தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (1)!

தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (1)!

 

TELC-church-concil-2010

TELC-church-concil-2010

ரூ. 500-600 கோடிகள்  சொத்துக்களின்  அதிபதியாக  இருக்கும்  தமிழ்  மதப்பிரச்சார  லூதரன்  சர்ச்: தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் [The  (TELC)] என்பது சொஸைடி பதிவு சட்டத்தின் கீழ் 1919ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சங்கம் ஆகும்[1]. இதைக் கூட “தமிழ் சுவிசேஷ லூதரன் திருச்சபை” என்று அதிக மரியாதையுடன் தான் தமிழ் ஊடகங்கள் செய்திகளில் குறிப்பிட்டு வருகின்றன. “எவாஞ்சலிஸம்” என்றாலே மதப்பிரச்சாரம், மதமாற்றம் என்ற பொருளில் தான் கிருத்துவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், அதை தமிழில் இவ்வாறு திருத்தி பொருள் கொடுத்து உண்மையினை மறைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதற்கென 1,08,850 கூட்டங்கள், 113 பகுதிப்பிரிவுகள் பத்து மாவட்டங்களில் உள்ளன. இதற்காக பல கமிட்டிகளில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதன் கீழ் 9 உயர்நிலைப்பள்ளிகள், 128 நடுநிலைப்பள்ளிகள், 2 முதியவர் இல்லங்கள், 28 அனாதை இல்லங்கள், ஒரு மருத்துவமனை, ஒரு கல்லூரி, 2 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் என உள்ளன. ஆரம்பகாலத்திலிருந்தே சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த சர்ச்சில் ஏகப்பட்ட சண்டை-சச்சரவுகள், வழக்குகள் இருந்து வந்துள்ளன. கிருத்துவ பாதிரிகள், பிஷப்புகள் மற்ற மதத்தலைவர்கள் எவ்வாறு தொடர்ந்து குற்றங்களை செய்து வருகிறர்கள் என்ற விவரங்களை www.christianityindia.wordpress.com தளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். இப்பொழுது 2010 முதல் 2014 வரை நடந்துள்ள நீதிமன்ற வழக்குகள் மற்றும் இந்த சர்ச்சின் வெளித்தோற்ற கொண்டாட்டங்கள் முதலியவற்றை கவனிக்கும் போது, என்னமாக நாடகம் ஆடுகிறார்கள் என்று தெரிகிறது.

 

TELC - 2010 - Committee

TELC – 2010 – Committee

நிலமோசடியில்  இன்னுமொரு  பிஷப்: 4 கோடி    ரூபாய்    மதிப்புள்ள  நிலத்தை  வெறும்   40 லட்சம்   ரூபாய்க்கு  விற்றுள்ளதாக  குற்றச்சாட்டு! (செப்டம்பர் 2010): பெரம்பூரில் உள்ள TELCக்கு சொந்தமான ஒரு சொத்து ரூ40 லட்சத்திற்கு விற்கப்பட்டது, ஆனால், பதிவாளர் அலுவகத்தில் ரூ.68 என்று காண்பிக்கப்பட்டது[2]. 2010களில் ஒரு மனையின் மதிப்பு ரூ. 1 கோடி என்றுள்ளது. ஆனால், இம்மனையின் அளவு 3300 sq.ft[3]. ஆகும், எனவே, நிச்சயமாக குறைந்த அளவில் விற்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.  இந்த விசயத்தில் தான் மார்டின் (பிஷப்) மற்றும் சார்லஸ் (செயலாளர்) இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது தெரிகிறது. நிருபர்களிடம் மார்ட்டின் கூறியதாவது:  “சபைக்கு சொந்தமான  4  கோடி  ரூபாய்  மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு  விற்றுள்ளனர்.   இதற்கு  சபையின் ஆலோசனைக்குழு  அனுமதி  அளித்திருந்தாலும்,  விற்பனையில் மோசடி  நடந்துள்ளது. சபைக்கு சொந்தமான பள்ளிகளில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு  பதவி  உயர்வு,  இடமாறுதல் ஆகியவையும்,  பிடிக்காதவர்களை  பழிவாங்கும்  நோக்கிலும், குருமார்களை  மரியாதை  குறைவாக  நடத்தியும்  வருகின்றனர். எனவே,  நிர்வாகக்குழுவை கலைத்து  விட்டேன். சபையின் அலுவலகத்தையும்  பூட்டி விடுமுறை  விட்டு விட்டேன். ஏற்கனவே  நிர்வாகக்குழு, பல  இடங்களை  மோசடியாக விற்றுள்ளதாக  புகார்  உள்ளது. எனக்கு  ஆபத்து  ஏற்படும் என்பதால்  கலெக்டரிடமும்,  போலீஸிலும்  புகார்  செய்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார். இதுமாதிரியான பரஸ்பர குற்றச்சாட்டுகள் உள்ளன. திரு ஜே. கனகராஜ் (ஓய்வு) நீதிபதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டதாக தீர்ப்பில் சொல்லப்பட்டது[4].

 

லுத்தரன் சர்ச் தேர்தல் திருச்சி

லுத்தரன் சர்ச் தேர்தல் திருச்சி

கிருத்துவக்  குழுக்களின்  பரஸ்பர  புகார்கள், வழக்குகள் (மேஜூன் 2010): எச். ஏ. மார்ட்டின் மற்றும் இ. டி. சார்லஸ் இருவரிடையே, சர்ச் விவகாரங்களில் உள்சண்டை இருந்து வந்தது. மே 2010ல் T.E.L.C என்ற சொஸைடிக்கு சிலர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஆனால், 14-09-2010 தேதியிட்ட ஒரு ஆணை மூலம், அச்சங்கத்தின் தலைவராக உள்ள பிஷப்பே எல்லா அதிகாரங்களையும் கொண்டார்.  இதனால், O.S.No.1001 of 2010 என்ற எண்ணில் திருச்சி கூடுதல் அமர்வு உபநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். பூட்டப்பட்ட [at Tranquebar House, Melapudur, Trichirappalli] அலுவலகத்தைத் திறக்கக் கோரி, போலீஸ் கமிஷனருக்கு ஆணையிடவும் கேட்டுக் கொண்டனர்[5]. இதற்குள், இவர்கள் பூட்டப்பட்ட அலுவலகத்தில் 14-11-2010 அன்று நுழைந்து உள்ள ஆவணங்களை அழித்துவிட்டனர் என்று எதிர்புகார் கொடுக்கப்பட்டது. இப்பிரச்சினைகள் டிவிசெனல்களிலும் காட்டப்பட்டன. இவ்விவரங்கள் வெளியாகியுள்ள நீதிமன்ற வழக்கு ஆவணங்களிலும் பதிவாகியுள்ளன[6].

 

சார்லஸ் மற்றும் மார்ட்டின் 2012

சார்லஸ் மற்றும் மார்ட்டின் 2012

பிஷப்  மார்ட்டினின்  புகார் (அக்டோபர்   2010): தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பிஷப் மார்ட்டின், “எங்கள் திருச்சபையில் கலவர அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் செகரட்டரி ஏவிய கொலைக் கூலிப் படையால் எனக்குக் கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. என் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறையிடமும் புகார் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருச்சபை, தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. கல்லூரிகள், பள்ளிகள், தேவாலயங்கள் என சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இந்தத் திருச்சபைக்கு உண்டு. கேரளம், அந்தமான், பாண்டிச்சேரி, ஆந்திராவில் விரிந்து பரந்துள்ள இந்த திருச்சபையின் தலைமையிடம் திருச்சியில் உள்ளது. அங்குதான் இந்த உயிர்ப்பயமும் ஊழல் குற்றச்சாட்டும்!  “கொலைக் கூலிப் படை” எனும்போது, தமிழகத்தில் அந்த அளவிற்கு மக்கள் மாக்களாக மாறிவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது.

 

திருச்சபை வழக்குகள்

திருச்சபை வழக்குகள்

என்ன  நடக்கிறது  உங்கள்  திருச்சபையில்? – நிருபர்கள்  கேட்டார்களாம்: “என்ன நடக்கிறது உங்கள் திருச்சபையில்?” -பிஷப் மார்ட்டினிடம் கேட்டோம். “ஜனவரி மாதம் நடந்த பிஷப் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன்செயலாளர் சார்லஸின் அக்கா கணவர் ஸ்டீபன் சுந்தர்சிங் என்னை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்றார். பிஷப்பாக நான் ஜெயித்து தேர்வு பெற்றேன். ஆனால் நிர்வாகக் கமிட்டிக்கு வெற்றி பெற்றவர்கள் அத்தனைபேரும் செயலாளர் சார்லஸ் ஆட்கள். என்னிடம் கேட்காமலே, எங்கள் குருமார்கள் 140 பேரில் 78 பேரை ஒரேநாளில் இட மாற்றம் செய்துவிட்டார் சார்லஸ். சென்னை புரசைவாக்கத்தில் மேகலா தியேட்டர் அருகில் 3300 சதுர அடி இடத்தை 4 கோடிக்கு விற்றுவிட்டு 40 லட்சம் கணக்கு காட்டினார்கள்[7]. இதனால் அந்த கமிட்டியைக் கலைத்தேன். அதனால்தான் தினம் தினம் குத்துவேன், வெட்டுவேன் என யார் யாரோ கொலை மிரட்டல் விடுகிறார்கள்என் அலுவலக பூட்டை உடைத்து ஆக்குபை செய்துகொண்டார்கள். விபரீதமும் கலவரமும் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால்தான் புகார் கொடுத்தேன்” என்கிறார் பிஷப் மார்டின்.  இவ்வாறு புகார் கொடுத்தவர்கள் வெளியில் ஒற்றுமையாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள் என்பதனையும் கவனிக்க வேண்டும்.

 

Martin Bishop 2009 The Hindu photo

Martin Bishop 2009 The Hindu photo

சார்லஸ்  தரப்பில்  குற்றச்சாட்டு   (அக்டோபர் 2010): திருச்சபை வளாகத்திற்குள் போலீஸ் படையுடன் நுழைந்த கோட்டை .சி. சீனிவாசனிடம் பேசினோம். சார்லஸ் குரூப்பை இங்கிருந்து வெளியேற்றிவிட்டோம். அந்த குரூப் பயன்படுத்திய வாகனங்களையும் கைப்பற்றிவிட்டோம். இனி கலவரம் ஏற்படாதுஎன்றார் .சி. தலைமறைவாக இருக்கும் திருச்சபை செயலாளர் சார்லஸை தொடர்பு கொண்டோம். “நிர்வாகக் குழுவைக் கலைப்பதற்கு பிஷப்புக்கு அதிகாரம் இல்லை. பழனி கோர்ட்டில் நாங்கள் இடைக்காலத் தடை வாங்கி விட்டோம். எல்லா பத்திரங்களும் அவரிடம்தானே இருக்கும்அவருக்குத் தெரியாமல் நாங்கள் மட்டும் எப்படி சொத்துக்களை விற்க முடியும்தனது சொந்தக்காரர்களுக்கு போஸ்டிங் போட வேண்டும். நிறைய பங்கு பணம் வேண்டும் என்று கேட்டுத்தான் இப்படியெல்லாம் செய்கிறார் பிஷப்என்கிறார் சார்லஸ். “தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பிஷப்பும் செகரட்டரியும் நெருங்கிய உறவினர்கள் தான். அவர்களே ஒருவருக்கொருவர் சேற்றை வாரிப் பூசிக்கொண்டு கலவரச் சூழலை உண்டாக்கி எங்களைக் கவலைப்பட வைக்கிறார்களே’ என்று லுத்தரன் கிறிஸ் தவர்கள் புலம்புகிறார்கள். உள்ள பிரச்சினையத் திசை மாற்ற மாநாடுகள், விழாக்கள் என்று போட்டி குழுக்கள் நடத்தினார்கள்.

 

© வேதபிரகாஷ்

05-03-2014


[1] The Tamil Evangelical Lutheran Church (TELC) was registered as a Society under the Societies Registration Act, 1860, in the year 1919. It is stated that one of the objects of the formation of the Society was to care for the salvation of its members. But, the institution is now plunged into so much of litigation in various Courts across the State to such an extent that its own salvation has become a big question mark.

[2] தினமலர், லுத்தரன் திருச்சபை நிர்வாகக்குழு கலைத்துபிஷப் அதிரடி நடவடிக்கை, செப்டம்பர் 16, 2010,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85822

[3] One example cited by the Bishop/President is about a property in Brick Kiln Road, Perambur, comprising of land measuring an extent of 3300 sq.ft. The property was sold for Rs.40.00 lacs and the sale deed shows that even the Sub Registrar valued the property at Rs.68.00 lacs. It is common knowledge that one ground of land in that locality (2400 sq.ft.) costs not less than Rs.1.00 crore. Therefore, I have no doubt in my mind that if that property had been their private property, the elected members of the Church Council would not have sold the same for Rs.40.00 lacs.

[4] RT.REV.DR.H.A.MARTIN & ANOTHER V/S THE TAMIL EVANGELICAL LUTHERAN CHURCH REP. BY ITS SECRETARY & OTHERS, decided on Tuesday, December 14, 2010.
[ In the Madras High Court (Madurai Bench), CRP (MD) Nos.2385 & 2386 of 2010 & Cont.P.(MD) Nos.643 & 681 of 2010. ]

http://www.lawyerservices.in/RtRevDrHAMartin-and-Another-Versus-The-Tamil-Evangelical-Lutheran-Church-rep-By-its-Secretary-and-Others-2010-12-14

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (1)!”

  1. தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்ற Says:

    […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: