திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாமியார் சூசை மர்ம மரணம் – கொலையா?

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாமியார் சூசை மர்ம மரணம் – கொலையா?

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம்[1]: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர், ரெக்டார், சமியார் P. சூசை மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார். ஏற்கனவே, கன்னியாஸ்திரி கற்பழிப்பு சர்ச்சையில் இக்கல்லூரியின் முதல்வர் சிக்கியுள்ள நிலையில், அதிபரின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்த பாதிரியார் சூசை (52). சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்த இவர், கடந்த ஓராண்டுக்கு முன் 2009ல், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபராக (ரெக்டர்) நியமிக்கப்பட்டார். 1990ல் சொஸைடி ஆஃப் ஜீஸஸ் (Society of Jesus) என்ற கத்தோலிக்க அடிப்படை சபையில் பாதிரியாக சேர்க்கப்பட்டு அதில் 33 வருடங்கள் வேலை செய்தார். கல்லூரியின் கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் மற்றும் ஹாஸ்டல் வார்டன் என்று பல்;அ பொறுப்புகளில் இருந்துள்ளார்[2]. கற்பழிப்புப் புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள ராஜரத்தினம் விலக்கல் ஆணையைப் பிறப்பித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன சாமியார்: கல்லூரியில் உள்ள ரெக்டர் இல்லத்தில் தங்கியிருந்தார். கடந்த டிசம்பர் 17ம் தேதி இரவு, அவரது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று முன்தினம் முழுவதும் அறையை விட்டு வெளியே வரவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, உதவியாளர் திரவியநாதன் அவரது மொபைல் போனை தொடர்பு கொண்ட போது, அறையில் இருந்து போன் அழைக்கும் சத்தம் கேட்டது. ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த திரவியநாதன் அவரது அறையின் ஜன்னலை திறந்து பார்த்தார். அப்போது, பின் மண்டை உடைந்து, மூக்கில் ரத்தம் வழிந்து, கைலி கட்டிய நிலையில், தரையில் சூசை பிணமாகக் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது[3].

பலிக்கு வராத சாமியார் பலியா என்ற சந்தேகம்: திருப்பலி சடங்கிற்கு வராமல் காணாமல் போன சூசை குறித்து கல்லூரி முதல்வர் ஏ. செபாஸ்டிடயன் உட்பட போலீஸாருக்கு புகார் செய்துள்ளனர்[4]. இது குறித்து திரவியநாதன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கோட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், “நள்ளிரவில் படுத்த அவர், அதிகாலை சிறுநீர் கழிக்க எழுந்து, செருப்பு அணிய சென்றபோது, திடீரென நெஞ்சு வலி வந்து, கீழே விழுந்து இறந்திருக்கலாம்’ என்று தெரிய வந்தது. இதற்கிடையே, தூக்கிட்டோ, விஷம் குடித்தோ சூசை தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி வளாகம் முழுவதும் தகவல் பரவியது. ரெக்டர் இல்லம் முன் ஏராளமான மாணவரும், பேராசிரியரும் திரண்டனர்.

உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்புதான் எப்படி இறந்தார் என்ற உண்மை தெரியும்: சம்பவம் குறித்து துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா கூறுகையில், “”அதிபர் சூசையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எப்போது, எதனால் இறந்தார் என்பது பரிசோதனை முடிவில் தெரிந்து விடும்,” என்றார். திருச்சி கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மர்ம முடிச்சுகள் – எழுதிக்கொண்டிருந்த சாமியார்!: கல்லூரியில், துறைகளுக்கிடையேயான “இண்டெப்’ கலைவிழா டிசமபர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்துள்ளது[5]. கடந்த 17ம் தேதி – வெள்ளிக்கிழமை இரவு தூங்கச் சென்ற சூசை, நள்ளிரவு (18-12-2010) வரை ஏதோ எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். அவர் என்ன எழுதினார் என்பது இனி நடக்கும் போலீஸ் விசாரணையில் தான் தெரிய வரும். நேற்று முன்தினம் ஒருநாள் முழுவதும் அவரை யாருமே தேடவில்லை என்பது நெருடலான விஷயமாக இருக்கிறது. சூசைக்கு அடிக்கடி நெஞ்சு வலி வரும் என்றும், ஆரோக்கியமாகத்தான் இருந்தார் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.

கல்லூரி அதிபர் மரணம் முதல்வர் விளக்கம்: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கை: “கல்லூரி அதிபர் சூசை, தன்னுடைய 54 வயதில், 34 ஆண்டுகள் ஏசுச்சபையில் சேவையாற்றி உள்ளார். 1990ம் ஆண்டு தன்னை குருவாக அர்ப்பணித்துக் கொண்டவர். நேற்று காலை நடந்த திருப்பலிக்கு, சூசை அடிகளார் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்து, கல்லூரி முதல்வர் செபாஸ்டின், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குழந்தைராஜ், இல்ல நிர்வாகி ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸ் ஏ.சி., சீனிவாசன் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். பூட்டியிருந்த அவரது அறை கதவை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கையில் உயிரற்ற நிலையில் சூசை இறந்திருந்தார். அவரது மரணம் இயற்கையானதே. பல்வேறு வதந்திகள் பரவுவதை போல அல்லாமல், தீவிரமான மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்தார். அவருக்கு பிரேத பரிசோதனையும் செய்து முடித்துள்ளோம். அவருக்கு கடவுள் நிரந்தர அமைதியை அளிக்க வேண்டும். அவரை இழந்து வருந்தும் ஏசுச்சபையினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும், ஜெபங்களும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணியளவில் ஜோசப் கல்லூரியில் நடக்கும்”, இவ்வாறு செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

அவருக்கு பிரேத பரிசோதனையும் செய்தது போலீஸா, ஏசு சபையா? சம்பவம் குறித்து துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா கூறுகையில், “அதிபர் சூசையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எப்போது, எதனால் இறந்தார் என்பது பரிசோதனை முடிவில் தெரிந்து விடும்,” என்றார். திருச்சி கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், கல்லூரி முதல்வர் செபாஸ்டின் வெளியிட்ட அறிக்கையில் ,“அவரது மரணம் இயற்கையானதே. பல்வேறு வதந்திகள் பரவுவதை போல அல்லாமல், தீவிரமான மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்தார். அவருக்கு பிரேத பரிசோதனையும் செய்து முடித்துள்ளோம்…………. அவரது இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணியளவில் ஜோசப் கல்லூரியில் நடக்கும்”, என்றுள்ளது. அவர்களே பிரேத பரிசோதனையை செய்து விட்டார்களா அல்லது திருச்சி அரசு மருத்துவமனை செயுதுள்ளதா என்று தெளிவாக இல்லை.


[1] தினமலர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் சூசை மர்ம மரணம், டிசம்பர் 20,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149603

[5] செயின்ட் ஜோசப் கல்லூரியில் நாளை “இண்டெப்’ கலை விழா, டிசம்பர் 12,2010, http://www.dinamalar.com/district_detail.asp?id=144182

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாமியார் சூசை மர்ம மரணம் – கொலையா?”

 1. M. Nachiappan Says:

  இதெல்லாம், சொல்லி வைத்து நடப்பது போல இருக்கிறது. கீழே விழுந்து மண்டை உடைந்து கிடந்த போதும், அந்த காரியதரசி ஒரு நாள் பிறகுதான் பார்ப்பான் என்றால், ஆச்சரியம் தான்! கைலி கட்டிய சாமியார் என்றதும், மற்ற சேசு சபை சாமியார்கள் ஞாபகம் வருகிறது. மதுரை அந்தோனி ராஜ், இந்த விஷயத்தில் கில்லாடி, எங்கு சென்று தங்கினாலும், ஜாலியாக நண்பர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு, தண்ணீ போட்டுக் கொண்டு இருப்பார். எல்லோரும் கைலி கட்டிக் கொண்டுதான் இருபார்கள். ரூமே அப்படியே புகை மண்டலமாக இருக்கும். அக, இவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? லயோலா காலேஜில், ஒரு பி.எச்.டி செய்து கொண்டிருந்த பெண்ணை இந்த சூசை பயங்கரமாக இம்சை செய்துள்ளார், அப்ப்பெண் பி.எச்.டி செய்வதையே விட்டு விட்டு ஓடியே விட்டாள். இன்னொரு பெண்ணை இவரும், கூட உள்ள இன்னொரு தெலுங்கு பேசும் புரஃபசரும் மடக்கப் பார்த்தார்கள். ஆனால், அந்த பெண்ணின் அம்மாவே, ஒருதடவை பார்த்துவிட, சண்டையாகி விட்டது!

 2. P. Ganesa Gurunathan Says:

  Their website still proclaims without any shame that this Susai is “passed away / dead” and that rapist / molester is “on leave”!

  Of course, their photos are also there!

  See here: http://www.sjctni.edu/admin.jsp

  It is just like DMK still supporting the corrupt Raja!

  Of course, if the corrupt supports corrupt, then who is supporting the rapists / molesters?

 3. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/12/20/sudden-death-of-sausai-raises-questions/ […]

 4. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/12/20/sudden-death-of-sausai-raises-questions/ […]

 5. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/12/20/sudden-death-of-sausai-raises-questions/ […]

 6. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/12/20/sudden-death-of-sausai-raises-questions/ […]

 7. பாதிரிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது ஏன் – அதிகாரப்போரா, பதவி போராட்டமா, இறையியல் குழப்பமா? | Says:

  […] [8] https://christianityindia.wordpress.com/2010/12/20/sudden-death-of-sausai-raises-questions/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: