சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்-ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்-வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (2)

சர்ச் நடத்தும் பால் இமானுவேலின் தந்தை ஜே. பிரபுதாஸ், ஒரு டீன்ஏஜ் பெண்ணுடன் உடலுறவு கொண்டது, குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தது கற்பழிப்பா, செக்ஸ்வன்மமா, பாலியல் வன்புணார்வா, இல்லை ஒரு சாதாரண குற்றம் தானா? (2)

May-George-and-Mano-Candappa-lighting-the-oil-lamp-April 2, 2013

May-George-and-Mano-Candappa-lighting-the-oil-lamp-April 2, 2013

ஜனவரி 2014ல் மே ஜார்ஜ் இறந்தவுடன், பால் இம்மானுவேல் அபகரித்துக் கொண்டார் (2014-2015): ஜனவரி 2014ல் மே ஜார்ஜ் இறந்ததை சாதாரணமாகக் குறிப்பிட்டு, திடீரென்று, இப்பொழுது, ஊடகங்கள், “அவர் இறந்த பிறகு நூத்தஞ்சேரி பகுதியை சேர்ந்த பால்  இமானுவேல் (32) என்பவர் இந்த நிறுவனத்தை அபகரித்து கொண்டார். இதுதொடர்பாக, மகளிர் ஜோன்டா தொண்டு நிறுவன நிர்வாகி கல்பனா, சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.  புகாரில், ‘‘மகளிர் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான 45 செண்டு நிலம் ரூ.4½ கோடி மதிப்பு உள்ளது. இந்த தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் பால் இமானுவேல் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து குழந்தைகள் காப்பகம் மற்றும் சர்ச் நடத்தி வருகிறார். மகளிர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அங்கு சென்று நியாயம் கேட்கும்போது அவர்களை ஆட்களை வைத்து மிரட்டி அனுப்புகிறார். மகளிர் தொண்டு நிறுவன சொத்துகளை ஆக்கிரமித்து வைத்து உள்ள அவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்டு தரவேண்டும்,’’ என கூறி இருந்தார்[1], என்கின்றன. அப்படியென்றால், பால் இம்மானுவேல் எப்படி திடீரென்று, இந்த விவகாரங்களில் வந்தார்? பால் இமானுவேலுக்கும் ஜோன்டா மையம், அல்லது அதன் பொறுப்பாளிகள் அல்லது மே ஜார்ஜ் இவர்களுக்கு என்ன தொடர்பு? இவற்றை யாரும் எடுத்துக் காட்டுவதாக இல்லை.

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015

ஜனவரி 2014 முதல் ஜூன் 2015 வரை என்ன நடந்தது?: பால் இம்மானுவேல் “டுவிட்டரில்” தன்னுடைய படங்கள் பலவற்றை போட்டிருக்கிறார்(ன்?). குழந்தைகள், சிறுமிகள், பெண்களுடன் இருப்பது போல அப்படங்ள் உள்ளன[2]. பிப்ரவரி 2015ல், ஒருவருடைய பிறந்த நாள் என்றும் புகைப்படங்கள் உள்ளன. ஒரு வீட்டின் அறையில் உட்கார்ந்திருப்பது போல படங்கள் உள்ளன. அந்த இடம் மாடம்பாக்கத்து “ஜோன்டா அமைதி மையமா” அல்லது வேறு இடமா என்று தெரியவில்லை. மேலும் இவன் நடத்திய “குழந்தைகள் இல்லம்” அனுமதியில்லாமல் நடந்ததால் ஜூன்.2015ல் கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்திகள் கூறுகின்றன. ஜூலையில், இவன் மனைவி ஜோதி பிளசிங் (28), தந்தை ஜே. பிரபுதாஸ் (65) முதலியோருடன் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், பிரபுதாஸ் பெயிலில் வந்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில், செப்டம்பர்.2, 2015 புதகிழமை அன்று காஞ்சிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்த நாளில் கைது செய்யப்படுகிறார். ஜோன்ட் தொண்டு நிறுவன நிர்வாகி கல்பனா ஏன் சில மாதங்கள் பொறுத்திருந்து புகார் கொடுக்க வேண்டும் என்றும் புரியவில்லை. ஜனவரி 2014 முதல் ஜூன் 2015 வரை, சுமார் ஒன்றரை வருடம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

J Prabhudass arrestred for raping girl in chennai-Sept.4, 2015, Express photo

J Prabhudass arrestred for raping girl in chennai-Sept.4, 2015, Express photo

போலி ஆவணங்கள் தயாரித்த பால் இம்மானுவேல்:. கல்பனா சண்முகம் புகார் கொடுத்த தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தென் மண்டல இணை ஆணையர் அருண், பரங்கிமலை துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சேலையூர் உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் இது தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில், பால் இமானுவேல் குழந்தைகள் காப்பகம் நடத்த இடம்கேட்டு தொண்டு நிறுவன இடத்திற்கு வந்து உள்ளார். மே ஜார்ஜ் இறந்த பிறகு தொண்டு நிறுவனத்தை தன்னை நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்தது போல போலியாக ஆவணங்களை தயாரித்து தன் மனைவி ஜோதி பிளசிங் (28), தந்தை பிரபுதாஸ்(65) ஆகியோர்களை டிரஸ்ட் உறுப்பினர்களாக்கி மகளிர் தொண்டு நிறுவன சொத்துகளை அபகரித்தது தெரியவந்தது[3]. இதையடுத்து, சேலையூர் போலீசார் விசாரித்து, அம்மூவரையும் கைது செய்தனர். இதையடுத்து, குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 9 குழந்தைகளை மீட்ட போலீசார் அரசு காப்பகத்திற்கும், பெற்றோருடனும் அனுப்பினர். இந்நிலையில், இந்த தொண்டு நிறுவனத்தில் இருந்து தாயுடன் அனுப்பப்பட்ட 14 வயது சிறுமி பெண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு[4]:

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.3

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.3

இளம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது (31-08-2015, புதன்கிழமை): சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்தவர் பாமா. கணவரை பிரிந்தவர்.  இவரது மகள் சுமதி (14). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர்கள்  குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்தி வந்தனர்.  அப்போது பாமா, தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஜோதி நகரில் உள்ள காப்பகத்தில் சுமதியை சேர்த்துள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. எனவே, அந்த காப்பகத்தில் இருந்தவர்கள் அவர்களின் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல சுமதியும் தன் தாய் பாமாவுடன் வீட்டுக்கு அனுப்பி  வைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி சுமதி திடீரென வாந்தி எடுத்துள்ளார். மேலும் அடிக்கடி மயக்கம் வருவதாக தாய் பாமாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து  பாமா தன் மகளை அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அப்போதுதான் 14 வயது சிறுமி கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாமாவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன் மகளிடம் விசாரித்துள்ளார். ஆனால் ரகசியம் காத்து வந்துள்ளார்[5].இந்நிலையில்,  திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.5

Paul Immanuel son of J Prabhudass now arrested 2015.5

கன்னித்தாயின் வயதை மறைத்தது: அப்போது பெண்ணின் வயது குறித்து  கேட்டபோது பாமா தவறான தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் வசிக்கும் செம்மஞ்சேரி  போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் பாமா மற்றும் சுமதி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் சுமதி கூறியதாவது, “நான் காப்பகத்தில்  இருந்தபோது பால் இம்மானுவேலின் தந்தை பிரபுதாஸ் (67), எனக்கு மிட்டாய் சாப்பிடுவதற்கு வாங்கி தருவார். எனக்கு துணையாக படுத்துக்கொள்கிறேன் என்று அடிக்கடி தப்பாக நடந்து கொண்டார்[6]  / என்னை பல முறை பலாத்காரம் செய்தார். வெளியே சொன்னால் காப்பகத்தை விட்டு  வெளியே விரட்டிவிடுவேன் என்று மிரட்டினார். என் தாயிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே, நான் அமைதியாக இருந்தேன். அதற்குள்  காப்பகம் மூடப்பட்டதால், என்னை என் தாயுடன் அனுப்பிவிட்டனர்”, என்றார். இதைத் தொடர்ந்து, வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் பதுங்கியிருந்த பால் இம்மானுவேல் மற்றும் பிரபுதாஸை போலீசார் பிடித்து   விசாரித்தனர். அவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். அந்த குழந்தையின் தந்தை தான் என்பதை ஒப்புக் கொண்டார்.  பின்னர் செம்மஞ்சேரி போலீசார், சம்பவம் நடந்த இடமான சேலையூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து, சேலையூர் போலீசார்  பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு  சட்டத்தில் பிரபுதாஸை கைது செய்தனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது  காப்பகம் மூடப்பட்டதால் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு தெரியவந்ததுள்ளது. இதுபோன்று எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரியவில்லை.இதுவே காப்பகம் மூடப்படவில்லை என்றால் அந்த குழந்தையும் அனாதையாக மாற்றி மூடி மறைத்து விடுவார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறினர்[7]. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

With-fake-documents3-arrested-for-property-seized-aid_SECVPF

With-fake-documents3-arrested-for-property-seized-aid_SECVPF

விசாரித்ததில், பாதிரியார் குற்றத்தை ஒப்புக் கொண்டார்: மருத்துவமனை நிர்வாகத்தினர் சிறுமியிடம் விசாரித்ததில், மப்பேடு, ‘குட் ஷெப்பர்டுசேவை இல்லத்தில், தங்கி இருந்தேன். பிரபுதாஸ், இமானுவேல்தான் எனது கர்ப்பத்திற்கு காரணம் என்றார். இதுகுறித்து, சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது: மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரியில், ‘குட் ஷெப்பர்டு’ என்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் தேவாலயம் உள்ளது. சிறுமி தெரிவித்த பெயர் கொண்ட நபர்கள், நுாத்தஞ்சேரி, மாணிக்கம் நகர் 2வது தெருவில், போலி ஆவணம் மூலம், குழந்தைகள் காப்பகம் நடத்தியதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள். மே மாதம், ஜான் என்பவருக்கு சொந்தமான இடத்தில், போலி ஆவணம் மூலம், காப்பகம் நடத்தி வருவதாக, கல்பனா என்பவர் அளித்த புகாரால், கடந்த ஜூலை 5ம் தேதி.2015, மேலே குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். கைதுக்கு பிறகு, காப்பகத்தில் இருந்த, ஒன்பது குழந்தைகள், அரசு காப்பகத்திற்கும், பெற்றோருடனும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒருவர் தான் இந்த சிறுமி. சிறுமியின் தகவலையடுத்து, பாதிரியார் பிரபுதாசை கைது செய்தோம்[8]. விசாரித்ததில், பாதிரி யார் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரது பாதுகாப்பில் சிறுமி இருந்தபோது, பூப்பெய்தி உள்ளார். விவரம் தெரியாத அந்த சிறுமியை, பாதிரியார் பிரபுதாஸ், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி, காப்பகத்தை விட்டு வெளியேறி, தற்போது குழந்தை பெற்று உள்ளார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பாதிரியாருக்கு, மரபணு சோதனை நடத்த உள்ளோம்[9]. ஒரு சிறுமியை மட்டும் பலாத்காரம் செய்துள்ளாரா அல்லது காப்பகத்தில் தங்கியிருந்த மற்ற குழந்தைகளையும் பலாத்காரம் செய்தாரா என, சோதனையில் தெரியவரும்’ என்றார்.

வேதபிரகாஷ்

© 05-09-2015

[1]  தினத்தந்தி, போலி ஆவணங்கள் மூலம் தொண்டு நிறுவன சொத்துகளை அபகரித்த 3 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூலை 06,2015, 3:46 AM IST

பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூலை 06,2015, 3:46 AM IST.

[2] https://twitter.com/paulimmanuel10/media

[3] http://www.wikinewsindia.com/tamil-news/dinakaran/crime-dinakaran/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=165110

[5]  தினகரன், அனுமதியின்றி நடத்திய ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு ப்;எண் குழந்தை பிறந்தது: அரசு மருத்துவமனை டாக்டர்கள் அதிர்ச்சி; தொண்டு நிர்வாகியின் தந்தை கைது, செப்டம்பர்.4, 2015, 0058.32.

[6] http://www.maalaisudar.com/newsindex.php?id=48869%20&%20section=19

[7]  மாலைச்சுடர், சிறுமியை தாயாக்கிய முதியவர், Thursday, 03 September, 2015   03:31 PM

[8] தினமலர், சிறுமியை பலாத்காரம் செய்த சேவை இல்ல பாதிரியார் கைது, செப்டம்பர்.4, 2015, 03.20.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1334124

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: