உமாசங்கர் குரான், ஹதீஸ், இஸ்லாம் பற்றி பேசியது, முஸ்லிம்கள் புகார் கொடுத்தது முதலியன – இந்து தலித் உமாசங்கரின் கிருத்துவ பிரச்சாரம், சட்டநுணுக்கங்கள், இந்திய செக்யூலரிஸத்தின் கேலிக்கூத்துகள் (4)

உமாசங்கர் குரான், ஹதீஸ், இஸ்லாம் பற்றி பேசியது, முஸ்லிம்கள் புகார் கொடுத்தது முதலியன – இந்து தலித் உமாசங்கரின் கிருத்துவ பிரச்சாரம், சட்டநுணுக்கங்கள், இந்திய செக்யூலரிஸத்தின் கேலிக்கூத்துகள் (4)

Umasankar-உலக அழிவு

Umasankar-உலக அழிவு

எம்மதமே சம்மதம் மட்டும்,அல்ல, அதுதான் உண்மையான மதம், மற்றதெல்லாம் பொய்யான மதம், சாத்தானின் மதம்: எல்லா மதங்களும் ஒன்று, அமைதியைத்தான் போதிக்கின்றன என்றெல்லாம் “செக்யூலரிஸ / சமதர்ம” நோக்கில் இந்தியாவில் பிரச்சாரம் செய்து வந்தாலும், பல அமைப்புகள் அவ்வாறே ஆன்மீகம், விழாக்கள் போன்ற முறைகளில் எல்லா மத கருத்துகளை போதிப்பது, விழாக்களைக் கொண்டாடுவது என்றெல்லா செய்து வந்தாலும், கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்றுமே தங்களது மதம், கடவுள், இறையியல் சித்தாந்தங்கள் மற்ற நம்பிக்கையாளர்களை விட உயர்ந்தது என்று தான் கூறிக்கொண்டு வந்துள்ளன. “எம்மதமும் சம்பதமில்லை, எம்மதமே சம்மதம் மட்டும்,அல்ல, அதுதான் உண்மையான மதம், மற்றதெல்லாம் பொய்யான மதம், சாத்தானின் மதம்”, என்றும் வெளிப்படையாக பிரகடனப் படுத்தியும் வந்துள்ளன. ஆனால், சமதர்மவாதிகள், மிதவாதிகள், செக்யூலரிஸ ஊடகங்கள், அரசியல்வாதிகள், சித்தாந்தவாதிகள் முதலியோர் இந்த உண்மையினை மறைத்து, இந்தியர்களைக் குறிப்பாக இந்துக்களை ஏமாற்றி வந்துள்ளனர். ஆனால், உமாசங்கற் விவகாரம் அவர்களது போலித்தனமான முகமூடிகளை கிழித்தெரிந்து விட்டன.

TN Dauheed Jamaat poster challenging evangelists

TN Dauheed Jamaat poster challenging evangelists

“ஐ.ஏ.எஸ் எவாஞ்செலிஸ்ட் மிரட்டுகிறார்”: இந்து அமைப்புகளின் கோபப் பார்வையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரின் மீது இஸ்லாமிய அமைப்புகளும் கோபம் கொண்டுள்ளன[1]. காரணம், இஸ்லாம் குறித்து அவர் அவதூறு பிரசாரம் செய்வதுதான் என்று கூறப்படுகிறது[2]. தமிழக அரசின் சென்னை மண்டல ஒழுங்கு நடவடிக்கை ஆணையரான ஐ.ஏ.எஸ். அதிகாரி  உமா சங்கர், அவ்வப்போது கிறிஸ்தவ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மத பிரசாரம் செய்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் இந்து மக்கள் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியது. இதையடுத்து உமா சங்கர், கிறிஸ்தவ பிரசங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தலைமைச் செயலர் தடை விதித்தார். அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்திற்குச் செல்வேன் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்[3]. “ஐ.ஏ.எஸ் எவாஞ்செலிஸ்ட் மிரட்டுகிறார்” என்றே ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன[4].

பைபிள் இறை வேதமா

பைபிள் இறை வேதமா

தமிழ்நாடு ஜமாஅத் உமாசங்கரின் மேல் புகார்: இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்தும், உமா சங்கர் அவதூறாக பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது[5]. நபிகள் நாயகத்தை விமர்சனம் செய்யும் உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஜமாஅத் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது[6]. அந்த புகார் மனுவில், இஸ்லாம் மதம் குறித்தும், குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் குறித்தும் உமாசங்கர் ..எஸ். அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். எனவே, அரசு ஊழியராக இருந்து கொண்டு மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் உமாசங்கர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை பணிநிக்கம் செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், உமா சங்கரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி. வரும் 10ம் தேதி செவ்வாய் கிழமை, காலை 10.30 மணிக்கு, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[7].

சாத்தான், ஏசு, கிருஸ்துவம், இறையியல்

சாத்தான், ஏசு, கிருஸ்துவம், இறையியல்

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் குறித்து அவதூறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்: தி இந்துவின் படி[8], தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் முஹம்மது சாதிக் தலைமையிலான குழுவினர் நேற்று தமிழக தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: “அரசு ஊழியரான உமாசங்கர், இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் குறித்து அவதூறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார். இஸ்லாமியர் வணங்கும் அல்லாஹ் குறித்து தவறான விளக்கம் அளிக்கிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி, மத நம்பிக்கையை கொச்சைப்படுத்து கிறார். அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கவேண்டிய அரசு ஊழியரான அவரது அவதூறுப் பிரச்சாரம் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு மதத்தையும் கொச்சைப்படுத்த இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே, அரசு ஊழியரான உமா சங்கரை பணிநீக்கம் செய்ய வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[9]. ஆதாரமில்லாத, கற்பனையாகவும் சித்தரித்து பேசி வருகிறார் என்றும் புகாரில் கூறியுள்ளனர்[10]. அவர் பேசிய பேச்சுகள் அடங்கிய சிடியும் புகாருடன் சமர்ப்பிக்கப்பட்டது[11].

சாத்தான், ஏசு, கிருஸ்துவம்

சாத்தான், ஏசு, கிருஸ்துவம்

குரான், இஸ்லாம்,. முஸ்லிம்களை விமர்சிக்கும் பேச்சு[12]: இணைதளத்தில் முஸ்லிம்கள் பதிவு செய்துள்ள இந்த வீடியோவிலுள்ளவற்றைப் படித்து எழுதிகிறேன். உமாசங்கர் பேசியுள்ளது இதுதான். “எக்ஸ்பிலனேசன் (விளக்கம்) கொடுக்க முடியாது….இப்ப பாத்திங்கன்னா…முகமதியர்களுக்கு அப்படியில்லை…அவர்களுக்கு ஒரு புஸ்தகம் இருக்கு.., குரான்னு ஒரு புஸ்தகம் இருக்கு……, குரான்னு புஸ்தகத்தல கொஞ்சம் தான் இருக்கு. அப்புறம் அந்த “ஹிதித், ஜிடித்”ன்னு ஒண்ணு வச்சிருக்காங்க அது குரானிலிருந்து எடுத்து மத்தவங்க சொன்னதா எழுத வச்சிருக்காங்க. அதையும் பாத்துகிறாங்க. அதுக்கும் முக்கியத்தும் கொடுக்கிறாங்க. அப்போ ஒரு புஸ்தகத்திலிருந்து என்கிறது அங்கு கிடையாது. யார்-யாரோ யாட் (சேர்ப்பது) பண்ணலாம். பத்வான்னு போட்டு யாட் பண்ணிக்கலாம். யார்ன்னுலானும் போட்டு யாட் பண்ணிக்கலாம். ஆது அவங்க வேதத்திலே யாருன்னாலும் ….யார் வேணுமனலும் கூட்டி….கூட்டிக்கலாம். எதுன்னாலும் கூட்டிக்கலாம்னு அப்படி வச்சிருக்காக, அல்லேலூயா. அல்லேலூயா….அவங்கலோடது கொஞ்சம்…”

அவங்க வந்து கிருஸ்துவத்திலிருந்து ஒரு பகுதியாகத்தான் பிரிஞ்சி போனாங்க:. …உமாசங்கர் தொடர்கிறார், “அவங்க வேத ஆகமத்த கொஞ்சம் தியானம் பண்ணா நீங்க…நீங்க வந்து ….சகோதர சகோதரிகளே ஆண்டவ அனுமதித்தா கொஞ்சம் பார்க்கலாம்.. அவங்களோட வேதத்த நான் கொஞ்சம் பார்த்துக்கிட்டுக்கே. அத வந்து அனெலிஸ் பண்ணிக் கிட்டிருக்கே… அனெலிஸ் பண்ணிக் கிட்டிருக்கே…எந்த அளவுக்கு இந்த வேதாகமத்திலிருந்து ஒரு பகுதிய எடுத்து அவங்க…அவங்க வந்து  வஞ்சிக்கப்படராங்க என்றத நீங்க பாத்தின்கன்னா…..நீங்க டெயிலி அழுவீங்க.. …..நீங்க டெயிலி அவங்களுக்காக அழுவீங்க.. ரொம்ப பரிதவிக்கப்பட்டவங்க… நம்முடைய முகமதிய சகோதரர்கள், சகோதரிகள்… அவங்க வந்து கிருஸ்துவத்திலிருந்து ஒரு பகுதியாகத்தான் பிரிஞ்சி போனாங்க. கிருஸ்துவத்திலிருந்து ஒரு பகுதி தான்..ஏசு பிறந்த பிறகு, ஏசு பெரமேறி போன பிறகு 550 வருடங்களுக்குப் பிறகு, 550 வருடங்களுக்குப் பிறகு வந்தது இஸ்லாம்.. அல்லேலூயா…550 வருடங்களுக்குப் பிறகு வந்தது இஸ்லாம். அது வந்து ஒரு நூதனமான கிருத்துவ மதமாக வந்தது…(இருமல்)லிப்ப பாருங்க..தொண்ட அடக்கிது பாத்திங்களா?

பிசாசு தடுத்தது, தேவதூதர்கள் பிசாசை அடித்துத் துரத்தியது: …உமாசங்கர் தொடர்கிறார், “இது வந்து…இந்த சத்தியம் ..இந்த சத்தியம்…தண்ணி குடிக்கக் கூடாது..தண்ணி குடிக்கிறதுங்றது பிசாசோட வேல… உங்களுக்கு இப்ப கரெக்ட யூசர் மேனுவல் மாதிரி  கிடைக்குது, நான் சொன்னது நடக்குது, கண்ல நீர் வர்ர வரைக்கும் தொண்ட அடைக்கிது ..இந்த மேட்டர எடுத்திருக்கே…..இஸ்லாமியர்கள் எப்படி வஞ்சிக்கப்படராங்க… …..இஸ்லாமியர்கள் எப்படி வஞ்சிக்கப்படராங்கன்றது கிருஸ்துவர்களுக்கு நிறைய பேர்களுக்குத் தெரியாது..…இப்போம் இத குறித்துச் சொல்றதுக்கு ஆண்டவர் என் வாய தொறந்து ..அந்த பரிசுத்த ஆவியானவர்…… வாய திறந்தவொன்னே என்ன ஆச்சு? சீ…ஒட்டென எங்கிருந்தோ தொண்ட என்னாச்சுது ….அடச்சிது என்ன வெதர் கன்டிசன் எல்லா சேந்தா …யார்ம் மீன் எல்லாம் பொறிக்கல்லே… வேறொன்னும் பண்ணல…எனக்கு மட்டும் தொண்டல்ல கடக்.கடக்ன்னு பண்றதுக்கு ….யாரும் பண்ணலா பட் தொண்டல இருமல் உடனே வந்து ..பேச முடியாத அளவுக்கு கொஞ்சம்..அன்னிக்கு ரொம்ப அதிகம்..இன்னிக்கு 50%க்கு அந்த அளவுக்கு வந்தாச்சு..ஆனா நீங் நான் விசுவாசிக்கிற ஏசு…வானத்தையும், மபூமியையும் படைத்த சர்வ வல்லவர்…. அல்லேலூயா….அவர் பரிசுத்த ஆவியானராக நம்ம மத்தியில இங்கே இருக்கிறாரு….(கைதட்டல்)… அவர் பரிசுத்த ஆவியானவரு அங்கு இருக்கிறாரு…பிசாசானவ ஒரு கணைய போட்டு சொல்லக்குடாதுன்னா (கைதட்டல்)….உடனே ரி.என்போர்ஸ்பென்ட் .. உடனே பரலோக தூதர்கள் கூடுதலா வந்து நின்னுட்டாங்க…முடிச்சாச்சு..உடனே அடுத்த செகண்ட் …நான் இரும தொடங்கன உடனே பலமான தேவதூதர்ௐஅல் வந்து நின்னு ஒரு அடி…அடிச்சு அந்த பிசாச அனுப்பிச்சிட்டாங்க…….நௌ கிளியர்….தண்ணி குடிக்கல..குடிக்க வேண்டிய தேவையில்ல….. குடிக்க வேண்டிய தேவையில்ல.… தூதர்கள் ரி.என்போர்ஸ்பென்ட் வந்தாச்சு..எல்லார்க்கும் கிளியரா தெரியணும்.

மழையை நிறுத்தினார்: கடந்த வாரம்…ரெண்டு வாரத்துக்கு முன்னால வரும்பொழுது மழை பெய்ஞ்சது..மைக் எடுத்தவொன்ன வரக்கும் வானம் நார்மலா இருந்தது…கிளியரா…ஸ்டார்ஸ் எல்லாம்.. பார்த்திக்கிட்டிருந்தோ…நா..என்கிட்டே மைக் கொடுத்த உடன பட..படன்னும் பொழிய தொவங்கிப் போச்சி என்ன செய்ஞ்சி தெரியுமா? ஒரு ஜெபம்..அபிசேகம்.ஆராதனை…ஸ்ட்ரைட் எவே…..அபிசேக ஆராதனை…மழை பெய்ஞ்சிக்கிட்டெ இருக்கு..ஒருத்தரும் மூவ் ஆகல…பிறகு எல்லோரும் வலது கைய உயர்த்தி…மழைய நிறுத்துங்க…ஏசுவின் நாமத்திலே நிறுத்துங்க…ன்னு உடனே, எல்லோரும் வலது கைய உயர்த்தி…ஏசுவின் நாமத்தில கட்டளா கொடுக்கிறோ…நில் அப்படின்னு…கட்டள கொடுத்த உடன மழை நின்னுடுத்து…அல்லேலுயா…மார்த்தாண்டத்திலும் நடந்தது….”

© வேதபிரகாஷ்

07-02-2015

[1] http://news.vikatan.com/article.php?module=news&aid=38244

[2] விகடன் செய்திகள், இஸ்லாம் குறித்து அவதூறு பிரசாரம்: உமாசங்கர் மீது நடவடிக்கைக் கோரி மனு!,  Posted Date : 17:57 (05/02/2015); Last  updated : 18:27 (05/02/2015)

[3] Firstpost.com, IAS Evangelist threatens to move court after Tamil Nadu bans him from holding religious meets, by FP Staff  Jan 28, 2015 18:14 IST

[4] The Tamil Nadu govertnmen has  barred a bureaucrat from preaching Christianity in the state because such activities were likely to cause communal disharmony and disturb public order. But the IAS officer, Uma Shankar has cried foul saying he has been targeted by the BJP and RSS for exposing corruption. He has also alleged that the state government’s move is unconstitutional.

http://www.firstpost.com/india/ias-evangelist-threatens-move-court-tamil-nadu-bans-holding-religious-meets-2068597.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, இஸ்லாம் பற்றி விமர்சனம்.. ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கரை டிஸ்மிஸ் செய்ய முஸ்லிம் அமைப்பு மனு!, Posted by: Veera Kumar, Published: Friday, February 6, 2015, 11:40 [IST]

[6] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-muslim-organisation-condemt-ias-officer-uma-shankar-220446.html

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-muslim-organisation-condemt-ias-officer-uma-shankar-220446.html

[8] தி இந்து, உமாசங்கரை பணிநீக்கம் செய்ய வேண்டும்: தலைமைச் செயலரிடம் தவ்ஹீத் ஜமாஅத் மனு, Published: February 6, 2015 11:06 IST; Updated: February 6, 2015 11:06 IST

[9]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/article6864502.ece

[10] The Tamil Nadu Thowheedh Jamaath on Thursday demanded the sacking of IAS officer Uma Shankar for indulging in activities that tend to create a wedge between religious communities. It also accused him of hurting the sentiments of the Muslim community by denigrating the Holy Quran during his preachings.

In a petition addressed to the State Home Secretary, the Jamaath said Muslims revered Prophet Mohammed and the Holy Quran the most and that Umashankar, has been reeling out imaginary information about the Holy Quran and belittling Prophet Mohammed.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Sack-Uma-Shankar-Thowheedh-Jamaath/2015/02/06/article2654848.ece

[11] Enclosing a copy of the CD containing speeches of Uma Shankar, the Jamaath said that his actions were not in tune with the Constitution. Recently, the State Chief Secretary had sent a notice to Umashankar asking him not to participate in ‘preaching meetings’.

New Indian Express, Sack Uma Shankar: Thowheedh Jamaath, By Express News Service Published: 06th February 2015 06:00 AM Last Updated: 06th February 2015 02:53 AM

[12] https://www.facebook.com/video/video.php?v=838605646229111

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: