ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி மன்னன் ஜெயபாலை கைது செய்த, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் நன்றி!

ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி மன்னன் ஜெயபாலை கைது செய்த, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் நன்றி!

நிலமோசடி – போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு: நில மோசடி புகாரில், மத போதகர் கைது செய்யப்பட்டதற்கு நன்றி என்று இப்படி தெரிவித்து, போஸ்டர் ஒட்டப்பட்டதால், திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது[1]. திண்டிவனம் நகரின் பல இடங்களில், நில மோசடியால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் என்ற பெயரில், நேற்று காலை, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் அச்சிடப்பட்டிருந்ததாவது: திண்டிவனத்தில் அரசு நிலங்களுக்கும், தனியார் நிலங்களுக்கும் போலி ஆவணம் தயாரித்து, நில மோசடி செய்த, மயிலம் கூட்டேரிப்பட்டு ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி மன்னன் ஜெயபாலை கைது செய்த, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் நன்றி, நன்றி, நன்றி.இவ்வாறு அதில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரால், திண்டிவனம் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

மத போதகர் ஜெயபால் மீது புகார் (ஜனவரி 2012): விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர்கள் ராமதாஸ், 45, மற்றும் சாந்தா, 40. இவர்களது பூர்வீக நிலத்தை, கிடங்கல் பகுதியை சேர்ந்த ஜெயபால், 49, என்பவர், போலி ஆவணம் தயாரித்து அபகரித்ததாக, கடந்த, 22ம் தேதி, விழுப்புரம் நில அபகரிப்பு பிரிவில் புகார் கொடுத்தனர். நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ் வழக்கு பதிந்து விசாரித்தார்.  இதில், ராமதாசுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்திற்கும், சாந்திக்கு சொந்தமான, 1 ஏக்கர் நிலத்திற்கும் போலி ஆவணம் தயாரித்து, தனது மனைவி சாந்தி பெயரில், பத்திரப் பதிவு செய்தது தெரிந்தது. இதன் மதிப்பு, 75 லட்சம் ரூபாய். இதையடுத்து, நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ் மற்றும் போலீசார், கடந்த 6ம் தேதி, ஜெயபாலை கைது செய்தனர்.

ஏஜி கிறிஸ்தவ சபை என்றால் என்ன? ஏஜி கிறிஸ்தவ சபை என்பது அசெம்பெளி ஆப் காட்[2] என்ற பென்டகோஸ்ட் பிரிவு சர்ச் ஆகும். அமெரிக்காவில் 1914ல் தொடங்கப்பட்ட இந்த சர்ச் கிருத்து அங்கத்தினர் எண்ணிக்கையில் இன்று ஆறாவது ஸ்தானத்தில் உள்ளதாம். இதற்கு அமெரிக்காவிலிருந்து நிதியுதவி கிடைக்கிறது. இந்திய, தமிழக சர்ச்சுகளைப் பற்றி இந்த தளங்களில் விவரங்களைப் பார்க்கவும்[3]. அந்த சர்ச்சின் குறிக்கோள்களைப் பற்றி இங்கு பார்க்கவும்[4]. சென்ற வருடம் பிப்ரவரியில் அனைத்துலக மாநாடு சென்னையில் நடத்தப் பட்டது[5]. அதன் வீடியோக்களை இங்கு பார்க்கவும்[6] மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இந்த சர்ச்சின் அதிகாரிகள் நில அபகரிப்பு, நில மோசடி முதலிய காரியங்களில் எப்பது துணிச்சலாக ஈடுபடுகின்றனர்?

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை – சொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி[7], இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[8]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[9] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! இந்த போக்கு ஆயர், பேராயர் வரைக்கும் காணப்படுகிறது[10]. நீதிமன்றங்கள் வரை சென்றாலும், அந்த ஆயர்கள் கைது செய்யப்படுவதில்லை[11].

மதபோதகர் போர்வையில் வீட்டு மனை மோசடி? : ரூ.10 கோடி சொத்தை மீட்டு தர கோரிக்கை (ஜூலை 2010ல் புகார்)[12]: திண்டிவனம் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள், மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திண்டிவனம் பகுதியில், நிலத்தின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் மேலும் ஒரு நில மோசடிப் புகார் எழுந்துள்ளது. திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், தமிழரசி, பூங்காவனம், ராமச்சந்திரன், வித்தியாசந்த், வக்கீல்கள் பாலன், ரமேஷ், செசிலீ, தம்புமுத்து, பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமதாஸ், கைலாஷ், முனுசாமி, எல்லுசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாலம்மாள், வரதராஜன் ஆகியோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி நடந்துள்ளதாக புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில், “தங்களுக்கு கிடங்கல் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் நிலங்கள் (வீட்டு மனைகளாக பயன்படுத்தக் கூடிய இடங்கள்) உள்ளன. இவற்றை மதபோதகர் என்ற போர்வையில் உள்ள ஜெயபால் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து, மோசடியாக விற்பனை செய்துள்ளார். மேலும், மனித உரிமை ஆணையம் என்ற போர்வையிலும் சிலர் நில மோசடியில் ஈடுபட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளனர். எனவே தங்களது நிலங்களை மீட்டு தருவதுடன், நில மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

ஜூலை 2010ல் விசாரணை நடத்தி போலீஸார் விட்டுவிட்டார்களா? விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரின் உத்தரவின் பேரில், நில மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஜெயபாலும் அவரது தரப்பினரும் எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த ஜெயபாலும், அந்த ஜெயபாலும் ஒன்று என்று தெரிகிறது. பிறகு எப்படி, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஜெயபாலை போலிஸார் விசாரித்து விட்டு விட்டனர்? மறுபடியும், அதே ஜெயபாலின் மீது புகார்! அப்படியென்றால், போலீஸார் ஒத்துழைக்கின்றனரா?

கிறிஸ்தவர்களுக்கு தனி சட்டமா – சலுகையா? கிருத்துவர்கள் என்றால் சட்டங்களில் ஏதாவது சலுகை காட்ட வேண்டும் என்று இருக்கிறதா? சட்டம் எல்லோருக்கும் ஒன்று என்றால், எப்படி கிருத்துவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். சென்னை சின்னாப்பா பிஷப் மீது இத்தகைய மோசடி வழக்குக்ள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மற்ற விழாக்களில் பங்கு கொண்டு, நல்லவர் போல அறிவுரை கூறுகிறார், பிரசங்கம் செய்கிறார். அவருக்கு அத்தகைய தார்மீகம் உள்ளாதா? விபச்சாரி கற்ப்பைப் பற்றி பேசுவது போன்றதல்லவோ அத்தகைய பிரசங்கம்.



[8] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[9] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி மன்னன் ஜெயபாலை கைது செய்த, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் நன்றி!”

  1. கிறிஸ்தவம் பலானது Says:

    […] ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி ம… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: