அஸ்தம்பட்டியை அடுத்து கருமத்தம்பட்டியில் இன்னொரு கத்தோலிக்க கிருத்துவ காமக்கருப்பாடு, மந்தையில் உள்ள மற்ற பெட்டையாடுகளை வேட்டையாடி வருகின்றதாம்!

அஸ்தம்பட்டியை அடுத்து கருமத்தம்பட்டியில் இன்னொரு கத்தோலிக்க கிருத்துவ காமக்கருப்பாடு, மந்தையில் உள்ள மற்ற பெட்டையாடுகளை வேட்டையாடி வருகின்றதாம்!

St Peters college of Education, Karuthampatty, Coimbatore

St Peters college of Education, Karuthampatty, Coimbatore

கருமத்தம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அருகே அதன் சார்பு நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி / கல்வியியல் கல்லூரி: கோவை அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி மாணவிகளிடம், அக்கல்லூரியின் செயலாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை(08-01-2015) அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்[1]. கருமத்தம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அருகே அதன் சார்பு நிறுவனமாக ஆசிரியர் பயிற்சி / கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள், அக்கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இங்கு 90–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள், என்கிறது இன்னொரு இணைதளம்[2]. இங்கு 100 மாணவிகளும் 15 மாணவர்களும் படித்து வருகின்றனர், என்கிறது இன்னுமொரு இணைதளம்[3]. இக்கல்லூரியின் செயலாளராக உள்ளவர் ஜோசப் பெலிக்ஸ் (70).  ஏதோ ஒருவழியாக, ஜோசப் பெலிக்ஸ் என்று பெயரைக் குறிப்பிட்டாலும், அந்த கல்லூரியின் பெயரைக் குறிப்பிடாமல், ஊடகங்கள் அழகாக அமுக்கி வாசித்துள்ளன. மாணவி-மாணவிகளின் எண்ணிக்கையும் 30-70-100 என்று குறிப்பிட்டுள்ளனர்!

கோயம்புத்தூர் ஜோசப் பெலிக்ஸ் செக்ஸ் 8-1-2015

கோயம்புத்தூர் ஜோசப் பெலிக்ஸ் செக்ஸ் 8-1-2015

குருவாரத்தின் அன்று நடந்த குருமார்களை எதிர்த்து நடந்த ஆர்பாட்டம்: கல்லூரி மாணவி-மாணவர்கள் 08-01-2015 அன்று காலை திடீரென்று கல்லூரி வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 80 மாணவிகள் “காலவரையற்ற தர்ணாவில்” ஈடுபட்டனர் என்று ஒரு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது[4].

 1. கல்லூரியின் செயலாளர் எங்களிடம் தகாத வார்த்தைகளில் பேசுகிறார்.
 2. அரை நிர்வாணமாக நின்று சைகை மூலம் பேசுவதோடு ஆபாச படங்களை காட்டி தகாத முறையில் நடக்க முயல்கிறார்[5].
 3. மேலும் சுற்றுலா சென்ற இடத்தில் 4 மாணவிகளை தவிக்க விட்டு விட்டு வந்து விட்டனர்.
 4. இரவு நேரத்தில் தனது அறையை சுத்தப்படுத்த வரும்படி மாணவிகளை அழைக்கிறார்.
 5. அப்படி செல்லும் மாணவிகளிடம் ஆபாச படங்களை காட்டி தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறார்.
 6. இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்.
 7. இதற்கு ஆசிரியர்கள் 2 பேர் உடந்தையாக உள்ளனர், ….
 8. அவரது கொடுமைகளால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம் என்று கூறினர்[6].

இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வரும் கல்லூரியின் செயலாளரை உடனே மாற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது என்று கோஷம் எழுப்பினர்[7]. 5முதல் 8 வரையில் உள்ளவற்றை என்று “தமிழ் முரசு” என்ற இணைதளம் கூறுகிறது[8]. குரு என்றால் ஆசிரியர், அதனால் தான் போலும், குருவாரத்தின் அன்று, அதாவது வியாழக்கிழமை அன்று அம்மாணவியர் தைரியமாக வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர் போலும்!

இரவு நேரத்தில் தனது அறையை சுத்தப்படுத்த வரும்படி மாணவிகளை அழைக்கிறார்.

இரவு நேரத்தில் தனது அறையை சுத்தப்படுத்த வரும்படி மாணவிகளை அழைக்கிறார்.

போராட்டம் நிறுத்தப்பட்டதா, இல்லையா?: இந்நிலையில், மாணவிகளுக்கு, செயலாளர் ஜோசப் பெலிக்ஸ் பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி, மாணவர்கள், பெற்றோர்கள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து வந்த போலீஸார், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், செயலாளர் ஜோசப் பெலிக்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். என்று தினமணி கூறியுள்ளது[9]. ஆனால், மக்கள் குரல், “தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி முன்பு முற்றுகை போராடத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் ‘செயலாளரை மாற்றும் வரை ஓயமாட்டோம்’ என்றனர். அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்கள் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று செயலாளரை இன்னும் 3 நாட்களில் மாற்றிவிடுகிறோம் என்றனர். ஆனால் நிர்வாகம் கூறிய சமாதானத்தை மாணவிகள் ஏற்கவில்லை. உடனே மாற்ற வேண்டும் என்றனர். எனவே தொடர்ந்து மாணவிகளிடம் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது[10]. கல்லூரியின் செயலாளர் செக்ஸ் டார்ச்சர் தருவதாக கூறி மாணவிகள் நடத்திய முற்றுகை போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதிரிகளின் பாலியல் தொந்தரவு

பாதிரிகளின் பாலியல் தொந்தரவு

யார் இந்த ஜோசப் பெலிக்ஸ்?: இணைதள விவரங்களின்படி[11] ரெவ்.பாதர். ஜோசப் பெலிக்ஸ் கோயம்புத்தூர் கத்தோலிக்க மடாலயத்து அதிகாரிகளுள் ஒருவர். செயின்ட் பீடர் கல்வியல் கல்லூரியின் தாளாளர். இங்குள்ள சர்ச்சுகளுக்கு, மடாலங்களுக்கு, கல்லூரிகளுக்கு நிலம் வாங்கியதற்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு காரணமானவர். இருப்பினும், பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வருகிறார், உல்லாசமாக கல்லூரி இளம்பெண்களுடன் சுற்றுலா சென்று வருகிறார் என்று பார்க்கும் போது, கிருத்துவர்களுக்கேயுரிய காமநோயாக இது இருக்கும் போலிருக்கிறது. அனாதை இல்லங்களில் அவர்களை வளர்ப்பது, சேவை செய்ய வைத்து, காம இச்சையைப் பூர்த்தி செய்து கொள்வது, படிப்பதற்கு உதவுவது, கல்வியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசைக் காட்டி, படுக்க வைப்பது, போன்ற விசயங்கள் மிகவும் சாதாரணமான விசயங்களாகி விட்டன. ஊட்டி பாதிரியார்களின் காம லீலைகள், திருச்சி பாதிரியின் கற்பழிப்புகள், லயோலா கல்லூரி செக்ஸ்-டார்ச்சர் என்று ஏராளமாக வந்திருப்பது, இவர்களது மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. இவர்களிடம் பணம், அதிகாரம், செல்வாக்கு இருப்பதினால், எல்லா விவகாரங்களையும் அமுக்கி விடுகின்றனர். ஒருவேளை, இவ்வாறு செய்திதாள்களில் வந்தாலும், மற்ற ஊடகங்களில் வராதவாறு பார்த்துக் கொள்கின்றனர். அப்படியே வந்தாலும், போலீஸ்-நீதிமன்றங்களுக்கு செல்லாதவாறு கவனித்துக் கொள்கின்றனர், அப்படியே சென்று விட்டாலும், நீதிமன்றங்களுக்கு வெளியே சமரசம் செய்து கொண்டுவழக்குகளை மூடிவிடுகின்றனர். பிறகு அதே பிஷப்புகள், பாதிரியார்கள், பாஸ்டர்கள் மறுபடியும் பதிவிகளில் இருந்து கொண்டு, தங்களது வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கிருத்துவ செக்ஸ் சாதாரணமாகிவிட்டது

கிருத்துவ செக்ஸ் சாதாரணமாகிவிட்டது

புனித பேதுரு கல்வியியல் கல்லூரியில் நடந்த குடிமையியல் பயிற்சி முகாம்: கருமத்தம்பட்டி புனித பேதுரு கல்வியியல் கல்லூரியில், குடிமையியல் பயிற்சி முகாம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து மாணவியரின் பேரணி நடந்தது. கல்லூரி வளாகத்தில் துவங்கி, சோமனூர் பவர்ஹவுசில் நிறைவுற்ற பேரணியை கருமத்தம்பட்டி வார்டு கவுன்சிலர் யுவராஜ் துவக்கிவைத்தார். கல்லூரி செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார். இதில், மாணவ, மாணவியர், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவியர், புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, புனித இன்னாசியார் நடுநிலைப் பள்ளியில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன[12]. இப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து மாணவியரின் பேரணி நடந்த கல்லூரியில், ஜோசப் பெலிக்ஸ் செல்ஸ் லீலைகளில் ஈடுபட்டு வருவது முரண்பாடா, வியப்பா அல்லது கிருத்துவ இறையிலின் ஏற்புடை மகத்துவமா?

© வேதபிரகாஷ்

09-01-2015

[1] தினமணி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: மாணவர்கள் போராட்டம், By dn, சூலூர், First Published : 09 January 2015 03:21 AM IST

[2]http://makkalkural.net/news/blog/2015/01/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/

[3] http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=68621

[4] Demanding immediate removal of the secretary of a private teachers training institute near here for alleged sexual torture to students, eighty girls began an indefinite dharna in front of the institute today.

http://www.business-standard.com/article/pti-stories/girl-students-of-pvt-teachers-institute-demand-sacking-of-secy-115010801328_1.html

[5] மாலைமலர், கோவையில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை: மாணவர்கள் முற்றுகை போராட்டம், மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, ஜனவரி 08, 2:27 PM IST; பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஜனவரி 08, 2:28 PM IST

[6] http://www.maalaimalar.com/2015/01/08142801/teacher-training-college-girls.html

[7] மக்கள் குரல், கோவையில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை: மாணவர்கள் போராட்டம், By editor On 8 Jan, 2015 At 10:21 AM

[8] தமிழ் முரசு, ஆபாச படம் காட்டி டார்ச்சர் : கல்லூரி செயலரை கண்டித்து மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டம்: கோவையில் பரபரப்பு, 08-01-2015.

[9]http://www.dinamani.com/tamilnadu/2015/01/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/article2610794.ece

[10] Press Trust of India,  Girl students of pvt teachers institute demand sacking of Secy, Coimbatore , January 8, 2015 Last Updated at 23:15 IST

[11] St. Peters College of Education, Karumathampatti,  641 659; தொலைபேசிகள்: 98422 20904, 0421-2334949, 0421-2760238; Correspondent : Rev. Fr. Joseph Felix- http://www.coimbatorediocese.org/education.php

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=812426&Print=1

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “அஸ்தம்பட்டியை அடுத்து கருமத்தம்பட்டியில் இன்னொரு கத்தோலிக்க கிருத்துவ காமக்கருப்பாடு, மந்தையில் உள்ள மற்ற பெட்டையாடுகளை வேட்டையாடி வருகின்றதாம்!”

 1. பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் இடம் மாற்றம் செய்யப்பட்டார்: பாதிக்கப்பட்ட மாணவியர் போர Says:

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: