போப் எனக்கு முத்தமிட்டார் – பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் பெண் ஜனாதிபதியும், காதல் கடிதம் எழுதியதாக சொல்லும் பழைய காதலியும்!

போப் எனக்கு முத்தமிட்டார் – பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் பெண் ஜனாதிபதியும், காதல் கடிதம் எழுதியதாக சொல்லும் பழைய காதலியும்!

Cristina Fernandez de Kirchner,  Jose Luis Rodriguez Zapatero

 

நவநாகரிகமான அர்ஜென்டைனாவின் பெண் ஜனாதிபதி.

கார்டினெலுடன் சண்டை போட்ட பெண் ஜனாதிபதி: அர்ஜென்டினாவில் ஜோர்ஜ் மேரியோ பொர்கோகிலியோ 1998-2013 வரை கார்டினலாக இருந்தார். அப்பொழுது கிரிஸ்டினா பெர்னான்டிஸ் டி கிர்ச்னெர் ஜனாதிபதாக இருந்தார்[1]. இவர் அழகான, கவர்ச்சியான, நாகரிகமான ஜனாதிபாதியாவர். கிர்செனரின் சமூக முன்னேற்ற கொள்கைகளுக்காக இருவருக்கும் போப்புக்கும் வேறுபாடு ஏற்பட்டது. கிர்செனர், “அவர் இடைக்கால மனப்பாங்கையும் மததண்டனை போன்றவற்றை ஆதரிப்பவராகவும் உள்ளார்”, என்று குற்றாஞ்சாட்டியுள்ளார். ஓரின புணர்ச்சி, ஓரின விவாகம், நிரோத் விநியோகம் முதலிய பிரச்சினைகளில் இவருக்கும் போப்பிற்கும் கடுமையான விவாதங்கள் நடந்துள்ளன. இப்பொழுது, பாக்லாந்தைத் திரும்பத்தருமாறு இங்கிலாந்தை வலியுறுத்துமாறு கேட்டுவருவதாகத் தெரிகிறது[2].

Christina Kirchener Argentine president2

நவநாகரிகமான அர்ஜென்டைனாவின் பெண் ஜனாதிபதி – இன்னொரு புகைப்படம்.

அவர் இடைக்கால மனப்பாங்கையும் மததண்டனை போன்றவற்றை ஆதரிப்பவராகவும் உள்ளார் [3]: கார்டினெல்களே, ஏன் போப்புகளே செக்ஸ், காதல், ஊழல், என்று ஈடுபட்டிருக்கும் போது, போப் இருக்கும் அழுகுகளைத் துடைக்க வேண்டும் என்றால், நிறையவே செய்ய வேண்டியுள்ளது. கன்னித்தாய், குழந்தை பெற்றும் கன்னித்தன்மை, ஆணுடன் புணாராமல் கர்ப்பம் தரிப்பது, அசுத்தமே இல்லாமல் குழந்தையை சுமப்பது, பெற்றெடுப்பது, முதலியவை கிருத்துவத்தின் அடிப்படயாகும். ஆகவே, எந்த பெண்ணும் கருவுற்றால், அக்கருவைக்கலைக்கக் கூடாது[4]. குழந்தையைப் பெற்றெடுத்தே ஆகவேண்டும். ஏனெனில், மேரி மாதிரி, குழந்தையைப் பெற்றெடுத்ததும் அவள் தூய்மையடைந்து விடுவாள். அதுமட்டுமல்லாது, மேரி அவ்வாறு, கருவைக் கலைத்திருந்தால், ஏசு பிறந்திருக்க மாட்டார். அதனால்தான், ஓரின புணர்ச்சி, ஓரின விவாகம், கருக்கலைப்பு முதலியவற்றை வாடிகன் எதிர்க்கிறது. போப்பும் எதிர்தாக வேண்டும். இதனால்தான், அந்த இடைக்கால பிற்போக்குச் சிந்தனை, மனப்பாங்கு முதலியவற்றை மாற்றமுடியாமல் உள்ளது.

Christina Kirchener Argentine president3

நவநாகரிகமான அர்ஜென்டைனாவின் பெண் ஜனாதிபதி – ஆண்களுக்கு சமமானவர்!

போப்பாகியதும் வாடிகனுக்குச் சென்று சந்தித்தார்: இம்மாதம் – மார்ச் 18ல், கிரிஸ்டினா பெர்னான்டிஸ் டி கிர்ச்னெர், ஜோர்ஜ் பேரியோ பொர்கோகிலியோவை அதாவது போப் பிரான்சிஸை வாடிகன் சென்று சந்தித்தார். அப்பொழுத் போ, இவருடன் தனியாக பேசியதுடன், நெருக்கமாக காதில் ஏதோ சொன்னார். தோளில் கைபோட்டு, முத்தம் கொடுப்பது போன்றும் புகைப்படங்கள் இருந்தன. இருப்பினும், ஊடகங்கள் மௌனமாக இருந்த நேரத்தில், போப் தனக்கு முத்தமிட்டதாக பெருமையாகச் சொல்லிக் கொண்டார்[5]. இதனால், ஊடகங்கள் தமாஷாக கார்ட்டுன்களையும் வெளியிட்டார்கள்!

Kirchner meeting Pope 2013

 

போப்பை வாடிகனில் சந்தித்தல்

Kirchner_Pope_Francis 18-03-2013

 

பாக்லாந்து விஷயத்தில் வற்புறுத்தல்

போப் எனக்கு முத்தம் கொடுத்தார். இதுவரை இப்படி நான் எந்த போப்பிடமும் முத்தம் பெறவில்லை: போப் எனக்கு முத்தம் கொடுத்தார். இதுவரை இப்படி நான் எந்த போப்பிடமும் முத்தம் பெறவில்லை என்றெல்லாம் பெருமையாக சொல்லிக்கொண்டார்[6]. முன்னமே குறிப்பிட்டபடி, இவர் அழகான, கவர்ச்சியான, நாகரிகமான ஜனாதிபாதியாவர். பாலியல் ரீதியான பிரச்சினைகளில் இவருக்கும் அப்பொழுது கார்டினெலாக இருந்த போபிற்கு பல வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. போப் முத்தம் கொடுப்பது என்பது வழக்கமாக உள்ளது, கார்டினெல்கள், பாதிரிகள், பாஸ்டர்கள் கூட அத்தகைய வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். மேனாட்டு பழக்கத்தில் அதனை பெண்ணடிமைத் தனம் அல்லது பெண்ணை பாலியல் ரீதியில் சீண்டுவது என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால், பிற்பாடு அத்தகைய மீறல்கள் ஏற்படுகின்றன, நாறுகின்றன.

Kirchner  Pope lose encounters 2013

 

ரகசியம் சொன்னாரா, முத்தம் கொடுத்தாரா?

காதல் கடிதம் எழுதிய போப்: இந்நிலையில் போப்பின் சிறுவயது காதலிபவர் தனக்கு எழுதிய காதல் கடிதத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார்[7]. 12-வது வயதில் இவரது குடும்பம் இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவுக்கு குடியெர்ந்து வந்தபோது, அவரது தந்தை ரெயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டுக்கு அருகில் அமாலியா தாமோந்த் என்ற சிறுமியும் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார், அப்போது இவருக்கும் 12 வயதுதான். இவர்கள் இருவரும் தெருவில் விளையாடியபோது நண்பர்களாகினர். காலப்போக்கில் சிறுவன் ஜார்ஜ் மரியோ (போப் ஆண்டவர் பிரான்சிஸ்) மனதில் அமாலியா மீது காதல் அரும்பியதால், ஒரு நாள் அமாலியா எதிர்பாராத நிலையில் ஜார்ஜ் மரியோ அவனது கையில் ஒரு கடிதத்தை திணித்தார். அதைப் வாங்கி படித்து பார்த்த அமாலியாவுக்கு இன்ப அதிர்ச்சி இருந்தது. அதில் நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்ய விரும்புகிறேன் என கூறி இருந்தார்[8]. “சிகப்புநிற கூரை, வெள்ளைநிற சுவர்கள் கொண்ட வீடுஇப்படத்தை வரைந்து, இவ்விட்டில் தான் மனமாகிய பிறகு நாம் இருப்போம்”, என்று எழுதியிருந்தார்[9]. அந்த விவகாரம் அவளது பெற்றோருக்கு தெரிய வர எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் காதலி அமாலியா சன்னியாசம் மேற்கொள்ளவிருப்பதால் திருமணம் செய்ய முடியாது என்றார். இவரும், “நான் உன்னை திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால், சாமியார் ஆகிவிடுவேன்”, என்றாராம்!

Cristina Fernandez, Jorge Bergoglio

 

கார்டினெலாக இருந்த போது சந்தித்தப் புகைப்படம்

“If I don’t marry you, I’m going to be a priest.” – “நான் உன்னை திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால்,  சாமியார் ஆகிவிடுவேன்”என்ற காதலன்[10]: இதனால் பாதிரியானார் தற்போதைய போப். ஆனால் அமாலியாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்து குழந்தையும் இருக்கிறது. தற்போது இருவருக்குமே வயது 77. தற்போது போப் ஆனவுடன் பழைய காதலி அமாலியா மகிழ்ச்சியடைந்துள்ளார். இளம் வயதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சுடன் இருந்த நட்பையும், அவர் தன் மீது வைத்திருந்த காதலையும் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் பேட்டி மூலம் தெரிவித்தார். போப்பும் இவருடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார்[11].

Baby cries as Pope nears to kiss

போப் ஒரு குழந்தைக்கு முத்தம் கொடுக்க நெருங்கும் போது அழுகிறது.

Pope and Cristina Fernández de Kirchner

 

போபையும், கிர்செனரையும் இணைத்து வரையப்பட்ட தமாஷான கார்ட்டூன்!

© வேதபிரகாஷ்

23-03-2013


[1] During then-cardinal Jorge Bergoglio’s 1998-2013 reign as archbishop in Argentina, he and Kirchner tangled over her progressive social policies, most notably her successful 2010 push to legalize same-sex marriage. Bergoglio called the proposal “a destructive attack on God’s plan.”

[3] According to CNN, she responded by accusing him of holding “attitudes reminiscent of medieval times and the Inquisition.”

[5] “Never in my life has a pope kissed me!” she said after becoming the first foreign head of state to meet with the new pontiff. http://www.usnews.com/news/newsgram/articles/2013/03/18/pope-francis-kissed-me-says-argentinas-kirchner

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

2 பதில்கள் to “போப் எனக்கு முத்தமிட்டார் – பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் பெண் ஜனாதிபதியும், காதல் கடிதம் எழுதியதாக சொல்லும் பழைய காதலியும்!”

  1. ஆர்யத்தமிழன் Says:

    தமாஷா இருக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: