செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து சிசுவின் பிணம் தோண்டியெடுக்கப் பட்டப் பிறகும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் மௌனம் சாதிக்கிறாராம்!

செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து சிசுவின் பிணம் தோண்டியெடுக்கப் பட்டப் பிறகும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் மௌனம் சாதிக்கிறாராம்!

Foetus exhumed tested but Diocese head kept mum

பாட்டு சொல்லிக் கொடுக்கிறேன் என்று கெடுத்த பாதிரி: நெல்லை மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கே.கைலாசபுரத்தை சேர்ந்தவர் செல்வன் (34). திருநெல்வேலி, பேட்டையில் உள்ள, புனித அந்தோணியார் பள்ளியின் பாதிரியாராகவும், தாளாளராகவும் இருந்த இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் நெல்லை பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் சர்ச்சுக்கு வந்து சென்றபோது, அவருக்கு பாட்டு சொல்லி தருவதாக கூறி, அவரை தனது பங்களாவுக்கு அழைத்து சென்று பலமுறை பாதிரியார் செல்வன் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். சர்ச் வளகத்தில் உள்ள வீட்டில் இவ்வாறு நடந்தது யாருக்கும் தெரியாமல் இருந்ததா என்பதும் வியப்பாக உள்ளது அல்லது செல்வன் அந்த அளவிற்கு திட்டமிட்டே செய்துள்ளார் என்றாகிறது.

Nellai rape - The burried foetus taken out - Church suppresses facts

அபார்ஷன், சிசு பிணம் புதைப்பு முதலியன: இதையடுத்து பாதிரியார் ஆலோசனையின் பேரில் மாணவியின் பெற்றோர் நெல்லை டவுனில் உள்ள ஒரு டாக்டரிடம் மாணவியை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர். இதற்கு ரூ. 25,000/- கொடுத்தாராம்[1]. மாணவியின் வயிற்றில் இருந்த 5 மாத சிசுவை, பேட்டை ஆதம் நகர் அருகே உள்ள மருத்துவமனையில் அறுவைஒசிகிச்சை மூலம் வெளியே எடுத்து, செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையில் உறவினர்களுடன் உதவியுடன் புதைத்தனர். பாதிரியின் உறவினர் அல்லது மற்றவர் கிருத்துவர்கள் என்பதினால், இவர்கள் எல்லோருமே திட்டமிட்டுதான் வேலை செய்துள்ளனர் என்றாகிறது. கிருத்துவர்களின் சமாசாரம் என்றதால் இவ்வாறு மூடி மறைக்க, புதைக்கப் பார்த்தனர் போலும். ஆனால், இந்த விவரம் வெளியில் தெரியவரவே, மாணவியின் தந்தை நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அனைத்து மகளிர் போலீசார், பாதிரியார் மீது கற்பழிப்பு, மிரட்டல், பாலியல் தடுப்பு பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர்[2]. போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதையறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீஸ் விசாரணையில் பாதிரியார் செல்வன் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nellai rape - The burried foetus taken out

மூன்று பெண்களிடம் செக்ஸ் தொந்தரவு செய்த பாதிரி: பாதிரியார் செல்வன் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது பங்களாவில் வேலை செய்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன[3]மானல், ஊடகங்கள் அவற்றை வெளியிடவில்லை. இது தொடர்பாக அவரது உதவியாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என்கின்றன. ஆனால், அந்த “உதவியாளர்” எப்படி சொல்வார்? லெனின் போன்ற நக்கீரன்கள் இப்பொழுது கண்களைத் திறந்து கொண்டு வரவில்லை. இதையெல்லாம் விசாரணை செய்தால் திருச்சி பிஷப் கன்னியாஸ்திரி கற்பழிப்பு போலத்தான் விரியும் போலிருக்கிறது. ஆனால், இந்திய கிருத்துவ மேலிடங்கள், பெண்கள் உரிமை, சிறார் உரிமை முதலியவற்றைப் பற்றியெல்லாம் கூச்சலிடும் கிருத்துவக் கூட்டங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.5

சிசுவின்  உடல்  தோண்டி  எடுக்கப்பட்டு  அங்கேயே  நடந்த பரிசோதனை: பாதிக்கப்பட்ட மாணவிக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. மேலும் புதைக்கப்பட்ட சிசுவின் உடல் 20-12-2013 அன்று திருநெல்வேலி தாசில்தார் பாலசுரமணியன் மற்றும் டாக்டர் செல்வ முருகன், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதலியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பரிசோதனை நடந்தது (இப்படி தினகரன் கூறுகிறது). ஆனால், சோதனைக்கு பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டு ஆராயப்பட்டது என்று மற்ற நாளிதழ்கள் கூறுகின்றன[4]. ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் சில சதை துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. “அதை அங்கேயே சோதனை செய்த டாக்டர், டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது”, என்று நக்கீரன் கூறுகிறது[5]. இதில் புதைக்கப்பட்டது ஆண் சிசு என்பது தெரியவந்தது[6]. அந்த கல்லறை செயின்ட் ஆன்டனி சர்ச்சிற்கு சொந்தமானது, நிர்வாகத்தில் உள்ளது[7]. சர்ச்சுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு நடக்கும் போது, கிருத்துவ மேலிடங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்பது கவனிக்கத் தக்கது.

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.3

தலைமறைவான  செக்ஸ்-பாதிரி  நீதிமன்றத்தில்  சரண்: தலைமறைவாக உள்ள பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்[8]. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் பாதிரியார் செல்வன் நேற்று மாலை உத்தமபாளையம் கோர்ட்டில் சரணடைந்தார்[9]. அவரை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவான பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், நேற்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், நீதிபதி கீதா முன், சரணடைந்தார். அவரை, டிச., 26ல், திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க ஆணையிட்டார். இதையடுத்து, பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்[10].

Nellai christian pastor rapes a girl and makes her pregnant.2

ரைட்  ரெவரென்ட்  . ஜூட்  பால்ராஜ்: இவ்வளவு நடந்தும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் வாயை மூடிக் கொண்டு இருக்கிறாராம்[11]. அதாவது, ஜூட் விட்டுவிட்டு ஒளிந்து கொண்டுள்ளாராம். முன்னர் போலீசார் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை என்றார்[12]. கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் என்றெல்லாம் நடத்துகிறார்கள், ஆனால், இதைப் பற்றி மறைக்கிறார்கள். உலகமெலாம் கிருத்துவ செக்ஸ் பற்ரிதான் பேசிக்கொண்டிருக்கின்றர்கள். போப்பே அதைப் பற்றிதான் சுற்றறிக்கை விட்டுக் கொண்டு, கேள்விகள் கேட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். ஆனால், அவர் பட்டியிலில் இந்த இந்திய செக்ஸ் பாதிரிகளின் பெயர்கள் சென்றடையவில்லை போலும்!

வேதபிரகாஷ்

© 21-12-2013


[2] தினமலர், புதைக்கப்பட்ட சிசு தோண்டி எடுப்பு: ஓடிய பாதிரியார் கோர்ட்டில் சரண், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2013,23:17 IST

[4] Foetus sent to lab for analysis – The five-month foetus was exhumed in the presence of Tirunelveli Tahsildar Balasubramanian and Dr. Selvamurugan of Tirunelveli Medical College. It was later sent to laboratory for analysis.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

[6] தினகரன், நெல்லை மாணவி பலாத்காரம் 5 மாத சிசு உடல் தோண்டி எடுத்து சோதனை, 20-12-2013.

[7] surgically removed  foetus was buried in the graveyard under the control of St. Antony’s Church administration.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

[11] Repeated attempts to get Palayamkottai RC Diocese’s official version on this development proved futile as Bishop Rev. A. Jude Paulraj was tight-lipped.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/priest-surrenders-foetus-of-rape-victim-exhumed/article5483795.ece

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

2 பதில்கள் to “செயின்ட் ஆன்டனி சர்ச் நிர்வாகத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து சிசுவின் பிணம் தோண்டியெடுக்கப் பட்டப் பிறகும் பாளையன்கோட்டை ரோமன் கத்தோலிக்க மடத்தின் தலைவரான ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ராஜ் மௌனம் சாதிக்கிறாராம்!”

  1. கற்பழிப்பு, கருக்கலைப்பு பாதிரி பதவி நீக்கம் செய்யப்பட்டாராம் – ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ர Says:

    […] [7] https://christianityindia.wordpress.com/2013/12/21/fetus-exhumed-catholic-priest-surrendered-but-bish… […]

  2. கற்பழிப்பு, கருக்கலைப்பு பாதிரி பதவி நீக்கம் செய்யப்பட்டாராம் – ரைட் ரெவரென்ட் ஏ. ஜூட் பால்ர Says:

    […] [7] https://christianityindia.wordpress.com/2013/12/21/fetus-exhumed-catholic-priest-surrendered-but-bish… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: