கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)
இந்துமதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம்: புராதனமாக பல்லவர்கள் காலத்திலிருந்த கபாலீச்சுரம் கோவில் முன்பு கடற்கரையில் இருந்தது என்பதற்கான நாயன்மார்களின் பாசுரங்களிலிருந்து குறிப்புகள் உள்ளன. எனவே, 1543ல் போர்ச்சுகீசியர் அதனை இடித்துவிட்டு, சிறிய சர்ச்சைக் கட்டினர் என்றால், இப்பொழுதிருக்கும் சாந்தாம் சர்ச்சில் தான், தெய்நாயகம் ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், மயிலையில் கோவிலுக்கு அருகில் நடத்துகிறேன் என்பது கேவலமானது, அர்த்தமற்றது. மேலும், 23-02-2014 அன்று தெய்வநாயகத்திற்கு அனுமதி கொடுத்துள்ள பட்சத்தில், இந்துக்கள், சாந்தோம் சர்ச்சில் அல்லது அருகில், அதனை விட்டு வெளியேறு, இடத்தை கோவிலுக்கு ஒப்படை என்று கேட்டு ஆர்பாட்டம் நடத்தலாம், பொதுகூட்டமும் நடத்தலாம். இந்துக்கள், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இதனை முக்கியமாகக் கருதி செயல்படவேண்டும்.
இந்து இயக்கங்களில் ஒற்றுமை இல்லாதது: மே. 2010ல், தெய்வநாயகம் இதேபோல ஒரு பொதுகூட்டம் நடத்தினார். அப்பொழுது கோவில் அருகில் அனுமதி மறுக்கப்பட்டதால், ராஜரெத்னம் ஸ்டேடியத்தில் நடத்தினர்[1]. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் மிக்கக் கஷ்டபட்டு அனுமதி பெற்று 31-07-2010 அன்று பாரதீய ஜனசக்தி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, ராம்சேனா, ருத்ரசேனா என்ற பல அமைப்புகளின் சார்பாக ஒரு பொதுகூட்டம் நடந்தப்பட்டது[2]. இதற்குள் 13-05-2010 அன்று இ. ஆர். ஹரண் என்பவர் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் இந்து ஜாக்ருதி சமிதி, நந்தனார் பேரவை மற்றும் தேசிய சிந்தனையாளர் பேரவை [Hindu Janajagruthi Samithi, Nandanar Peravai (Nandanar Forum) and Desiya Sinthanaiyalar Peravai (National Thinkers Forum)] முதலியவை, ஏதோ போராட்டத்தில் ஈடுபட்டது போல குறிப்பிட்டிருந்தார்[3]. ஆனால், 31-07-2010 அன்று நடந்த கூட்டத்திற்கு இவர்கள் – குறிப்பிட்ட இயக்கத்தினர் – வரவில்லை[4].
கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர்: மு. தெய்வநாயகம் கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர். சிவபிரகாசர், தாயுமானவர் போறோரின் “ஏசுமத நிராகரணம்” போன்ற மறுப்பு நூல்களை எரித்த கேடுகெட்ட கிருத்துவ அடிப்படைவாத, மதவெறி மற்றும் தீவிரவாத கும்பல்களைவிட மோசமானவர். ஆனால், அப்பாவி இந்துக்கள் அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில்லை. கத்தோலிக்கக் கிருத்துவ ஆதரவுடன் ஊக்குவிக்கப் பட்டு வரும், இவர் தனக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வரும் ஒரு கிருக்கரும் கூட. இவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, அதனால் யாரும் இவரைக் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், சமீபகாலத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா என்பவர், இவரைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல், யாரோரோ சொன்னதை, எழுதியதை வைத்துக் கொண்டு, எல்லாமே தெரிந்தது போல, “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தின் மூலம் இந்த ஆளை மிகப்பெரிய ஆளாக மாற்றிவிட்டார். அரவிந்த நீலகண்டன் என்ற இணையாசிரியரும் தமிழில் அப்புத்தகத்தை எழுதி, அதைப் பற்றி பேச்சுகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, திக வீரமணியும் ஒரு கூட்டம் போட்டு இப்புத்தகத்தை, அவருக்கேயுரிய பாணியில் விமர்சித்தார். எது எப்படியாகிலும் தெய்வநாயகம் விசயத்தில் இருப்பினும், அதுவும் எடுபடவில்லை. கண்டுகொள்வார்கள் இல்லை.
கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது: குழந்தைகள் நிறைய பேர் இருக்கும் போது, சில குழந்தைகள் விஷமம் செய்து கொண்டிருக்கும். அவற்றில் சில மற்றவர்களின் கவனத்தை இழுக்க சேட்டைகளை செய்ய ஆரம்பிக்கும். அந்த சேட்டைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அளவுகளை மீறி, அசிங்கமான, ஆபாசமான, அருவருப்பான சேட்டைகளையும் செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது, வக்கிரம் பிடித்த சில ரசிகர்கள் ஆதரித்து மகிழலாம். ஆனால், சிறிது நேரத்தில் அவர்களுக்கே, அவை வெறுத்துவிடும். உடனே, அந்த சேட்டைக் குழந்தைகளை அடக்கி வைப்பர், அல்லது அடித்தும் ஒடுக்கி வைப்பர். அதுபோலிருக்கும் கிருக்குக் குழந்தையைப் போன்றது தான் இந்த தெய்வநாயகம். இது தொடர்ந்து சென்னை பிஷப்புகளினால் ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. கணேஷ் ஐயர் வழக்கில் சிக்கிக் கொண்ட அருளாப்பாவிலிருந்து, நிலமோசடி வழக்குகளில் சிக்கிக்கொண்ட சின்னப்பா வரை, இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிறிது கலாட்டா செய்தால், யாதாவது ஆதாயக் கிடைக்கும், கொஞ்மாவது கவனம் தன் பால் திரும்பும் என்று எதிர்பார்த்துதான், இந்த ஆர்பாட்டம் என்றும் தோன்றுகிறது. ஏனெனில், “ஏசு அழைக்கிறார்” கூட்டமே, மோடியை ஆதரிக்கும் நேரத்தில், இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.
இந்துவிரோதிகளின் பின்னணியைக் கூட அறியாமல் இருக்கும் இந்து போராளிகள்: இந்து இயக்கங்கள், தமிழகத்தில் சிதறிக்கிடக்கின்றன. இந்து முன்னணி (ராம கோபாலன்), இந்து முன்னணி (இரண்டு, மூன்று உதிரிகள்), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்), இந்து மக்கள் கட்சி (இரண்டு, மூன்று உதிரிகள்), சிவ சேனா (தமிழ் நாடு), இந்து மஹா சபா (ஆளாளுக்கு ஒன்று, இப்பொழுதோ ஐதாறு பேர்கள் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டுள்ளர்கள்)……………….இப்படி பலவுள்ளன. ஆனால், இவை சுதந்திரமாக செயல்படாமல், ஏதோ ஒரு அரசியல் கட்சி அல்லது சித்தாந்தங்களுக்கு உட்பட்டுக் கிடப்பதால், இத்தகைய இந்து-விரோத காரியங்களை எதிர்ப்பதில் தாமதம், தொய்வு, முரண்பாடுகள் மற்றும் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில், இதில் பலருக்கு விசயம் என்னவென்றே தெரியாது. அவ்விசயத்தில் விஷமம் செய்து வரும் வேடதாரிகளும் தெரியாது; அவர்கள் யார், பின்னணி என்ன என்றும் தெரியாது; ஏன் அவர்களை அடையாளம் காணக் கூட தெரியாது. ஆனால், சில நேரங்களில், பத்து-இருபது பேர் “பாரத் மாதா கீ ஜே” என்று கத்திவிட்டு சென்று விடுகின்றனர். வேதநாயகம் விசயத்திலும் அப்படித்தான் இருந்து வருகிறது.
தெய்வநாயகம் இந்து சாமியார் போல வந்து தர்ம ரக்ஷ்ண சமிதி மாநாட்டிற்கு வந்தது: தர்ம ரக்ஷ்ண சமிதியின் சார்பில், காமராஜர் அரங்கத்தில் மாநாடு நடந்த போது, தெய்நாயகம் ரூ.20/- செல்லுத்து, பதிவு செய்து கொண்டு, அரங்கத்தில் நண்பர்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு விட்டார். பெரிய சாமியார் போல காவியுடை, தாடி என்று வந்ததால், இந்துக்கள் அவருக்கு நமஸ்காரம் செய்து, வாங்க ஜி, உள்ளே வாங்கஜி, உட்காருங்கள் ஜி என்ற உபசாரம் வேறு. இதைப் பார்த்தவுடன் தான் எனக்கு விசயம் தெரிந்தது, அவர்களுக்கு, அதாவது மாநாட்டை நடத்தும் யாருக்கும், இந்த அப்பாவி தொண்டர்களுக்கும், தெய்வநாயகம் யார், அந்த ஆளின் பின்னணி என்ன என்ற விசயங்கள் ஒன்றும் தெரியாது என்று தெரிய வந்தது. ஆனால், தெரிந்தது போல பேசுவார்கள்!
கிறிஸ்தவர் என்று தெரிந்த பிறகு தெய்வநாயகம் வெளியேற்றப் பட்டது: குருமூர்த்தியிடம் மெல்ல விசயத்தை சொன்ன போது, “என்ன, இவர் என்ன சொல்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லையே”, என்றுதான் பதிலுக்குப் பேசினார். உடனே, ஆர். எஸ். நாராயணசாமியைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னேன். அவர் சொன்ன பிறகுதான், குருமூர்த்திக்கு புரிந்தது போலும். உடனே, “யாரது, அவரைக் காட்டுங்கள்” என்று வேகமாக என்னிடம் வந்தார். நான் நாராயணசாமியிடம் அடையாளம் காட்டி, அவரிடம் காட்டுமாறு சொல்லி விலகிவிட்டேன். குருமூர்த்தி, இரு போலீஸ்காரர்களைக் கூப்பிட்டு, அரங்கத்தில் உட்கார்ந்திருந்த “இந்து சாமியார்” போல உட்கார்ந்திருந்த தெய்நாயகத்தை வெளியேற்ற சொன்னார். காரணம், ஒரு கிருத்துவர், இந்து மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார், என்பதுதான். போலீசார், அவரை வெளியே வரச் சொன்னார்கள். தெய்நாயகம் வெளியே வந்ததும், அவரை யார் என்று விசாரித்தனர். உண்மையினை சொன்னதும், கிருத்துவர் என்பதால், “அது அவங்க கூட்டம், நீங்க ஏன் கலந்துக்கிறீங்க?” என்று கேட்டனர். “I have paid delegate fees, I have every right to attend the conference”, என்று ஆங்கிலத்தில் கூட கத்த ஆரம்பித்தார். ஆனால், போலீசார் வெளியே அழைத்துச் சென்று, சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர்.
இந்துக்கள் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியம்: இந்துக்களுக்குப் புரிய வேண்டும் என்றுதான் இதனை பதிவு செய்கிறேன். இந்துக்கள் அந்த அளவிற்கு விசயங்களைப் புரிந்து கொள்ளாமல், தயார் நிலையில் இல்லாமல், யாராவது விசயங்களைத் தமக்குக் கொடுத்தால், பழைய புத்தகங்கள், செய்திதாள் துண்டுகள் கொடுத்தால், அவற்றை வைத்துக் கொண்டு, ஏதோ எல்லாம் தெரிந்தது போல எழுதுவது, பேசுவது என்றி திராவிட சித்தாந்திகளைப் போன்றே, இன்றைய இந்து சித்தாந்திகள், இந்துத்வவாதிகள் தாயாராகி இருக்கிறார்கள். உண்மையினை சொன்னால், அவரை மதிக்காமல் இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற நிலையிலும் உள்ளார்கள். ஆனால், இந்துவிரோதிகள் இவற்றை தாராளாமாகவே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 23-02-2014க்குள் இந்துக்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்துப் பார்ப்போம்!
வேதபிரகாஷ்
© 19-02-2014
[1] http://secularsim.wordpress.com/2010/05/05/the-christian-interference-intrusion-and-invasion-of-kapalkeswarar-temple-myalapore-chennai-india/
[2]https://christianityindia.wordpress.com/2010/08/01/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/
[4] திருமதி ராதாராஜன் என்பவர் வந்தார், ஆனால், தனக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்றதும் சென்றுவிட்டார். முதலில் அவர், இவ்வியக்கங்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கவில்லை, எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென்று, மேடையில் ஏறி நானும் பேசுகிறேன் என்றபோது, அமைப்பாளர்களின் முடிவுக்கேற்பத்தான் செயல்பட வேண்டிருக்கும் என்பது தெரிந்த விசயமே. அதாவது கொள்கைக்காக போராட வேண்டுமே தவிர, தனிமனித முக்கியத்துவம், புகழ், யார் அதிகமாக போராடியுள்ளார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டு காரியங்களை செய்யலாகாது.
குறிச்சொற்கள்: ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அரவிந்தன் நீலகண்டன். வேதபிரகாஷ், ஆன்மவியல், எஸ்ரா சற்குணம், ஏசு, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க மையம், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், கார்டினல், சின்னப்பா, தெய்வகலா, தெய்வநாயகம், தேவசகாயம், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மயிலை, மர்ஃபி அறிக்கை, மைலை, ராஜிவ் மல்ஹோத்ரா, வாடிகன், வியாபாரம்
11:53 முப இல் பிப்ரவரி 22, 2014 |
[…] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullibl… […]
8:49 முப இல் பிப்ரவரி 26, 2014 |
The Hindus have been so naive and each Hindu group thinks that it has been the only rightful party to criticise christians of muslims.
Then that group neglects others.
When any of the other group gets prominence, it does the same.
Yet another group gets prominence, it takes over.
Thus it goes on.
Meanwhile, the persons of each group alight and realign to accuse each other and also continue their half-baked work against the christians and muslims.
Whereas, they have been professionalized and institutionalized to caarry on their propaganda with all their money-power etc.
11:38 முப இல் பிப்ரவரி 13, 2015 |
அமைதியாக இரு!
1:23 பிப இல் பிப்ரவரி 13, 2015 |
கோபித்து பிரயோஜனம் இல்லை.
தெய்வநாயகம் போன்ற ஆட்களிடம் போய் சொல்லவேண்டும்!
11:08 முப இல் திசெம்பர் 20, 2015 |
[…] [12] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullib… […]
11:15 முப இல் திசெம்பர் 20, 2015 |
[…] [12] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullib… […]
12:04 பிப இல் ஜூன் 19, 2016 |
[…] [9] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullib… […]
12:09 பிப இல் ஜூன் 19, 2016 |
[…] [9] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullib… […]
1:25 முப இல் மே 10, 2017 |
A million thanks for posting this infmooatirn.