கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (1)

கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (1)

 

பால் கிளட்சன் டிரஸ்ட் புகைப்படம்

பால் கிளட்சன் டிரஸ்ட் புகைப்படம்

பால்  கிளாஸ்டன்  என்பவர்  பால்  கிளாட்ஸன்  என்று  மாறியது ஏன்?: பால் கிளாஸ்டன் என்பவர் பால் கிளாட்ஸன் என்று மாற்றிக் கொண்டதாக, “டிரினிடி மிர்ரர்” நவம்பர் 2013 என்ற நாளிதழில் சிறியதாக வந்திருந்தது[1]. இதை யார் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை[2]. ஆனால், இதே பால் கிளாட்சன் முந்தைய ஆண்டில் 2012ல் ஒரு பண ஊழலிலும் சிக்கியவர் என்பது மிகவும் குறைவான மக்களுக்கே தெரியும் எனலாம்[3]. தோட்டா சினிவாசுலு, அகிலிகுன்டா சுவர்ணராஜு, செருகூரு ஏசுரத்னம் மற்றும் நள்ளாகட்ல அன்னாத ராவ் [Thota Srinivasulu, Akiligungta Suvarnaraju, Cherukuro Yesurathnam and Nallagatla Annadarao] முதலியோர் ஆந்திர சிஐடி.போலீசாரால் சென்னையில் ஆகஸ்ட் 2012ல் பிடிக்கப் பட்டனர். அதாவது ஆந்திராவிலிருந்து பணத்தை சென்னைக்கு எடுத்து வரும் போது பிடிக்கப்பட்டனர். இவர்கள் பணத்தை முதலீடு செய்தால், அதற்கு அதிக அளவில் வட்டி திரும்ப கிடைக்கும் என்று மோசடிகளில் ஈடுபட்ட ஏஜென்டுகள் என்று குறிப்பிடப்பட்டது. இந்த ஏஜென்டுகள் ரூ.10 கோடிகளை ஜெயராஜ் என்பவருக்கும், ரூ. 3 கோடிகளை பால் கிளாட்சன் என்பவருக்கும் கொடுத்துள்ளனர். இவ்விருவரும் தரும ஸ்தாபனங்களை நடத்தி வருகின்றனர்[4] என்ற செய்திகள் வெளிவந்தன. அதாவது 2012லேயே கிருத்துவ மோசடி நிறுவனங்களுக்கும் பால் கிளாட்ஸன் என்ற போதகருக்கும் தொடர்பு இருந்தது தெரிகிறது.

 

பெயர் மாற்றுதல் 2013ல் ஏன்

பெயர் மாற்றுதல் 2013ல் ஏன்

ஜெருஸியா  சேரிடபிள்  பவுண்டேஷன்  என்ற  தர்மஸ்தாபனம்  நடத்தும்  பால்  கிளாட்சன் (2012): பால் கிளட்சனின் பெயர் முன்னொரு முறை (மே 2012), ஜெருஸியா கிளாட்சன் என்ற சிறுமியுடன் தந்தை என்றும், அச்சிறுமி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்து வருவதாகவும், ஐந்து மணி நேரம் தொடர்ந்து பாடியதால், புதிய சாதனை படைத்து, லிம்கா போன்றா சாதனைப் பட்டியலில் சேர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன[5]. அவர், இவர்தானா என்று கூகுளில் தேடிப் பார்த்தபோது, ஜெருஸியா சேரிடபிள் பவுண்டேஷன் இவர் 19, லட்சுமி அம்மன் கோவில் தெரு, புழல் என்ற இடத்தில் வைத்துள்ளதாக தெரிய வந்தது[6]. “புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த  பால் கிளாட்சன் (45)” என்று இப்பொழுது செய்தியில் உள்ளது. பெயர்மாற்றம் செய்த விவரத்தில் தனது பிறந்த தேதி 09-02-1969 என்றுள்ளது. அப்படியென்றால், 42 வயது என்பது சரியாகிறது. ஆனால், அதில் தனது விலாசத்தை “2, மீனாட்சி தெரு, புழல், சென்னை – 600 066” என்று கொடுத்திருக்கிறார். அதேபோல “ஜெருஸியா சேரிடபிள் பவுண்டேஷன்” என்றதற்கும் இரண்டு விலாசங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று – 19, லட்சுமி அம்மன் கோவில் தெரு, புழல், புழல் ஜெயிலுக்கு எதிரில்[7], 2. 70. செயின்ட் ஆன்டனி பிரதானத் தெரு, புழல் என்று கொடுத்துள்ளர். ஆக, தருமஸ்தாபனம் நடத்தும் பால் கிளாட்சனும், ஆவடி டேவிட்டை ஏமாற்றிய பால் கிளாட்சனும் ஒன்றுதான். இவருக்கு எச்.ஐ.எம். டிரஸ்ட் மற்றும் ஜான் பிரபாகரனுக்கும் தொடர்பு உள்ளது என்பது, “ரூ. 3 கோடிகளை பால் கிளாட்சன் என்பவருக்கும்” கொடுக்கப்பட்டது என்பது மூலம் ருஜுவாகிறது.

 

Paul Gladson money-spinning.August 2012

Paul Gladson money-spinning.August 2012

ஜெருஸியா  சேரிடபிள்  பவுண்டேஷன், கருணை  இல்லம், ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ் முதலியன (1997 முதல் 2007): “ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ்” என்ற தர்மஸ்தாபனம் சென்னையில் டா. பால் கிளாட்சன் 1993ல் துவங்கினார்[8]. அது ஜெருஸியா பவுன்டேஷன் கீழ் அனாதை மற்றும் இதர குழந்தைகளுக்காக செயல்படுகிறது. “கருணை இல்லம்” என்ற பெயரில் பாளையங்கோட்டையில் 28 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாவது கிளை 1997ல் திருநெல்வேலியில் 62 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்றாவது கிளை 2007ல் சென்னையில் 12 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்திய டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது (REG NO-921/08). இதன் டிரஸ்டிகள், பின்வருமாறு[9]:

 1. பால் கிளாட்சன்
 2. ஜுலியஸ் ஜி. ராஜா சிங்
 3. ஜே. இன்பரசி.
 4. சிகாமணி.
 5. கிரேஸ் ஜோதிமணி

ஆனல், இணைதளத்தில் “வியாபார நிறுவனம்” என்ற முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. தாங்கள் விற்கின்ற பொருட்கள்:

 1. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு.
 2. ஏழைக் குழந்தைகளுக்கு உணவு.
 3. மருத்துவ உதவி.
 4. இருக்க இடம்.
 5. விதவைகளுக்கு ஆதரவு.

என்று படங்களுடன் போட்டுக் கொண்டது. ஆக, இத்தகைய “சேவை” என்பதெல்லாம், வியாபாரம் தான் என்று நன்றாகவே நிரூபித்துக் கொண்டனர்.

 

Jerushia Foundation products sold

Jerushia Foundation products sold

ரூ.500 கோடி வசூலித்து ஜான் பிரபாகரன் மாயம், மனைவி ஜூலை 2013ல் கைது: திருமுல்லைவாயலை சேர்ந்தவர் ஜான் பிரபாகரன் (38) ஹெச்ஐஎம் என்ற தொண்டு நிறுவனம் தொடங்கினார். இதில் ரூ.2,100 முதலீடு செய்தால் மாதம் ரூ.1,250ம், வருட முடிவில் ரூ.13,750ம் தருவதாக பாதிரியார்களிடம் உறுதி அளித்தார். அதேபோல் ரூ.10,500 செலுத்தினால் மாதம் ரூ.6 ஆயிரம் வருட முடிவில் ரூ.59,500, ரூ.26,250 செலுத்தினால் மாதம் ரூ.13,750ம் வருட முடிவில் ரூ.1 லட்சத்து 51,250ம் வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டினார். இதை நம்பி ஏராளமான பாதிரியார்கள், பாஸ்டர்கள் என்று தாராளமாக பணம் கட்டினர். தேவாலயத்திற்கு வருபவர்களிடமும் பரிந்துரைத்தனர். இதை நம்பி, பலரும் தொண்டு நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.  தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் முதலீடு செய்தனர்.  ஆனால் சொன்னபடி பணம் தராமல் ஜான் பிரபாகரன் மாயமானார். ஏறத்தாழ ரூ.500 கோடி வரை அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்[10].  இதையடுத்து ஜான் பிரபாகரனையும் அவரது மனைவி சுகன்யாவையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஜான்பிரபாகரன் ஆந்திராவில் பிடிபட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், அவரது மனைவி சுகன்யாவை கைது செய்துள்ளதாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தர். மனைவி சிக்கியுள்ளதால், ஜான் பிரபாகரனும் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது[11].

 

ஆப்ரோ ஏசுதாஸ் மோசடி

ஆப்ரோ ஏசுதாஸ் மோசடி

அப்ரோ  நிறுவனம், ஹெச்ஐஎம்  தொண்டு  நிறுவனம் தொடர்பு உண்டா? (செப்டம்பர் 2012): மகளிர் குழுவினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படும் என்று அப்ரோ நிறுவனம் விளம்பரம் செய்தது. இதற்காக பொது மக்களிடம் முன் பணமும் பெறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் விதி முறை களுக்கு உட்பட்டு கடன் வழங்கப் படுவதாகவும் அந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனல், இந்த விளம்பரத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்து இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிரடியாக விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து முறை கேடாக குறைந்த வட்டியில் கடன் தருவதாக மோசடி செய்த அப்ரோ நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலரை ஆகஸ்ட் 2012ல் கைது செய்தனர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் அதன் உரிமையாளர் ஏசுதாஸ் மட்டும் இன்னும் போலீசாரிடம்  பிடிபடாமல் தலை மறைவாக உள்ளார். அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கியதாக தெரியவில்லை. அதேபோன்று ஹெச்ஐஎம் தொண்டு நிறுவனம் பெயரில் குறைந்த அளவில் பணம் கட்டினால் அதை விட அதிகமான பணம் தருவதாக கூறி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பண வசூல் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த ஜான் பிரபாகரனும் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவருக்கு வலது கையாக இருந்த 7 ஏஜென்டுகளும் இன்னும் போலீசாரின் பொறியில் சிக்கவில்லை. ஜான் பிரபாகரன் மற்றும் ஏசுதாசை பிடிக்க முடியாமல் போலீசார் தொடர்ந்து திணறிய வண்ணம் உள்ளனர்[12]. அக்டோபர் 2012ல் பெங்களுரில் பதுங்கியிருந்த ஏசுதாஸ் மற்றும் தேவி கைது செய்யப்பட்டனர் என்று பிறகு செய்திகள் வெளியாகின.

 

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3

ஜான்  பிரபாகரனும், ஹிம்  டிரஸ்டும், கோடிகள்  சுருட்டியதும் (2011-13): எச்.ஐ.எம். டிரஸ்ட் [HIM Trust] அல்லது ஹெவன்லி இன்டர் டினாமினல் மிஷம் டிரஸ்ட்  (Heavenly Inter Denominal Mission Trust) என்பது 2011ல் சிக்கிய பல கிருத்துவ நிதி மோசடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் மீது 2011ல் ஆந்திரபிரதேச நிதிநிறுவன பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கின் கீழ் [ section 5 of Andhra Pradesh Protection of Financial Establishment (APPDFE) Act 1999] மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் நம்பிக்கை துரோகம் [under sections 406 (criminal breach of trust)], ஏமாற்றுதல் [420 (cheating) ], குற்றவியல் ரீதியில் சதிதிட்டம் தீட்டுதல் [120-B (criminal conspiracy) of Indian Penal Code (IPC) ] மற்றும் போன்ற காரியங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது. எச்.ஐ.எம். டிரஸ்ட்டின் தலைவர் ஜான் பிரபாகர் இவ்வாறு கோடிகளை வசூலிக்க ஏஜென்டுகளை நியமித்ததற்காக ஆகஸ்ட் 2012ல் கைது செய்யப்பட்டார்[13]. சென்னையில் புகார்கள் பெருகியபோது, ஆந்திர சிறையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின[14]. இதனால், வசூல் செய்யப் பட்ட கோடிக் கணக்கான பணம் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால், 2011-13 காலக் கட்டத்தில் அவ்வாறு கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டது[15]. இவர்களது ஏஜென்டுகள் அசாமில் கூட பிடிப்பட்டனர்[16]. அப்பொழுது பணம் குறிப்பிட்ட கிருத்துவ நிறுவனங்கள் மூலம் புழக்கத்தில் விடப்பட்டது, வசூல் செய்யப் பட்டது என்ற விவரங்கள் வெளியாகின[17].

 

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

ஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1

கிருத்துவ முதலமைச்சர் ராஜசேகர காங்கிரஸ் உதவியுடன் நடத்தப் பட்ட கோடிகள் கிருத்து ஊழல் (அக்டோபர்.2012): அக்டோபர் 2012ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த அரசியல்வாதியான சங்கராந்தி கல்யாண் என்பவரை ஆந்திர சி.ஐ.டி.போலீசார் ரூ.50 கோடி பண மோசடிக்காகக் கைது செய்தனர்[18]. இவரும் இவரது நண்பர்களும் நியூ விஷன் பௌண்டேஷன் [New Vision Foundation (NVF)], ஹோலி கிரைஸ்ட் சர்ச் [Holy Christ Church], பாரத் பிரேம் சதன் டிரஸ்ட் [Bharat Prem Sadan Trust] மற்றும் யூத் மற்றும் கிருத்துவ நல்வாழ்வு பலப்படுத்தும் சங்கம் [Youth and Strength Christian Welfare Association] என்று பல நிறுவனங்களுடன் தொடர்பு இருந்தது. இவற்றின் மீது கூட பணமோசடி புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆந்திர போலீஸ் அறிக்கையின் படி, கீழ் கண்ட கம்பெனிகளின் மீது, 79 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன[19]:

 

 1. HIM Trust (Heavenly Inter Denominal Mission Trust),
 2. Bharat Prem Sadan,
 3. Youth & Strength Christian Welfare Association,
 4. Youth Alive Society,
 5. Trogopan Farmers Society,
 6. New Vision Foundation,
 7. Little Lamb Baptist Church Mission Trust,
 8. Jesus Preaches Association,
 9. Trinity Grace Ministry,
 10. Maranatha,
 11. Help to Poor International Trust,
 12. Center for Women Solidarity,
 13. RMP Infotech (Resource Money Power) and
 14. Online Survey World Organisation.

 

இவ்வாறு இத்தகைய கிருத்துவ நிறுவனங்கள் திடீரென்று சட்டங்கள் படி பதிவு செய்து கொண்டு, அலுவலகங்கள் வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதற்கும் கோடிக்க்கணக்கில் பணம் முதலீடு செய்யப் பட்டிருக்க வேண்டும். அவையெல்லாம் திடீரென்று ஆரம்பித்துவிட முடியாது. மேலும் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சுமுகமாக செயல்பட்டு, பணத்தை வசூல் செய்வது என்பது சாதாரணமான காரியம் அல்ல. எனவே இவற்றின் மூலம் கோடிக் கணக்கான பணம் வசூல் செய்யப் பட்டு, சுருட்டப் பட்டது எனும் போது, இது திட்டமிட்டு செய்யப் பட்ட காரியமாகும். சில கோடிகளைப் போட்டு, பல கோடிகளை அள்ளலாம் என்ற முறை வெளிப்படுகிறது. மேலும் சிறுபான்மையினர் / கிருத்துவர் நிறுவனங்கள் என்றால், அரசுதுறைகள், அதிகாரிகள் நமக்கேன் வம்பு என்று வேண்டிய காரியங்களை செய்து கொடுத்திருக்கலாம் அல்லது எம்.என்.சி பாணியில் வேகமாக காரியங்களை செய்து கொடுத்ததற்கு நன்றாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். இப்படி ஏகப்பட கிருத்துவ நிறுவனங்கள் சம்மந்தப் பட்டத்தை மறைக்க, இது ஏதோ ஒரு சாதாரண வியாபார மோசடி போலவும் திரித்துக் காட்டப் பட்டது. அதாவது, பல்வேறு அடுக்குகள் கொண்ட விற்பனைமுறை [Multi-Level Marketing Schemes (MLM)], வலைபோன்ற வியாபரமுறை []Network Marketing (NWM) மற்றும் பணம் இரட்டிப்பு என்றெல்லாம் விவரிக்கப் பட்டன[20]. ஆனால், பின்னணியில் இதே நிறுவனங்கள் தாம் இருந்தன என்பது தெரிய வந்தன. மேலும் அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததால் அமுக்கியே வாசிக்கப்பட்டது.

 

© வேதபிரகாஷ்

20-03-2014


[2] Trinity Mirror, CHENNAI Wednesday 13-11-2013, VOL. 19 No.126.

[9] JESUS LOVES MINISTRIES is a charitable trust organization based in Chennai, and this dedicated trust was founded by Dr. Paul Gladson in the year 1993. It was laid by the Jerushiya foundation and is functioning sucessfully with an  aim to make lives better for the orphan and helpless children. Dr.Paul Gladson, who is the current chairman started the good work and has motivated others to come forward and help in providing basic amenities to these little innocent creatures that have no one but us to help them grow into responsible and gentle citizens of our society. The trust began in PALAYANKOTTAI  in the name of “KARUNAILLAM” with twenty-eight children initially. After its smooth functioning a second branch was started at THIRUNELVELI in the year 1997, with sixty-two children and after ten years a third branch was established at CHENNAI  in 2007 with twelve children. It is registered under the INDIAN TRUSTS ACT 1882, REG NO-921/08. We are a trustworthy organization and truly work for the emancipation of these deserted children and poor, needy, lonely widows and protect them from all kinds of exploitation which they may face if not helped. Our motto is to deliver the needy when they cry, & help the poor when they need help. The Trust is managed by five trustees, Mr.Paul Gladson, Mr. Julius.G.Raja Singh, Mr.J. Inbarasi , Mr.Sigamani and Mr.Grace Jothimozhi who are making best efforts to provide these underprivileged children with all basic requirements as food, shelter, education, medical aid, entertainment & above all hope to live.

http://www.made-from-india.com/showroom/jerushiya-foundation/products/

[17] The money was circulated through various societies including HIM Trust (Heavenly Inter Denominal Mission Trust), Bharat Prem Sadan, Youth & Strength Christian Welfare Association, Youth Alive Society, Trogopan Farmers Society, New Vision Foundation, Little Lamb Baptist Church Mission Trust, Jesus Preaches Association, Trinity Grace Ministry, Maranatha, Help to Poor International Trust, Centre for Women Solidarity, RMP Infotech (Resource Money Power) and Online Survey World Organisation.

http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=aug2112/oth07

[20] The CID has been cautioning people against joining money circulation schemes being operated in the guise of Multi-Level Marketing Schemes (MLM) or Network Marketing (NWM). Such schemes were banned under the Prize Chits and Money Circulation Scheme (banning) Act, 1978.

http://www.ndtv.com/article/south/man-behind-money-circulation-racket-nabbed-206274

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

3 பதில்கள் to “கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (1)”

 1. கிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகள Says:

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: