ஈஸ்டர் கொண்டாட்ட கிரிக்கெட் விளையாட்டில் கலவரம், துப்பாக்கி சூடு – ஒரு கிருத்துவ குழு மற்றொரு கிருத்துவக்குழுவைத் தாக்கியதாம்!

ஈஸ்டர் கொண்டாட்ட கிரிக்கெட் விளையாட்டில் கலவரம், துப்பாக்கி சூடு – ஒரு கிருத்துவ குழு மற்றொரு கிருத்துவக்குழுவைத் தாக்கியதாம்!

Easter cricket violence1

தமிழ் ஊடகங்களின் பாரபட்சம்: தமிழ் ஊடகங்களின் செய்தி அறிவிக்கும் விதமே அலாதியானது தான். வேண்டும் என்றால், எதையெதையோ பெரிதாக ஊதி, தலைப்புச் செய்திகளில் வரச்செய்வார்கள். ஆனால், குறிப்பிட்ட விஷயம் வெளியில் வரக்கூடாது என்றால், ஒன்று அமைதியாக இருப்பார்கள் அதாவது எந்த செய்தியும்வெளியிட மாட்டார்கள் அல்லது ஒன்றும் தெரியாதது மாதிரி, படிப்பவர்களுக்கே புரியாதது மாதிரி செய்திகளை வெளியிடுவர். இதோ இந்த செய்தியைப் பாருங்களேன்:

Easter cricket violence2

நக்கீரன் சொல்வது: தங்கச்சி மடத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு[1]: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  தங்கச்சிமடம் அருகே கிரிக்கெட் விளையாடுவதில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பதற்றத்தை தணிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெறும் கிரிக்கெட் விளையாட்டு இவ்வளவு செய்யுமா?

Easter cricket violence3

தினமணி சொல்வது: ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட இப்பிரச்சினை இரு சமுதாயத்தினருக்கிடையேயான சண்டையாக மாறியது[2].இந்த மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ‌ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்த சிலர் தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு போலீஸ் வாகனத்தை எரித்தனர். இதனையடுத்து போலீசார் கும்பலை கலைக்க வானத்தை ‌நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதட்டமாக காணப்படுகிறது.

Easter cricket violence4

தினகரன் சொல்வது: ராமேஸ்வரம் அருகே கிரிக்கெட் விளையாட்டில் இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறு, இரு பிரிவினருக்கு இடையே பெரும் கலவரமாக மாறியது. போலீஸ் வேன் மீது ஒரு பிரிவினர் கற்களை வீசி தாக்கியதில் 2 போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே வேர்க்காடு பகுதியில் சந்தியாகப்பர் கோயில் மைதானத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், தண்ணீர்ஊற்று பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மேக்கி (17), சேசு (18), கோர்ட்டன் (18) உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு தண்ணீர்ஊற்று பகுதிக்கு சென்றனர். அங்கு இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது[3]. இந்த கலவரத்தில் கற்களை சரமாரியாக வீசி ஒருவரை ஒருவர் தாக்கினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. தகவலறிந்து ராமேஸ்வரம் டிஎஸ்பி மணிவண்ணன், ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் தண்ணீர்ஊற்று பகுதிக்கு வந்தனர். கல்வீச்சில் போலீஸ் வேனின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. கோகுலகிருஷ்ணன் உட்பட 2 போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு பிரிவினர் அருகே உள்ள புனித தெரசாள் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்து தொடர்ந்து கற்களை வீசி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.  போலீசார், அவர்களை விரட்டினர். அவர்கள் அருகே இருந்த சவுக்கு காட்டிற்குள் ஓடினர். அவர்களில் 12 பேரை கைது செய்தனர். இந்த கலவரத்தால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேல் பதற்றம் நிலவியது. ராமேஸ்வரம்,மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரை அணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சரியான நேரத்தில் போலீசார் ‘என்ட்ரி”: கடந்த 22ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 100க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று இந்த கலவரம் துவங்கியதுமே, சில நிமிடங்களிலேயே போலீசார் வந்ததால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

Easter cricket violence5

தினமலர் சொல்வது[4]: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில், கிரிக்கெட் போட்டி தகராறில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசார் காயமடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த, போலீசார் வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர். தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில், நேற்று மதியம், இளைஞர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தினர். இதில் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்; மேக்லின்ராஜ், அலெக்ஸ்ஜேம்ஸ், அன்னமேரி காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர், தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, தங்கச்சிமடம் போலீஸ் ஸ்டேஷன் முன், கோஷமிட்டனர். மற்றொரு தரப்பினர், போலீஸ் ஸ்டேஷன் மீது கல், பாட்டில்களை வீசினர். போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.போலீசார் காயம்: ­இதற்கிடையில், தங்கச்சிமடம் சர்ச், போலீஸ் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதியில் ஒரு தரப்பினர், திடீரென போலீசார், வேன் மீது கல்வீசினர். இதில், எஸ்.ஐ., ஞானசேகர போஸ், போலீசார் கோகுல கண்ணன், காத்தனன் காயம் அடைந்தனர். எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துப்பாக்கி சூடு: கலவர கும்பலை தடுக்க, போலீசார், வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைத்தனர். தங்கச்சிமடம் பகுதியில், கடைகள் அடைக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட 12 பேரை, மயில்வாகனன் எஸ்.பி., தலைமையில் போலீசார் பிடித்தனர். மாலை 4 முதல் 5:30 மணி வரை, மதுரை-ராமேஸ்வரம் இடையே பஸ்கள் நிறுத்தப்பட்டன. கலவரம் ஏன்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 19 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள், 15 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில் இல்லாத நிலையில், கிரிக்கெட் தகராறு வினையில் முடிந்தது.

Rameswaram riot - three days back

விகடன் டாட் காம் சொல்வது[5]: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு கலவரமாக மாறியதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த  போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் கிரிகெட் போட்டி நடந்து வந்தது.இன்று பகலில் வழக்கம் போல் போட்டி நடந்தபோது,போட்டியில் பங்கேற்ற இரு அணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த மேக்லின்,சேசு,கோர்பட் ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.இதனை அறிந்த அவர்களது உறவினர்கள் தகராறு நடந்த பகுதியை நோக்கி கிளம்பினர். இதனையறிந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் பின் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவர்களை திருப்பி அனுப்பினர். இது நடந்து கொண்டிருக்கும் போதே எதிர்தரப்பினர் ஒன்று திரண்டு சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.மேலும் அந்த வழியாக வந்த போலீஸ் வேன் மீதும் கல்வீசினர்.இதில் பட்டாலியன் போலீஸ் படையை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன் கல்வீசியவர்களை போலீஸார் துரத்தி சென்றனர். துரத்தி சென்ற போலீஸார் மீதும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கற்களை வீசினர். இதில் கோகுலகிருஷ்ணன் என்ற போலீஸ்காரருக்கு காது மற்றும் நெத்தியில் ரத்த காயம் ஏற்பட்டது.இதனால் போலீஸாரும் திருப்பி கல்வீசினர். ஆனாலும் கலவரம் கட்டுப் படவில்லை. இதையடுத்து போலீஸார் வானத்தை நோக்கி இருமுறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதன்பின் சிதறி ஓடிய கலவரக்காரர்களை போலீஸார் விரட்டி சென்றனர். இதனிடையே ராமநாதபுரம் போலீஸ் எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் கலவரப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.இவர்கள் கலவரம் நடந்த பகுதிகளில் சென்று வீடு வீடாக சோதனை நடத்தினர். இதில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 12 பேரை கைது செய்துள்ளனர். இதன்பின் நிலமை கட்டுக்குள் வந்தது. இதையடுத்து சுமார் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தொடங்கியது. கலவரத்தை தொடர்ந்து தங்கச்சிமடத்தில் போலீஸார் குவிக்கபட்டுள்ளனர். கடந்த வாரத்தில் ராமேஸ்வரத்தில் நடந்த இரு தரப்பினருக்கு இடையேயான மோதலின் தாக்கமே இன்னும் தணியவில்லை. இந்நிலையில் ராமேஸ்வரத்தினை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலும் வேறு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்ததால் தீவுப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

Rameswaram riot - three days back2

திஹிந்து” சொல்வது[6]: ஈஸ்டர் கொண்டாட்டத்திற்குப் பிறகு, கிரிக்கெட் விளையாடிய இரு கிருத்துவக் குழுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், சண்டையாகி, கலவரமாகியது.

Police open fire in air near RameswaramRAMANATHAPURAM, March 31, 2013

The police opened fire in the air to quell a mob, which pelted a police party with stones as violence broke out in Thangachimadam near Rameswaram on Sunday.

Trouble arose when a section of Christians waylaid boys of another Christian group from the same locality. They were on their way to play cricket after Easter celebrations. After a wordy duel, they assaulted the boys. The police arrested couple of people in this connection.

Protesting against this, their supporters staged a road roko agitation.

When police asked them to disperse, they hurled stones at them. Two policemen were injured. The protesters also damaged the windscreens of a police vehicle.

To quell the violence, the police opened two rounds of fire in the air on the orders of Deputy Superintendent of Police A. Manaivannan.

N.M. Mylvahanan, the Superintendent of Police, told The Hindu that the situation was now normal. “The police are on bandobust duty in troubled areas and the patrolling has been intensified.” he said.

The police have so far secured five people and launched a search and combing operation, he added.

Rameswaram riot - three days back2

என்.டி.டிவி சொல்வது[7]: இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம்; 13 பேர் கைது; நிறுத்தப்பட்ட வண்டுகளின் மீது பெட்ரோல் குண்டுகள் எறியப்பட்டன.

Rameswaram: The police opened fire in the air today to put an end to a clash between two groups in Tamil Nadu’s Ramanathapuram (or Rameswaram) district. The clashes began after one of the groups lost a cricket match. Thirteen people have been arrested.According to the police, the group who lost the match started pelting stones, injuring 10 people and damaging a police checkpost. Two policemen, including a sub-inspector, suffered serious injuries in the incident. The two groups even drew petrol from the parked vehicles and hurled petrol bombs at each other.

மூன்று நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் கலவரம்: ராமேஸ்வரத்தில் மார்ச் 22 ல், ஆட்டோ டிரைவர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது[8]. 22.03.2013 வெள்ளிக்கிழமை மாலை ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்து[9]. வீடு, பஸ்,பெட்ரோல் பங்க், ஓட்டல்கள், லாட்ஜ்கள் சேதப்படுத்தப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசியதில் குடிசை சேதமடைந்தது. வேர்க்கோடு பகுதியில் மற்றொரு தரப்பினரின் ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டு டிரைவர்கள் தாக்கப்பட்டனர். இதில் மார்க்கெட் மேட்டு தெருவைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். அதிமுக பிரமுகர்களின் திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் அடித்து நொறுக்கப்பட்டன. மேட்டுத்தெருவில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதியதில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர்[10]. தீயணைப்பு வாகனம், அரசு பஸ் சேதப்படுத்தப்பட்டன.  நான்கு மணிநேரம் ராமேஸ்வரமே ஸ்தம்பித்தது. கலவரம் பரவாமல் இருக்க ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்[11]. பிரச்னையை ஆரம்பத்திலேயே பேசி தீர்க்கவும், கலவரத்தை ஒடுக்கவும் தவறியதற்காக, ராமேஸ்வரம் கோயில் இன்ஸ்பெக்டர் கண்ணனை, சஸ்பெண்ட் செய்து, ராமநாதபுரம் டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார்[12].

Rameswaram riot - three days back4

ராமேஸ்வரத்தில இருதரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்ட நிலையில், அங்குள்ள 9 மீன் கம்பெனிகளுக்கு சமூக விரோதிகள் தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. ராமேஸ்வரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது.

Rameswaram riot - three days back4

மீன் கம்பெனிகளுக்கு நெருப்பு வைத்ததேன்?: இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்த மீன்கம்பெனிகள் திடீரென தீ பற்றி எரிந்தன. தகவலறிந்த போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் தீப்பிடித்த பகுதிக்கு விரைந்து வந்தனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதற்குள் 9 மீன் கம்பெனிகள் தீயில் எரிந்து நாசமாயின[13]. தங்கச்சிமடத்தை சேர்ந்த குட்வின், சேசுராஜா, மைக்கேல்ராஜ் உள்ளிட்ட 9 பேருக்கு சொந்தமான இந்த கம்பெனிக்குள் இருந்த மீன்பிடி சாதனங்கள், வலைகள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

சமூக விரோதிகள் காரணம் என்றால், அவர்கள் யார்?: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளில் ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சமூக விரோதிகள், சமீபத்தில் நடந்த கலவரத்திலிருந்து போலீஸாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றன முன்னதாக கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்லி ஒரு தரப்பினரை மட்டும் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கலவரத்தில் தொடர்பு இல்லாதவர்களை கைது செய்வதை நிறுத்த கோரியும் அந்த தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தையும், வட்டாட்சியர் அலுவலகத்தையும் நேற்று மாலை முற்றுகையிட்டனர். அங்கு வந்த போலீஸார் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து  அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த தரப்பின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கை தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்து சென்றனர்.


Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: