா, பெண் சிசுக் கொலை தடுப்போம்”- போலியான முகாம் நடத்தி குழந்தைகள் கடத்திய மூவர் கைது, Posted by: Vijayalakshmi, Published: Wednesday, July 8, 2015, 16:20 [IST].

[18] Justice V. Kanagaraj gave the direction on a petition filed by one T. Russel Raj and mandated the police to file a final report within 30 days from the date of receipt of a copy of the order…..The petitioner [T. Russel Raj] contended that Mr. Thyagarajan had `cheated him to the tune of Rs. 1.5 lakhs’ besides cheating the insurance company to the tune of Rs. 7 lakhs. Originally he had preferred a complaint with the Joint Commissioner of Police. Though it was forwarded to the jurisdictional police for action, the JJ Nagar police did not register any case. The Hindu, HC directive to JJ Nagar police, Thursday, August 28, 2003.

[19] http://www.thehindu.com/2003/08/28/stories/2003082808900300.htm

[20] T. RUSSEL RAJ editor and owner of a weekly “CHENNAI CITIZEN  चेन्नई सिटीजन”, 288/15, BARATH FLATS, BELLY AREA, ANNA NAGAR, CHENNAI-600 040. TAMIL NADU

[21] http://rni.nic.in/display_details.asp?regn=107138

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “பெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (1).”

  1. வேதம் வேதபிரகாஷ் Says:

    CBI arrests founder of Tiruchi home for children
    C. Jaisankar TIRUCHI , OCTOBER 28, 2017 23:29 IST
    UPDATED: OCTOBER 28, 2017 23:29 IST

    The Central Bureau of Investigation (CBI) has arrested Pastor A. Gideon Jacob, founder of Mose Ministries Home for Children in Tiruchi.

    Mr. Jacob has been evading arrest ever since a case against him was registered for running the unregistered home for girls in August 2015. A lookout notice was issued against him. The pastor was reportedly arrested in Chennai on Friday night soon after he arrived from Germany, sources said.

    A CBI team brought him by road from Chennai and produced him before the Chief Judicial Magistrate in Tiruchi on Saturday, who remanded him to 15 days judicial custody. Mr. Jacob was then lodged in Tiruchi Central Prison.

    Several Sections

    He has been booked under Section 120 B (criminal conspiracy), 361 (kidnapping and unlawful guardianship), 368 (concealing and confinement of kidnapped or abducted persons), 201 (causing disappearance of evidences of offence), 340 (wrongful confinement), 370 (buying or disposing any person as a slave) of Indian Penal Code (IPC) and a few other sections of Juvenile Justice Act.

    The Madurai Bench of Madras High Court had ordered the CBI to probe the affairs of the unregistered home run by Mr. Jacob, where 89 girls, mostly minors, were staying.

    The Mose Ministries Home for Children had claimed that they were rescued from female infanticide in Andipatti and neighbouring villages since 1994 after they were abandoned by their parents.

    The High Court had passed the order on a public interest litigation filed by an NGO that alleged that the girls were illegally kept in the home without the knowledge of their parents.

    Following a High Court order DNA tests were conducted on 82 of them, who had attained the age of 18 years, and were allowed to decide their future.

    http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbi-arrests-founder-of-tiruchi-home-for-children/article19941563.ece

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: