பிரியாணி சாப்பிடக் கொடுத்து, சுடிதார் வாங்கிக் கொடுத்து, விபச்சாரிகளாக்குவது, அவ்வளவு சுலபமா?

பிரியாணி சாப்பிடக் கொடுத்து, சுடிதார் வாங்கிக் கொடுத்து, விபச்சாரிகளாக்குவது, அவ்வளவு சுலபமா?

 

கடலூர் பாதிரி அருள்தாஸ் - அற்புதர் இயேசு விசுவாச ஜெபவீடு

கடலூர் பாதிரி அருள்தாஸ் – அற்புதர் இயேசு விசுவாச ஜெபவீடு

தமிழகத்தில் விபச்சாரம் பெருகி வரும் நிலை: வில்லங்கப் பாதிரியாரின் விபரீத விளையாட்டால் விலைக்கு விற்கப்பட்டு விபசாரிகளான சிறுமிகளிடம் விசாரித்தபோது இது விபரீதமான தொழில் என்பது எமக்குத் தெரியாது என்று சர்வசாதாரணமாகச் சொன்னார்கள்! இளம் சிறு­மி­களைக் குறிவைத்து வேட்­டயாடி விலைக்கு விற்ற பாதிரியார் உட்­பட முதலில் ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர், பிறகு இது 22 ஆகியுள்ளது. இவர்­களின் நெட்வேர்க் தமி­ழகம் முழு­வதும் பரவியிருக்­கலாம் என்றும் கடலூர் போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். இது குறித்து தீவிர விசா­ரணை நடந்து வருகிறது[1]. (ஆகஸ்டில் வெளியூரில் இருந்ததால், உடனடியாக இதைப் பற்றி அறிய முடியவில்லை. இருப்பினும், இது வழக்கமான பிரச்சினை என்பதால் பிளாக்கில் சேர்த்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால், சேர்த்துக் கொள்கிறேன்).

 

கடலூர் பாதிரி அருள்தாஸ் கைது

கடலூர் பாதிரி அருள்தாஸ் கைது

வயசான பாதிரி, பிரிந்து வாழும் மனைவி, மோகம் தணிக்க மதயுக்தி: கடலூர் மாவட்டம் திட்­டக்­குடி பெரு­மாள்­கோவில் தெருவில் வசிப்­பவர் அருள்தாஸ். பாதிரியாரான இவ­ருக்குத் திரு­ம­ண­மாகி ஒரு மகன், மகள் உள்­ளனர். திரு­ம­ண­மான மகள் சென்­னையில் கண­வ­ருடன் வசித்­து­வ­ரு­கிறார். அறு­பது வய­தா­னாலும் மைனர் போல வாழ ஆசைப்­பட்டதால், அதே பகு­தியைச் சேர்ந்த தன­லட்­சுமி என்ற லட்­சு­மி­யுடன் பழக்கம் ஏற்­பட்­டது. கண­வரை இழந்த அவர் பெட்டிக்கடை நடத்தி வரு­கிறார். இவர்­களின் தொடர்பு தெரி­ய­வந்­ததும் அருள்­தாஸின் மனைவி அவ­ருடன் சண்டை போட்­டு­விட்டு சென்னையில் இருக்கும் மகள் வீட்­டுக்கு மகனுடன் சென்று­விட்டார். இது அவ­ருக்கு வசதி­யா­கிப்­போ­னது. தன­லட்­சு­மியின் உத­வி­யுடன் புதுசு புது­சாக அனு­ப­விக்க விரும்பினார் அருள்தாஸ். அதற்கு அவ­ரது மத முக­மூடி நன்­றா­கவே பயன்­பட்­டது. கணவனை இழந்த பெண்கள், ஆத­ர­வற்ற பெண்கள், கஷ்­டப்­படும் பெண்களிடம் லட்­சுமி நைஸாகப் பேச்சுக் கொடுப்பார். அவர்­களின் கஷ்­டங்­களைத் தெரிந்­து­கொண்டு, அருள்தாஸிடம் போங்கள். அவர் ஜெபம் செய்து உங்கள் கஷ்­டத்தைப் போக்­குவார் என்று சொல்லி அனுப்­பு­வாராம். அதை நம்பிப் போகும் பெண்­க­ளிடம் அவர் ஆறுதலான வார்த்­தை­களைச் சொல்­வ­தோடு, சின்னச் சின்ன உத­வி­க­ளையும் செய்துள்ளார்[2].

 

அனுமதி இல்லாமல் காப்பகம் - பாலியல் செய்கைகளுக்கு ஈடுபடுத்தப் பட்டது

அனுமதி இல்லாமல் காப்பகம் – பாலியல் செய்கைகளுக்கு ஈடுபடுத்தப் பட்டது – இதற்கும் அருள்தாஸ் வேலைக்கும் வித்தியாசம் இல்லை

ஜெபக்கூட அழைப்பு, சினிமா படம் காண்பிப்பு, இடையில் செக்ஸ் என்று வளரும் வக்கிரம்: பின்னர் ஞாயி­று­தோறும் நடை­பெறும் ஜெபக்­கூட்­டத்­துக்கு அவர்­களை வரவைப்­பாராம். அதன் பின்னர் அடிக்­கடி வீட்­டுக்கு வர வைத்து, டி.வியில் சினிமாப் படத்துக்கு நடுவில் பாலியல் ரீதி­யான படத்­தையும் ஓட­விடு­வாராம். இதில் மசியும் பெண்களைப் பயன்­ப­டுத்திக் கொள்­வாராம். அதன் பின்னர் அந்தப் பெண்கள் நன்­றாகப் பழகிவிட்டார்கள் என்று லட்­சு­மிக்குத் தகவல் சொல்­லு­வாராம். அவர் அந்தப் பெண்­களை விருத்­தா­சலம், வடலூர், கடலூர் எனத் தனக்கு நெருக்­­மான வாடிக்கையாளர்களிடம் நல்ல விலைக்கு விற்று விடு­வாராம்.இது நீண்ட நாட்­­ளா­கவே நடந்­து­வந்­துள்­ளது. இந்நிலையில் லட்­சு­மியின் கடைக்கு அடிக்­கடி பள்­ளியில் படிக்கும் சிறு­மி­களும் வரு­வ­துண்டு. அவர்­களில் ஏழ்­மை­யான ஆத­ர­வில்­லாத சிறு­மி­களை மட்டும் அடை­யாளம் கண்டு பேச்சுக் கொடுத்­துள்ளார் லட்­சுமி. அப்­போது அவ­ரது வலையில் ராதா, தன­பாக்­கியம் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) ஆகிய 12 வயது, 13 வயதுச் சிறு­மிகள் சிக்­கி­யுள்­ளனர்.இதில் ராதா­வுக்கு அம்மா அப்பா இல்லை. பாட்டி வீட்டில் வசிக்­கிறார்.

Sexy christianity - pastor sex India.5

ஏழ்மை, அறியாமை, அப்பவித்தனம் முதலியவற்றை துர்பிரயோகம் செய்து பெண்மையினை சூராடும் போக்கு: தன­பாக்­கி­யத்­திற்கு அம்மா கிடை­யாது. அப்பா குடி­காரர். தட்டிக் கேட்க வீட்டில் யாரும் இல்லை என்­பதைத் தெரிந்­து­கொண்­டுள்ளார். வழக்­கம்­போ­லவே அந்தச் சிறு­மிகள் இரு­வ­ரையும் அருள்­தா­ஸிடம் அறி­முகம் செய்து வைத்­துள்ளார் லட்­சுமி. சர்ச்­சுக்கு வர­வ­ழைத்து ஜெபம் செய்­தி­ருக்­கிறார். பின்னர் அவர்­க­ளுக்கு டிரெஸ் எடுத்துக் கொடுத்­துள்ளார். அவ்­வப்­போது இரு­வ­ரையும் வீட்டு வேலை செய்ய வரு­மாறு அழைத்­துள்ளார். வழக்­கம்­போல டி.வி.படம் பார்க்­கும்­போது நடுவில் செக்ஸ் படம் காண்­பிக்­கவே சிறு­மி­க­ளுக்கு அது என்ன என்­பது தெரி­யா­ம­லேயே அதை ரசித்துள்ளனர். இதைப் பயன்­ப­டுத்தி இரு­வ­ரையும் தன்­னு­டைய இச்­சைக்குப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார் அருள்தாஸ். அவர்­க­ளுக்கு அவர் கொடுத்­தது வெறும் பிரி­யா­ணியும் சுடி­தா­ரும்தான்.

Sexy christianity - pastor sex India.2

இளம் வயது, காமம் அறியா இன்பம், தாஜா செய்யப்படும் வலைகள்: சிறு­மிகள் இரு­வரும் நல்ல பழக்­கத்­துக்கு வந்­ததும் லட்­சு­மி­யிடம் சொல்­லி­யுள்ளார். அவரும் பள்ளி விடு­முறை நாட்­களில் சிறு­மி­களை வெளி­யூ­ருக்கு அழைத்துச் சென்று தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளார். அவர்கள் கொடுக்கும் பணத்தை லட்­சுமி வாங்கிக் கொள்­வாராம். சிறு­மி­க­ளுக்கு சாப்­பாடு, சினிமா, பிரி­யாணி என்று வாங்­கிக்­கொ­டுத்து ஏமாற்­றி­யுள்ளார். அடுத்து பள்ளி நாட்­களில் சிறு­மி­களை அழைத்­துக்­கொண்டு வெளியே சுற்ற ஆரம்­பித்­துள்ளார். கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் சிறு­மிகள் இரு­வ­ரையும் காண­வில்லை. இது­கு­றித்து தன­பாக்­கி­யத்தின் தந்தை சுப்­பி­ர­ம­ணியம் திட்­டக்­குடி பொலிஸில் புகார் செய்­துள்ளார். ஏற்­க­னவே கடந்த ஜூன் மாதம் இரு­வரும் காணாமல் போன­தாக புகார் வந்­துள்­ளது. இரண்டே நாளில் அவர்கள் வீடு திரும்­பி­யுள்­ளனர். அதே­போல ஏதா­வது நடந்­தி­ருக்கும் என்று பொலிஸார் அலட்­சி­ய­மாக இருந்துள்ளனர். இரு­பது நாட்­க­ளாக சிறு­மி­களைக் காண­வில்லை என்­றதும் பத­றிப்­போன சுப்­பி­ர­ம­ணியம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் செய்­துள்ளார். அதன் பின்னர் போலீஸார் சுறு­சு­றுப்­பாக வேலையை ஆரம்­பித்­துள்­ளனர்.

Sexy christianity - pastor sex India

மொபைல் செய்யும் விபரீதம், செக்ஸுக்கும் உபயோகம்: அந்தப் சிறுமி­களின் மொபைல் எண்­களில் இருந்து யாருக்கு அதிகம் பேசி­யுள்­ளார்கள் என்று விசா­ரித்­துள்­ளனர். அப்­போது கட­லூரைச் சேர்ந்த மணி­கண்டன் என்­ப­வ­ருக்கு அடிக்கடி போன் செய்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. முப்­பது வய­தான அவரைப் பொலிஸார் தங்கள் கஷ்­ட­டிக்குக் கொண்­டு­வந்­தனர். அவர்­களில் ஒருத்­தியை நான் லவ் பண்­ணு­கிறேன். நான் போன் பண்­ணினால் எடுப்­பார்கள். அவர்­களைக் கடலூர் வரச் சொல்­லு­கிறேன் என்று சொல்­லி­யுள்ளார். அதன்­ப­டியே அவரைப் போனில் அந்த சிறுமி­க­ளுடன் பேசச் சொல்­லி­யுள்­ளனர் பொலிஸார். அவரும் நாசுக்­காகப் பேசி இரு­வ­ரையும் கடலூர் வர­வ­ழைத்­துள்ளார். உடனே மாறு­வே­டத்தில் நின்­று­கொண்டு இருந்த பெண் போலீஸார் சிறு­மிகள் இரு­வ­ரையும் பிடித்து விசா­ரித்­தனர். அப்­போது திடுக்­கிடும் தக­வல்கள் கிடைத்தன.

 

சிறுமிகளை வாங்குவது, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது: அது­கு­றித்து விசா­ரணை நடத்­திய பொலி­ஸா­ரிடம் பேசி­ய­போது, அருள்தாஸ் மூலம் பழக்­க­மான அந்தச் சிறு­மி­களை விருத்­தா­ச­லத்தைச் சேர்ந்த ரசூர் மனைவி கலா என்ற புரோக்­க­ரிடம் லட்­சுமி 20 ஆயிரம் ரூபா வாங்­கிக்­கொண்டு விற்­றுள்ளார். அவர் சிறு­மி­களை அறைக்குள் அடைத்து வைத்து விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்­தி­யுள்ளார். ஒரு வாரம் பயன்­ப­டுத்திக் கொண்ட கலா, காட்டுக்­கூ­ட­லூரைச் சேர்ந்த சலீம்­பாஷா என்­ப­வரின் மனைவி ஜெமி­னா­விடம் 25 ஆயிரம் ரூபா வாங்­கிக்­கொண்டு விற்­றுள்ளார். அங்கு சிறு­மி­களை ஜெமினா கொடு­மைப்­ப­டுத்­தி­யுள்ளார். உடனே சிறு­மிகள் லட்­சு­மி­யிடம் போன் செய்து அழு­துள்­ளனர். உடனே ஜெமினா அவர்­களை வட­லூரில் வசிக்கும் சதீஷ்­கு­மா­ரிடம் 30 ஆயிரம் ரூபா வாங்­கிக்­கொண்டு விற்­று­வி­டு­கிறார். சதீஷ்­குமார் தனது மனைவி தமி­ழுடன் இவர்­களை விழுப்­புரம், பாண்­டிச்­சேரி, திண்­டி­வனம் உட்­பட பல்­வேறு ஊர்­க­ளுக்கு அழைத்துச் சென்று லொட்ஜ்­களில் விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்­தி­யுள்ளார். இந்­நி­லையில் நாங்கள் அவர்­களைப் பிடித்­து­விட்டோம்.

 

நல்ல சாப்­பாடு, செல்போன் கிடைக்­கி­றது என்­­தற்­காக இதைச் செய்­தோம்: எங்­க­ளிடம் பேசும்­போது கூட அந்தச் சிறு­மி­க­ளுக்கு இது தவ­றான தொழில் என்­பது புரி­ய­வில்லை. நல்ல சாப்­பாடு, செல்போன் கிடைக்­கி­றது என்­ப­தற்­காக இதைச் செய்­த­தாக சர்­வ­சா­தா­ர­ண­மாகச் சொன்­னார்கள். எந்­தெந்த ஊரில் யார் யாரோடு இருந்தோம் என்­ப­தையும் எங்­க­ளிடம் சொன்­னார்கள். கடந்த ஜூன் மாதம் எங்கே போயி­ருந்­தீர்கள் என்று கேட்­ட­போது, அருள்­தா­ஸோடு வேளாங்­கண்ணி சென்­ற­தா­கவும் அவ­ரோடு இரண்டு நாட்கள் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் சொன்­னார்கள். சிறு­மிகள் இரு­வ­ரையும் அரசு காப்­ப­கத்தில் தங்க வைத்­துள்ளோம். அவர்­களை விபசாரத்தில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக அருள்தாஸ், லட்­சுமி, கலா, சதீஷ்­குமார், தமிழ் ஆகி­யோரை கைது செய்­துள்ளோம். அவர்­களை விரைவில் பொலிஸ் கஷ்­ட­டியில் எடுத்து விசா­ரிக்க உள்ளோம். அப்­போ­துதான் இந்த இரண்டு சிறு­மி­களின் வாழ்க்­கையை மட்­டும்தான் சீர­ழித்­தார்­களா அல்­லது இன்னும் பல சிறு­மி­களைச் சிதைத்­தார்­களா என்­பது தெரி­ய­வரும் என்றனர். இத­னி­டையே இவர்­களின் நெட் வேர்க் தமி­ழகம் முழு­வதும் பரந்­து­வி­ரிந்து கிடப்­ப­தா­கவும் தமி­ழ­கத்­தையே அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்ள வில்­லங்கப் பாதி­ரியார் விவ­கா­ரத்தில் அர­சியல் புள்­ளி­க­ளுக்கும் தொடர்­பி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.

 

கைதில் பலர் இருப்பது நெட்வெர்க் முறைத்தான் வெளிப்படுகிறது: கடலூர் மாவட்டம் திட்­டக்­கு­டியைச் சேர்ந்த இளம் சிறு­மிகள் இரு­வரைக் கடத்தி 20 நாட்­க­ளுக்கும் மேலாக விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்­தி­யது ஒரு கும்பல். சிறு­மிகள் பிடி­பட்ட நிலையில் உள்­ளூரைச் சேர்ந்த பாதி­ரியார் அருள்தாஸ், லட்­சுமி, விருத்­தா­சலம் கலா, காட்­டுக்­கூ­டலூர் ஜெமினா, இடை­யக்­கு­றிச்சி சதீஷ்­குமார் ஆகிய ஐந்து பேர் கைது செய்­யப்­பட்­டனர். இந்­நி­லையில் சிறு­மி­க­ளிடம் நடத்­திய விசா­ர­ணையில் கிடைத்த தக­வலின் பேரில், இடை­யக்­கு­றிச்சி சதீஷ்­கு­மாரின் மனைவி தமி­ழ­ரசி, காட்­டுக்­கூ­னங்­கு­றிச்சி ஸ்ரீதர், பண்ருட்டி மகா­லட்­சுமி, வடலூர் ராஜ­லட்­சுமி, நெல்­லிக்­குப்பம் கரிஜா, வள­வனூர் நம்மாழ்வார், பாத்­திமா, விழுப்­புரம் பூவ­ரசு நகர் ஷர்­மிளா ஆகிய மேலும் எட்­டுப்­பேரைக் கைது செய்­துள்ளோம்.

 

பெண்களே, பெண்கள் சீரழிய காரணமாக இருப்பது: பாதி­ரியார் அருள்­தாஸைப் பற்றித் திட்­டக்­குடி சுற்று வட்­டா­ரங்­களில் பெரு­மை­யாகப் பேசிக்­கொள்­கி­றார்கள். அருள்­மணி என்ற பெயரில் தவணை முறையில் துணிகள், வீட்டுப்­பொ­ருட்கள் கொடுத்­து­வந்த அருள்தாஸ், பின்னர் ஒரு வழி­பாட்டுத் தலத்தை ஆரம்­பித்தார். கூடவே திட்­டக்­குடி, ஆவி­னங்­குடி, பெண்­ணாடம், முரு­கன்­குடி, கருவேப்பிளங்­கு­றிச்சி, விருத்­தா­சலம், தொழுதூர் என்று பல ஊர்­களில் வட்டித் தொழி­லிலும் ஈடு­பட்டார். வட்டித் தொழி­லுக்­காகச் சென்ற அருள்­தா­ஸூக்குக் கண­வரை இழந்த கைவி­டப்­பட்ட பெண்­களே முதல்­குறி. ஏற்­க­னவே அருள்­தா­ஸோடு தொடர்­பு­டைய திட்டக்­குடி காவேரி என்ற பெண்ணைப் பல மாதங்­க­ளாகக் காண­வில்லை என்­கி­றார்கள். தூரத்து உற­வி­னர்­க­ளாக விருத்­தா­ச­லத்தைச் சேர்ந்த கலாவும் தன­லட்­சு­மியும் பாதி­ரியார் அருள்தாஸூக்கு உத­வி­யுள்­ளனர் என்­கின்­றனர்.

 

ஒரு நாளைக்கு எட்டுப் பேரி­லி­ருந்து பத்துப் பேர் வரை வரு­வாங்க: சிறு­மி­க­ளிடம் நடத்­திய விசா­ரணை பற்றிப் பொலி­ஸா­ரிடம் கேட்­ட­போது, பெரும்­பாலும் வெள்ளை வேஷ்டி, சட்டை போட்ட வய­சா­ன­வங்­கதான் வந்­தாங்க. ஒரு நாளைக்கு எட்டுப் பேரி­லி­ருந்து பத்துப் பேர் வரை வரு­வாங்க என்­ற­வர்கள் ஏன் எங்­களை இங்கே கூட்டிக்கிட்டு வந்­தி­ருக்­கீங்க? என்று அப்­பா­வி­யாகக் கேட்டனர் என்று அதிரவைத்தனர். இதனால் பொலிஸார் மாணவிகள் இருவரையும் சென்னையில் வைத்து கவுன்சிலிங் கொடுத்து வருகின்ற னராம். வெள்ளை உடையில் சென்று சிறுமி களிடம் சேட்டையில் ஈடுபட்டது அரசியல் புள்ளிகள் என்பது அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கில் முதல்கட்டமாகக் கைதான ஐவருடன் திட்டக்குடியைச் சேர்ந்த மணிகண்டனையும் பொலிஸார் கைது செய்தபோது உள்ளூர் அரசியல் பிரமுகர் தலையிட்டு மீட்டுச் சென்றாராம். மேலும் பெண்கள் விஷயத்தில் புதுச்சேரி பொலி ஸாரிடம் சிக்கிய விருத்தாசலம் அரசியல் பிரமுகருக்கும் இந்த விவகாரத்தில் தொடர் பிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாகக் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதாவிடம் கேட்டபோது, விசாரணை இன்னும் முழுசா முடியல. அனைத்துக் குற்றவாளிகளையும் பிடித்துவிட்டு நாங் களே உங்களுக்கு அனைத்து விவரத் தையும் சொல்கிறோம். இதில் அரசியல் புள்ளிகள் யாராக இருந்தாலும் கைது செய் யப்படுவார்கள் என்றார்.

 

போலீஸார் தரப்பில் கொடுக்கப் பட்டுள்ள பத்திரிக்கைக் குறிப்பு: கடலூர் மாவட்டம் திட்டக்குடி மாணவியர்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு[3]: திட்டக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது 14 வயதுடைய பள்ளியில் படிக்கும் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்று திட்டக்குடி காவல் நிலைய குற்ற எண் 141- 2014ன் கீழ் சிறுமி காணவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்புகாரில் தன் மகளின் தோழி அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியோடு காணவில்லை என குறிப்பிட்டுள்ளார். 5-8-2014 தேதி மேற்படி இருசிறுமிகள் திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டனர். அவர்களை விசாரித்த சுப்பிரமணியன் தன் மகளோடு காவல் நிலையம் வந்து தன் மகளும், தோழியும் பழக்கமான திட்டக்குடி லட்சுமி வீட்டிற்கு சென்றதாகவும், மேற்படி லட்சுமி இரு சிறுமிகளையும் விருத்தாசலம் கலா வீட்டிற்கு அனுப்பியதாகவும், அதன் பின்னர் பல இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

 

உள்ளூர் செக்ஸ் பெரிதான-விபரீதமான விதம்: அதன் பின்னர் போலீஸார் புலன் விசாரணையில் திட்டக்குடியில் இட்லி கடை வைத்துள்ள லட்சுமி என்கிற தனலட்சுமி பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தும் வழக்கமுள்ளவர் என்றும், சுப்பிரமணியன் மகள் மற்றும் தோழியையும், அவ்வாறு சிலமுறை ஈடுபடுத்தியுள்ளார். சிறுமிகளின் செலவுக்கு பணம் கிடைக்கும், யாருக்கும் தெரியாது என பேசி இவ்வாறு ஈடுபடுத்தியுள்ளார். எனவே இருவரையும் அதேபோல் தொழில் நடத்தும் கலா வீட்டிற்கு அனுப்பியுள்ளார். கலா அவர்களை திட்டக்குடி பாதிரியார் அருள்தாஸ் என்பவரிடம் அனுப்பியுள்ளார். அங்கு சுப்பிரமணியன் மகளின் தோழி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன் பின் திரும்ப கலாவிடம் வந்த சிறுமிகள், அவரது நாத்தனார் ஜெபினா, அதன் பின் வடலூர் சதீஷ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பின்னர் சதீஷ் என்பவர் பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களுக்கும், நெல்லிகுப்பம் ராதா வீட்டிற்கும் அழைத்துச் சென்று சிறுமிகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கோலியனூர் கூட்டுரோடு பாத்திமா, அதன் பின் தேலம் அன்பு ஆகியோர் வசம் அனுப்பி சிறுமிகள் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறுமிகளை வன்கொடுமைக்கு ஈடுபட வைத்த லட்சுமி, கலா என்கிற மேகலா, ஜெபினா, வடலூர் சதீஷ், சதீஷ் மனைவி ரவிதா, சர்மிளா, மற்றொரு கவிதா, தமிழ்செல்விக்கு அறிமுகமான மகாலட்சுமி, நெல்லிக்குப்பம் ராதா, கோலியனூர் பாத்திமா, அவரது கணவர் நம்மாழ்வார், சேலம் அன்பு, சேலம் அமுதா, மற்றொரு அன்பு, பாலசுப்பிரமணியன், சதீஷ் டிரைவர் ஸ்ரீதர் ஆகியோரும், பாலியல் குற்றம் செய்த திட்டக்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ், மதிவாணன், விக்னேஷ், ஆனந்தராஜ், பாதிரியார் அருள்தாஸ் ஆகிய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பாலியல் குற்றம் செய்த பாதிரியார் உள்ளிட்ட 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சிறுமிகள் காணாமல் போன 8-6-2014 முதல் 5-8-2014 வரை சிறுமிகளை தங்க வைத்திருந்த நபர்கள், தங்க வைக்கப்பட்டிருந்த இடங்களான திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், உளுந்தூர்பேட்டை, சேலம் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளது. இக்குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு கார், 3 இரு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் இவ்வழக்கில் சிறுமிகளை கடத்தியதற்கும், அடைத்து வைத்ததற்கும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டப்பிரிவுகலும் சேர்க்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என ஏ.ராதிகா எஸ்பி தெரிவித்துள்ளார்[4].

 

  1. மனைவி சண்டைப் போட்டுக் கொண்டு தனியாக வாழ்வது அல்லது அத்தகைய நிலையை உருவாக்குவது.
  2. முதலில் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டு, அவளை தன்னிச்சைப்படி வேலை செய்ய வைத்தல்.
  3. பிறகு அவளை வைத்து மற்ற பெண்களை வலையில் வீழ்த்த ஜெபம், உதவி போன்ற முறைகளை கையாளுதல்.
  4. பாதிரியிடம் செல், அவர் எல்லாம் சரிசெய்து விடுவார் இல்லை சரியாகி விடும் என்று போதனை செய்வது.
  5. கணவனிடமிருந்து தனித்து வாழ்பவள், விதவை, ஏழை போன்ற பெண்களுக்கு குறிவைப்பது.
  6. சிறுமிகளை பருவ கோளாறு என்ற தன்மையை உபயோகப்படுத்திக் கொண்டது (இது இங்கு ஒரு திட்டமாக தெரிகிறது).
  7. சினிமா ஆசை, செக்ஸ் விருப்பம் – இதனால் அத்தகைய படங்களைக் காட்டுவது – பார்க்கும் போது, உணர்ச்சி தூண்டப் பட்ட நிலையில் சில்மிஷம் செய்து கவருவது.
  8. ஒருதடவை அனுபவித்து விட்டால், அடுத்த முறை செய்வது சுலபமாகும் என்ற எண்ணத்தை உருவாக்குவது.
  9. நன்றான சாப்பாடு, உடுக்க உடை, பார்க்க-பொழுது போக்க சினிமாக்கள்……………..இடையிடையே உடலின்பம், வயசு கோளாறு……………………..

இவ்வாறகத்தான் அருள்தாஸ் பாதிரி மதத்தையும், வக்கிரத்தையும் இணைத்து சிறுமிகளைக் கெடுத்து சீரழித்துள்ளான்.

[1] வெள்ளை வேட்டி பாதிரிகள், அரசியல்வாதிகளால் வேட்டையாடப்பட்ட பள்ளிச் சிறுமிகள், http://nadunadapu.com/?p=52550

[2] குமுதம் ரிப்போர்டர், 14-08-2014, பக்கங்கள்.6-8.

[3]http://www.dinamani.com/latest_news/2014/08/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/article2387665.ece

[4] ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம், திட்டக்குடி மாணவியர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 21 பேர் கைது, First Published : 19 August 2014 07:03 PM IST

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: