அரசு பள்ளி மாணவர்களுக்கு பைபிள் வினியோகம், செக்யூலரிஸத்தை மீறிய தலைமையாசிரியை லில்லி, பொய் புகார் கொடுத்த பெந்தகொஸ்தே கும்பல்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு பைபிள் வினியோகம், செக்யூலரிஸத்தை மீறிய தலைமையாசிரியை லில்லி, பொய் புகார் கொடுத்த பெந்தகொஸ்தே கும்பல்!

பைபிள் விநியோகம், தினத்தந்தி 2015

பைபிள் விநியோகம், தினத்தந்தி 2015

அரசு பள்ளி மாணவர்களுக்கு பைபிள் வினியோகம்: முடிவைத்தானேந்தல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு பைபிள் புத்தகமான புதிய ஏற்பாடு புத்தகம் வழங்கப்பட்டது குறித்து இந்து முன்னணியினர் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்[1]. அவர்களுக்கு பைபிள்களை வழங்கியுள்ளது மட்டுமின்றி சமய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளது[2]. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாயக்கூத்தன், வக்கீல் பிரிவு தலைவர் நாகராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளியில் வழங்கப்பட்ட பைபிள் புத்தகத்தை கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.  பின் கலெக்டர் ரவிக்குமாரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்[3]. இதில் தெரிவித்திருப்பதாவது: “முடிவைத்தானேந்தல் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 600 பேருக்கு தலைமையாசிரியை லில்லி புஷ்பம் புதிய ஏற்பாடு புத்தகம் வழங்கியுள்ளார். மத மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என அதில் தெரிவித்துள்ளனர்[4]. கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தரையில் கொட்டப்பட்ட புதிய ஏற்பாடு புத்தகத்தினை போலீசார் பறிமுதல் செய்தனர்[5].

பைபிள் விநியோகம், தினமலர் 2015.

பைபிள் விநியோகம், தினமலர் 2015.

தலைமையாசிரியை லில்லி கிறிஸ்துவராக செயல்பட்டது: தலைமையாசிரியை லில்லி புஷ்பம் செயூலரிஸத்தைப் பின்பற்றாமல், கம்யூனலிஸத்தைப் பின்பற்றியுள்ளது பற்றி, மற்ற ஊடகங்கள், ஊளையிடாதது வியப்பே. ஓட்டல்களில், லாட்ஜுகளில் பைபிளை வைக்கின்றனர், அதுப்போல, ஒன்றும் அறியாத மாணவ-மாணவியருக்கு பைபிளை விநியோகம் செய்வது எந்தமுறையில் நியாயம் என்று தெரியவில்லை. ஒரு அரசு பள்ளி தலைமையாசிரியை, சாதாரண தலைமையாசிரியையாக இல்லாமல், கிருஸ்துவராக செயல்பட்டிருப்பது தெரிகிறது. இதனால், அவரது உள்நோக்கமும் புரிகிறது. அதை மறைக்கவே கிறிஸ்துவர்கள் பொய்களைக் கூற ஆரம்பித்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. மதத்தை வியாபாரமாக்கியுள்ள மிஷனரிகளின் செயல்பாடுகளைப் பற்றி, இந்திய ஊடகங்களில் செய்திகள், விவரங்கள் மற்றும் உண்மைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன[6].

Pentecostal missionary - eyeing on Indians

Pentecostal missionary – eyeing on Indians

இந்து முன்னணியினர், பைபிள்களை, அவமரியாதை செய்து, மதக் கலவரத்தை தூண்ட முயன்றனர் என்பது பொய்: இந்து முன்னணியினர், ‘புதிய ஏற்பாடு’ பைபிள் புத்தகங்களை, அவமரியாதை செய்து, மதக் கலவரத்தை தூண்ட முயன்றனர் என்பதில், உண்மை இல்லை,” என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்[7]. சட்டசபையில், அவர் கூறியதாவது: காங்., – எம்.எல்.ஏ., பிரின்ஸ் பேசும் போது, ”தூத்துக்குடியில் வேதாகமத்தை, இந்து மகா சபையினர் அவமதித்தனர்,” என, தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜன., 20ம் தேதி, கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த ஒருவர், பள்ளி தலைமை ஆசிரியை அனுமதியுடன், அப்பள்ளி மாணவர்களுக்கு, ‘புதிய ஏற்பாடு’ பைபிள் பிரதிகளை, இலவசமாக வினியோகித்து உள்ளார். தகவலறிந்து, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் உள்ளிட்டோர், பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியரிடம் விவரம் கேட்டுள்ளனர். அவரும் நடந்ததை ஒப்புக் கொண்டு, மாணவர்களிடம் இருந்து, 135 ‘புதிய ஏற்பாடு’ பைபிள்களை திரும்பப் பெற்று, இந்து முன்னணியினரிடம் ஒப்படைத்து உள்ளார். அவர்கள் புத்தகங்களை, பத்திரிகையாளர்களிடம் காண்பித்துவிட்டு, கலெக்டரிடம் ஒப்படைத்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, மனு அளித்துள்ளனர்[8].

பொய் புகார் கொடுத்த பெந்தகொஸ்தே கும்பல்

பொய் புகார் கொடுத்த பெந்தகொஸ்தே கும்பல்

பெந்தகொஸ்தே தேவாலயங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலரின் பொய் புகார்: ஆறுமுகநேரி தேவ ஊழியர் இயக்கத்தின் தலைவர் மோசஸ், தூத்துக்குடி பெந்தகொஸ்தே தேவாலயங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் பால் ஆண்ட்ரு ஆகியோர், இந்து முன்னணியினர் புதிய ஏற்பாடு புத்தகங்களை அவமரியாதை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ‘சிப்காட்’ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து சுவிசேஷகர் ஐக்கியம் சார்பில் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது[9]: இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை தரையில் போட்டு அவமதித்துள்ளனர். மாநகர் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் மாயக்கூத்தன் உட்பட நிர்வாகிகள் பைபிளை தரையில் போட்டு அவமதித்து உள்ளனர். ஆபாசமான வார்த்தைகளால் பேசி இழிவு படுத்தியுள்ளனர். இது ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களின் மனதை புன்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ புனித நூலை அவமதித்தவர்கள், தொடர்ந்து இரு மதத்தவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். தேசவிரோத குற்றச்செயலுக்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவித்துள்ளனர்[10].

mudivaithanendal pentecoast churh

mudivaithanendal pentecoast churh

விசாரணையில் தெரிய வந்த உண்மை: இதுகுறித்து விசாரித்ததில், இந்து முன்னணியினர் புதிய ஏற்பாடு புத்தகங்களை, அவமரியாதை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அவர்கள் புத்தகங்களை அவமரியாதை செய்து, மதக் கலவரத்தை தூண்ட முயன்றனர் என்பதில், உண்மை இல்லை. இப்பிரச்னையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, மத நல்லிணக்கத்திற்கு ஊறு ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இவ்வாறு, முதல்வர் தெரிவித்தார்[11]. உண்மையில் கிறிஸ்துவர்கள் கொடுத்த பைபிள்களைப் பிடுங்கி, தரையில் போட்டு ஆர்பாட்டம் நடத்தினர். அப்பொழுது, பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் வந்து அவற்றை அள்ளிச் சென்றிருக்கலாம், ஆனால், செய்யவில்லை. இதிலிருந்த்நே அவர்களது குற்றா உணர்வு வெளிப்படுகிறது. உண்மையில், அவர்களது சட்டமீறல் செயல்களை மறைக்க, பொய் புகார்களைக் கொடுத்து, கலவரம் தூண்ட அவர்கள் தாம் முயல்கிறார்கள் என்றும் தெரிகிறது.

mudivaithanendal pentecoast churh priests

mudivaithanendal pentecoast churh priests

தில்லி முதல் தூத்துக்குடி வரை: தில்லி விவகாரங்களுக்கு குதித்து ஆர்பாட்டம் செய்த செக்யூலரிஸப் பழங்கள், எதிர்பார்த்தப் படியே மௌனம் சாதிக்கின்றன. வழக்கமான திருட்டுகளைக் கூட, மதப் பிரச்சினையாக்கி, அரசியல் செய்ய முற்படும் கிறுஸ்துவர்களின் திட்டம் இறுதியில் எதற்காக என்று தெரியவில்லை. சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை உண்டாக்கி, கலாட்டா செய்ய விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. ஆனானப் பட்ட அமெரிக்காவிலேயே பள்ளிகளில் பைபிள் வினியோகம் தடை செய்யப் பட்டுள்ளது. பிறகு, செக்யூலரிஸ இந்தியாவில் எப்படி அவர்கள், இவ்வாறு செய்ய முடியும் என்று நோக்கத்தக்கது.

© வேதபிரகாஷ்

24-02-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1166245

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/hm-cadres-protest-against-ngo-organisation-219378.html

[3] http://www.dailythanthi.com/News/Districts/2015/01/21202848/Report-presented-to-the-students-of-the-Bible-Hindu.vpf

[4] தினத்தந்தி, மாணவர்களுக்கு பைபிள் வழங்கியதாக புகார்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம், பதிவு செய்த நாள்:

புதன், ஜனவரி 21,2015, 8:28 PM IST; மாற்றம் செய்த நாள்:

வியாழன் , ஜனவரி 22,2015, 1:00 AM IST

[5] ஒன்.இந்தியா.தமிழ், மாணவர்களுக்கு பைபிள் கொடுத்த நிறுவனம்.. பறித்து சாலையில் போட்டு போராட்டம் நடத்திய இந்து முன்னணி!,  Sutha; Published: Wednesday, January 21, 2015, 18:37 [IST]

[6] http://www.oneindia.com/feature/marketing-religion-who-does-it-how-they-do-it-1589911.html

[7] தினமலர், மத கலவரத்தை இந்து முன்னணி தூண்டவில்லை, பதிவு செய்த நாள், பிப்ரசவரி.23, 2015: 23:45.

[8] தினமலர், அரசுப்பள்ளியில் பைபிள் வழங்கல் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம், ஜனவரி.21.2015: 23:15.

[9] தினமலர், பைபிளைஅவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கிறிஸ்தவர்கள் மனு, பிப்ரவரி.3, 2015: 02:45

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1174718

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1191245

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: