கற்பழிப்பு, கருக்கலைப்பு பாதிரி பதவி நீக்கம் செய்யப்பட்டாராம் – ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் திடீர் அறிக்கை!

கற்பழிப்பு, கருக்கலைப்பு பாதிரி பதவி நீக்கம் செய்யப்பட்டாராம் – ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் திடீர் அறிக்கை!

தலைமறைவான செக்ஸ்பாதிரி நீதிமன்றத்தில் சரண்: பேட்டை திருத்தேவாலய பற்று தந்தையான ஞானபிரகாசம் அந்தோனி செல்வன், ஒரு இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்து, ஐந்துமாதசிசுப் பிண்டத்தை செயின்ட் ஆன்டனி சர்ச் வளத்தின் கல்லறையில் புதைத்து விட்டார்[1]. போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவானார். தலைமறைவாக உள்ள பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்[2]. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் பாதிரியார் செல்வன் 20-12-2013 அன்று வேறுவழியில்லாமல், உத்தமபாளையம் கோர்ட்டில் சரணடைந்தார்[3]. அவரை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவான பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், நேற்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நீதிபதி கீதா முன், சரணடைந்தார். அவரை, டிச., 26ல், திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க ஆணையிட்டார். இதையடுத்து, பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[4].

ரைட் ரெவரென்ட் ஜூட் பால்ராஜ்: இவ்வளவு நடந்தும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்[5]. அதாவது, ஜூட் விட்டுவிட்டு ஒளிந்து கொண்டுள்ளார். முன்னர் போலீசார் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை என்றார்[6]. கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், இதைப் பற்றி மறைக்கிறார்கள். உலகமெலாம் கிருத்துவ செக்ஸ் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கின்றர்கள். போப்பே அதைப் பற்றிதான் சுற்றறிக்கை விட்டுக் கொண்டு, கேள்விகள் கேட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். ஆனால், அவர் பட்டியிலில் இந்த இந்திய செக்ஸ் பாதிரிகளின் பெயர்கள் சென்றடையவில்லை போலும்[7]. ஆனால், 24-12-2013 அன்று அவர் திடீரென்று ஊடகங்களுக்கு அறிக்கை விட்டாராம்.

பிஷப்  ஜூடு  பால்ராஜ்  வெளியிட்டுள்ள  அறிக்கை: கிருஸ்துமஸ் வருகின்ற நேரத்தில், இத்தகைய விசயங்கள் ஊடகங்களில் வருவதைத் தடுக்க ஒரே வழி என்ற ரீதியில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது போலும். கிறிஸ்தவ திருச்சபை சார்பிலும் செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் ஜூடு பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது[8]: “பேட்டை பங்குப்பணியாளர் பி.ஞானப்பிரகாசம் அந்தோணி செல்வன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அதன் பின்னணியில் எழுந்துள்ள விமர்சனங்களும் திருச்சபையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளன. சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கருக்கலைப்பு செய்தது போன்ற குற்றங்கள் வன்மையான கண்டனத்துக்கு உரியவை[9].

மாணவி  பாலியல்  பலாத்காரம்  பாதிரியார்   “சஸ்பெண்ட்[10]: இந்த செயல்கள் கிறிஸ்துவின் போதனைகளுக்கும், திருச்சபையின் சட்டங்களுக்கும், மனித சமுதாயத்துக்கும், அரசு சட்டங்களுக்கும் எதிரானவை. நடந்த நிகழ்வுகள் மிகவும் வருந்தத்திற்கு உரியவை. இவை இதயத்தில் வலியையும், ஆறாத வடுவையும் ஏற்படுத்தி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த நிகழ்வுகளின் பின்னணியின் படியும், திருச்சபை சட்டத்தின் படியும் ஞானப்பிரகாசம் அந்தோணி செல்வன் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம்[11].

  1. பேட்டை பங்கின் அருட்பணி பொறுப்புகளில் இருந்தும், பள்ளிகளின் நிர்வாக பொறுப்புகளில் இருந்தும் செல்வன் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். அந்த பணியை பாளையங்கோட்டை மறை வட்ட அதிபர் கவனிப்பார்.
  1. காவல்துறையினரால் செல்வன் மீது முதல் குற்றஅறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர், குருத்துவ பணியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுகிறார். திருச்சபை சட்டத்தின் 133–ன் படி திருப்பலி, திருவருட்சாதனங்கள் போன்றவற்றை பொது இடங்களில் அவர் நிறைவேற்ற முடியாது.
  1. இத்தகைய பிரச்சினைகளை கையாளும் விதமாக செல்வன் பற்றிய முதல் நிலை அறிக்கை வாடிகனுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
  1. செல்வன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபணமானால், வாடிகன் நிர்வாகம் அவருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும்.
  1. இந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்படும். இது தொடர்பாக நேர்மையான விசாரணைக்கு திருச்சபை சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்பதை உறுதி செய்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[12].

செல்வன்  மீது  சுமத்தப்பட்ட  குற்றங்கள்   நீதிமன்றத்தில்  நிரூபணமானால்,   வாடிகன்  நிர்வாகம்  அவருக்கு  கடுமையான  தண்டனைகளை  வழங்கும்: இப்படி சொல்லியிருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. “செல்வன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபணமானால்” என்றால்லேதோ இதுவரை நடந்ததெல்லாம், செய்திகளில் வந்ததெல்லாம் கூட இன்னும் நிஜமல்ல என்ற தோரணையில் அறிக்கை விட்டிருப்பது, வாடிகனின் மறைப்பு வேலையைத்தான் காட்டுகிறது எனலாம். “வாடிகன் நிர்வாகம் அவருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும்”, என்றால், இதுவரை, நூற்றுக்கணக்கான பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்களுக்கு, வாடிகன் என்ன தண்டனை கொடுத்தது என்று தெரியவில்லை. இவர்கள் ஏதோ, இந்திய சட்டதிட்டங்கள் எல்லாம் தமக்குப் பொறுந்தாது என்ற ரீதியில் பேசுவதும் விபரீதமாக உள்ளது. இத்தகையப் போக்கினால் தான், கற்பழிப்புஇப் பிஷப் ஊட்ட்யில் ஜாலியாக வாழ்ந்து வந்திருக்கிறார். கேட்டால், அங்கிருப்பதுதான், அவருக்குக் கொடுக்கப் பட்ட தண்டனை என்று விளக்கமுன் அளித்தனர். இனி இவர் விசயத்தில் என்ன நடக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-12-2013


[5] Repeated attempts to get Palayamkottai RC Diocese’s official version on this development proved futile as Bishop Rev. A. Jude Paulraj was tight-lipped.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

[9] தினமலர், பள்ளிமாணவிபாலியல்பாதிப்பு:பாதிரியார்சஸ்பெண்ட், பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013,19:51 IST

[10] தினமலர், மாணவிபாலியல்பலாத்காரம்பாதிரியார்சஸ்பெண்ட், பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2013,02:43 IST

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: