இந்து தலித் உமாசங்கரின் கிருத்துவ பிரச்சாரம், சட்டநுணுக்கங்கள், இந்திய செக்யூலரிஸத்தின் கேலிக்கூத்துகள் (1)

இந்து தலித் உமாசங்கரின் கிருத்துவ பிரச்சாரம், சட்டநுணுக்கங்கள், இந்திய செக்யூலரிஸத்தின் கேலிக்கூத்துகள் (1)

உத்திரகாண்டில் ஏற்பட்ட இயற்கை அழிவு, பாவிகளான இந்துக்களின் மீதான, கடவுளின் சீற்றம்தான்: இந்துவாக இருந்த உமாசங்கர் 2008ல், கிருத்துவராக மதம் மாறினாராம். இவர் ஐ.ஏ.எஸ்.பிரிவில் இருப்பதனால், இடவொதிக்கீடு விசயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது, ஏனெனில், “குரூப்.1”ற்குப் பிறகு அத்தகைய இடவொதிக்கீடு சலுகை இல்லை. இருப்பினும், இவர் மற்றவர்களைத் தூண்டும் வகையில் மதப்பிரச்சாரம் செய்து வந்தார். ஏசு வந்து தன்னிடம் பேசினார், ஆணையிட்டார் என்றெல்லாம் பேசிவந்தார். குறிப்பாக “உத்திரகாண்டில் ஏற்பட்ட இயற்கை அழிவு, பாவிகளான இந்துக்களின் மீதான, கடவுளின் சீற்றம்தான்”, என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது[1]. இதனால், இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தன.  மேலும், அவர் பேசும் விதம் முதலிய, ஒரு அடிப்படைவாத கிருத்துவர் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. இணைதளங்களில் அவரது பேச்சுகள் அடங்கிய பல வீடியோக்களிலிருந்து அதனை அறிந்து கொள்ளலாம். இயற்கை சீற்றங்கள் கிருத்துவ நாடுகளிலேயே ஏற்படுகின்றன, அங்கெல்லாம் ஏன் ஏசு தடுக்கவில்லையே ஏன் என்று கேட்கலாம்.

பிரசங்கங்களை ரத்து செய்துவிட்டதாக ..எஸ். அதிகாரி உமாசங்கர் கூறியுள்ளார்[2]: தலைமைச் செயலாளர் உத்தரவு மத பிரசாரம் செய்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு தடை விதித்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ‘‘நீங்கள் மத பிரசாரம் செய்த இடத்தில், போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் அளவுக்கு அமைதி குலைவு ஏற்பட்டது. எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 24, 25, 26-ந் தேதிகளில் பிரசாரம் செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அங்கு பிரசாரம் அல்லது பிரசங்கத்தை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடுகிறேன்’’ என்று கூறியிருந்தார்[3]. அரசின் உத்தரவை ஏற்று பிரசங்கங்களை ரத்து செய்துவிட்டதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கூறியுள்ளார். ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள பிரச்சினைகளுக்குப் பெயர்போன இவர், ஒருவேளை இன்னொரு பிரசினையில் சிக்கக் கூடாது என்று ஜகா வாங்குகிறாரா என்றால், இல்லை என்று தான் அவரது மற்ற பேச்சுகள் எடுத்துக் காட்டுகின்றன.

சட்டப்படி நடவடிக்கை என்றதால் அடங்கிவிட்டாரா?: மீறினால், அவர் செய்யும் காரியங்களினால், சமூகத்தினரிடையே உள்ள ஒற்ருமை பாதிக்கப்படும் மற்றும் பொது ஒழுங்குமுறைக்கு பங்கம் ஏற்படும், என்பதனால் அனைத்திந்திய சேவை மற்றும் நடத்தை விதிகள் [Rule 3 (I) of the All India Services (conduct) Rules, 1968] மற்றும் அனைத்திந்திய சேவை (நடத்தை மற்றும் மேல்முறையீடு) விதிகள் [All India Services (Discipline & Appeal) Rules, 1969] கீழ் உகந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்[4]. மேலும் ஏற்கெனவே, போலீஸார் இரண்டு வழக்குகள் அவர் மீது பதிவு செய்துள்ளனர்[5]. உமாசங்கர் செட்யூல்ட் காஸ்ட் / பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்து, ஆனால், தான் கிருத்துவ மதத்தினைப் பின்பற்றுவதாக வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறார். இவர் ஐ.ஏ.எஸ்.பிரிவில் இருப்பதனால், இடவொதிக்கீடு விசயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆனால், தனது அதிகாரப்பதவியினால் மக்களை திசைத்திருப்பவும், மதமாற்றத்திற்கு இழுக்கவும் முடியும் என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஏனெனில், அதற்கேற்ற முறையில், ஏசு தன்னிடம் கட்டளையிட்டுள்ளார், உலகம் அழியப்போகிறது, மக்களைக் காப்பாற்றச் சொல்லியுள்ளார் என்றெல்லாம் பிரசங்கத்தில் சொல்லி வருகிறார்.

இயேசு பிறப்பித்துள்ள கட்டளை, இந்த அரசு பிறப்பித்துள்ள எல்லா உத்தரவுகளுக்கும் மேலானது: பிரசங்கங்கள் ரத்து தமிழக அரசால் பிரசங்கம் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து உமா சங்கர் கூறிய கருத்து வருமாறு: “இறைப்பணி குறித்து இயேசு பிறப்பித்துள்ள கட்டளை, இந்த அரசு பிறப்பித்துள்ள எல்லா உத்தரவுகளுக்கும் மேலானது. எனவே இறைப்பணியை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், இப்போதைக்கு அரசு உத்தரவுக்கு மரியாதை கொடுத்து எனது பிரசங்கங்களை ரத்து செய்திருக்கிறேன். அதுவும் அரசு உத்தரவுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று இயேசு கூறியுள்ள கட்டளையின் அடிப்படையில் இதை செய்துள்ளேன். வரும் மாதங்களில் எனக்கு கூட்டங்களில் பேச அழைப்புகள் உள்ளன. போலி குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட நபர் என்ற முறையில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் எங்கு செல்கிறேன், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மேல் நான் என்ன செய்கிறேன் என்பதெல்லாம் எனக்கு இருக்கும் தனிப்பட்ட உரிமை”. அரசியல் நிர்ணயசட்டத்தைக் கூட மதிக்கமாட்டேன் என்பது போல அவரது பேச்சுள்ளதைக் கவனிக்கலாம்..

 

எனது உயிரை போக்கும் சூழ்நிலை வந்தபோது என்னைவா மகனேஎன்று அழைத்தவர் இயேசு:. உமாசங்கர் தொடர்கிறார், “எனது உயிரை போக்கும் சூழ்நிலை வந்தபோது என்னைவா மகனேஎன்று அழைத்தவர் இயேசு. எனவே அவரை நான் எனது கடவுளாக ஏற்றுக்கொண்டேன். என்னை யாரும் மதம் மாற்றவில்லை. எனவே மத மாற்றம் என்ற குற்றச்சாட்டு போலியானதுதான். மத பிரசாரம் செய்யவில்லை நான் மதத்தை பற்றி பிரசாரம் செய்யவில்லை. எனக்கு மறுவாழ்வு கொடுத்த இயேசு பற்றித்தான் பேசுகிறேன். அப்படி நான் கூறும்போது மக்கள் பலருக்கு வியாதிகள் குணமாகின்றன. எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா இழுப்பு நோய் மேஜிக் போல குணமாகின்றன. பிள்ளையற்றவர்களுக்கு பிள்ளை கிடைக்கிறது. இதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. கோஆப்டெக்சில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கண் தெரியாமல் இருந்த ஒருவருக்கு ஜெபித்த போது உடனே அது குணமாகிவிட்டது. நான் மத மாற்றம் செய்யவில்லை, மத பிரசாரமும் செய்யவில்லை. நான் இயேசுவை பற்றி மட்டுமே பேசுகிறேன். 99.99 சதவீதம் கிறிஸ்தவர்கள் மத்தியில்தான் நான் பேசுகிறேன். நான் இனிமேல் இந்துக்கள், இஸ்லாமியர்களிடம் பேசுவேன். அதுவும் எனது உரிமை. ஒருவர்கூட கேள்வி கேட்க முடியாது”, இவ்வாறு அவர் கூறினார்[6].  இத்தகைய நடவடிக்கைக்குப் பின்னால் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்[7].

அதிகாரியாக இருக்கும்போதுஇந்த பிரச்சினை பற்றி கேட்டதற்கு ஓய்வு பெற்ற ..எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியதாவது: தேவசகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறுவதாவது, “நானும் கிறிஸ்தவர்தான். அரசாங்க அதிகாரியாக இருந்து மதத்தை பரப்புவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நான் இறைப்பணி செய்கிறேன் என்று உமாசங்கர் கூறுகிறார். அதுவும் தவறு. அரசு அதிகாரி என்பவர் 365 நாட்களும் அரசு அதிகாரிதான். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ..எஸ். அதிகார அந்தஸ்தை விட்டு வெளியே வந்துவிடுவதில்லை. அந்த நாட்களிலும் அவர் ..எஸ். அதிகாரிதான்.  அங்கீகாரம் இல்லாத சபைகளில் அவர் பிரசாரம் செய்வதாக கேள்விப்படுகிறேன். மத மாற்றத்துக்கும், மத போதகத்துக்கும் பரப்புரை செய்கிறார் என்று கூறுகின்றனர். அப்படி செய்தால் அது தவறு. ..எஸ். பதவி, அதிகாரத்தில் இருந்துகொண்டு ஒரு மதத்தை பரப்புவது மிகவும் தவறு. போதகராகி வேண்டுமானால் மதத்தை பரப்பலாம். அப்போது உங்களை யாரும் தடுக்க முடியாது. கிறிஸ்தவ மதத்துக்கு கெட்ட பெயர் வர காரணமே, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வணிகப்பொருளாக மாற்றிவிட்டனர் என்பதுதான். கிறிஸ்து அப்படி செய்வார், இப்படி செய்வார் என்றெல்லாம் கூறி அதை வணிகமாக்கிவிடுகின்றனர். இது தவறு. அப்படி கிறிஸ்து கூறவில்லை”, இவ்வாறு தேவசகாயம் கூறினார்.

வேதபிரகாஷ்

28-01-2015

[1]  One of his allegations that Uttarakhand floods and disasters were “a sign of wrath of gods on Hindu sinners” had kicked up a storm.

http://ibnlive.in.com/news/a-quick-guide-to-preacher-ias-officer-umashankar-case/525306-3.html

[2] தினத்தந்தி, ‘‘அரசின் உத்தரவை ஏற்று பிரசங்கங்களை ரத்து செய்துவிட்டேன்’’; ..எஸ். அதிகாரி உமாசங்கர் தகவல், பதிவு செய்த நாள்: புதன், ஜனவரி 28,2015, 3:10 AM IST; மாற்றம் செய்த நாள்:புதன், ஜனவரி 28,2015, 3:10 AM IST

[3] http://m.ibnlive.com/news/india/a-quick-guide-to-preacher-ias-officer-umashankar-case/525306-3.html

[4] http://www.hindustantimes.com/india-news/tamil-nadu-asks-ias-officer-to-stop-preaching-gets-hindu-group-s-support/article1-1311080.aspx

[5]  “which are likely to cause communal disharmony and disturbance to public order.”  Umashankar cancelled his tour following the top official’s direction that he should not “indulge in such activities which are unbecoming of a member of the service”. He was also warned of “appropriate action” under relevant provisions of All India Services (conduct) Rules, besides being chided for “indulging in activities” on January 16 in Kanyakumari “which created disturbance to public order” and resulted in police registering two cases.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/hindu-munnani-welcomes-tamil-nadu-government-directive-to-ias-officer/articleshow/46028307.cms

[6] http://www.dailythanthi.com/News/State/2015/01/28031015/IAS-officer-umasankar-to-stop-preaching.vpf

[7]  Known as an honest officer, Umashankar suspected Union minister and Kanyakumari MP Pon Radhakrishnan was behind the order. “Not only that the police have succumbed to the pressure of BJP and other Hindu groups, including Hindu Munnani, now the government also has taken a decision to stop my religious activities, in which they have no business to interfere. The government direction is unconstitutional,” he said, suspecting that there must be pressure from the Centre that forced the state government to issue such a direction. Despite repeated efforts, Radhakrishnan could not be reached for comments.

http://indianexpress.com/article/india/india-others/ias-officer-cites-article-25-as-tn-govt-stops-him-from-prayer-meets/

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: