செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்கு நிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!

செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்கு நிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!

செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்கு நிபந்தனை தளர்வு[1]: எதிர்பார்த்தபடியே செல்வாக்கு, அதிகாரம், பணபலம் முதலியவையுள்ள சர்ச் தனது மறைப்பு வேலையை ஆரம்பித்துவிட்டது என்பதனை அறிந்து கொள்ளலாம். 08-11-2010 அன்று ஏதோ அதிரடியாக, ஐகோர்ட் கிளை நிபந்தனையின்படி, ராஜரத்தினம், தினமும் கோட்டை அனைத்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி இருவேளை கையெழுத்திடுகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின[2]. ஆனால், இந்நிபந்தனையை தளர்த்த கோரி, அவர் ஐகோர்ட் கிளையில் வக்கீல் ஐசக் மோகன்லால் மூலம் மனு செய்தார்.

ஆரோக்ய குறைவு, மருத்துவமனையில் சிகிச்சை என்பதெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சாதாரணமான விஷயமாகி விட்டது: கொலைகாரர்கள், கொள்ளைகார்கள், தீவிரவாதிகள், அரசியல்வாதிகள் எல்லோருக்குமே, ஒன்று கைது செய்யும்போது, மாரடைப்பு,  உயர் ரத்த அழுத்தம் …………என்றெல்லாம் சுகவீனங்கள் வந்துவிடுகிறது. அதுபோல, மனுவில், “உயர் ரத்த அழுத்தத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற ஏதுவாக நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்,” என ஐசக் மோகன்லால் மூலம் கோரினார். இவரப்பற்றி முன்னரே விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாவம், கர்த்தர் ஏன் இங்கும் கைவிட்டுவிட்ட்டார் என்று தெரியவில்லை. வசதிக்காக, இதோ.

பாதிரிகள் தரப்பில் ஆஜரான ஐஸக் மோஹன்லால்[3]: ஐஸக் மோஹன்லால் என்ற வக்கீல் பாதிரிகள் தரப்பில் ஆஜராகியுள்ளார். இவர் மதுரை வக்கீல் சங்கத்தின் காரியதரிசி (secretary of the Madurai Bench High Court Advocates Association) மற்றும் பார் கவுன்சிலின் தலைவர் ஆவர். மதுரையில் உள்ள முக்கியமான விஐபியாக உள்ளவர், மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் எனத்தெரிகிறது. இவர் அடிக்கடி கிருத்துவர்களின் உரிமைகள் என்றெல்லாம் பேசி வருகின்றவர். ஆக மொத்தம், இது அவர்களின் உள்-பூசல், சண்டை விவகாரங்கள் பெரிதாகி வெளிவந்து விட்டது எனத்தெரிகிறது. உரிமைகள் பேசும், இந்த வக்கீல் எப்படி ஒரு பாதிக்கப் பட்ட பெண்மணிக்கு எதிராக வாதிடுகிறார் என்று தெரியவில்லை. வக்கீல் தொழிலில் இதெல்லாம் சகஜம் எனலாம், இருப்பினும், இன்றைய நிலையில், இப்படி பாரபட்சமாக செயல்படும் போக்கில் குற்றம் செய்தவர்கள் தப்பிக்கக் கூடாது, அப்பாவிகள் பாதிக்கப் படக்கூடாது. நீதி, சட்டங்கள் வளைக்கப்படக் கூடாது.

அரசு வக்கீல் ஆட்சேபம் ஆனால், நீதிபதி நிபந்தனைகளை முற்றிலும் தளர்த்தினார்: இதற்கு அரசு வக்கீல் முத்து வெங்கடேசன் ஆட்சேபம் தெரிவித்தார். பாவம், அவர் தனது வேலையை செய்திருக்கிறார். இருப்பினும் நிபந்தனைகளை முற்றிலும் 21-11-2010 அன்று தளர்த்தி நீதிபதி ஜி.ராஜசூர்யா உத்தரவிட்டார். அப்படியென்றால், இருவாரங்களில் என்ன நடந்துவிட்டது? எப்படி நீதிபதியின் மனம் மாறிவிட்டது? “கோர்ட்டுக்கு வெளியே” சந்திப்புகள் நிகழ்ந்தனவா, அதுப்போலவே, சமரசங்களுக்கு, சமாதானங்களுக்கு முயற்சிகள் நடக்கின்றனவா? அந்த போராட்டம் நடத்திய குழுக்கள் என்ன செய்யும், முழித்துக் கொண்டு, மறுபடியும் போராட வருவார்களா[4] அல்லது, அவர்களும் மௌனிகளாகாக்கப் படுவார்களா?

உடனே கைது செய்யப் போகிறீர்களா?’- “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை” (25-10-2010)[5]: மனுவை பரிசீலித்த நீதிபதி, “உடனே கைது செய்யப் போகிறீர்களா?’ என, அரசுத் தரப்பு வக்கீலிடம் கேட்டார். அதற்கு அவர், “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை என்று கூறினார். இந்த பரிபாஷையின் பொருள் விளங்கவில்லையே? நீதிபதியே அரசு வக்கீலிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை, பாதிரியார் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டாரோ என்னமோ? சென்ற மாதமே, இத்தகைய சந்தேகம் வந்தது. மேலும், இன்னொரு கத்தோலிக்க பாதிரியார், மேரி பணம் கேட்டு மிரட்டியதாக அல்லது சமசரத்திற்கு பேரம் பேசியாதாக ப்ளாக் போட்டு வருவதையும் சுட்டிக்காட்டப்பட்டது[6].

 

மருத்துவ பரிசோதனை கோர்ட்டிடம் சமர்ப்பிக்கப்பட்டது[7]: ஆனால், இதைப் பற்றி கோர்ட்டில் எந்த விவாதமுன் வராதது வேடிக்கையாக இருக்கிறது. கற்பழிப்புப் புகார், ஆபாச போட்டோ எடுத்தார் என்றெல்லாம் புகார்கள்[8] வெளிப்பட்டு, சரண்டர் / கைது ஆகி, ஜாமீனில் வெளிவந்து, இப்பொழுது முழுவதுமாக வெளியில் சுதந்திரமாக இருந்தால், இருக்கும் ஆதாரங்களை களைக்க, அழிக்க, மாற்ற முடியாதா? மேலும் மற்ற கன்னியாஸ்தீரிக்களின் புகார்கள்[9] என்னவாயிற்று? கிளினஸ், உஷா………….முதலியோரும்[10] மௌகிகளாகி விட்டார்களா?

மனுதாரருக்கு சாதகமாக நீதிமன்றம் செயல்படுகின்றதா? ஆள் காணவில்லை, மறைந்து விட்டார்கள் என்றார்கள்; பிறகு முன் ஜாமீன் கேட்டு மனு தாக்குதல் செய்யப்படது; ஆனால், மனுதாரர் கோர்ட்டில் தோன்றவில்லை; முன் ஜாமீன் வழக்கு தள்ளிபோடப்பட்டது[11]; பிறகு ஆள் வராமலேயே, சரண்டர் ஆகி, ஜாமீனைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அளவில் தளர்ச்சி செய்யப்பட்டது. இபோழுது, நிபந்தனைகளை முற்றிலும் 21-11-2010 அன்று தளர்த்தி நீதிபதி ஜி.ராஜசூர்யா உத்தரவிட்டார்.

வேதபிரகாஷ்

© 24-11-2010


[1] தினமலர், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்கு நிபந்தனை தளர்வு, நவம்பர் 22, 2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=131583

[2] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது: மற்ற பாதிரிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!, https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

[3] மூன்றில் உள்ளபடி.

[4] வேதபிரகாஷ், பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்! https://christianityindia.wordpress.com/2010/10/22/jesuit-sex-scandal-trichy/

[5] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரி – திருச்சி கல்லூரி முதல்வர் புகாரில் கைதா? “உடனே கைது செய்யப் போகிறீர்களா?’- “தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை, https://christianityindia.wordpress.com/2010/10/28/rape-accused-catholic-priest-yet-to-be-arrested/

[6]Jesuit Father Joe Antony is the director of Culture and Communications Centre, Loyola College, Chennai. He also directs the India office of the Vatican Radio. The journalist-priest edits Jivan, the monthly magazine of the Jesuits in South Asia, and Dawn Books, a Catholic book club that publishes three books a year. He also edited The New Leader, a Catholic fortnightly published from Chennai, for 20 years, until December 2009. In the following commentary Father Antony writes and explains about the case of a former nun accusing a Jesuit priest of raping her. The news received wide coverage in Indian media and some newspapers in Tamil Nadu carried it on their front page.

http://www.religiousindia.org/2010/11/03/former-nun%E2%80%99s-rape-allegation-a-case-of-extortion/, Published Date: November 3, 2010.

[7] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!, https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

[8] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, https://christianityindia.wordpress.com/2010/10/13/catholic-priest-drugs-rapes-aborts-takes-porn-video/

[9] வேதபிரகாஷ், கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது – மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்! https://christianityindia.wordpress.com/2010/10/20/nun-raped-case/

[10] வேதபிரகாஷ், கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!, https://christianityindia.wordpress.com/2010/10/23/clinus-usha-mary-the-raped-list-increases-catholic-sex-case/

[11] மேலும் விவரங்களுக்கு, இவற்றையும் வாசிக்கவும்:

வேதபிரகாஷ், கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு முன்ஜாமீன் வழக்கு நாளைக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது!, https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்கு நிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!”

  1. கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்! « இந்தியாவில் கிருத்துவம Says:

    […] [3] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!, https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-ca… […]

  2. கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்! « இந்தியாவில் கிருத்துவம Says:

    […] [3] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜி முதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!, https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-ca… […]

  3. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-ca… […]

  4. எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்ச Says:

    […] [5] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜிமுதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!,https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-ca… […]

  5. எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்ச Says:

    […] [5] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜிமுதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!,https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-ca… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: