பாத்திமா சோபியா திடீரென்று மரணித்தது, கொலையென்று மாறியது, ஆரோக்கிய ராஜ் பதவி விலக்கம்: சர்ச்சில் தொடரும் மர்மங்கள்! (1)

பாத்திமா சோபியா திடீரென்று மரணித்தது, கொலையென்று மாறியது, ஆரோக்கிய ராஜ் பதவி விலக்கம்: சர்ச்சில் தொடரும் மர்மங்கள்! (1)

சாந்தி ரோஸ்லின் - சொல்வதெல்லாம் உண்மை - ஜி-டிவி 15-06-2015

சாந்தி ரோஸ்லின் – சொல்வதெல்லாம் உண்மை – ஜி-டிவி 15-06-2015

சொல்வதெல்லாம் உண்மைஎன்றஜிடிவியில்நிகழ்சியில் சாந்தி ரோஸ்லின் பேட்டி: “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்சி “ஜி-டிவியில்” ஜூன்.15 மற்றும் 16, 2015 நாட்களில் காண்பிக்கப்பட்டது. அதில் 23-07-2013 அன்று தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படும் பாத்திமா சோபி, உண்மையில் ஆரோக்கியராஜ் என்ற பாதிரியால் கொல்லப்பட்டதாக, அவரது தாயார் சாந்தி ரோஸ்லின் நிகழ்சியில் விவரித்தார்[1]. அப்பேட்டி, இவ்வாறு ஆரம்பிக்கிறது. ஆரோக்கிய ராஜ் தன்னிடம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினாராம். ஏன் என்று கேட்டதற்கு, “மைனர்” பண் மீது, எந்த கத்தோலிக்க பாஸ்டர், பாதிரி கை வத்தாலும், உடனடியாக “டிஸ்மிஸ்” செய்யுமாறு போப் சட்டம் எடுத்து வந்துள்ளார், அதனால் தான் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று விளக்கம் அளித்தார். ஆனால், சாந்தி ரோஸ்லின், “உங்களுக்குத் தான் சோபியாவை சிறிய வயதிலிருந்தே தெரியுமே. அவளுக்கு 18 வயது ஆகிறதே”, என்று கேட்டதற்கு, “இல்லை, அவள் பிளஸ்-1 மற்றும் 2 படிக்கும் போது………………..நான் முறைப்படித்தான் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்”, என்றாராம் ஆரோக்கிய ராஜ். (இங்கு உரையாடல் திடீரென்று மாறுகிறது). ஆனால், அவருக்கும், சோபியாவுக்கும் ஏதாவது உறவு இருக்கும் என்றது தொணித்தது.

பாத்திமா சோபியா 07-07-1995 - 23-07-2013 பெற்றோர் கல்லறையில் பிரார்த்தனை செய்வது

பாத்திமா சோபியா 07-07-1995 – 23-07-2013 பெற்றோர் கல்லறையில் பிரார்த்தனை செய்வது

கண்டுபிடிக்க முடியாத வழக்கு” – புகார் கொடுத்ததால் திறக்கப்பட்டது: அவேளையில், அவரது உறவினரான, பத்திரிக்கையாளர் ஒருவர் வந்து, போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் முதலியவற்றைப் படித்துப் பார்த்தீர்களா, என்று கேட்டபோது, சாந்தி இல்லையென்றாராம். அப்பொழுது, இல்லை, உங்களது மகள் எப்படி இறந்தாள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ல வேண்டும் என்றார். அதனால், அவர் ஆவணங்களை கேட்க ஆரம்பித்து, பார்க்க ஆரம்பித்தார். போலீஸார் “கண்டுபிடிக்க முடியாத வழக்கு” என்று வழக்கை முடித்து விட்டனர். இதனால், போஸ்ட் மார்ட்டம் அறிக்கையைப் படித்துப் பார்த்த போது, கழுத்து நெறிக்கப்பட்டு இறந்திருப்பது போலிருக்கிறது. கழுத்தை இறுக்கியதால், வாயில் ரத்தம் வந்திருக்கிறது. அதனால் கொலை செய்திருப்பது தெரியவந்தது. பிறகு, சந்திராபுரம் போலீஸ் ஷ்டேசனுக்குச் சென்று எப்.ஐ.ஆர். காபி வாங்கிக் கொண்டனர்.  சவத்தின் போட்டோ வாங்கிப் பார்த்த போது, வாயில் ரத்தம் வந்திருப்பது தெரிந்தது. இதனால், கொலை செய்யப் பட்டது உறுதியாகத் தெரிந்ததால், அவர்களை விடக்கூடாது என்று தீர்மானித்ததாக ரோஸ்லின் கூறினார். பத்து லட்சம் வாங்கிக் கொண்டார் என்ற பேச்சும் வந்தது. ஆரோக்கியராஜுவோடு 25-02-1015 அன்று, சாந்தி ரோஸ்லின் போனில் பேசிய உரையாடலை பதிவு செய்ததையும் ஒலிபரப்பட்டது. குழந்தை ராஜ் என்பவர், ஆரோக்கியராஜ், பாத்திமா சோபியைத் தள்ளி, கழுத்தை நெறித்துக் கொன்றதை தன்னிடம் சொன்னதாக, சாந்தி ரோஸ்லின் கூறுகிறார்.

பாத்திமா சோபியா 07-07-1995 - 23-07-2013

பாத்திமா சோபியா 07-07-1995 – 23-07-2013

ஜிடிவி பேட்டிக்குப் பிறகு சாந்தி ரோஸ்லின் வீடு தாக்கப்படல்: கோவை, கோட்டைமேடு, சாமியார் புதுவீதியை சேர்ந்த சகாயராஜூ மனைவி எஸ். சாந்தி ரோஸ்லின் [S Shanthi Rosalyn (40)], கோவை உள்ளூர் டிவி-செனலில் பேட்டி கொடுக்கும் போது, தனது மகளாக பாத்திமா சோபியை, கோவை மைக்கேல் பேராலயத்தின் பங்கு தந்தையான, ஆரோக்கியராஜ் கொலை செய்து விட்டதாக கூறினார். திங்கட்கிழமை 16-06-2015 அன்று இரவு 8.30க்கு இந்நிகழ்சி ஒலி-ஒளிபரப்பு செய்யப்பட்டது[2]. இதனால், சர்ச்-நம்பிக்கையாளர் மற்றும் விசுவாசிகளிடம் பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. சாந்தி ரோஸ்லின் இவ்வாறு பேட்டி கொடுத்தவுடன், அன்றிரவே ஒரு கும்பல் வந்து, அவரது வீட்டின் மீது கற்கள் எரிந்து தாக்கினர்[3]. அருகில் இருந்த மக்கள் வந்ததால், அவர்கள் ஓடிவிட்டனர். இதனால், தனக்கு பாதுகாப்புக் கொடுக்கும் படி, ரோஸ்லின் போலிஸாரிடம் கேட்டுக் கொண்டார்[4].  புகார் கொடுத்த பெண்ணின் வீடு தாக்கப் பட்டது என்ற போதும், ஆங்கில ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது வேடிக்கையாக இருக்கிறது (தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், சிறிய செய்திகளை வெளியிட்டன, ஹூனியர் விகடன் விவரங்களுடன் கீழ் கண்டவாறு வெளியிட்டது).

பாத்திமா சோபியா 07-07-1995 - 23-07-2013 புகைப்படங்கள் கல்லறை

பாத்திமா சோபியா 07-07-1995 – 23-07-2013 புகைப்படங்கள் கல்லறை

மத அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளும் தவறுகளும் தெரியாமல் மறைக்கப்படுகின்றன: மத அமைப்புகளில், மத அடையாளங்களுடன் நடக்கும் முறைகேடுகளும் தவறுகளும் கூடுமானவரை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகின்றன. சில சம்பவங்கள்தான் வெளிச்சத்துக்கு வருகின்றன. கோவையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது கல்லூரிப் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த பாதிரியார், அந்த இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம்! தன் மகள் கொலை செய்யப்பட்டதை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் போராடி நிரூபித்துள்ளார் அவரது தாய் சாந்தி ரோஸ்லின். (இங்கு கூட முதலில் “முறைகேடுகளும் தவறுகளும்” என்று ஆரம்பித்து “கொலை செய்த சம்பவம்!” என்று இழுத்து, “கொலை செய்யப்பட்டதை” என்று முடித்திருக்கிறார்கள்! இருப்பினும் செய்தியை வெளியிட்டதற்காக பாராட்ட வேண்டும்)

பாத்திமா சொப்பி, ஆரோக்கிய ராஜ்

பாத்திமா சொப்பி, ஆரோக்கிய ராஜ் – படம் ஜூனிய விகடன் – நன்றி

சர்ச் பாதிரியார் ஆரோக்கியராஜ் அறையில் மர்மமான முறையில் ஃபாத்திமா சோஃபி இறந்து கிடந்தார்: கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சகாயராஜ் – சாந்தி ரோஸ்லின் தம்பதியர். இவர்களது ஒரே மகள் ஃபாத்திமா சோஃபி. கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரள மாநிலம், வாளையாரையடுத்த சந்திராபுரம் புனித தனிஸ்லாஸ் ஆலய வளாகத்தில் உள்ள சர்ச் பாதிரியார் ஆரோக்கியராஜ் அறையில் மர்மமான முறையில் ஃபாத்திமா சோஃபி இறந்து கிடந்தார். ஃபாத்திமா சோஃபி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகவும், காப்பாற்றி கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டதாகவும் பாதிரியார் ஆரோக்கியராஜ், சந்திராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க,தற்கொலை என வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்தது கேரளா காவல் துறை. இப்போது பழைய வழக்கை மறுவிசாரணை செய்து பாதிரியார் ஆரோக்கியராஜையும், அவருக்கு உதவியவர்களையும் கைதுசெய்யச் சொல்லி கேரளா காவல் துறையிடம் முறையிட்டுள்ளார் சாந்தி ரோஸ்லின். இதுதொடர்பாக சாந்தி ரோஸ்லினிடம் பேசினோம்[5] (ஜூனியர் விகடன் படி).

சாந்தி ரோஸ்லின் - தாயார் புகார் கொடுத்தார்

சாந்தி ரோஸ்லின் – தாயார் புகார் கொடுத்தார் – நன்றி – ஜூனிய விகடன்

மறைக்கல்வி வகுப்பு எடுப்பதற்காக என் பொண்ணை வாளையாருக்குக் கூட்டிட்டுப் போவாரு. அதனால எந்த சந்தேகமும் படல:  ‘‘ஃபாதர் ஆரோக்கியராஜுக்கு சோஃபி சிறுகுழந்தையாக இருக்கும்போதிருந்தே தெரியும். அப்போ அவர் கோயம்புத்தூர்ல உதவி பங்குத் தந்தையா இருந்தாரு. அப்புறம் சந்திராபுரம் சர்ச்க்குப் போயிட்டாரு. சோஃபி 10-வது படிக்கறப்போ அடிக்கடி தலைவலி வர ஆரம்பிச்சது. அதனால சிகிச்சைக்காகக் கேரளாவுக்குப் போனோம். அப்போது ஃபாதர் ஆரோக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவரோட பழக்கம் அதிகமாச்சு. மாசத்துல ஒருநாள் சின்ன குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்பு எடுப்பதற்காக என் பொண்ணை வாளையாருக்குக் கூட்டிட்டுப் போவாரு. அதனால அவர் மேல நாங்க எந்த சந்தேகமும் படல. 2013-ம் வருஷம் ஜூலை மாசம் 22-ம் தேதி என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாததால நானும், என் கணவரும் ஹாஸ்பிட்டல்லேயே தங்கிட்டோம். அப்போது சோஃபியை ஃபாதர் ஆரோக்கியராஜ் சந்திராபுரம் சர்ச்க்குக் கூட்டிட்டுப் போயிருக்கார் (ஜூனியர் விகடன் படி).

Mother accuses xian father for killing her daughter June 2013

Mother accuses xian father for killing her daughter June 2013

நான் செத்துட்டா அதுக்குக் காரணம், ஃபாதர் ஆரோக்கியராஜ்தான்னு எழுதி இருந்தா: அங்கேதான் என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்லி உடலை ஒப்படைச்சாங்க. இதற்கிடையில ஃபாதர் ஆரோக்கியராஜை சஸ்பென்ட் பண்ணாங்க. இந்த நிலையில், என் பொண்ணு எழுதின ஒரு கடிதம் கிடைச்சது. அதுல ‘நான் செத்துட்டா அதுக்குக் காரணம், ஃபாதர் ஆரோக்கியராஜ்தான்’னு எழுதி இருந்தா. அதனால ஆரோக்கியராஜ்கிட்ட போன்ல பேசி அனைத்தையும் ரெக்கார்டு பண்ணினேன். அதை ஒரு டி.வி நிகழ்ச்சியில கொண்டுபோய் கொடுத்தேன். அங்கேயும் உண்மைய ஒத்துக்கிட்டாரு. இப்போ அந்த வீடியோ, ஆடியோவை கேரளா போலீஸ்கிட்ட கொடுத்து, மறு விசாரணை செஞ்சு, ஃபாதர் ஆரோக்கியராஜையும், அவருக்கு உடந்தையா இருந்தவங்களையும் கைது செய்ய வலியுறுத்தியிருக்கோம்” என்றார் ஆவேசமாக (ஜூனியர் விகடன் படி).

கன்னியாஸ்திரி கற்பழிப்பிற்கு எதிராக போராட்டம் - சி.பி.சி.ஐ பேனருடன்

கன்னியாஸ்திரி கற்பழிப்பிற்கு எதிராக போராட்டம் – சி.பி.சி.ஐ பேனருடன்

அவளுக்கும் எனக்கும் லிங்க் இருந்துச்சுஆரோக்கியராஜ்: ஆரோக்கியராஜ் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வீடியோ காட்சிகளை நாமும் பார்த்தோம்[6]. அதில், ‘‘நான் திட்டமிட்டு கொலை செய்யல அக்கா (சாந்தி ரோஸ்லின்). அவளுக்கும் எனக்கும் லிங்க் இருந்துச்சு. அன்னைக்கு என் ரூம்ல இருந்தப்போ திடீர்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டா. என் ரூம்ல பொண்ணு இருந்தது தெரிஞ்சா எனக்கு ரொம்ப பிரச்னை ஆயிடும். அதனால அவ சத்தம் போடாம இருக்க துப்பாட்டாவை பிடிச்சு இழுத்தேன். அதுல கழுத்து நெறிஞ்சி மயங்கிட்டா. ஹாஸ்பிட்டல் கொண்டு போறதுக்குள்ள வழியிலேயே இறந்துட்டா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவளை ப்ளான் பண்ணி எல்லாம் கொலை பண்ணலை. இது ஒரு ஆக்சிடென்ட். பிரஸ்காரங்களுக்கு தெரிஞ்சா இதை பெரிசாக்கி பார்ப்பாங்க. அதனாலதான் இதை நான் ஒத்துக்கிட்டு, சரண்டர் ஆகலை. முடிஞ்சவரைக்கும் என்னை இதுல இருந்து காப்பாத்துங்க அக்கா. நான் பண்ணது தப்புதான். தெரியாம பண்ணிட்டேன்’’ என சாந்தி ரோஸ்லினிடம் பேசுகிறார் ஃபாதர் ஆரோக்கியராஜ் (ஜூனியர் விகடன் படி).

© வேதபிரகாஷ்

31-07-2015

[1] https://youtu.be/TR4pNBDv_eo; https://youtu.be/5mxxyd0KxJc

[2] A woman, who alleged in a television show that a church priest had murdered her daughter, approached the Coimbatore City Police on Tuesday seeking protection and a fresh inquiry into her daughter’s death. She alleged that the followers of the priest had stoned her house on Monday night after the show was telecast at 8.30 p.m.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/woman-seeks-police-protection/article7323865.ece

[3] Komal Gautham, Tamil Nadu woman seeks police protection after she accuses priest of murdering her daughter TNN | Jun 16, 2015, 04.16PM IST.

[4] A woman in Coimbatore sought police protection on 16-06-2015 (Tuesday), a day after she alleged in a television show that a Christian priest had murdered her daughter. A mob pelted stones at the residence of S Shanthi Rosalyn (40) at Kottaimedu here on Monday night after a Tamil TV channel telecast her statement. In the TV show, Rosalyn alleged that the Christian priest, Father Arockiaraj, had murdered her daughter, Fathima Sophie. Sophie was found dead on July 23, 2013 and a case was registered at a police station in Kerala.

http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-woman-seeks-police-protection-after-she-accuses-priest-of-murdering-her-daughter/articleshow/47690632.cms

[5] http://www.vikatan.com/article.php?page=2&module=magazine&mid=2&sid=3264&aid=107495.

[6] ஜூனியர் விகடன், சத்தம் போடாம இருக்க துப்பட்டாவை இழுத்தேன் !, 24 Jun, 2015

Posted Date : 06:00 (20/06/2015); Last updated : 06:00 (20/06/2015)

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: