இந்து கோவிலைக் கண்டு நடுங்கி சாகும் கிருத்துவர்கள்!

இந்து கோவிலைக் கண்டு நடுங்கி சாகும் கிருத்துவர்கள்!

இந்தியாவில் இருக்கும் கிருத்துவர்கள் எல்லோரும் இந்துக்களே, ஒருசில அந்நியர்களைத் தவிர. அந்நிலையில் இந்துக் கோவில்களைக் கண்டு அஞ்சி நடுங்கி சாகும் நிலைக் கண்டு வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதில் இரண்டு விஷயங்கள் வெளிப்படுகின்றன.

 1. இந்துக்களாக இருந்து, கிருத்துவர்களாக மாறிவிட்டாலும், பழைய நினைவுகள், உறவுகள், சம்பந்தங்கள் முதலியன அவர்களை உறுத்திக் கொண்டே இருக்கின்றன.
 1. கிருத்துவர்களா மாறியப் பிறகும், ஒன்றும் பிரமாதமாக, அவர்கள் நினைத்தபடி, இறையியலில் உயர்ந்ததாக எதையும் கண்டுவிடவில்லை. மாறாக, மிகவும் தாழ்வாக உள்ளவற்றைத்தான், ஏதோ சிந்தாந்த ரீதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்ற உண்மை அறிந்து கொண்டுள்ளார்கள்.

இதனால் தான், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்துக் கொண்டே இருக்கிறது. அடாடா, தேவையில்லாமல், மதம் மாறிவிட்டோமோ என்றும் நினைத்துப் பார்க்கின்றனர். மேலும், உள்கலாச்சாரமயமாக்கல்[1], கிருத்துவர்களின் போலித்தனத்தைத் தோலிருத்திக் காட்டுகிறது.

கோவில் கட்ட எதிர்ப்பு : இரு தரப்பு பிரச்னையால் பதட்டம் நீடிப்பு[2]: கும்மிடிப்பூண்டி : கோவில் கட்டுவதில் வலுத்து வரும் பிரச்னையின் ஒரு கட்டமாக, கிறிஸ்துவ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களின் செயல்பாட்டினை கண்டிக்கும் விதமாக, இந்து அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இரு தரப்பினரின் செயல்பாடுகளால் ஆரம்பாக்கத்தில் பதட்டம் நீடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், பெந்தெகோஸ்தே[3] என்ற கிறிஸ்துவ அமைப்பு இயங்கி வருகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள நொச்சிக்குப்பம், பாட்டைகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் அந்த கிறிஸ்துவ சபையில் வழிபட்டு வருகின்றனர். அந்த சபைக்கு சற்று எதிரே, வெங்கய்யா சாமி கோவிலை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நிறுவி வருகிறார்.

சர்ச்சுக்கு எதிரே கோவில் அமைந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கிறுஸ்துவ அமைப்பினர் கருதினர்: தங்கள் சபைக்கு எதிரே இந்து கோவில் அமைந்தால், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கிறுஸ்துவ அமைப்பினர் கருதினர். இதையடுத்து, கிறிஸ்துவ சபையினர் கடந்த ஆண்டு கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக கோவில் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆர்.டி.ஓ., தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. இந்துக்கள் விட்டுக் கொடுக்கும் போக்கில் இருந்தாலும், கிருத்துவர்கள் அடாவடித் தனமாக செயல்படுவது நன்றாகவேத் தெரிகிறது.

சர்ச்சுக்கு எதிரே கோவில் அமைந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றால், கோவிலுக்கு எதிரில், அருகில் எப்படி சர்ச்சுகள், மசூதிகள் கட்டப்பட்டன? இருப்பினும், கோவில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி, அதனை கண்டிக்கும் விதமாக கிறிஸ்துவ அமைப்பினர் சில தினங்களுக்கு முன், ஆரம்பாக்கம் – நாயுடுகுப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில், பிரச்னையின் நிலையை அறிந்து இந்த மாதம் 4ம் தேதி மீண்டும் ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் முனியசாமி தெரிவித்திருந்தார். சாலைமறியல் முதலியன விளம்பரத்திற்காகவே என்பது தெரிந்த விஷயமே. தாங்கள் சிறுபான்மையினர் என்ற திமிரில், மமதையில் அவ்வாறு செயல்படுகின்றனரேத் தவிர, உண்மையில் நம்பிக்கை அல்லது விசுவாசம் பெயரில் இல்லை என்பது தெரிகிறது.

இந்துக்கள் பதிலுக்கு உண்ணாவிரத போராட்டம்: இந்து கோவில் கட்ட தடையாக செயல்பட்டு வரும், கிறிஸ்துவ அமைப்பினரின் செயல்பாட்டினை கண்டித்து, இந்து அமைப்பினர், கிருத்துவர்கள் போலில்லாது, நேற்று (03-02-2011) ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் எதிரே உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டனர். வெங்கய்யா கோவில் நிறுவனர் ராஜேந்திரன், அகில இந்திய சிவசக்தி தர்ம சமிதி நிறுவன தலைவர் பாலாஜி, ஆரம்பாக்கம் வியாபாரிகள் சங்க துணை தலைவர் முருகன் உள்ளிட்ட பலரின் முன்னிலையில், 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

“JESUS NEVER FAILS” என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கோவிலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? இதனால், கிருத்துவர்கள் கருவிக் கொண்டிருக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படாதபடி, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வலுத்து வரும் பிரச்னை காரணமாக, ஆரம்பாக்கம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு காணும் நோக்கில், அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். “JESUS NEVER FAILS”[4] என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கோவிலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? என்று சிலர் வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்து விட்டனர்! சென்ற மாதத்தில் இதே மாதிரியான நிகழ்ச்சி, வேறு மாதிரி நிகழ்ந்தது.

கோவில் கட்ட எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு[5]: கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே தனியாரால் கட்டப்படவுள்ள கருப்பராயன் கோவிலை வேறு பகுதியில் கட்டக்கோரி ஊர்ப் பொதுமக்கள் ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினியிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கரட்டூர் எஸ்.பி., நகர் இரண்டாவது தெருவில் கருப்பராயன் மற்றும் முனியப்பன் கோவிலை ரங்கசாமி என்பவர், அவரது வீட்டுமனை நிலத்தில் கட்ட முயற்சி செய்து வருகிறார். வழக்கமாக ஊரின் எல்லைப் புறத்தில் கட்டப்படும், கருப்பராயன் கோவிலை ஊர் நடுப்பகுதியில் கட்டினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் கோவில் கட்டப்பட்டால், அந்த பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் செல்ல முடியும். குழந்தைகளும் அந்த பகுதியில் செல்ல அஞ்சுவர். எனவே கருப்பராயன் மற்றும் முனியப்பன் கோவிலை வேறு பகுதியில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோபி நான்கு நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் முருகேசன் மற்றும் எஸ்.பி., நகர், திலக்நகர், சாதனை செம்மல் நகர், செல்வகணபதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனிருந்தனர்.

ஊரின் எல்லைப் புறத்தில் கட்டப்படும், கருப்பராயன் கோவிலை ஊர் நடுப்பகுதியில் கட்டினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு: இப்படி நம்புவது பகுத்தறிவாகுமம? இல்லை அந்த மாதிரி, ஆகம சாத்திரங்கள் முதலியன இருக்கின்றனவா? இப்படியெல்லாம் கேள்வி கேட்டால், அந்த எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களின் போலித் தனம், வெளிப்பட்டு விடுகிறது. கருப்பராயன் கோவிலை இங்குதான் கட்டவேண்டும் என்றும் எங்குச் சொல்லப் பட்டிருக்கின்றது? உண்மையில், இந்துக்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளே, இவ்வாறு வேலை செய்கின்றன என்பதனை கண்டுகொள்ள வேண்டும். மேலும், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்….என்றெல்லாம் பேசுகிறவர்களும், யார் காப்புகின்றனர், யார் எதிர்க்கின்ரனர், அழிக்கின்றனர் என்பதனை அடையாளங் காண வேண்டும்.

© வேதபிரகாஷ்

04-02-2011


[1] “Inculturation” என்ற பெயரில், இந்துக்களைப் போன்று உலவி வந்து, அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் வேலைதான் இது. இது முழுக்க முழுக்க இந்திய விரோத கிருத்துவக் குழு

[2] கோவில் கட்ட எதிர்ப்பு : இரு தரப்பு பிரச்னையால் பதட்டம் நீடிப்பு, பிப்ரவரி 03,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=180303

[3] இது முழுக்க முழுக்க இந்திய விரோத கிருத்துவக் குழு. இருப்பினும், கிருத்துவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஜேஹோவா விட்னஸஸ் என்ற மற்றொரு குழு / பிர்வு, தேசிய கீதத்தை பாட மறுத்ததையும், நினைவு கொள்ளவேண்டும்.

[4] இது ஏதோ பொருளை விற்பதற்கு சமமாகும். எப்பொழுதுமே பழுதாகாது என்றால் என்ன அர்த்தம், ஒரு நேரத்தில் பழுதாகும் என்றுதானே அர்த்தம்?

[5] கோவில் கட்ட எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு, ஜனவரி 25,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=173515

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “இந்து கோவிலைக் கண்டு நடுங்கி சாகும் கிருத்துவர்கள்!”

 1. M. P. Naganathan Says:

  These shameless Xtians were totally exposed recently, when they tried to loot Kothandarama Temple, Ginghee.

  The people who struggled and succeeded in saving the temple inspite of the Xian officers, police and others aided and abetted with the local priest to grab the temple land and loot the temple.

  The Mohammedans looted and destroyed the temple in 1311.

  The British looted in 18th century.

  The French looted in 19th century.

  The 20-25 feet monolithic carved pillars taken away from the temple were found erected around Gandhi statue in the Beach, Pondicherry.

  Unfortunately, some pillars were standing on both sides of Nehru statue opposite sides!

  First of all, the ASI should recover all the pillars, sculptures etc., emoved from the temple and restore it to the original status.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: