பொள்ளாச்சி டி.இ.எல்.சி. கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள், பாதுகாப்பு இல்லாத விடுதிகள், ஏற்கெனவே அத்தகைய சீரழிவுகளுக்கு துணைபோகின்றன (2).

பொள்ளாச்சி டி.இ.எல்.சி. கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள்,  பாதுகாப்பு இல்லாத விடுதிகள், ஏற்கெனவே அத்தகைய சீரழிவுகளுக்கு துணைபோகின்றன (2).

 

டி.இ.எல்,சி வார்டன் கைது ஜாமீன் மனு மறுப்பு

டி.இ.எல்,சி வார்டன் கைது ஜாமீன் மனு மறுப்பு

சுவிசேஷ  லுத்திரன்  திருச்சபையின் அதிரடி சட்ட நடவடிக்கைகள்: 14-06-2014 அன்று இ.பி. சுரேஷ்குமார்,  வார்டன் கைது செய்யப்பட்டான் மற்றும் எஸ்.ஏ. பாக்கியநாதன் என்ற பாஸ்டர் மீது வழக்குப் போடப் பட்டது[1].  பெயர்கள் எல்லாம் ஏதோ இந்து பெயர்கள் போல போடப்பட்டன, அவர்களது, கிருத்துவ அடையாளங்கள்  மறைக்கப் பட்டன.  தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை எப்படியாவது நடந்ததை மறைக்கப் பாடுபடுகிறது என்று தெரிகிறது. வார்டன் இ.பி. சுரேஷ்குமார் பொள்ளாச்சி ஜே.எம்.1  கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.மனு  தொடர்பான விசாரணையில், ஜாமீன் தர முடியாது என்று கூறி மனுவை   தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்  உத்தரவிட்டார்[2]. இந்த மனு 14-06-2014 அன்றே விசாரணைக்கு வந்தது.   அரசு அங்கீகாரம் இல்லாமலும், எந்த வித பாதுகாப்பு இன்றியும் விடுதி நடத்தி வந்ததற்கு,  வார்டன் சுரேஷ்குமாருக்கு பொறுப்பு உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள விடுதி நிர்வாகி எஸ்.ஏ. பாக்கியநாதன் தலைமறைவாக உள்ளார்.  இன்னும் அவர் கைதாக வில்லை[3]. இந்நிலையில் இவருக்கு ஜாமீன்  தர முடியாது என்று ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது[4].

 

பொள்ளாச்சி கற்பழிப்பு அரசியலா செக்யூலசிஸமா

பொள்ளாச்சி கற்பழிப்பு அரசியலா செக்யூலசிஸமா

கிருத்துவர்கள்  நடத்தும்  காப்பகம்  என்பதால்  அமுக்கி  வாசிக்கின்றன  என்று  தெரிகிறது:  எல்லாம் நடந்த பிறகு பொதுமக்கள், ஐட்வா போன்ற மகளிர் சங்கம் மற்றவர்கள் மீது குறை கூறுகிறார்கள்[5].  அகில இந்திய ஜனநாயக மகளிர் மன்றம் மற்ற விசயங்களில் அதிகமாக சப்தம் போடும் போது,  இவ்விசயத்தில் எல்லாம் நடந்த பிறகு கூப்பாடு போடுவது கிருத்துவ காப்பகம் என்றதால் பாரபட்சம் பார்க்கிறது என்று தெரிகிறது.  கற்பழிப்பிற்குப் பிறகு, அனுமதி இல்லாமல் நடத்தப் பட்டு வந்த மற்ற இரு இல்லங்களும் மூடப்பட்டன[6],  என்று வந்துள்ள செய்தியும் வேடிக்கையாக இருக்கின்றது.  தொடர்ந்து பிடோபைல் மற்றும் இத்தகைய பாலியல் குற்றங்களில் கிருத்துவ காப்பகங்கள் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளது பற்றிய செய்திகள் வந்துள்ளன.  கன்யாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை என்று நூற்றுக்கணக்கில் குற்றங்கள் புரிந்தது வெளி வந்தன.  பிறகு எப்படி இங்கு மட்டும் மெத்தனமாக செயல் பட்டார்கள் என்று தெரியவில்லை. 

 

A view of the TELC Children's Home in Pollachi

A view of the TELC Children’s Home in Pollachi

உள்ளூர்  இந்து  இயக்கங்கள்  உண்மையினை  எடுத்துக்  காட்ட  முயன்ற போது  அதற்கு  அரசியல்  என்று  சாயம் பூசப்பட்டது: உள்ளூரில் உள்ள மக்களுக்கு லிருத்துவர்கள் தாம் அடாவடித்தனமாக நடக்கிறார்கள், உண்மையினை மறைக்கப் பார்க்கிறார்கள் என்று தெரியும். இதனால், அவை உண்மையினை எடுத்துக் காட்ட முயன்றபோது, “சர்ச்சின்வாசலுக்குஅரசியல்வந்துவிட்டது, ஆனால். அனுமதிமறுக்கப்பட்டது”, என்று“திஇந்து”தலைப்பிட்டுசெய்திவெளியிட்டது[7]. “TELC-rape” ஒரு பக்கம் போட்டு, இன்னொரு பக்கம் செக்யூலரிஸ பாணியில், கிருத்துவர்களுக்கு சாதகமாக உதவுகிறது போலும். பாதிக்கப் பட்ட சிறுமிகளைப் பார்க்கக் கூடாது என்று தடுப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்து இயக்கத் தலைவர்கள், TELC-அதிகாரிகளை சந்திக்கவும் போலீசார் விடவில்லை[8]. காப்பகத்தில் பாதிக்கப் பட்டது இந்து சிறுமிகள் என்பதால், இது மதசாயல் கொடுக்கக் கூடாது என்று பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், அதே நேரத்தில், குற்றங்களில் சம்பந்தப் பட்டவர்கள் கிருத்துவர்கள் என்பதையும் மறைக்கும் முயற்சிகள் தெரிகின்றன[9].  

 

Police make enquiries at the hostel of the Tamil Evangelical Lutheran Church in Pollachi.

Police make enquiries at the hostel of the Tamil Evangelical Lutheran Church in Pollachi.

பாதிரியார்கள் மீது தேவாலய உறுப்பினர்கள் புகார்:  இந்த பாஸ்டர் ஏன் கைது செய்யப் படவில்லை என்று தெரிவிக்கப் படவில்லை.  சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பாதிரியார்கள் மீது பொள்ளாச்சி சார்-ஆட்சியரிடம் தேவாலய உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர்[10].  பொள்ளாச் சிடிஇஎல்சி தேவலாயத்தின் நிர்வாகிகளுக்கும், பாதிரியாருக்கும் நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருவதாகவும், குறிப்பாக எஸ்.சி.,  எஸ்.டி. பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையே ஜாதிப்பிரச்சினை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.  கற்பழிக்கப் பட்டுள்ள இரு இளம்பெண்களில் ஒருவர் எஸ்.சி என்பதால் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றத்தடுப்புச் சட்டபிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[11].  இது தவிர இந்திய குற்றவியல் சட்டம், பொது சேவகன் வேலையை மதிக்கவில்லை,  அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட செய்தது போன்ற பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

 

TELC rape orphanage pollachi

TELC rape orphanage pollachi

பொள்ளாச்சி, கோவை, மற்றும்  திருச்சியில்  உள்ள  மத்திய  பாதிரியார்கள்  மீதும்  ஏற்கெனவே  பல்வேறு  புகார்கள்:  பொள்ளாச்சி நகரின் நடுவே பல ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் வணிகவளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டால் வருமானம் வரும் என்று ஒரு பிரிவினரும்,  அது தனிநபர்கள் ஊழல் செய்யவே துணைபுரியும் என்று இன்னொரு பிரிவினரும் பிரச்சினை கிளப்பி வருவதாகவும் சொல்லப் படுகிறது.  இதனால் தான் மாணவர் விடுதி உள்ளிட்ட கட்டிடங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புதர் மண்டி பாழடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த விவகாரத்தில் இங்குள்ள பாதிரியார் மீதும் கோவை,  திருச்சியில் உள்ள மத்திய பாதிரியார்கள் மீதும் ஏற்கெனவே பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளதாம்.  இப்போது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமையும் நடந்து விட்டதால் ஒரு பிரிவினர் தங்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா,  கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர்.

 

பொள்ளாச்சி கற்பழிப்பு - வீராசாமி

பொள்ளாச்சி கற்பழிப்பு – வீராசாமி

இன்னொரு  பக்கம்  கிருத்துவர்களே,  கிருத்துவர்கள்  மீது  புகார்  அளிக்கின்றனர்: இது தொடர்பாக தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை நலச் சங்கத்தின் செயலாளர் ஒய்.பிரபு என்பவர் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடேயிடம் வெள்ளிக்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:  “பொள்ளாச்சி டிஇஎல்சி ஆலய வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் நிலவும் பாதுகாப்பற்ற அசாதாரண சூழ்நிலையிலேயே பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. இது தொடர்பாக டிஇஎல்சி (பொள்ளாச்சி)  நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள மூன்று பேரை உடனே கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்[12].  இது குறித்து பிரபுவிடம் பேசிய போது, இந்த திருச்சபை, சொஸைட்டி ஆக்ட் 1919-ல் பதிவு செய்யப் பட்டது.  இதற்கு தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 17 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பை 1975-ஆம் ஆண்டு அரசு கலைத்துவிட்டு தேவாலயங்களில் உள்ள பாதிரியார்கள் மற்ற மையங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் தலையிடக் கூடாது,  அவர்கள் பாதிரியார் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் மற்றவற்றை மற்ற நிர்வாகிகளே நடத்த வேண்டும் என விதிமுறைகளை வகுத்துத் தந்தார்கள். ஆனால்,  அதை இந்த திருச்சபையினர் பின்பற்றவில்லை. பழைய சட்டத்தை வைத்து எல்லாவற்றையும் அவர்களே நடத்தி வருகிறார்கள். இந்த திருச்சபையைப் பொறுத்த வரை கோவை மாவட்டத்தில் மட்டும் 118  பள்ளிகள் செயல் படுகின்றன. வால்பாறை, சந்திராபுரம், பொள்ளாச்சி என 25 மாணவர் விடுதிகளும் உள்ளன.  இங்கு முறையான பராமரிப்போ, பாதுகாப்போ இல்லை. ஒரு பள்ளியில் நூறு மாணவர்கள் படித்தால் 300  மாணவர்கள் படிப்பதாகவும், அதற்கேற்ப ஆசிரியர்கள் உள்ளதாகவும் கணக்கு காண்பித்து அரசிடம் சம்பளம் பெறப்படுகிறது.  இப்பிரச்சினையில் அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்து திருச்சபைகள் மீதான களங்கத்தை துடைத்திட வேண்டும்என்றார். இது குறித்து விளக்கம் கேட்க பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாய ஆயர் எஸ்.ஏ. பாக்யநாதனை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. 

 

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்

பாதுகாப்பற்ற விடுதி, அனுமதி இல்லாமல் நடத்தப்படும் காப்பகம் முதலியன: பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட விடுதி பாதுகாப்பற்றது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே டி.இ.எல்.சி. உலக ரட்சகர் தேவாலயம் உள்ளது.  இதன் உள்ளே இடது புறம் 50 அடி தொலைவில் மாணவர்கள் விடுதி அமைந்துள்ளது.  இதைச் சுற்றிலும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பிற்கு இடிபாடுகளுடன் கூடிய பழைய கட்டிடங்கள், புதர்கள் அதிகமாக உள்ளன.  அதன் கிழக்கு கடைக்கோடியில் பொள்ளாச்சி- கோவை செல்லும் பிரதான சாலைக்குப் போக ஒரு சந்து உள்ளது.  இந்த சந்தை சென்றடைவது அவ்வளவு சுலபமல்ல. வழியெங்கும் இடிபாடுகள், புதர்கள், கழிவுகள் நாற்றம்,  மதுபாட்டில்கள் ஆகியவற்றை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இங்கே சர்வோதய சங்கக் கட்டிடம் ஒன்று செயல் படுகிறது.  அந்த கட்டிடத்தின் படிக்கட்டுகள் மாணவர் இல்லத்திற்குச் செல்லும் சந்தின் முன்புறம் இடிபாடுகளுடன் காட்சியளிக்கிறது. அக்கட்டிடத்தின் படிக்கட்டு மீது ஏறினால் சர்வோதயா சங்கத்தின் பெரிய மொட்டை மாடி.  இந்த மாடியின் படிக்கட்டுக்கு கீழேயும், சுற்றிலும் 100 அடி தொலைவுகளில் இடிபாடு கட்டிடங்கள்,  முட்புதர்கள் நிரம்பியுள்ளன. மது பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன . சுகாதாரச் சீர்கேடு நிறைந்த மாணவர் விடுதியில் இருந்து தான் இரண்டு சிறுமிகளை சர்வோதயா சங்க மாடிக்கு தூக்கிச் சென்று இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

 

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014

இம்மாதிரி சம்பவங்கள் ஏற்கனவே பல முறை நடந்திருக்கலாம்:  இரவில் கூட நடமாட்டம் மிகுந்த பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் போலீஸார் ரோந்து செல்லும் பகுதி அருகே இருந்தும் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருக்கிறார்கள் என்றால் பெண்களுக்கு இங்கே என்ன பாதுகாப்பு?  என்று கேள்வி எழுப்புகிறார்கள் சுற்றுப் புறவாசிகள். இப்பகுதியில் உள்ள ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களிடம் பேசிய போது,  `மாணவர் விடுதி சந்தில் பகலிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பார்கள்.  மது வாங்கி அதை குடிக்க இங்கே தான் ஒதுங்குவார்கள்.  பகலிலேயே இந்த இடம் குடிப்பவர்களுக்கு பாதுகாப்பு என்றால் இரவில் ஆட்டம் போடும் குடிமகன்களுக்கு எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.  இந்த சந்தில் யார் நுழைகிறார்கள்?, என்ன செய்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது.  இந்த மாதிரி சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை நடந்திருக்கலாம். யாரும் வெளியே சொல்லாததால் எதுவும் தெரியவில்லை.  இப்போது கூட மூன்று வருடங்களாக இங்கே தங்கிப் படிக்கும் ஒருமாணவி,  நான்கு நாள்களுக்கு முன்பு வந்த ஒருமாணவி எனஇரண்டு பேரை பலாத்காரம் செய்ததில் புதுமாணவி கூச்சல் போட்டதில் தான் மற்ற மாணவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மாணவியை தூக்கிப் போவதை பார்த்து வாட்ச் மேனிடமும்,  இங்குள்ள வார்டனிடமும் மாணவர்கள் சப்தமிட்டு அழைத்துள்ளனர். அதன் பிறகு தான் இந்த விவகாரமே வெளியே வந்திருக்கிறது என்றனர்.  இதில் இத்தனை மர்மங்கள் இருக்கும் வேலையில், சோகமாக இன்னொரு நிகழ்ச்சியும் நடந்துள்ளது.

 

பொள்ளாச்சி கற்பழிப்பு அரசியல்

பொள்ளாச்சி கற்பழிப்பு அரசியல்

பொள்ளாச்சியில் இன்னொரு பலாத்காரம், பாதிக்கப்பட்ட இளம்பெண் சாவு: பொள்ளாச்சி, மாக்கினாம் பட்டி வைகை நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவரை இளங்கோகார்த்திக் (24) என்பவர்மே 31-ம்தேதி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்[13]. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இளங்கோ கார்த்திக்கின் பெற்றோரிடம் கூறிய போது, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால் மனமுடைந்த சிறுமி தீக்குளித்தார் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி புதன்கிழமை – 11-06-2014 இறந்தார். இவ்வழக்கு தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலம்,  அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோகார்த்திக், தந்தை குணசேகரன், தாயார் லதா,  உறவினர் ராஜலட்சுமி ஆகியோரை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸார் ஏற்கனவே கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், சிறுமி இறந்ததையடுத்து 4 பேர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக கூடுதல் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[14].

 

© வேதபிரகாஷ்

21-06-2014

[1] A day after securing the accused in the rape of two minors of a home run by theTamil Evangelical Lutheran Church (TELC) here, the police on Saturday arrested the home’s warden E.B. Suresh Kumar and registered a case against pastor S.A. Packianathan.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/pollachi-rape-telc-home-warden-arrested/article6115220.ece

[2]தினகரன், சிறுமிகள்பலாத்காரம், விடுதிவார்டன்ஜாமீன்மனுதள்ளுபடி, 14-06-2014

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=97193

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=97120

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/people-seething-with-anger-at-lack-of-basic-norms-in-the-home/article6114179.ece?ref=relatedNews

[6] Two more homes for children have been closed as they were in a poor condition, and children from these homes have also shifted to the reception units, says P. Samson, chairman, Child Welfare Committee.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/with-two-more-homes-closed-parents-take-wards-home/article6123955.ece?ref=relatedNews

[7] http://www.thehindu.com/news/national/tamil-nadu/politics-reaches-the-doorstep-of-church-but-denied-entry/article6115225.ece

[8] Two days after the gruesome sexual assault on two minor girls, some political parties and social organisations on Saturday sought action against the management of Tamil Evangelical Lutheran Church (TELC), alleging that negligence and misconduct on its part led to the rape. Indu Makkal Katchi leader Arjun Sampath was denied permission to see the victims who were undergoing treatment at the Government Hospital here. He was also prevented from entering the TELC premises.

[9] The Hindu, Politics reaches the doorstep of church but denied entry, POLLACHI, June 15, 2014Updated: June 15, 2014 13:13 IST

[10]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6114899.ece?homepage=true

[11] As one of the girls belonged to a Dalit community, sections of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act have also been invoked. The case against the warden and the pastor was registered by the Pollachi East Police on the basis of a complaint filed by District Child Protection Officer G. Vijaya. Sections 188 (Disobedience to order promulgated by public servant), 336 (Act endangering life or personal safety of others) and 342 (wrongful confinement) of the IPC have been invoked.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/pollachi-rape-telc-home-warden-arrested/article6115220.ece

[12]திஇந்து, பொள்ளாச்சி: பாதிரியார்கள்மீதுபுகார்கூறும்தேவாலயஉறுப்பினர்கள், Published: June 14, 2014 16:57 ISTUpdated: June 14, 2014 16:57 IST

[13]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6107488.ece?homepage=true

[14]தமிழ்இந்து, பொள்ளாச்சி: பாலியல்பலாத்காரம்செய்யப்பட்டசிறுமிஉயிரிழப்பு, Published: June 12, 2014 15:58 IST, Updated: June 12, 20142014 15:58 IST

குறிச்சொற்கள்: , , , , , ,

ஒரு பதில் to “பொள்ளாச்சி டி.இ.எல்.சி. கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள், பாதுகாப்பு இல்லாத விடுதிகள், ஏற்கெனவே அத்தகைய சீரழிவுகளுக்கு துணைபோகின்றன (2).”

  1. TELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளிய Says:

    […] [10] https://christianityindia.wordpress.com/2014/06/24/pollachi-telc-rape-turned-into-mutualaccusation-a… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: