நித்யா ஆசிரியை மதமாற்ற முயற்சி, தலைமையாசிரியர்-ஆசிரியை பரஸ்பர புகார்கள், ஆசிரியையின் தற்கொலை முயற்சி!

நித்யா ஆசிரியை மதமாற்ற முயற்சி, தலைமையாசிரியர்ஆசிரியை பரஸ்பர புகார்கள், ஆசிரியையின் தற்கொலை முயற்சி!

நித்யா, எடப்பாடி, தற்கொலை முயற்சி

நித்யா, எடப்பாடி, தற்கொலை முயற்சி

மதமாற்ற முயற்சிஆசிரியை மீது புகார்: சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி நித்யா (வயது-30). இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி ஊராட்சி நாச்சியூரில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதில், 176 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியை நித்யா பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது கிறிஸ்துவ மதத்தை பற்றி உயர்வான கருத்துகளை கூறி குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார் என புகார்கள் கூறப்பட்டது[1]. இதை அறிந்த எடப்பாடி இந்து முன்னணி அமைப்பினர் நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் வெள்ளிக்கிழமை (01-05-2015) அன்று பள்ளிக்கு வந்த பொதுமக்கள் பள்ளி முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை சமாதானம் செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம், ஆசிரியை நித்யா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஆசிரியர் நித்யா மீது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதை ஏற்று கொண்ட இந்து முன்னணி அமைப்பினரை கலைந்து சென்றனர்[2].

நித்யா, எடப்பாடி, தற்கொலை, மதமாற்றம்

நித்யா, எடப்பாடி, தற்கொலை, மதமாற்றம்

நித்யா கையாண்ட முறை[3]: ஆசிரியை நித்யா 6,7,8 வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இந்நிலையில், திடீரென்று யுவப்பிரியா, வஞ்சிக்கொடி, ஜனனி முதலிய மாணவியர், தமது ஆசிரியை ஏசு கிறிஸ்து பற்றி கூறுகிறார், மொபைல் போனில் கிறிஸ்தவ மதப் படங்களைக் காட்டுகிறார், கிறிஸ்தவ மதத்தை உயர்வாகப் பேசி, இந்துக்கடவுளர் கல் என்றும், அதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது ஹிந்து கடவுள்களை கல் என்றும், கடவுளை கும்பிடுவோர் இறந்து போவார் என்றும் பேசுவதாக பெற்றோர்களிடம் வந்து கூறினர்[4]. இதனால், பெற்றோர் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அப்பொழுதுதான், ஒருவர் மூலம் இந்து முன்னணிக்கு செய்தி போக, அவர்கள் சேர்ந்து, புகார் கொடுக்கச் சென்றனர். ஆசிரியை என்பவர் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும், ஆனால், கிருத்துவர்கள் தொடர்ந்து இவ்வாறு மதமாற்ற முயற்சிகளில் செயல்படுவது நோக்கத்தக்கது. மேலும் சிறுவர்-சிறுமியர்களிடம் தங்களது வேலையைக் காட்டுகிறார்கள் என்பதனைப் பார்க்கும் போது, அவர்கள் எந்த அளவிற்கு மத அடிப்படைவாதம், வெறி முதலியவற்றோடு பயிற்சி அளிக்கப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

News paper cutting alleging teacher -Nithya-edappadi-for conversion

News paper cutting alleging teacher -Nithya-edappadi-for conversion

பரஸ்பர புகார்களும், சிக்கலும்: இந்த சம்பவத்தை அறிந்த சங்ககிரி உதவி ஆட்சியர் பால்பிரின்சிலி ராஜ்குமார் உடனே அவர் நாச்சியூருக்கு வந்து பள்ளியில் விசாரித்தார். இந்து முன்னணியினர் புகார் கூறிய ஆசிரியை நித்யா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மாணவ, மாணவிகளிடம் அவர் விசாரித்தார். இதுதவிர பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பராயன், கல்விக்குழு தலைவர் சம்புமணி மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடமும் விசாரித்தார். அப்போது அனைவரும் ஆசிரியை நித்யா மீது புகார் கூறினர். ஆசிரியை நித்யா பாடம் நடத்தாமல் மதம் மாற்ற செய்ய முயற்சி செய்து வருகிறார். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வேறு பள்ளிக்கு அவரை மாற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். தனக்கும், பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து தன் மீது பொய் புகார் கூறுகிறார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் தனது பெயரை கெடுக்க முயற்சி செய்து இதற்காக மாணவ, மாணவிகளை தூண்டிவிடுகிறார்[5]. தான் மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என்று தெரிவித்தார்[6].

ஆசிரியை நித்யா மற்றும் தலைமை ஆசிரியர் சிவக்குமார் தகராறா, மதமாற்ற முயற்சியா?: இதுகுறித்து நித்யாவின் உறவினர்கள் சிலர் கூறும்போது, நித்யா பள்ளி குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய வலியுறுத்தவில்லை. பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமாருக்கும், நித்யாவிற்கும் தகராறு இருந்து வருகிறது. இதனால் தலைமை ஆசிரியர் வேண்டும் என்றே பொய் புகார் கூறி உள்ளார். அவருக்கு சிலர் உடந்தையாக இருந்து புகார் கூறி வருகிறார்கள். நித்யாவை சஸ்பெண்டு செய்ய வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு தலைமை ஆசிரியர் புகார் கூறி இருக்கிறார். இந்த புகார் பொய் புகார் ஆகும்.  பள்ளி தலைமை ஆசிரியர் நித்யாவை தரக்குறைவாக பேசி வந்துள்ளார். இதை தட்டி கேட்டதால் நித்யாவை வேறு பள்ளிக்கு மாற்றிவிட முயற்சி செய்து வந்துள்ளார். நித்யா பள்ளிக்கு செல்லும் போது செருப்பு போட்டு வரக்கூடாது. பள்ளி அறையை பெருக்கி விடவும் கூறி வந்துள்ளார். இதையெல்லாம் பொறுத்து கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்த நித்யாவை கெட்ட பெயருடன் வெளியில் அனுப்பி விட தலைமை ஆசிரியர் சிவக்குமார் செய்த நாடகம் தான் இது. நித்யா அப்பாவி. அவருக்கு ஒன்றும் தெரியாது. நித்யா தற்கொலை முயற்சி செய்ய காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் மீது கல்வி துறை அதிகாரிகளும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான பள்ளிதலைமை ஆசிரியரை உடனே சஸ்பெண்டு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்[7].

கலெக்டர் அறிவுரைக்குப் பிறகு தற்கொலை முயற்சி ஏன்?: இந்த விசாரணை முடிவில், சங்ககிரி உதவி கலெக்டர் பால்பிரின்சிலி ராஜ்குமார், ஆசிரியை நித்யாவிடம், மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க நன்கு பாடம் எடுங்கள். பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் நடத்துங்கள் என அறிவுரை கூறி விட்டு சென்றார். இதிலிருந்து அவர் பாடபுத்தகங்களுக்கு அப்பாற்பட்ட விசயங்களைக் கூறிவருகிறார் என்பது உண்மையாகிறது. இந்த விசாரணைக்கு பின்னர் ஆசிரியை நித்யா நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் நள்ளிரவில் தூக்க மாத்திரை மற்றும் பிரசர் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதிகம் மாத்திரை சாப்பிட்டதால் நித்யா மயங்கி கிடந்தார். இவரை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனே நித்யாவை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[8]. இந்த சம்பவம் குறித்து சேலம் பேர்லேண்ட்ஸ் போலீசார் விசாரித்து வருகிறார்கள்[9]. ஆனால், தி இந்து, “இருப்பினும் அவர் அத்தகைய காரியங்களில் ஈடுபடவில்லை என்று போலீஸார் சொல்கின்றனர். போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்”, என்று முடித்துள்ளது[10].

தலைமை ஆசிரியர் சிவக்குமார் கூறுவது: இந்த சம்பவம் குறித்து நாச்சியூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் கூறியதாவது[11]: ஆசிரியை நித்யா முதலில் நன்கு பாடம் நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக அவர் சரியாக பாடம் நடத்துவது இல்லை. பள்ளி மாணவ, மாணவிகள் அவர் மீது புகார் கூறுவார்கள். நான் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைப்பேன். அவர் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரமாட்டார். இதை அறிந்து நான் அவரிடம் கேட்டால், எனக்கு தெரியும். நீங்கள் கேட்காதீர்கள் எனகூறி சென்று விடுவார். பலமுறை என் மீது முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், போலீசிலும் புகார் செய்தார். இதை விசாரித்த அதிகாரிகள் என் மீது தவறு இல்லை என கூறி விட்டனர்.  நித்யா புகார் தெரிவித்து இருந்ததால் என்னிடம் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் விசாரித்தனர். நான் பள்ளியில் நடந்த விவரத்தை தெரிவித்து விட்டேன். நித்யா பள்ளியில் பணியாற்றும் 2 பட்டதாரி ஆசிரியர்களையும் திட்டி உள்ளார். இவர்கள் என்னிடம் புகார் செய்தனர். நான் அவர்களை சமாதானம் செய்து வைத்தேன். இப்போது மீண்டும் நித்யா என் மீது பொய் புகார் கூறி உள்ளார். அவர் மீது நானோ, மற்ற ஆசிரியர்களோ புகார் கூறவில்லை, பெற்றோரும், இந்து முன்னணி அமைப்பினரும் தான் புகார் கூறி உள்ளனர்.  இந்த பிரச்சினைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடம் உதவி கலெக்டர் விசாரித்து சென்றுள்ளார். இதனால் பயந்து அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கலாம். பள்ளியில் 6 ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் யாரும் என் மீது புகார் கூறவில்லை. ஆனால் நித்யா மட்டுமே என் மீது புகார் செய்து வருகிறார்.  சரியாக பாடம் நடத்துங்கள், பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வாருங்கள் என நித்யாவிடம் கூறியதால் அவர் என் மீது புகார் கூறுகிறார். நான் எனது பணியை செய்தேன். நித்யா என் மீது கூறும் புகார் தவறானது. இவ்வாறு அவர் கூறினார்[12].

கலெட்டர் நன்கு பாடம் எடுங்கள் என்பதற்கு தற்கொலை முயற்சி வேண்டியதில்லை: மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, “இந்த விசாரணை முடிவில், சங்ககிரி உதவி கலெக்டர் பால்பிரின்சிலி ராஜ்குமார், ஆசிரியை நித்யாவிடம், மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க நன்கு பாடம் எடுங்கள். பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் நடத்துங்கள் என அறிவுரை கூறி விட்டு சென்றார். இதிலிருந்து அவர் பாடபுத்தகங்களுக்கு அப்பாற்பட்ட விசயங்களைக் கூறிவருகிறார் என்பது உண்மையாகிறது”, கலெக்டர் அறிபுரை கூறியப்பிறகுதான், தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். “மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க நன்கு பாடம் எடுங்கள். பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் நடத்துங்கள்”, என்று அறிவுரை கூறியதற்காக மட்டும் யாரும் தற்கொலை முயற்சிக்கு உந்தப்படமாட்டார்கள், ஆகவே, இது அவர் பாடம் நடத்தும் விதத்தில் தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதாவது சிறுமிகள் சொல்வது உண்மை என்றாகிறது. எனவே, தன் மீது இரக்கம் பிறக்க வேண்டும் என்ற முறையில் கூட அவ்வாறு செய்திருக்கலாம்.

நித்யா, எடப்பாடி, தற்கொலை முயற்சி தப்பிக்கவா

நித்யா, எடப்பாடி, தற்கொலை முயற்சி தப்பிக்கவா

ஊடகங்களின் பொறுப்பு முழுமையான செய்தி வெளியிடுவது: ஊடகங்கள் செய்திகளை உண்மையாக, முழுமையாக, தெளிவாக வெளியிட வேண்டும். இப்படியும் இருக்கலாம்-அப்படியும் இருக்கலாம் போன்ற நிலையில் செய்திகளை வெளியிடக் கூடாது. “மதமாற்ற முயற்சி” என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தியை போட்டப் பிறகு, தலைமை ஆசியர்-ஆசிரியை பிரச்சினை போல ஊகிக்க வைக்கக் கூடாது. மாணவ-மாணவியர்களிடமிருந்து உண்மையினை விசாரித்து செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். செல்போனில் என்ன படங்களை வைத்திர்ந்தார் என்று பார்த்திருக்கலாம். கலெக்டர் அறிவுரைக்குப் பிறகு ஏன் தற்கொலை முயற்சிக்கு முடிவெடுத்தார் என்பது பற்றியும் விளக்க வேண்டும். அரைகுறை செய்திகளை வெளியிட்டு ஊடகங்கள் வாசகர்களை ஊகிக்க வைக்கக் கூடாது. பிறகு என்னவாயிற்று என்றும் செய்திகளை வெளியிட வேண்டும், இதனை இப்படியே விட்டுவிடக் கூடாது.

© வேதபிரகாஷ்

03-05-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1243499

[2] http://www.maalaimalar.com/2015/05/01101116/Caught-in-complaint-of-religio.html

[3] தினமலர், மதமாற்றம் செய்ய வற்புறுத்தும் ஆசிரியை; பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம், மே.1, 2015: 07:59.

[4] http://www.dinamalar.com/district_detail.asp?id=1243203

[5] தினமலர், மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை தற்கொலை முயற்சி, மே.1.2015.

[6] நக்கீரன், மதமாற்றம் செய்வதாக புகாருக்குள்ளான ஆசிரியை  தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை,  மே.1. 2015.

[7] மாலைமலர், எடப்பாடி அருகே மத மாற்ற புகாரில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை முயற்சி, மாற்றம் செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 01, 10:10 AM IST, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 01, 10:11 AM IST.

[8] http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2015/05/02/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/article2793423.ece

[9] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=142525

[10] However, it was found that she was not involved in such activities, the police said. The police are investigating into the incident.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/school-teacher-attempts-suicide/article7163558.ece

[11] மாலைமலர், ஆசிரியை நித்யாவை நான் மிரட்டவில்லை: பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 01, 10:15 AM IST,

[12] http://www.maalaimalar.com/2015/05/01101555/I-am-not-threatening-Nithya-te.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: