கேரள பாதிரிகள், பாஸ்டர்கள், கிருத்துவ சாமியார்கள் ஏன் தொடர்ந்து கற்பழிப்புக் குற்றங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர்?

கேரள பாதிரிகள், பாஸ்டர்கள், கிருத்துவ சாமியார்கள் ஏன் தொடர்ந்து கற்பழிப்புக் குற்றங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர்?

நெய்யாற்றின்கரை ஜான் கற்பழிப்பு

நெய்யாற்றின்கரை ஜான் கற்பழிப்பு

ஜூலை.2015 – சர்ச்சுக்குத் தனியாக வா என்று கூப்பிட்டு கற்பழித்த கிருத்துவ பாதிரி: திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார்ரந்த சர்ச்சுக்கு வரும் இளம்பெண்ணின் மீது இவருக்கு இழுப்பு ஏற்பட்டதும், அவளை ஈர்க்க இவர் முயற்சித்து வெற்றி கண்டு விட்டார். இறையியல் என்று பேசி ஆரம்பித்து, சேர்ந்து பிரார்த்தனை செய்தால், அதிசயங்கள் நிகழும் என்றேல்லாம் சொல்லி ஆசைக் காட்டினார். இதனால், அப்பெண் ஆசைப்பட்டு, தனியாக பிரார்த்தனைக்குச் சென்றிருக்கிறாள். சமயத்தைப் பயன்படுத்தி, தனது காம இச்சையினைத் தீர்த்துக் கொண்டார் பாதிரியார். பிறகு தான் அவளுக்குத் தெரிந்தது, தன்னை ஏமாற்றி விட்டர் என்று. எனது வாழ்க்கையினையே பாழாக்கி விட்டாயே என்று அழுதபோது, சமாளித்து அனுப்பி விட்டார். ஆனால், ருசி கண்ட பூனை, மறுபடி-மறுபடி அவளை அழைத்தது. இதனால், தொல்லை தாங்காமல், பேற்றோரிடம் உண்மையினைத் தெரிவித்தாள்.

கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து செய்ததால் புகார் கொடுத்த பாதிக்கப் பட்ட பெண்: அந்த பெண்ணின் உறவினர்கள் பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்துவிட்டதாக நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தனர்[1]. அவரது சபைக்கு வந்த இளம்பெண் கற்பழித்தது கிருத்துவர்களிடையே பெருத்தக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறுகையில் நான் அந்த சபைக்கு அடிக்கடி சென்று வருவேன். என்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்துவதாக கூறி பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்து விட்டார்[2]. மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார்[3]. மேலும் அவரது தொந்தரவு அதிகமானதால் எனது உறவினர்களிடம் எனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்[4].

ஆட்களுடன் போலீஸ் ஷ்டேசனுக்கு வந்து மிரட்டி கலாட்டாவில் ஈடுபட்ட பாதிரி ஜான்: இதைதொடர்ந்து போலீசார் பாதிரியார் ஜானை விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். அவரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் போலீஸ்நிலையத்திற்கு சென்றனர்[5]. அப்போது ஜானுடன் வந்தவர்களை போலீஸ்நிலையத்தில் இருந்து செல்லும்படி போலீசார் கூறினார்கள். இதற்கு ஜான் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். தன்னை விசாரிக்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது என்று வாதிட்டார். ஒருவேளை ஊட்டி பாதிரி, எட்வின் பிகுரெஸ் போன்றோர் வாடிகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தப்பிக்க வழி தேடுகின்றனரா என்பதனையும் கவனிக்க வேண்டியுள்ளது. கூட வந்திருந்த ஆட்கள் போலீஸாரைத் தாக்க ஆரம்பித்தனர். மேலும் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரை தாக்கினார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து மற்ற போலீசார் பாதிரியார் ஜானியை மடக்கி பிடித்தனர். இதனால் போலீஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு பாதிரியார் ஜானை போலீசார் கைது செய்து நெய்யாற்றின்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[6].

ஜூன்.2015 – பாதிரி ஆரோக்கிராஜின் மீதான வழக்கு திறக்கப்பட்டது: ஜூன் 2015 மாதத்தில் சாந்தி ரோசலின் (40) என்ற பெண், தன் மகளான பாத்திமா சோபியாவை, பாதிரி எப். ஆரோக்கியராஜ், பாலியல் தொல்லைக் கொடுத்து கொன்றுவிட்டார் என்று ஒரு டிவி-செனலில் பேட்டி கொடுத்தபோது தெரிவித்தார். நரம்பு தளர்ச்சி நோயுள்ள இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்குட்படுத்தியுள்ளான். ஜூலை.23 2013ல் அப்பெண்ணின் உடல் கிடந்தது. வயலார் போலீஸ் புலன் விசாரித்து அது தற்கொலை என்று வழக்கை முடித்து விட்டது. ஆனால், அந்த பாதிரி, தான் தற்செயலாக அப்பெண்ணின் மேலாடையை இழுத்தேன் என்று ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிரி இளம்பெண்ணின் மேலாடையை இழுப்பார்களா, அத்தகைய அவசியம் என்ன என்று கிருத்துவ மதநம்பிக்கையாளர்கள் ஏன் கேட்கவில்லை என்று தெரியவில்லை. அதாவது, ஆரம்பத்திலேயே, இவர்களது காமசல்லாபங்களைத் தடுத்திருக்க வேண்டும். இத்தகைய செய்தியால், இவ்வழக்கு திறக்கப்பட்டது[7].

மே.2015 – கேரள பாதிரி நாகர்கோவிலில் கைது: என்.டி.டிவி பெயரைக்கூடக் குறிப்பிடாமல், முகத்தை மறைத்த போட்டோவை வெளியிட்டு, “கேரளாவில் கற்பழித்ததாக சொல்லப்படும் கத்தோலிக்க பாதிரி கைது” என்று மரியாதையோடு தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[8]. நித்தியானந்தா விசயத்தில் கொண்டாட்டம் போட்ட ஊடகங்கள், இப்பொழுது பெயரைக் குறிப்பிட ஏன் தயங்கவேண்டும்? இது என்.டி.டிவியின் கிருத்துவ ஆதரவை  காட்டுகிறது. பிரணாய் ராய் கிருத்துவர் அதனால், கிருத்துவ நலன்களுக்கு எதிரஅன செய்திக்களை, விவரங்களை வெளியிடக் கூடாது என்று கவனமாக இருக்கின்றது என்ரு தெரிகிறது. அது ராஜு கொக்கன் தான் என்று, டைம்ஸ் ஆப் இந்தியா கூறியது, ஆனால், அவனது வயது 40 என்று குறிப்பிட்டது. என்.டி.டிவி 44 என்கிறது, ஆகவே, இருவரும் ஒரே ஆளா, வெவ்வேறா என்று தெரியவில்லை! தீவிரவாதிகளின் விவரங்களைக் கொடுக்கும் போது, முன்னுக்கு முரணாகக் கொடுப்பதைப் போல, இவ்விசயத்திலும் செய்திகளில் கொடுப்பது நோக்கத்தக்கது.

Edwin Figarez - missing, bad shepherd

Edwin Figarez – missing, bad shepherd

மே.2015 – எட்வின் பிகுரெஸ் ஜோசப் கற்பழிப்பு புகார்: ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை ஐந்து முறை கற்பழித்ததாக, எட்வின் பிகுரெஸ் ஜோசப் [Edwin Figarez a priest with the Lourdes Matha Church, Puthenvelikkara] என்ற கத்தோலிக்கப் பாதிரி, மே.5 2015 முதல் காணாமல் இருப்பதால், போலீஸார் தேடி வருகின்றனர்[9]. இவனது பற்றிய புகார் வாடிகனுக்கும் தெரிவிக்கப்பட்டது[10]. வாடிகனோ இத்தகைய செக்ஸ்-கற்பழிப்பு கத்தோலிக்க சாமியார்கள் மீது எந்த நடவடிக்கையினையும் எடுக்காமல், சாதாரணாமாகவே செயல்பட்டு வருகின்றது. இதில் கூட கைது செய்யப்படாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியிருக்கிறார் இந்த “தியான குரு”! அதாவது, உடனிருக்கும் பாதிரிகள் [Francis Thaniyadathu and Nixon Kattassery] தான் சதி செய்து இத்தகைய பொய் வழக்கை போட வைத்துள்ளனர் என்று பெயில் வாங்கிருக்கிறார்[11]. ஊட்டிப் பாதிரியார், பணம் கொடுத்து, அமெரிக்காவில் தன் மீது சுமத்தப் பட்ட கற்பழிப்பு வழக்கை சரிசெய்து விட்டான். அதுபோல, இவரும் இறங்குவார் போலும்.

Edwin Figarez - apopeared before police, got bail and came out

Edwin Figarez – apopeared before police, got bail and came out

மே.2015ல் கைது, கற்பழிப்பு பிப்ரவரி.2015 – திருச்சூர் பாஸ்டர் ஹன்னி: பிப்ரவரி 3. 2015 அன்று, திருச்சூரைச் சேர்ந்த ஹன்னி என்ற பாஸ்டர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைக்காட்டி, பாலக்காட்டில், பரலியில் உள்ள கிருத்துவ மையத்திற்கு வந்த இளம்பெண்ணை கோயம்புத்தூருக்குக் கூட்டிச் சென்று கற்பழித்துள்ளான். வழக்கம் போல, விசயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால், அப்பெண் முதலில் தனது நெருங்கிய தோழிகளிடம் சொல்லி, பிறகு, ஒரு அரசுசாரா இயக்கத்தின் மூலம் போலீஸாரிடம் புகார் கொடுத்ததால், மே.10 2015 அன்று கைது செய்யப்பட்டான்[12]. நெய்யாற்றின்கரை ஜானும், திருச்சூரைச் சேர்ந்த ஹன்னி அதே முறையைக் கையாண்டுள்ளது கோக்கத்தக்கது. இருப்பினும், இளம்பெண்கள் அத்தகைய மென்மையான இலக்குகளில் உள்ளது வியப்பாக இருக்கிறது.

Edwin Figarez - drumming, singing and so on

Edwin Figarez – drumming, singing and so on

ஏப்ரல்.30 2015 – ராஜு கோக்கன் கைது[13]: முன்னர் ராஜு கொக்கன் என்ற பாதிரி [Saint Paul’s Church in Thaikkattussery in Thrissur] 9 வயது சிறுமியைக் கற்பழித்ததால் ஏப்ரலில் கைது செய்யப்பட்டான்[14]. ஏப்ரல் 30ம் தேதியன்று, சாஜன் மத்தாய் என்ற பாதிரியை கேரள போலீஸார் கைது செய்தனர். பிப்ரவரி 23 2015 அன்று, கோட்டயம் முண்டக்கய்யம் என்ற இடத்தைச் சேர்ந்த 17-வயது இளம் பெண்ணை, பதனம்திட்ட, ரன்னியைச் சேர்ந்த இவன் கற்பழித்தான்[15]. புஞ்சவயலில் உள்ள இஸ்ரேல் பென்டகோஸ்ட் சர்ச்சிலேயே, அந்த பாதிரி அப்பெண்ணைக் கற்பழித்தது தெரிய வந்தது. சர்ச்சுகளும் காமலீலைகளுக்கு, அற்பழிப்புகளுக்கு எப்படி உபயோகப்படுத்துகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால், எந்த ஊடகவல்லுனரும், கூர்மை நிருபரும், தெய்வீக இடங்கள் கற்பழிப்புக் கூடாரங்கள் ஆகின என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிடவில்லை. விடுதலை போன்ற நாத்திக ஏடுகளும், ஏசு ஏன் காப்பாற்றவில்லை என்று கிண்டலாக செய்தியை வெளீயிடவில்லை.

St Pauls Church at Thaikkattusery belonging to Thrissur Catholic archdiocese

St Pauls Church at Thaikkattusery belonging to Thrissur Catholic archdiocese

கேரள பாதிரிகள், பாஸ்டர்கள், கிருத்துவ சாமியார்கள் ஏன் தொடர்ந்து கற்பழிப்புக் குற்றங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர்?: கேரள பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் கடந்த 60 ஆண்டுகளாக, இவ்வாறு கற்பழிப்பு, பாலியல் வன்குற்றங்கள், பிடோபைல் என்று பல செக்ஸ் குற்றங்களில் சிக்கி வருகின்றனர். அபயா கற்பழிப்பு கொலை விவரங்கள் பல ஆண்டுளாக இழுக்கப்பட்டு, முடிக்காமல் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கன்னியாஸ்திரியின் புத்தகமும் இத்தகைய விவரங்களைக் கொடுத்துள்ளது. ஆனால், ஊடகங்கள் அவற்றைப் பெரிது படுத்தாமல், செய்திகளை வெளியிட்டு அமைதியாகி விடுகின்றன. பிறகு எல்லோரும் மறாந்து விடுகின்றனர். ஜெபிக்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன், தனியாக வா என்றால், எப்படி பெண்கள் செல்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது. முதலில் தாராளமாக தமது மகள்களை அப்படி அனுப்பி வைத்து விட்டு, பிறகு கற்பழித்துவிட்டார்கள் என்று புகார்கள் கொடுப்பதும், வழக்குகள் சமரசத்துடன் முடித்துக் கொள்வதும் மர்மமாகவே இருக்கின்றது. கேரளாவில் படித்தவர்களின் சதவீதம் இந்தியாவிலேயே அதிகம் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். பிறகு அம்மாநிலத்தில் பெண்கள் இவ்வளவு ஏமாளிகளாக, அப்பாவிகளாக இருப்பார்களா என்று வியப்பு மேலிடுகிறது.

© வேதபிரகாஷ்

27-07-2015


[1] http://www.dailythanthi.com/News/India/2015/07/22110252/Prayer-in-solitude-Rape-of-a-young-woman-Priest-arrested.vpf

[2]  தினத்தந்தி, தனிமையில் பிரார்த்தனை என கூறி இளம் பெண் கற்பழிப்பு; விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது பாதிரியார் தாக்குதல், மாற்றம் செய்த நாள்: புதன், ஜூலை 22,2015, 11:02 AM IST, பதிவு செய்த நாள்: புதன், ஜூலை 22,2015, 11:02 AM IST

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/priest-raped-young-saying-that-the-prayer-115072200051_1.html

[4] தமிழ்.ஒன்.இந்தியா, பிரார்த்தனை செய்வதாக இளம் பெண்ணை கூட்டி சென்று பலாத்காரம் செய்த பாதிரியார், Posted by: Veera Kumar Published: Wednesday, July 22, 2015, 13:08 [IST]

[5] http://tamil.oneindia.com/news/india/christian-priest-has-been-arrested-rape-charrge-231624.html

[6] தமிழ்.வெப்துனியா, பிரார்தனை என்று கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார், புதன், 22 ஜூலை 2015 (17:06 IST)

[7] The Kerala police have decided to reopen a case relating to the death of a Coimbatore girl after a Christian priest ‘confessed’ on a television show that she had died ‘accidently’ when he pulled her dupatta. The girl, S Fathima Sofiya, was found dead on July 23, 2013. The Walayar police who investigated case closed it after nine months claiming that she had committed suicide.  A Tamil channel on Monday telecast a show on which the mother of the girl, Shanthi Roselin (40), alleged that the priest had murdered her daughter. Shanthi said the priest, Father H Arockiaraj, had been very close to her family and had often taken her daughter to a church at Walayar. “But on July 23, 2013, on the way to Walayar, he misbehaved with my daughter and killed her,” she said.

http://timesofindia.indiatimes.com/india/Kerala-police-to-reopen-TN-girls-suicide-case-after-priests-confession-on-TV-show/articleshow/47707666.cms

[8] A 44-year-old Catholic priest, who allegedly raped a 9-year-old girl in Thrissur, Kerala, has been arrested from Nagarcoil in Tamil Nadu. He had been on the run since April 25, after the girl’s family registered a police complaint claiming the priest had sexually assaulted the girl several times in April. According to the police, the girl was sexually assaulted by the priest thrice in April, after he promised to give her free robes for the Holy Communion. The priest allegedly also took nude photographs of the child on his mobile phone. The priest has been relieved of his duties by the Thrissur Arch Diocese. The police have slapped charges under Section-376 (1) of the Indian Penal Code, Section-66 (a) of the IT Act and Section-4 of the Protection of Infants from Sexual Offences Act, 2012, apart from other provisions in the IPC, all of which are non-bailable clauses. Section-66 (E) of the IT Act has been invoked against the priest for allegedly photographing the girl.

[9] http://indiankanoon.org/doc/81866488/

[10] http://www.ndtv.com/kerala-news/lookout-notice-for-catholic-priest-who-allegedly-raped-teenager-in-kerala-763932

[11] Justice Babu Mathew P Joseph issued the interim order while considering the anticipatory bail plea of Figarez. The prosecutor sought time to get instruction from the police regarding the case. Hence the court granted time and ordered not to arrest the petitioner till the next posting date. Figarez submitted that the offences have been falsely foisted and have been incorporated with a malafide intention of ruining his future. The petitioner is a very famous priest of the Christian community and is well known for his retreats all over the world, the petition stated. He alleged that it was his co priests Francis Thaniyadathu and Nixon Kattassery, who had been inimical towards him, who cooked up the false case. In fact, his co-priests, had insisted the mother of the girl to file a case against him because they were envious of the wide acceptance of the petitioner as a ‘dhyana guru.’ Their intention was to harm his reputation. These priests had earlier threatened the petitioner that his reputation would be tarnished. The allegation is that the priest raped the 14-year-old girl at the parsonage of the Church from January till March 28, 2015.

http://www.newindianexpress.com/states/kerala/Rape-Charge-HC-Breather-for-Priest/2015/04/25/article2781654.ece

[12] Meanwhile, Hunny, 35, a pastor from Thrissur, was arrested on charges of molestation bid. The girl who came to his divine retreat centre at Parali in Palakkad was force to have sex with him in Coimbatore on February 3 after he promised to marry her. But after the incident, the pastor distanced from her and threatened to kill her if she revealed the incident to anyone. The girl revealed the incident later to her close friends and with the help of an NGO, she lodged a complaint. The pastor was arrested on Sunday.

http://indiatoday.intoday.in/story/raju-kokken-kerala-churuch-priest-molesting-girl/1/359105.html

[13] https://christianityindia.wordpress.com/2014/04/26/another-girl-raped-by-a-catholic-priest-from-kerala/

[14] http://indiatoday.intoday.in/story/raju-kokken-kerala-churuch-priest-molesting-girl/1/359105.html

[15] In another case, on April 30, Kerala Police arrested a pastor, Sajan Mathai, 40, hailing from Ranni in Pathanamthitta on charges of raping a girl on February 23. He was arrested following the complaint of a 17-year-old girl hailing from Mundakkayam in Kottayam district. The incident came to light after the victim became pregnant. Police said the pastor raped the girl during the annual celebration of Israel Pentecost Church in Punchavayal.

http://indiatoday.intoday.in/story/raju-kokken-kerala-churuch-priest-molesting-girl/1/359105.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: