அரசு அங்கன்வாடி மையம், கிருத்துவப் பிரச்சாரம், மக்கள் எதிப்பு – தேவை நடவடிக்கை!

அரசு அங்கன்வாடி மையம், கிருத்துவப் பிரச்சாரம், மக்கள் எதிப்பு – தேவை நடவடிக்கை!

Dinasmalar-photo-Christian propaganda in Balvadiபுளியந்தோப்பு கிறிஸ்தவப் பிரச்சினைகளில் அடிக்கடி அடிபடுகிறது[1]:  வியாசர்பாடி, சத்யமூர்த்தி நகர், எம்.கே.பி.நகர் மற்றும் கொடுங்கையூர் கொண்ட இப்பகுதி அதிகமாக குற்றங்கள் நடக்கும் பகுதியாகவும் உள்ளது[2]. பாலவாடியிலிருந்து சிறுமிகளைக் கடத்துவது[3] போன்ற நிகழ்சிகளும் நடந்துள்ளன. இப்பகுதியை சேர்ந்த ஒருவர் பலதார திருமண மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு[4]. ஆகவே இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் இயக்கங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள். ரகசியமாகவே இருந்துள்ளன. இந்நிலையில் தான், அங்கன் வாடியில், கிருத்துவப் பிரச்சாரம் என்ற செய்தி வருகிறது.

 

ஷேக் தாவூத்தின் கும்பலில் அவனது மைத்துனர் வரதராஜு (வயது 52), வரதராஜுவின் முதல் மனைவி சலீமா, 2-வது மனைவி ஜெபக்கனி, ஷேக்தாவூத்தின் மைத்துனி நவ்ஜீன் (35), பெரியமேடு மசூதியில் பிச்சை எடுக்கும் சபீரா (50) ஆகியோர் இருப்பது தெரிய வந்தது.

ஷேக் தாவூத்தின் கும்பலில் அவனது மைத்துனர் வரதராஜு (வயது 52), வரதராஜுவின் முதல் மனைவி சலீமா, 2-வது மனைவி ஜெபக்கனி, ஷேக்தாவூத்தின் மைத்துனி நவ்ஜீன் (35), பெரியமேடு மசூதியில் பிச்சை எடுக்கும் சபீரா (50) ஆகியோர் இருப்பது தெரிய வந்தது. மே 2005

அரசுஅங்கன்வாடிமையத்தில்மதபிரசாரம்: கடும்அதிருப்தியில்பகுதிவாசிகள்[5]: புளியந்தோப்பில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், நேற்று நடந்த மத பிரசார கூட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது. பகுதிவாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு பின்னும், அங்கு அதுபோன்ற பிரசாரக் கூட்டம் நடந்து வருவதும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாததும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரியார் நகரில், அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இரண்டு பெண்களின் மேற்பார்வையில் உள்ள இந்த மையத்தில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், தினசரி வருகின்றனர்.

 Shaddy women targeting Pulianthope

அங்கன்வாடிமையம்சொந்தஉபயோகத்திற்கு பயன்படுத்திவருவது – பலபுகார்கள்: அவர்களில், சமையலராக உள்ள பெண்ணின் வீடு, அதே பகுதியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அவர், அங்கன்வாடி மையத்தை, தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. குறிப்பாக, தனது உறவினர்களை, இரவில் தங்க வைப்பது, மையத்திற்கு உரிய ‘காஸ்’ சிலிண்டரை தனது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி விட்டு, குழந்தைகளுக்கான சமையலுக்கு, அடுப்புக் கரிகளை பயன்படுத்துவது, உணவுப் பொருட்களை கடத்துவது என, பல புகார்களை அவர் மீது பகுதிவாசிகள் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை இதுகுறித்து, எவ்வித விசாரணையும் நடக்கவில்லை. மற்றவர்களின் சம்பந்தம், கூட்டு இருக்கும் போது இதெல்லாம் சகஜம் தானே?

Sexy christianity - pastor sex Indiaபல மணிநேரம்கிறிஸ்தவ பிரச்சார கூட்டம் நடத்தப் பட்டது:
இதுதவிர, கடந்த ஓராண்டாக, கிறிஸ்தவ மத பிரசார கூட்டத்தையும் அங்கன்வாடி மையத்தில், அவர் நடத்தி வருகிறார். நேற்று காலை 7:00 மணிக்கு, அங்கன்வாடி மையத்தில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டம் துவங்கிய போது, பகுதிவாசிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, நேற்று முற்பகல் 11:00 மணி வரை, கூட்டம் நடந்தது. ஓராண்டு காலமாக நடத்தி வரும் போது, ஏன் திடீரென்று விழித்துக் கொண்டு புகார் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை. ஒருவருடம் பழக்கப்பட்டவர்கள் 4 மணிநேரம் பிரச்சாரத்தை எப்படி பொறுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை.

இதுகுறித்துபகுதிவாசிகள்கூறியதாவது[6]: அங்கன்வாடி மையத்தின் சமையலர், கடந்த ஓராண்டாக, கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை அங்கன்வாடி மையத்தில் நடத்தி வருகிறார். அரசு கட்டடத்தில், இவ்வாறு மதப் பிரசார கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம். ஆனால், அதைத் தட்டிக்கேட்டால், அவர் இந்த பகுதியில் உள்ள ரவுடிகள் சிலரின் துணையுடன், எங்களை மிரட்டி வருகிறார். இப்படி நடப்பது, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்[7]. “இவ்வாறு மதப் பிரசார கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம்”, என்று சொல்கிறாறர்கள், ஆனால், ஓராண்டு காலமாக நடந்து வந்துள்ளது.

ரவுடிகள்சிலரின்துணையுடன், எங்களைமிரட்டுதல், அதிகாரிகளுக்குதெரிந்திருத்தல், அவர்கள்கண்டுகொள்ளாமல் இருத்தல்: இவையெல்லாம், வழக்கமான நிலையைக் காட்டுகிறது. முன்னரே குறிப்பிட்டப்படி, புளியந்தோப்பு கிறிஸ்தவப் பிரச்சினைகளில் அடிக்கடி அடிபடுகிறது[8].  வியாசர்பாடி, சத்யமூர்த்தி நகர், எம்.கே.பி.நகர் மற்றும் கொடுங்கையூர் கொண்ட இப்பகுதி அதிகமாக குற்றங்கள் நடக்கும் பகுதியாகவும் உள்ளது[9]. இது போலீசுக்கே தெரிந்த விசயமாக உள்ளது. ஆகவே, உண்மையில் இப்பிரச்சினையைக் கட்டுப் படுத்த வேண்டுமானால், பெயர் குறிப்பிடப்படாத அந்த “அங்கன்வாடி மையத்தின் சமையலர்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபகாலத்தில், சிறுமியர்-சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவது அதிகமாகியுள்ளது. இதில் தமிழகம் முன்னேறியுள்ளது. சென்னையிலேயே, பிடோபைல் போன்றவர்கள் பிடிபட்டுள்ளனர். ஆகவே, இவ்விசயம் பெரிதாகும் முன்னர் நடவடிக்கை எடுப்பது நலம்.

© வேதபிரகாஷ்

05-11-2013


[5] தினமலர், அரசுஅங்கன்வாடிமையத்தில்மதபிரசாரம்: கடும்அதிருப்தியில்பகுதிவாசிகள் , பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2013,23:59 IST

மாற்றம் செய்த நாள் : நவம்பர் 04,2013,00:02 IST

குறிச்சொற்கள்: , , , , , , ,

4 பதில்கள் to “அரசு அங்கன்வாடி மையம், கிருத்துவப் பிரச்சாரம், மக்கள் எதிப்பு – தேவை நடவடிக்கை!”

 1. vedaprakash Says:

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=534296

  சென்னையில் அடிக்கடி இடத்தை மாற்றி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண், 10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றினார். ஏமாந்த வாலிபர்கள் 5 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். “செக்ஸ்’ வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

  சென்னையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்தவர் செகாநாத், 25. இவர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர். அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்.பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த சித்திஷ், 32 என்ற வாலிபரை, சில ஆண்டுகளுக்கு முன் செகாநாத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. செகாநாத்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவரிடம் இருந்து சித்திஷ் விவகாரத்து பெற்றார்.

  யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத், விபசாரக் கும்பலிடம் சிக்கினார். பத்தனம் திட்டா பகுதியில் ஹரி என்பவரைத் திருமணம் செய்து, அவருடன் 6 மாதம் வாழ்ந்தார். அவரது வீட்டில் “டிவிடி பிளேயர்’, நகையைத் திருடி தலைமறைவானார். திருச்சூரை சேர்ந்த பிஜு என்ற ஊனமுற்ற வாலிபரைத் திருமணம் செய்த செகாநாத், அவருடன் ஒரு வாரம் வாழ்க்கை நடத்தி விட்டு எஸ்கேப் ஆனார். ஏறக்குறைய கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்திய செகாநாத், தமிழகத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவர்களிடம், தான் ஒரு அனாதை என்று பேசி வந்தார்.செகாநாத்துடன் கடலை போடும் வாலிபர்களிடம், திடீரென காதலிப்பதாகக் கூறி, அவர்களிடம் பணம் கறந்து, திருமணம் வரை சென்றுள்ளார். ஒரு சிலருடன் முதல் இரவை முடித்ததும், எஸ்கேப் ஆகியுள்ளார்.வேளச்சேரியில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செகாநாத்திடம் ஏமாந்த திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறை சேர்ந்த சரவணன் மற்றும் தி.நகரை சேர்ந்த ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

  அதன் விவரம்:வழக்கறிஞருக்குப் படிப்பதாகக் கூறிய செகாநாத், மேற்படிப்புக்கு பணம் தேவை என கூறினார். எங்களைக் காதலிப்பதாகக் கூறியதால், வருங்கால மனைவி என நினைத்து, லட்சக்கணக்கில் செலவு செய்தோம். எங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மொபைல் எண்ணை மாற்றி விட்டு, தலைமறைவாகி விட்டார். அவர், எங்களைப் போன்று பல வாலிபர்களை ஏமாற்றி, திருமணம் செய்து நடுத்தெருவில் விட்டுச் சென்று விட்டார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் உட்பட 6 மொழிகளில் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தனர். மூன்று வாலிபர்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க, அடையாறு உதவி கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, நேற்று பிற்பகல் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு போரூரை சேர்ந்த மணிகண்டன், 28, புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, 28, ஆகியோர் திருமண போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்துடன் வந்தனர். அவர்களையும் செகாநாத் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.
  “நான் அவள் இல்லை’: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த மணிகண்டன் கூறியதாவது:தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த செகாநாத், 25 என்னிடம் மொபைல் போனில் அடிக்கடி பேசி காதலிப்பதாகக் கூறினார். வீட்டிற்கு தெரியாமல் நாங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டோம்.எனது பெற்றோருக்குத் தெரிய வந்ததும், கடந்த 2011 ல், எங்களுக்கு குன்றத்தூர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னுடன் 2 மாதம் தான் வாழ்ந்தார்.ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராவதால், வீட்டில் இருந்து படிக்க முடியவில்லை என தெரிவித்தார். சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு பின்புறமுள்ள மகளிர் விடுதியில் செகாநாத்தை சேர்த்து விட்டேன்.வாரம் ஒரு முறை சென்று அவரைப் பார்த்து வந்தேன். செகாநாத் வேறு சில ஆண்களுடன் பழகும் தகவல் எனக்குக் கிடைத்தது. அது பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் அவள் இல்லை’ என மறுத்தார்.ஒரு கட்டத்தில் என்னை விட்டு முழுமையாக விலகி விட்டார். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என போலீசில் புகார் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தேன். பத்திரிகையில் செகாநாத் விவகாரம் வெளி வந்ததால், என்னைப் போன்று வேறு யாரும் இனிமேல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புகார்கொடுத்துள்ளேன். செக்ஸ் வெறி பிடித்த செகாநாத், ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசையில் திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி விட்டார். 4 சவரன், 1.85 லட்சம் ரூபாய் அவருக்காக செலவு செய்துள்ளேன். இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.

  ஏமாந்த கால்பந்து வீரர்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, கூறியதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2006ம் ஆண்டு செகாநாத்தை சந்தித்தேன். பணம் பெறும் பிரிவில் இருந்தார். என்னுடைய மொபைல் போன் எண்ணிற்கு அடிக்கடி பேசினார். என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நான் முதலில் சம்மதிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினார். கால்பந்து வீரரான நான், விளையாட்டில் கவனம் செலுத்தியதால், அவரிடம் மாட்டிக் கொள்ளவில்லை.இந்தாண்டு ஜனவரி மாதம் டூவீலரில் சென்ற செகாநாத்தை எதேச்சையாக சந்தித்தேன். என்னிடம் அவர், “உனக்காகத் தான் இத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறேன். என்னைத் திருமணம் செய்யா விட்டால் உயிரை விட்டு விடுவேன்’ எனக்கூறி, அவரது கையில் கத்தியால் கீறிக் கொண்டார்.அதன் பிறகு தான் அவரை காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். புளியந்தோப்பில் உள்ள எனது வீட்டில் என்னுடன் 5 மாதம் வாழ்ந்தார்.கணவன், மனைவியாக அன்யோன்யமாக வாழ்ந்தோம். அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். மொத்தத்தில் அவர் மீது சந்தேகமே வரவில்லை. ஜாலியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். திருமணமான பெண்கள் இளம் வயதில் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்து நானும், அவரது ஆசைகளுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்தேன். நான் குடியிருந்த தெருவிற்கு அருகேயுள்ள தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்.அவருக்கும், செகாநாத்துக்கும் கடந்த 2006 ல் திருமணம் நடந்த தகவல் எனக்கு கிடைத்தது. புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சுரேஷ், புகார் கொடுத்தார். மகளிர் போலீசார் என்னை அழைத்து விசாரித்தனர். போலீஸ் நிலையத்திற்கு வந்த செகாநாத், “எனது கணவர் பிரசன்னா தான். சுரேஷ் என்பவரை யாரென்றே தெரியாது’ எனக்கூறினார். அதிர்ச்சியடைந்த சுரேஷ், செகாநாத்திடம், “நமக்குத் திருமணம் நடந்த பிறகு, வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசித்ததை மறந்து விட்டாயா. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டும் வரை குடிசை வீட்டில் இருந்தபோது, ஏற்பட்ட தீ விபத்தில் நம் திருமண போட்டோக்கள் எரிந்து விட்டன’ என கூறினார்.அப்போது மூன்று பேரிடமும் எழுதி வாங்கிய புளியந்தோப்பு மகளிர் போலீசார், செகாநாத்தை எச்சரித்து அனுப்பினர். வீட்டில் இருக்க முடியாது என கூறி வெளியேறிய செகாநாத், மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். திடீரென ஒரு நாள் வந்து 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என, கூறினார்.செகாநாத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தபோது தான், அவருக்குப் பல வாலிபர்களுடன் திருமணம் நடந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது. அவரை உண்மையாகக் காதலித்த என்னை ஏமாற்றி விட்டார். அவருக்காக 1.50 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். இனிமேல், அவர் அப்பாவி வாலிபர்களை ஏமாற்றாத வகையில் போலீசாரின் நடவடிக்கை இருக்க வேண்டும். செகாநாத் மீது திருவொற்றியூர், புளியந்தோப்பு, வேப்பேரி, வேளச்சேரி உட்பட சென்னை நகரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அப்புகார் மனுக்களை அலட்சியப்படுத்தாமல் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை திசை மாறி இருக்காது.இவ்வாறு, பிரசன்னா கண் கலங்கினார்.

  பார் கவுன்சிலில் செகாநாத் மீது புகார்:திருவொற்றியூரை சேர்ந்த சரவணனிடம், வழக்கறிஞருக்கு படிப்பதாகக் கூறி பணத்தை செகாநாத் கறந்துள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்த சரவணன், அவரது வழக்கறிஞர் மூலம் சென்னை ஐகோர்ட் பார் கவுன்சிலில், “வழக்கறிஞர் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் செகாநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகார் கொடுத்துள்ளார்.

  கமிஷனர் திரிபாதி அதிரடி காட்டுவாரா?சென்னை நகரில் பல போலீஸ் நிலையங்களில் மோசடி பெண் செகாநாத் மீது புகார்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. செகாநாத் மீது புகார் கொடுக்கச் சென்ற வாலிபர்களிடம் போலீசார், “அப்பெண்ணை நாங்கள் எங்கே போய் தேடுவோம். நீங்கள் பிடித்துக் கொடுங்கள். நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என கூறி தட்டிக் கழித்துள்ளனர். செக்ஸ் வெறி பிடித்து அப்பாவி இளைஞர்களை திருமண ஆசையில் வீழ்த்திய பெண்ணைக் கைது செய்ய கமிஷனர் திரிபாதி தனிப்படை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, ஏமாந்த வாலிபர்கள் எழுப்பியுள்ளனர். பல்வேறு போலீஸ் நிலையத்தில் உள்ள புகார் மனுக்களை எல்லாம், ஒன்றாகச் சேர்த்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • vedaprakash Says:

   சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: உரிமையாளர் மகனுக்கு 7 ஆண்டு சிறை

   தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 04,2013,22:48 IST

   http://www.dinamalar.com/news_detail.asp?id=727601&Print=1

   சென்னை: சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், நிறுவன உரிமையாளரின் மகனுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை, மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

   சென்னை, புளியந்தோப்பில், பெட்டி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவன உரிமையாளரின் மகன், லியாகத் அலி என்கிற ரஹீம். இந்நிறுவனத்தில், 16 வயதான சிறுமி, வேலை செய்து வந்தார். லியாகத் அலியின் குடும்பத்தினர், மும்பைக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், ஞாயிற்று கிழமையன்று, இருமடங்கு சம்பளம் தருவதாகக் கூறி, பணியாற்ற வருமாறு, சிறுமியை, லியாகத் அலி அழைத்துள்ளார். சிறுமியும், ஞாயிறன்று வேலைக்கு வந்துள்ளார். நிறுவனத்தின் கதவை மூடிவிட்டு, சிறுமியை, லியாகத் அலி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம், 2009ம் ஆண்டு நடந்தது. லியாகத் அலி மீது, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கை, மகளிர் கோர்ட் நீதிபதி மீனா சதீஷ் விசாரித்தார். போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் கவுரி அசோகன் ஆஜரானார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லியாகத் அலிக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 2. vedaprakash Says:

  புளியந்தோப்பில் கூலிப்படை தலைவன் துப்பாக்கி முனையில் கைது: 5 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன்
  பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 28, 2:44 PM IST சென்னை
  http://www.maalaimalar.com/2012/02/28144405/pulianthoppu-rowdi-arrest.html

  புளியந்தோப்பில் கூலிப்படை தலைவன் துப்பாக்கி முனையில் கைது: 5 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன்
  பெரம்பூர், பிப். 28, 2012-

  புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ். இவன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து சுரேஷ், தலை மறைவாக இருந்து கொண்டு கூலிப்படை அமைத்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தான். அவனை பிடிக்க கமிஷனர் திரிபாதி உத்தரவு படி தனிப்படை அமைக்கப்பட்டது.

  இந்த நிலையில் கடந்த வாரம் அவனது கூட்டாளிகள் ரமேஷ், மகேந்திரன், எழில ரசன் உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசா ரணையில் சுரேஷ் அடிக்கடி புளியந்தோப்பு நரசிம்ம நகரில் உள்ள வீட்டிற்கு மனைவியை பார்க்க வந்து சென்றது தெரிந்தது.

  இதையடுத்து அந்த பகுதியில் புளியந்தோப்பு துணை கமிஷனர் கார்த்தி கேயன், உதவி கமிஷனர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவில் அங்கு வந்த சுரேஷ், போலீசாரின் நடமாட்டத்தை பார்த்ததும் தப்பி ஓடினான். உடனே அவனை துப்பாக்கி முனையில் போலீ சார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவனிடம் இருந்து கத்தி, பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவுடி சுரேஷ் மீது பூந்தமல்லி வக்கீல் பகத்சிங் கொலை வழக்கு, ரவுடி சென்னாவை தீர்த்துக் கட்டியது, சைதாப்பேட்டை வெங்கடேசன், ஆந்திரா சீனிவாசராவ், சின்ன காஞ்சீபுரத்தில் பரமசிவம் ஆகியோரை கொலை செய்த வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 3. vedaprakash Says:

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக 15.06.2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது.

  http://www.tntj.net/92361.html

  “ஷஃபே பராத் உண்டா” மெகாபோன் பிரச்சாரம் – புளியந்தோப்பு கிளை
  செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, June 17, 2013, 19:37
  துணுக்கு செய்திகள் >> தெருமுனைப் பிரச்சாரம்

  வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளைசார்பாக கடந்த 08.06.2013 அன்று 4 இடங்களில் ஷபே பராத் எதிராக மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

  http://www.tntj.net/155451.html

  தற்கொலை,பேய் ,மந்திர தந்திரம் – புளியந்தோப்பு மெகா போன் பிரச்சாரம்
  செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, February 1, 2012, 18:18
  தெருமுனைப் பிரச்சாரம்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக மெகா போன் பிரசாரம் 13.01.12 அன்று சகோ அன்சாரி அவர்கள் தற்கொலை ,பேய் மற்றும் மந்திர தந்திரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

  http://www.tntj.net/70068.html

  இப்படி முஸ்லிம்களின் பிரச்சாரமும் இப்பகுதியில் நடைபெறுவது தெரிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: