பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் இடம் மாற்றம் செய்யப்பட்டார்: பாதிக்கப்பட்ட மாணவியர் போராட்டம் வாபஸ்!

பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் இடம் மாற்றம் செய்யப்பட்டார்: பாதிக்கப்பட்ட மாணவியர் போராட்டம் வாபஸ்!

Coimbatore diocese- Fr Joseph Felix- the black sheep hiding

Coimbatore diocese- Fr Joseph Felix- the black sheep hiding

பாலியல் தொந்தரவு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் இடம் மாற்றம் செய்யப்பட்டார்: பாதிக்கப்பட்ட மாணவியர் போராட்டம் வாபஸ்!கொடுத்த பாதிரியார் இடம் மாற்றம் செய்யப்பட்டார்: ஜோசப் பெலிக்ஸ் “செக்ஸ்-டார்ச்சர்” கொடுத்ததால், நாங்கள் அவரது கொடுமைகளால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம் என்றெல்லாம் புகார் கூறிய மாணவியர்[1] இப்பொழுது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். ஏனெனில், அந்த செக்ஸ்-பாதிரியாரை இடம் மாற்றம் செய்துள்ளோம் என்று செயின்ட் பீடர்ஸ் காலேஜ் ஆப் எஜுகேஷன் (St Peters College of Education), தனது சுற்றறிக்கை மூலம் அறிவித்ததாம்[2]. அக்கல்லூரியின் செயலாளராக இருந்த அவர்[3] இப்பொழுது இடம் மாற்றம் செய்யப்பட்டதால், புகார் பைசலாகி விட்டது, வழக்கில்லாமல் விசயம் முடித்து வைக்கப்பட்டது. ஆக, அம்மாணவியர் கூறியதெல்லாம் சரியாகி விட்டது போலும்! இம்மாணவியர்களுள் கிருத்துவர்கள் கணிசமாக இருக்கலாம். பொதுவாக, கிருத்துவர்கள் கிருத்துவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறார்கள். இதைபற்றிய முந்தைய பதிவை, இங்கு காணவும்[4]. மாணவர்கள் அளிக்கும் புகார்-விசயங்களை இங்கு காணலாம்[5] (நியூஸ் செனல்-7: குறிப்பு, அச்செனலின் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டப் புகைப்படங்கள் இப்பதிவில் உபயோகிக்கப்படுகின்றன.).

அச்செனலின் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டப் புகைப்படங்கள் இப்பதிவில் உபயோகிக்கப்படுகின்றன

அச்செனலின் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டப் புகைப்படங்கள் இப்பதிவில் உபயோகிக்கப்படுகின்றன

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு தண்டனை, கடவுளிடம் மன்னிப்பு கேட்பதுதான்: நீதித்துறைக் கூட கிருத்துவர்களுக்கு தண்டனை அளிக்காமல், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள் என்று தீர்ப்பளித்துள்ளதும் நடந்துள்ளது[6]. சென்னை உயர்நீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், எச்.ஏ.மார்டின் என்ற பிஷப்பிற்கு [H A Martin, bishop, Tamil Evangelical Lutheran Church] “கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்று அறிவுருத்தி தண்டமோ, சிறைவாசமோ இல்லாமல் விடப்பட்டது வேடிக்கையான விசயமாக இருந்தது[7]. இதேபோல, மற்ற குருமார்களுக்கு, மடாதிபதிகளுக்கு நீதிமன்றங்கள் அத்தகைய சலுகைகளைக் கொடுக்கவில்லை. இதேபோலத்தான், இந்த பாதிரியும் விடுவிக்கப் பட்டிருக்கிறார். அத்போல, இவ்வாறு “செக்ஸ்-டார்ச்சர்” செய்தால் கூட, இடமாற்றம் தான், வேறெந்த தண்டனையும் கிடையாது!

மாணவர்கள் சோசப் பெலிக்ஸ் மீது புகார்

மாணவர்கள் சோசப் பெலிக்ஸ் மீது புகார் – சொல்ல முடியாத விசயங்கள் உள்ளன என்கிறார்!

செக்ஸ் வீடியோக்கள் காட்டினார் என்பதும் தெரியவருகிறது[8]: முன்னர் வந்துள்ள குறைந்தபட்ச செய்திகளில், ஆபாச சைகைகளைக் காட்டினார், படங்களைக் காட்டினார் என்றுதான் இருந்தது. அதாவது, இங்கு “ஆபாச படங்கள்” என்பதில் வீடியோக்களும் அடக்கம் என்று பொருள் கொள்ளவேண்டும் போலிருக்கிறது[9]. இப்பொழுது கூட, தமிழ்-ஊடகங்கள் இதனை அமுக்கித்தான் வாசிக்கின்றன. பி.டி.ஐ செய்தி வெளியிட்டு[10], ஆங்கில நாளிதழான, “பிசினஸ் ஸ்டேன்டர்டு”[11] வெளியிட்டப் பிறகுக் கூட, தமிழ்-ஊடகங்கள் மௌனம் சாதித்து வருகின்றன. ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைக் [obscene pictures and videos] காண்பித்தார் என்றால், அவற்றை ஏன் பறிமுதல் செய்யவில்லை. நித்தியானந்தா விசயத்தில் காட்டிய வேகத்தில் ஒரு சதவீதத்தைக் கூட இங்கு காட்டப் படவில்லை என்று தெரிகிறது. போலீஸாரும் ஒத்துழைக்கின்றனரா? மேலும், அவர் இடமாற்றம் செய்யப் பட்ட செய்தியினையும் போலீஸார் தான் தெர்விக்கின்றனர்[12]. அந்த அளவிற்கு கவனமாக அவர்கள் வேலை செய்வது ஏன் என்று புரியவில்லை. இந்திய செக்யூலரிஸம், இங்கெல்லாம் கூட வேலை செய்கிறது போலும்!

மாணவர்கள் ஜோசப் பெலிக்ஸ் மீது புகார்

மாணவர்கள் ஜோசப் பெலிக்ஸ் மீது புகார்

போத்தனூரில் உள்ள, புனித சூசையப்பர் தேவாலயத்தின், பாதிரியார் ஜோசப் பெலிக்ஸ்[13]: கோவை நகரில், பாதிரியாரை கண்டித்து, சர்ச் சபையினர், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை போத்தனூரில் உள்ள, புனித சூசையப்பர் தேவாலயத்தின், பாதிரியார் ஜோசப் பெலிக்ஸ். இவர், “காணிக்கை தொகை வசூலிப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்; திருமணம் மற்றும் இறப்பு திருப்பலிக்கு, நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட, கூடுதலாக பணம் செலுத்த வற்புறுத்துகிறார்’ என்பது உள்ளிட்ட, பல குற்றச்சாட்டுகளைக் கூறி, சபை மக்கள், டிசம்பர் 2013 மூன்றாவது வாரத்தில், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், 22-12-2013 அன்று காலை, ஆராதனை முடிந்தவுடன், தேவாலய வளாகத்தினுள், சபையினர் கூடினர். பாதிரியார் ஜோசப் பெலிக்சை, வெளியே செல்லும்படி கூறி, கோஷம் எழுப்பினர்[14]. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது[15]. தகவலறிந்து வந்த போலீசார், பாதிரியாரை பத்திரமாக மீட்டு, வெளியே அனுப்பினர். இதையடுத்து, குற்றம் சாட்டியவர்கள் தரப்பில், ஒரு குழுவினர், போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் சென்று, போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின், “குற்றச்சாட்டுக்கு உள்ளான பாதிரியாரை, ஆராதனை நடத்த அனுமதிக்க கூடாது; பிரச்னை முடியும் வரை, உதவி பாதிரியார் பிச்சைமுத்து, ஆராதனையை நடத்த வேண்டும்’ என, போலீசார் அறிவுறுத்தினர். இந்தத் தகவல் அறிந்ததும், தேவாலய வளாகத்தில் கூடியிருந்தவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே, குற்றச்சாட்டுக்கு உள்ளான பாதிரியார், ஜோசப் பெலிக்ஸ், உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்[16]. ஆக, இந்த ஜோசப் பெலிக்ஸ், ஏற்கெனவே, இதேபோல பலதடவை மாட்டிக் கொண்டு, இடமாற்றம் செய்யப்பட்டு, தப்பித்துக் கொண்டுள்ளார், போலும்!

திகைப்பில் மாணவிகள்

திகைப்பில் மாணவிகள்

மாணவியர் பயத்தில், திகைப்பில் உள்ளனர் என்பது தெரிகிறது.

திகைப்பில் பயத்தில் மாணவிகள்

திகைப்பில் பயத்தில் மாணவிகள்

வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர், ஆனால், அவர்கள் வெளியேறினார்களா, வெளியேற்றப் பட்டார்களா என்று தெரியவில்லை.

வகுப்புகளைப் புறகணித்த மாணவ-மாணவியர்

வகுப்புகளைப் புறகணித்த மாணவ-மாணவியர்

தங்கள் பொருட்களுடன் மாணவிகள் செல்வதை காணமுடிகின்றது.

செய்வதறியாது திகைக்கும் மாணவிகள்

செய்வதறியாது திகைக்கும் மாணவிகள்

30க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனராம்.

பைகளுடன் வெளியேறும் மாணவியர்

பைகளுடன் வெளியேறும் மாணவியர்

வெளியேறினரா, வெளியேற்றப்பட்டனரா?

பைகளுடன் வெளியேறும் மாணவியர்.2

பைகளுடன் வெளியேறும் மாணவியர்.2

வெளியேறும் மாணவியர்!

பைகளுடன் வெளியேறும் மாணவியர்.3

பைகளுடன் வெளியேறும் மாணவியர்.3

திரும்பி வருவார்களா?

நியூஸ் செனல் 7 விவரம்.தமிழரசி

நியூஸ் செனல் 7 விவரம்.தமிழரசி

செய்தியைத் தொகுத்தளித்த தமிழரசி!

கொலைகள், கற்பழிப்புகள் என்ன நடந்தாலும், கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்களுக்கு விஷேச சலுகைகள் தான் போலும்!: வருடாவருடம், இப்பாதிரியார் இப்படி வேவேறு இடங்களில் வேலை செய்து, ஏதாவது ஒரு பிரச்சினை, குற்றம், பாலிய தொந்தரவு என்றெல்லாம் செய்து கொண்டே இருப்பார். ஆனால், இடமாற்றம் மட்டும் செய்து கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் பொலிருக்கிறது. கர்நாடகாவில், கத்தோலிக்க மதத்திற்கு எதிராக செயல்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் விலக்கி வைக்கப்படவேண்டும் என்று போராடியுள்ளார்கள்[17]. கே.ஜே.தாம்ஸ் என்ற பாதிரி கொலையில், இரண்டு பாதிரிகளே சம்பந்தப்பட்டிருந்தது, அங்கு பெருத்த உள்-பூசலை ஏற்படுத்தியது. இறையில் சட்டங்களிலேயே, அதற்கான சரத்துகள் இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்று இந்திய கத்தோலிக்க பிஷப்பு ஒன்றியத்திற்கு [the Catholic Bishops’ Conference of India (CBCI)] புகாரும் அளித்தனர்[18]. ஆனால், தமிழகத்தில் இப்படி தொடர்ந்து பல கத்தோலிக்க பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் குற்றங்களில் ஈடுபட்டாலும், அவர்களைத் தப்பிக்க வைக்கப் படுகின்றனர். கொலைகளே நடந்தாலும், அவை, மறைக்கப்பட்டு, பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டு, உண்மைகளையும் சேர்த்துப் புதைத்து விடுகின்றனர். ஒவ்வொன்றிலும் பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என அவர்களே சம்பந்தப்பட்டிருப்பதால், பரஸ்பர நலன்களுக்காக, காட்டிக் கொடுக்காமல், அல்லது அத்துடன் மறைத்துவிடலாம் என்ற போக்கில் செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிகிறது. ஆக, செக்யூலரிஸ இந்தியாவில், நீதிமன்றங்கள், போலீஸார், சட்டங்களை அமூல்படுத்துவோர் என எல்லோருமே பாரபட்சமாக நடந்துகொள்கின்றனர் என்று தெரிகிறது. பிறகு “சட்டத்தின் முன் எல்லோரும் சமம்” என்று ஏன் தேவையில்லாமல், சொல்லிக் கொண்டும், பிரச்சாரம் செய்துகொண்டும் இருக்கவேண்டும்?

© வேதபிரகாஷ்

10-01-2015

[1] http://www.maalaimalar.com/2015/01/08142801/teacher-training-college-girls.html

[2] The septuagenarian secretary of a private teachers training institute near here has been transferred, following protests by students seeking his removal alleging sexual harassment, police said. The management of St Peters College of Education (B Ed training) today announced the transfer of the secretary, Joseph Felix (70), in circular sent to students today, police said.  About 80 girl students of the institute had staged a dharna in front of the college at Karumathampatti yesterday, alleging that Felix had showed the girls obscene pictures and videos.  A new person will be appointed for the post, the circular said.

[3] Rev.Fr.Joseph Felix, Correspondent,TTI,  Karumathampatty, 9443324704

[4] வேதபிரகாஷ், அஸ்தம்பட்டியை அடுத்து கருமத்தம்பட்டியில் இன்னொரு கத்தோலிக்க கிருத்துவ காமக்கருப்பாடு, மந்தையில் உள்ள மற்ற பெட்டையாடுகளை வேட்டையாடி வருகின்றதாம்!, https://christianityindia.wordpress.com/2015/01/10/joseph-felix-sexual-harassment-of-the-girl-students-karumathampatti/

[5] https://www.youtube.com/watch?v=ksml18K9CJg

[6] http://timesofindia.indiatimes.com/city/chennai/Madras-high-courts-punishment-to-bishop-Seek-pardon-from-God/articleshow/31230962.cms

[7] A Subramani,   Madras high court’s punishment to bishop: Seek pardon from God , TNN | Mar 1, 2014, 10.30PM IST

[8] .  About 80 girl students of the institute had staged a dharna in front of the college at Karumathampatti yesterday, alleging that Felix had showed the girls obscene pictures and videos.

[9] Business Standard,  Secretary transferred following students’ protest, Coimbatore, January 9, 2015 Last Updated at 21:05 IST

[10] Press Trust of India,  Secretary transferred following students’ protest, Coimbatore, January 9, 2015 Last Updated at 20:56 IST

[11] http://www.business-standard.com/article/pti-stories/secretary-transferred-following-students-protest-115010901202_1.html

[12] http://www.ptinews.com/news/5558520_Secretary-transferred-following-students–protest.html

[13] தினமலர், கோவையில் பாதிரியாரைமுற்றுகையிட்டு போராட்டம், டிசம்பர்.23, 2013, 02:42

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=879349&Print=1

[15] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=266256&cat=504

[16] http://result.dinamalar.in/news_detail.asp?id=879349

[17] In a first major offensive against the group of priests coming under the banner of the Karnataka Kannada Catholic Yajakara Balaga (Karnataka Catholic Priests’ Association) and their supporters, who have been creating problems in the Archdiocese of Bangalore since the last several years by raising the bogey of Kannada language in liturgy, a large group of Catholics held a demonstration in front of the Archbishop’s House on Saturday and later submitted a memorandum to the Archbishop seeking excommunication of the priests involved in ”un-Christian activities.”

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=228662

[18] The FKCCA [Federation of Konkani Catholic Associations], which has also forwarded a similar memorandum to the President of the Catholic Bishops’ Conference of India (CBCI), the highest decision-making body of all Bishops in India, at its office in New Delhi, said all the priests involved in anti-Catholic and un-Christian conduct and behaviour must be Excommunicated from the Catholic Church, under the provisions of the Canon Law forthwith, as they are guilty of willfully violating and deliberately flouting their solemn religious vows of obedience and loyalty to the Ecclesial superiors. ”In addition, some of the above-mentioned priests are guilty of violating the Sixth and Ninth Commandments that forbid killing or bearing false witness, which are consequently sufficient grounds for their automatic excommunication,” the memorandum said.

குறிச்சொற்கள்: , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: