இந்து தலித் உமாசங்கரின் கிருத்துவ பிரச்சாரம், சட்டநுணுக்கங்கள், இந்திய செக்யூலரிஸத்தின் கேலிக்கூத்துகள் (2)

இந்து தலித் உமாசங்கரின் கிருத்துவ பிரச்சாரம், சட்டநுணுக்கங்கள், இந்திய செக்யூலரிஸத்தின் கேலிக்கூத்துகள் (2)

 

அங்கீகாரம் இல்லாத சபைகளில் அவர் பிரசாரம் செய்வதாக கேள்விப்படுகிறேன்: இப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் கூறியதன் பின்னணி என்ன என்பதனை பார்க்கும்போது, கிருத்துவ கோஷ்டிகளுக்குள் இருக்கும் போட்டி வெளிப்படுகிறது. இப்பொழுது அமெரிக்க மிஷனரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதனால், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்காக, பல கிருத்துவப் பிரிவுகள் முயன்று வருகின்றன. கிருவத்துவர்களுக்குள்ளேயே மதம் மாற்றி செய்து, இந்தியாவில் அதிக அளவில் கிருத்துவர்கள் இருப்பது போல காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். அதாவது, ஒருவர் கத்தோலிக்க சபையில் இருப்பது போலவும் ஆவணங்கள் கூறும், ஆனால், அதே நேரத்தில் இன்னொரு சபையின் ரிஜிஸ்டரிலும் அவர் பெயர் இருக்கும். இதைத்தான் தேவசகாயம் இப்படி குறிப்பிட்டார் போலும், “கிறிஸ்தவ மதத்துக்கு கெட்ட பெயர் வர காரணமே, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வணிகப்பொருளாக மாற்றிவிட்டனர் என்பதுதான். கிறிஸ்து அப்படி செய்வார், இப்படி செய்வார் என்றெல்லாம் கூறி அதை வணிகமாக்கிவிடுகின்றனர்”!

வியாபாரம் செய்யும் கிருத்துவ மிஷனரிகளை கர்த்தரோ, ஏசுவோ காப்பாற்ற முடியவில்லை, நீதிமன்றங்கள் தாம் காப்பாற்றுகின்றன: கிருத்துவ மிஷனரிகள் லாபத்திற்காக வியாபாரம் செய்வட் ஹும் பல வழக்குகளில் வெளிப்பட்டுள்ளது. எவாஞ்செலிகல் சபை பைபிள்களை 25% லாபம் வைத்து விற்கின்றது. அதில் வரும் லாபத்தை மறுபடியும் மதம் பரப்ப உபயோகிக்கிறது என்று ஒரு தீர்ப்பில் தெரியவருகிறது[1]. இருப்பினும் அதிகாரம், பணப்பிரிப்பு முதலியவற்றில் வேறுபாடு வரும்பொழுது, நீதிமன்றங்களுக்குத் தான் செல்கின்றன[2]. அமெரிக்கா, கனடா நாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, தனது வருமானத்தை சரியாகக் காட்டவில்லை என்ற வழக்கும் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. விசாகப்பட்டின நீதிமன்றம், “கிருத்துவமதத்தைப் பரப்புவதற்காக இவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதற்காக வருமானத்துறை தனது கண்களை மூடிக்கொள்ள முடியாது, வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்ரது எவ்வளவு, செலவழித்ததசேவ்வளவு போன்ற கணக்கு-வழக்குகளை வைத்திருக்க வேண்டும்”, என்று தீர்ப்பில் குறிப்பிட்டது[3]. இதுப்போல ஆயிரக்கணக்கான நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன, இருப்பினும் உதாரணத்திற்காக இவை கொடுக்கப்படுகின்றன. வியாபாரம் செய்யும் கிருத்துவ மிஷனரிகளை கர்த்தரோ, ஏசுவோ காப்பாற்ற முடியவில்லை, நீதிமன்றங்கள் தாம் காப்பாற்றுகின்றன என்பதனைத்தான் இவை எடுத்துக் காட்டுகின்றன.

அரசு நடவடிக்கை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:- உமா சங்கர் தனது பெயரை மாற்றிக்கொள்ளாமல், அந்த பெயரோடு அரசு பதவியில் இருந்துகொண்டு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் கேள்விக்குரியதாக இருக்கிறது. தன்னிடம் வந்தால் வியாதி குணமாகிறது, பார்வை வருகிறது என்றெல்லாம் கூறுகிறார். அப்படி என்றால், கண் ஆஸ்பத்திரிகளை இனி மூடிவிடலாமா? இதைத்தான் மோசடி மதமாற்றம் என்று கூறுகிறோம். இதைத்தான் அதிகார துஷ்பிரயோகம் என்று குறிப்பிடுகிறோம். இதற்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தலைமைச் செயலாளர் வி.சுகவனேஸ்வர்: மதம் தொடர்பான பரப்புரைகளில் ஈடுபடுவது குறித்து அரசுப் பணி நடத்தை விதிகளில் ஏதேனும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். அந்த விதிகளில் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தங்கள் கொண்டு வரப்படும். அதுபோன்ற திருத்தங்களில் மத ரீதியான பரப்புரைகளைச் செய்ய வழி செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாக ஒரு ஐ.ஏ.எஸ். போன்ற அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற பரப்புரைகளைச் செய்யாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

முன்னாள் ..எஸ். அதிகாரி முருகன்: உமாசங்கர், இந்து மதத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருந்து அரசுப் பணிக்கு தேர்வானவர். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கிறிஸ்தவ மதப் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போதே புகார்கள் எழுப்பப்பட்டன. அவர் பணியில் இருந்து ராஜிநாமா செய்து விட்டு அதைச் செய்யலாம். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற நிலையில் அவர் பரப்புரையில் ஈடுபடும் போது அவரை அதிகாரி என்ற நிலையில் மதித்து அவர் கூறும் கருத்துகளைக் கேட்பர். இது குற்றமாகும். எனவே, இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை தாமதமானது.

முன்னாள் ..எஸ். அதிகாரி சிவகாமி: ஒருவரது நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதுதொடர்பாக, அரசு நடத்தை விதிகளில் ஏதும் குறிப்பிடவில்லை. இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு யார் எந்த மதங்களை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அவர்களது நம்பிக்கைகளைப் பகிரலாம். அரசு அலுவலகங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்களில் பலர் கோப்புகளைத் தொடங்கும் போது ஓம், ஊ எனப் போட்டு எழுதுகிறார்கள். பல அதிகாரிகள் கோயிலுக்குச் செல்லும் போது அவர்களுக்கு தனி மரியாதை தரப்படுவதன் மூலம், அவர்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டிக் கொள்கிறார்கள். ஒரு அதிகாரி தனது அலுவலக நேரத்திலோ, தனி ஊதியத்துக்காகவோ ஒரு பரப்புரையில் ஈடுபட்டால் அதுகுற்றமாகும். அலுவலகப் பணிக்குக் குறுக்கிடாமல் செய்யும் பிற வேலைகளைத் தடுப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் .வி.கே.எஸ். இளங்கேவன்: ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் இருக்கும் ஒருவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மதப் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியானது அல்ல. அதனை ஏற்க முடியாது. அரசு அதிகாரிகளுக்கான விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் ஒருவர் மதப் பிரசாரத்தில் ஈடுபடுவது அவரது உரிமை. அதில் எந்தத் தவறும் இல்லை.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்: ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட எந்தவொரு அரசு ஊழியரும் தான் விரும்புகிற கடவுளை வழிபடுவதற்கு உரிமை உள்ளது. தெய்வ நம்பிக்கை இல்லை என்று சொல்லவும் உரிமை உண்டு. ஆனால், பணியில் இருக்கும் போதே பகிரங்கமாக மதப் பிரசாரம் செய்யவும், மதமாற்றத்துக்குக் காரணமாக இருப்பதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அழகல்ல. உமாசங்கரின் செயல்பாடு குறித்து ஏற்கெனவே கருத்துக்களும், கண்டனங்களும், புகார்களும் வந்தபோது அரசு மௌனம் சாதித்து வந்தது. அவரும் எதைப்பற்றியும் கவலையே படாமல் தனது பிரசாரத்தைத் தொடர்ந்து வந்தார். தாமதமான முடிவு என்றாலும் உமாசங்கர் மீதான அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், அவர் பிரசாரத்தை நிறுத்திக் கொள்வாரா? அல்லது ராஜிநாமா செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடர்வாரா என்பது சந்தேகமாக உள்ளது.

இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்:  இந்திய அரசமைப்புச் சட்டப்படி, எந்தவொரு தனிமனிதனுக்கும் ஒரு மதத்தை வழிபடவோ, அந்த மதம் குறித்து பரப்புரை செய்யவோ உரிமை உள்ளது. ஆனால், எந்த நிலையிலும் அது சட்டம்-ஒழுங்கை பாதிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. ஒரு அரசாங்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அவர்களே ஒரு பிரச்னையாக இருந்துவிட்டால் அது நல்ல மரபுகளை உருவாக்காது. மாநில அரசைப் பொருத்த வரையில், அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தடையை மத விரோத, தலித் விரோத, அரசு அலுவலர் விரோத நடவடிக்கை எனக் கூறி விட முடியாது. தமிழகத்தில் பல நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கூட்டங்களுக்குக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்துவது என்பதே தவிர, அதில் வேறு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.

வேதபிரகாஷ்

28-01-2015

[1]  The society purchases Bibles and other Christian literature at a discount and sells them at the price marked in the books, thereby earning a profit up to 25 per cent on the whole. But the profit is utilised for the propagation of the objects of the society and dissemination of Christian literature.

Madras High Court- Commissioner Of Commercial … vs Evangelical Literature Service on 30 March, 1973, Equivalent citations: 1974 33 STC 325 Mad; http://indiankanoon.org/doc/718702/

[2] Kerala High Court- Rev. C.S. Joseph And Ors. vs T.J. Thomas And Ors. on 26 August, 1986; Equivalent citations: 1987 62 CompCas 504 Ker; http://indiankanoon.org/doc/1362306/

[3]  The facts of the case in brief are that the assessee is an evangelist and has been carrying on the vocation of preaching Christianity on behalf of the Church of Christ abroad i.e., United States of America and Canada, and has been receiving money from them with an intention for propagation of Christianity in India…………….This particular assessee as an individual might be receiving salary for the work done by him sincerely on propagation of Christianity but that does not mean that the Department will close its eyes to the accounts maintained by him for the funds received from aboard and expenditure thereof for the purpose as indicated earlier.

Income Tax Appellate Tribunal – Vizag – Jashua Gootam vs Assistant Commissioner Of Income … on 11 April, 2002; Equivalent citations: (2003) 80 TTJ Visakha 658; Bench: P Majhi, N Dash; http://indiankanoon.org/doc/497732/

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: