காசிமேடு பாதிரி ஜேகப் ஆல்பர்ட் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யும்படி சென்னை நீதிமன்றம் உத்தரவு – தில்லியில் சர்ச்சுகள் தாக்கப்படுதலும், மற்ற இடங்களில் பாதிரிகள் கற்பழிப்புகளில் ஈடுபடுவதும் முரண்பாடா, செக்யூலரிஸாமா?

காசிமேடு பாதிரி ஜேகப் ஆல்பர்ட் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யும்படி சென்னை நீதிமன்றம் உத்தரவு – தில்லியில் சர்ச்சுகள் தாக்கப்படுதலும், மற்ற இடங்களில் பாதிரிகள் கற்பழிப்புகளில் ஈடுபடுவதும் முரண்பாடா, செக்யூலரிஸாமா?

காசிமேடு பாதிரி மீது வழக்கு

காசிமேடு பாதிரி மீது வழக்கு

பாதிரி மீது இளம் பெண் ஜூன்.2014ல் கொடுத்த புகார்[1]:  மண்ணடியை புதுத்தெருவை  சேர்ந்த மேரி / ஸ்டெல்லா (வயது 21), பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற பெண் இவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். திருமணம் ஆகாதவர். ஆர்.சி.சர்ச்சில் உள்ள பாதிரியார் ஜேகப் ஆல்பர்ட் [Jacob Albert, the father of the RC Church, Kasimedu] கடந்த ஒரு வருடமாக இவர்கள் இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது[2].  இவர் காசிமேடு போலீசில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது: “காசிமேட்டில் பாதிரியராக இருப்பவருக்கும், எனக்கும் பழக்கம் உள்ளது. அவர் பாரிமுனையில் உள்ள பாதிரியார் பயிற்சி நிலையத்துக்கு வந்தபோது எங்கள் குடும்பத்தினரோடு நெருங்கி பழகினார். எனக்கு வேலை வாங்கித் தருவதாகவும், என்னுடைய தம்பிக்கு படிப்பிற்கு உதவுவதாகவும் வாக்களித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். வெளியே சொன்னால், தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார்[3]. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. ஆனால், வழக்குப் பதிவு செய்யாதலால், உயர்நீதி மன்றத்திற்குச் சென்றார். அந்தப் புகார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யாததால், தனது புகார் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்று மற்ற செய்திகள் கூறுகின்றன.

case against Kasimedu father

case against Kasimedu father

திட்டமிட்ட செய்முறை, மாதிரி மற்றும் செயல்படுத்தும் போக்கு: நடந்து கொள்ளும் முறை முன்னரே பலதடவை எடுத்துக் காட்டியுள்ளபடி, அது ஒரு திட்டமிட்ட செய்முறையை, மாதிரியை எடுத்துக் காட்டுகிறது.

  1. எங்கள் குடும்பத்தினரோடு நெருங்கி பழகினார்.
  2. எனக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்களித்தார்.
  3. என்னுடைய தம்பிக்கு படிப்பிற்கு உதவுவதாகவும் வாக்களித்தார்.
  4. என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.
  5. இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார்.
  6. வெளியே சொன்னால், தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார்

இத்தகைய குணாதிசயங்களை, இவர்களே அடைகிறார்களா அல்லது கிருத்துவ இறையியல் காரணமா என்பதும் நோக்கத்தக்கது. நித்தியானந்தா விசயத்தில் ஊடகங்கள் ஓலமிட்டு அலறின, தொடர்ந்து செய்திகளை இன்று வரை பதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், கிருத்துவர்கள் இப்படி தொடர்ந்து செக்ஸ் குற்றங்களில் ஈடுபடும் விவகாரங்கள், எப்பஒழுதாவது செய்தியாக வெளியிடுவதோடு சரி, அதற்கு பிறகு, ஒன்றும் வெளிவராது.

Justin another pastor cheats women DM

Justin another pastor cheats women DM

பிப்ரவரி. 2015ல் நீதிபதி முன்பு வந்த வழக்கு[5]: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பாதிரியார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது[6]. சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த பெண் மெர்சி (வயது 21). (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  காசிமேட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆலய பாதிரியார் ஜேக்கப் ஆல்பர்ட் (42) மீது காசிமேடு காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி.2014 பாலியல் புகார் அளித்தார்[7]. அதில், காசிமேடு ஆர்.சி தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கும் ஜேக்கப் ஆல்பர்ட், எனக்கு வேலை வாங்கித் தருவதாகவும், என் குடும்பத்துக்கு உதவி செய்வதாகவும் கூறி என்னை ஆசைக்கு இணங்க வைத்து கற்பழித்து விட்டார். இதன் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவ்வப்போது என்னிடம் உறவு கொண்டார். நான் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது, என்னை அவதூறாக பேசி, அடித்து விரட்டுகிறார். எனவே, பாதிரியார் ஜேக்கப் ஆல்பர்ட் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்[8].

தினமலர் ஏ.என்.குப்பம் செய்தி

தினமலர் ஏ.என்.குப்பம் செய்தி

போலீஸார் வழக்குப் பதிவு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்: இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு வெள்ளிக்கிழமை (13-02-2015) விசாரணைக்கு வந்தது[9]. அப்போது, கூடுதல் அரசு வழக்குரைஞர் வழக்கு பதியப்படவில்லை என்றாலும், புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[10]: “கற்பழிப்பு குறித்து கொடுக் கப்படும் புகார் மீது போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்யவேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாத போலீசார், இதுவரை புகார் கொடுத்த இளம் பெண்ணையும் விசாரிக்காமல் உள்ளனர். அவர் வீட்டில் இல்லை என்று அரசு வக்கீல் கூறினாலும், அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, டினுபாய் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், மனுதாரர் கொடுத்துள்ள கற்பழிப்பு புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். புகாரில் தெளிவாக குற்றம் என்று அறிகின்ற வகையில் உள்ளதால் பிரிவு 376 (கற்பழிப்பு)ல் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும்[11]. இதன் பின்னர், 18-ந் தேதி புகார் தாரர் மெர்சி விசாரணைக்காக போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகவேண்டும். விசாரணை முடிந்ததும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பிற சாட்சி ஆதாரங்களை சேகரித்து, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவேண்டும்”, என்று நீதிபதி கூறியுள்ளார்[12].

St Pauls Church at Thaikkattusery belonging to Thrissur Catholic archdiocese

St Pauls Church at Thaikkattusery belonging to Thrissur Catholic archdiocese

ஜூன்.2014 முதல் பிப்ரவரி 2015 வரை என்ன நடந்தது?: ஜூன் 2014ல் புகார் கொடுத்ததை போலீஸ் ஏற்று பதிவு செய்யாதது, அப்பாதிரியின் போலீஸார் மீதுள்ள தாக்கம், கட்டுப்பாடு முதலியவை வெளிப்படுகின்றன. பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டும், மிரட்டியுள்ளது அப்பாதிரியின் குற்றவுணர்வை, ஏமாற்றும் பனப்பாங்கைச் சுட்டிக் காட்டுகிறது. பெண்ணை காமத்திற்கு உபயோகப் படுத்துக் கொள்ளாலாம் என்ற வக்கிரப் புத்தியையும் எடுத்துக் காட்டுகிறது. பாதிரி என்ற ஸ்தானத்தை,ம் பதவியை, அதிகாரத்தைத் தொடர்ந்து, இம்மாதிரி பலர் உபயோகித்துக் கொள்வது, பாதிரிகளின் காமத்தில் உள்ள பலவீனத்தைக் காட்டுகிறாதா அல்லது சர்ச்-அதிகாரமே கண்டுகொள்ளாமல் இருக்கிறாதா அல்லது உலகம் முழுவதும் கிருத்துவத்தில் உள்ள அத்தகைய கொடிய காமநோய், இந்தியக் கிருத்துவர்களையும் பிடித்துக் கொண்டு விட்டதா என்பதனை அவர்கள் தாம் விளக்கவேண்டும். தமிழகதைப் பொறுத்த வரையிலும், இத்தகைய மதகுருமார்களுக்கு, அரசாங்க அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்துள்ளதும் தெரிகிறது. குற்றங்களில் செக்யூலரிஸம் பார்ப்பது, மிகவும் அபாயகரமான விசயம், அதிலும் பாலியல் வக்கிரங்கள், செக்ஸ் குற்றங்களில் காட்டுவது, மிகவும் கேவலமானது மற்றும் பெண்களை மதிக்காத நிலையினையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

 Nellai christian pastor rapes a girl and makes her pregnant.5

தில்லியில் சர்ச்சுகள் தாக்கப்படுதலும், மற்ற இடங்களில் பாதிரிகள் கற்பழிப்புகளில் ஈடுபடுவதும்: கிருத்துவப் பிரச்சினைகள், குற்றங்கள், சட்டமீறல்கள் இந்தியாவில் சில நேரங்களில், சில இடங்களில் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. ஆனால், அதே நேரத்தில் சிறிய விசயங்களாக இருந்தாலும், பூதாகரமாகச் சித்தரிக்கப் பட்டு, தேசிய-உலக செய்திகளாக மாற்றி, தலைப்பிட்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றன. தில்லியில் தினமும் சர்ச்சுகள் தாக்கப்பட்டு வருகின்றன என்பது போல சித்தரிக்கப் பட்டு பரபரப்பு ஏற்படுத்தப் படுகின்றன. ஆனால், அதே நேரத்தில் ஒரு பிஷப், ஒரு பாதிரி, ஒரு பாஸ்டர், ஒரு கிருத்துவ மடாதிபதி என்று அடிக்கடி பாலியல், கற்ப்பழிப்பு, வன்புணர்வு போன்ற செக்ஸ் குற்றங்களில் மாட்டிக் கொண்டுதான் வருகின்றனர். ஆனால், அதைப் பற்றி கிருத்துவர்களே கவலைப்படுவதாக இல்லை. அவற்றால் பாதிக்கப் படும் கிருத்துவப் பெண்களைப் பற்றியும் வருத்தப் படுவதாக இல்லை. எல்லாமே சட்டமீறல்கள் என்றால், கிருத்துவர்கள் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும். ஒன்றை எதிர்த்து, மற்றதை எதிர்க்காமல் இருந்தால், ஆதரிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா அல்லது அவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் என்றாகுமா?

© வேதபிரகாஷ்

14-02-2015

[1] மாலைமலர், காசிமேட்டில் பாதிரியார் மீது இளம்பெண் செக்ஸ் புகார், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஜூன் 26, 1:12 PM IST.

[2] http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=58729

[3] The victim had earlier lodged a complaint at Kasimedu Police Station alleging that the father of the RC Church, Kasimedu, in the guise of getting a job to her and helping to her brother for education, had sexually harassed her on various occasions.  When she approached the father Jacob Albert to marry her, he refused and threatened her not to disclose about the matter to anyone.

Press Trust of India , HC directs police to register case against father of Church,  Chennai , February 13, 2015 Last Updated at 20:25 IST

[4] http://www.maalaimalar.com/2014/06/26131239/kasimedu-priest-on-young-girl.html

[5] http://www.outlookindia.com/news/article/HC-Directs-Police-to-Register-Case-Against-Father-of-Church/881397

[6] http://www.business-standard.com/article/pti-stories/hc-directs-police-to-register-case-against-father-of-church-115021301775_1.html

[7]  தினமணி, பாலியல் புகார்: பாதிரியார் மீது வழக்குப் பதிய உத்தரவு, By DN, சென்னை

First Published : 14 February 2015 05:11 AM IST

[8] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/02/14003129/KasimeduThe-policeHigh-CourtDirective.vpf

[9] http://thefirstmail.in/news/news-details/54349-hc_directs_police_to_register_case_against_father_of_church#sthash.RROKiUXd.dpbs

[10] தினத்தந்தி, கிறிஸ்தவ பாதிரியார் மீது இளம் பெண் கொடுத்த கற்பழிப்பு புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் காசிமேடு போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு, மாற்றம் செய்த நாள்: சனி, பெப்ரவரி 14,2015, 3:15 AM IST; பதிவு செய்த நாள்: சனி, பெப்ரவரி 14,2015, 12:31 AM IST.

[11] Justice R S Ramanathan, on a petition by the woman, in his order said “a reading of the complaint discloses that cognizable offence punishable under Section 376 (rape) has been committed by the accused. Therefore, when the complaint discloses commission of cognizable offence, police have to register a case”, the judge said.

[12]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/02/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/article2668436.ece

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: