இன்னுமொரு கிருத்துவ மதபோதர் கற்பழிப்பு, பலதார மணம் போன்ற விவகாரங்களில் சிக்கியுள்ளார், ஆனால், அது செக்யூலரிஸமாக்கப்பட்டதால், அமைதியான செய்தியாகிவிட்டது!

இன்னுமொரு கிருத்துவ மதபோதர் கற்பழிப்பு, பலதார மணம் போன்ற விவகாரங்களில் சிக்கியுள்ளார், ஆனால், அது செக்யூலரிஸமாக்கப்பட்டதால், அமைதியான செய்தியாகிவிட்டது!

அல்போன்ஸ் ஜஸ்டின் பெங்கல்ராஜ் - மரிய ரேகா

அல்போன்ஸ் ஜஸ்டின் பெங்கல்ராஜ் – மரிய ரேகா

அமெரிக்க விஞ்ஞானி என ஏமாற்றி 3 பெண்களை திருமணம் செய்தவரை, ராமேசுவரம் மகளிர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[1]. கன்னியாகுமரி மாவட்டம், இணையம் புத்தன்துறையை/ இரவிப்புத்தன்துறையைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் என்பவரின் மகன் ஜஸ்டின் பெங்கல்ராஜ் (37). இவர் அமெரிக்க விஞ்ஞானி எனவும், ரூ.5 லட்சம் சம்பளம் பெறுவதாகவும் கூறி, தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த தேவதாஸ் மகள் மரியரேகா (24) என்ற பெண்ணை கடந்த 17.1.2014-இல், திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டேனியல் கட்சன் என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜஸ்டினின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி மரியரேகா, அவரது செல்போன் எண்கள் மற்றும் குறுந்தகவல்கள் ஆகியவற்றை கண்காணித்துள்ளார். இணையதளத்தில் மணப்பெண் வேண்டி பென்கர்ராஜ் விளம்பரம் செய்திருப்பதை மரியரேகா கண்டுபிடித்தார்[2].  மேலும் அவரது செல்போனுக்கு வந்த மர்ம எண்ணை தொடர்பு கொண்டு பேசியதில், கன்னியாகுமரியை சேர்ந்த வனிதா (24) என்பவருடன் பேசி வந்தது தெரிந்தது. வனிதா தன்னை பென்கர்ராஜின் முதல் மனைவி என்று அறிமுகம் செய்துகொண்டார்.

ராமேஸ்வரம் பாஸ்டர் இரண்டு திருமணம் 25-12-2014

ராமேஸ்வரம் பாஸ்டர் இரண்டு திருமணம் 25-12-2014

முதல் மனைவி அனிதா கொடுத்த தகவல்: பென்கர்ராஜ் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், இது குறித்து போலீசில் புகார் செய்ய முயன்றபோது, அவருடன் அந்தரங்கமாக இருந்த போட்டோவை நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் வனிதா தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மரியரேகா, இதுகுறித்து கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் வீட்டிலிருந்து வெளியேறிய பென்கர்ராஜ் திரும்பி வரவில்லை. பின்பு மீண்டும் வனிதாவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பென்கர்ராஜ் கேரளாவை சேர்ந்த ஜெனி (24) என்பவரை ஏமாற்றி ஒன்றரை ஆண்டுக்கு முன் 2வது திருமணம் செய்ததாக மற்றொரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெனி போலீசில் புகார் செய்ததாகவும், கேரளா போலீசார் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்ததாகவும், பின்பு ஜாமீனில் வெளியே வந்த பென்கர்ராஜ் தலைமறைவானதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் பாஸ்டர் இரண்டு திருமணம் 25-12-2014

ராமேஸ்வரம் பாஸ்டர் இரண்டு திருமணம் 25-12-2014

சென்னையில் ஜெனிபா என்ற இன்னொரு மனைவி: சென்னையில் ஜெனீபா என்ற மற்றொரு மனைவியும் இருப்பதாக தெரிய வந்தது. ஜெனீபாவுக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், ஜெனீபாவின் தங்கை லலிதா என்ற பீலாவுடனும் ஜஸ்டின் தகாத உறவு வைத்திருப்பதும் தெரிய வந்தது. இத்தனை விவரங்களை மரிய ரேகா கண்டு பிடித்துள்ளார். இதனையடுத்து மரியரேகா, ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனனிடம் புகார் அளித்தார்[3].

Maria Rehka, the second wife complained on Justin DM

Maria Rehka, the second wife complained on Justin DM

புகாரில் மரிய ரேகா கூறியிருப்பதாவது[4]: ராமேஸ்வரம் அருகே உள்ள கிறிஸ்தவ சபைக்கு, பிரார்த்தனைக்கு சென்ற என்னிடம், மத போதகராக ஜஸ்டின் அறிமுகம் ஆனார். முன்னதாக, வத்தலக்குண்டுவை சேர்ந்த மெகினியா என்ற திருமண புரோக்கர், பவுலோஸ் ஆகியோர் ஜெஸ்டின் பென்கர்ராஜை எனக்கு அறிமுகம் செய்தனர். அப்போது லண்டனில் வேலை பார்த்து ரூ.5 லட்சம் சம்பளம் பெறுவதாகக்கூறிய அவர், தன்னை பாஸ்டர் என்று கூறி ஏழைப் பெண் என்பதால் என்னை திருமணம் செய்கிறேன் என்றார்[5]. அவர், தன்னை ஒரு விஞ்ஞானி என்றும், லண்டனில் வேலை செய்வதாகவும், ஏழை பெண்ணை திருமணம் செய்வதுதான் நோக்கம் என்றும் கூறினார். கிறிஸ்தவ சபை நிர்வாகிகள் பவுலோஸ், சரோஜம் ஏற்பாட்டில் எனக்கும், ஜஸ்டினுக்கும் 17.1.14 ல் திருமணம் நடந்தது. இதையடுத்து அவருக்கு திருமணசெலவுக்காக ரூ.1 லட்சம் கொடுத்தோம். பின்னர் அவர் வெளிநாட்டுக்கு செல்ல ரூ.1 லட்சம் கடன் பெற்றுக் கொடுத்தோம். அப்போது அவர் ஜெஸ்டின் கிரேசி என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுக்க முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்து அவரது செல்போனை கண்காணித்தேன்[6].  “ஏழை பெண்ணை திருமணம் செய்வதுதான் நோக்கம்” எனும்போது, மரியா ரேகாவிடம் எப்படி ரூ.2 லட்சம் பெற்றார்?

Justin another pastor cheats women DM

Justin another pastor cheats women DM

பல பெண்களை ஏமாற்றியுள்ள ஜஸ்டின்: அதன்பிறகு தான், இதேபோல் ஆசை வார்த்தை கூறி பல பெண்களை ஜஸ்டின் ஏமாற்றி இருப்பது தெரிந்தது. ஏற்கனவே கன்னியாகுமரியில் அனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து, அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. பின் கேரளா, பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த ஜான் மகள் ஜெனி (25), என்பவரை திருமண ஆசை காட்டி, கற்பழித்த வழக்கில் கேரளா போலீசார் ஜஸ்டினை கைது செய்தனர். பின்னர், ஜாமினில் வந்து, என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதன்பின், திருமணம் தகவல் மையம் மூலம் சென்னையில் ஜெனிபர் என்பவரை மூன்றாவது திருமணம் செய்ய இருந்ததை கண்டு பிடித்தேன். இதுகுறித்து கேட்ட போது, இல்லை என மறுத்துவிட்டு கன்னியாகுமரி சென்று விட்டார். ஜஸ்டின் வெளிநாடு செல்ல என் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.2.75 லட்சம் வாங்கி ஏமாற்றி, தற்போது கொலை மிரட்டல் விடுத்து வருகிறார், என புகாரில் தெரிவித்துள்ளார். எஸ்.பி., உத்தரவின்பேரில், ‘மத போதகர்’ போர்வையில் பெண்களின் வாழ்கையில் விளையாடிய ஜஸ்டினை, ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் கைது செய்து விசாரிக்கிறார்[7]. மேலும் மரியரேகாவே, ஜஸ்டினிடம் தொலைபேசியில் அன்பாக பேசி, அவரை வரவழைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை ஏமாற்றி 3வது திருமணம் செய்த பென்கர்ராஜை போலீசில் பிடித்து கொடுக்கவேண்டும் என மரியரேகா முடிவு செய்தார். `கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும். குழந்தையை பார்க்க வாருங்கள்’ என்று நைசாக பேசி, பென்கர்ராஜை தங்கச்சிமடத்திற்கு வரவழைத்தார்.

ராமேஸ்வரம் தேவசபை நிர்வாகி பவுலோஸ், அவரது மனைவி சரோஜம்

ராமேஸ்வரம் தேவசபை நிர்வாகி பவுலோஸ், அவரது மனைவி சரோஜம்

ஜஸ்டின் நல்ல மாப்பிள்ளை என்று தேவசபை நிர்வாகிகள் எவ்வாறு கூறினர்?: மரியரேகா கூறுகையில், `எனது திருமணம் குறித்து முதலில் வத்தலக்குண்டை சேர்ந்த பாஸ்டர் நெகமியா எனது தந்தையிடம் பேசினார். இதையடுத்து பென்கர்ராஜ் பேசினார். இவர் குறித்து மெய்யம்புளியிலுள்ள தேவசபை நிர்வாகிகள் பவுலோஸ், சரோஜம் ஆகியோரிடம் விசாரிக்க கூறியபோது அவர்களும் நல்ல விதமாகவே கூறினார்[8].  போதகர் ஜஸ்டின் குறித்த விவரம் அறியாமல், மரிய ரேகாவுக்கு அவரை திருமணம் செய்து வைத்த வத்தலக்குண்டைச் சேர்ந்த நேகேமியா, ராமேஸ்வரம் தேவசபை நிர்வாகி பவுலோஸ், அவரது மனைவி சரோஜம் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[9]. இதை அறிந்த பவுலோஸ், மனைவியுடன் தலைமறைவானார்[10]. இவர்களை பிடிக்க, இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பவுலோசும், அவரது மனைவி சரோஜமும் தேவசபைக்கு வரும் பிரமுகர்களின் வீட்டிலோ, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியிலோ மறைந்திருக்க வாய்ப்புள்ளதாக தனிப்படை போலீசார் கருதுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள வீடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

புதிர்களில், மர்மங்களில் நடக்கும் பலதார திருமணங்களும், சர்ச்சுகளின் ஒத்துழைப்பும்: கிருத்துவத் திருமணங்கள் பதிவு செய்யப் படுகின்றன. பிறக்கும் குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் முதலிய சடங்குகள் நடக்கும் போதும், பதி செய்யப்படுகின்றன. பிறகு எப்படி ஜஸ்டின் தொடர்ந்து பல பெண்களை மணந்து கொள்கிறான் என்று தெரியவில்லை. கிருத்துவ சர்ச்சுகள் எப்படி தொடர்ந்து இத்தகைய பலதார மணங்களை நேரிடையாகவோ, மறைமுகமகவோ அனுமதிக்கின்றன அல்லது ஊக்குவிக்கின்றன என்பதும் புதிராக உள்ளது. மேலும், பெண்கள் எப்படி இவ்வாறு சுலபமாக ஏமாறுகின்றனர் என்றும் தெரியவில்லை. மதபோதகர், பாஸ்டர் போன்ற நிலை கிருத்துவர்களுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட ஏதுவாக இருக்கின்றது. இதனையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது, பல வழக்குகளில் தெரியவருகிறது. மேலும் சர்ச் / தேவசபை அதிகாரிகள் இக்காரியங்கள் ஈடுபடுவது, சம்பந்தப் படுவதும் ஆச்சரியமாகவும், புதிராகவும் இருக்கின்றது. அவர்களும் இதனை மறைமுகமாக ஊக்குவிக்கின்றனரா என்பது ஆராயத்தக்கது.

செக்யூலரிஸ பாலியல் தொந்தரவுகள், விவகாரங்கள் மற்றும் வழக்குகள்: வழக்கம் போல இவற்றை எந்த தமிழச்சிகளும் எதிர்க்கவில்லை, பெண்ணிய வீராங்கனைகள் கண்டிக்கவில்லை; ஊடகங்கள் கற்பழிப்பு, மோசடி என்றெல்லாம் ஊளையிடவில்லை; ஏதோ ஒரு செய்தியாக வெளியிட்டு அமைதியாக உள்ளனர். மற்ற விசயங்களுக்கு கூப்பாடு போடு, குதித்து, ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தும் கூட்டங்கள், தொடர்ந்து நடந்து வரும் இச்செயல்களை ஆபாசமாக, அருவருப்பாக, பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் அநியாயங்களாக கருதவில்லை போலும். இவையெல்லாம் செக்யூலரிஸ பாலியல் தொந்தரவுகள், விவகாரங்கள் மற்றும் வழக்குகள், என்று கருதப்பட்டு மறைக்கப்படும், மறக்கப்படும் போலும்!

© வேதபிரகாஷ்

27-12-2014

[1] தினமணி, அமெரிக்க விஞ்ஞானி என ஏமாற்றி 3 பெண்களை திருமணம் செய்தவர் கைது, By dn, ராமநாதபுரம், First Published : 26 December 2014 01:36 AM IST.

[2] http://nellaionline.net/view/32_82669/20141226103610.html

[3]http://www.dinamani.com/tamilnadu/2014/12/26/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/article2588645.ece

[4] தினமலர், பெண்களை ஏமாற்றி திருமணம்:ராமேஸ்வரத்தில் மதபோதகர் கைது, சென்னை, 25-12-2014-23:16.

[5] http://www.maalaimalar.com/2014/12/26100605/2nd-away-hidden-the-first-marr.html

[6] மாலைமலர், முதல் திருமணத்தை மறைத்து விட்டு 2–வது திருமணம் செய்த மத போதகர் கைது, மாற்றம் செய்த நாள் : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 10:05 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 10:06 AM IST

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1146612

[8] http://nellaionline.net/view/32_82669/20141226103610.html

[9] தினமலர், பெண்களை ஏமாற்றிய மதபோதகருக்கு திருமணம் செய்து வைத்தசர்ச்நிர்வாகி: மனைவியுடன் தலைமறைவு, 26-12-2014-23:12.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1147302

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: