ஜூலையில் கைதான ஜஸ்டின் நவம்பரில் பெண்ணை காரில் கடத்துவது எப்படி?

ஜூலையில் கைதான ஜஸ்டின் நவம்பரில் பெண்ணை காரில் கடத்துவது எப்படி?

பெண்ணை காரில் கடத்திய ஜஸ்டின் என்ற கிருத்துவ மதபோதகர் கைது[1]: வீட்டில் இருந்த பெண்ணை கடத்திச் செல்ல முயன்ற ஜஸ்டின் மதபோதகரை, பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம்[2] வேஞ்சத்திப் பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணை, காரில் வந்த மூன்று பேர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், பொது மக்களும் துரத்திச் சென்றதால், பயந்துப் போன அவர்கள் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். இப்படி நவம்பரில் செய்தி வருகிறது!

காமக்கொடூரன் ஜஸ்டின்[3]:  தொடரும், விருவிருப்பான செய்தி, “இதில், ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவர் அஞ்சுகிராமம் அருகே காப்பகம் நடத்தி வந்த மதபோதகர் ஜஸ்டின் என்பதும், இவர்கள் கடத்திய பெண், அங்கு பணியாற்றிய மேபல் என்பதும் தெரியவந்தது. ஜஸ்டின் நடத்திய காப்பகத்துக்கு உரிய அனுமதி பெறாததால் அதுசீல்வைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், சாட்சியை கலைப்பதற்காக மேபலை கடத்தியது, விசாரணையில் தெரியவந்தது. ஜஸ்டின் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”.

ஜாமீனில் வெளியே வந்த அவர், சாட்சியை கலைப்பதற்காக மேபலை கடத்தியது: “ஜாமீனில் வெளியே வந்த அவர், சாட்சியை கலைப்பதற்காக மேபலை கடத்தியது, விசாரணையில் தெரியவந்தது. ஜஸ்டின் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”. அப்படியென்றால், ஏன், எப்படி அந்த காமக்கொடூரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது? ஏற்கெனெவே கைது செய்யப்பட்டு, இவ்விஷயம் உலகமெல்லாம், விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் எப்படி ஜாமீன் வழங்கினார்கள்?

ஜஸ்டின், ஒரு நிரந்தரபழக்கப்பட்ட/வழக்கமானக் குற்றவாளி:  சிறுவர்களிடம் ஓரின புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளான். ஜஸ்டின் சிறுவர்களுக்கு சோப்புப் போடுகிறேன் என்று உடம்பு முழுவதும் தொட்டு விளையாடுவானாம். சிறுமிகளிடம் அவ்வேறே நடந்து கொண்டதுடன், அவர்களை குளிக்க வைத்து ரசிப்பானாம். காலை 7 முதல் 9 வரை பாத்ரூம்களே கதி என்று கிடப்பானாம். இத்தகைய கொடிய பழக்கமுள்ள ஜஸ்டினை ஜாமீனில் விட்டதே ஜஸ்டிஸ் அல்ல என்றாகிறது.

கொடூரக்காரன் ஜஸ்டின் பல இடங்களில் எப்படி காப்பகம் நடத்தினான்?: ஜஸ்டின் என்ற பாதிரி பல தொண்டு நிறுவனங்களுடன் தொயட்ர்பு வைத்துக் கொண்டு குழந்தைகளை கடத்துதல், வளர்த்தல், பிறகு விற்றுவிடுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளான்[4]. கடந்த ஜூலையில் எற்கெனெவே கைதுசெய்யப்பட்டுள்ளான். கன்னியாகுமரி அருகே குழந்தைகள் காப்பகத்தில் சித்திரவதை புகார் கன்னியாகுமரி அருகே அரசு அனுமதியின்றி செயல்படும் காப்பகத்தில் குழந்தைகள் சித்திரவதை செய்யப்படுவதாக புகார் எழுந்தது[5]. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டுவந்த குழந்தைகள் காப்பகங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

பூஜைபுரைவிளையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ரெய்டு: இந்நிலையில், கன்னியாகுமரி அருகேயுள்ள பூஜைபுரைவிளையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்தனர். காப்பகத்தில் தங்களை மாட்டுச்சாணம் அள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் கூறி சித்திரவதை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் பால்துரை, உதவி ஆய்வாளர் ஜெசி, சமூக நலத் துறை அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (03-07-2010) அக்காப்பகத்துக்குச் சென்று நிர்வாகி ஜஸ்டினிடம் விசாரணை நடத்தினர்.

காப்பகம் அனுமதியின்றி நடத்தப்படுவது எப்படி? அப்போது அக் காப்பகம் அரசு அனுமதியின்றி நடத்தப்படுவது தெரியவந்ததது[6]. அங்கு 18 சிறுமிகளும், 22 சிறுவர்களும் உள்ளதும், அவர்கள் அனைவரும் 5 முதல் 14 வயதுக்கு உள்பட்டோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜஸ்டின் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் கைதான ஷாஜிக்கும், இவனுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கினர் (ஜனவரி 2010): கேரள மாநிலம் காரகோணம் பகுதியை சேர்ந்த ஷாஜி எ‌ன்ற மதபோதக‌ர் க‌ன்‌னியாகுமரி மாவட்டம் பாலவிளை அருகே சொந்த கட்டிடத்தில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். அங்கு 5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 76 சிறுவர்கள் இருந்தனர். இங்கு அ‌ஸ்ஸா‌ம், ம‌ணி‌ப்பூ‌ரை சே‌‌ர்‌ந்த வெளிமாநில சிறுவர்கள் அதிகம் பேர் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் சமூக நலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் ஜனவர் 24ம் தேதி இரவு தக்கலை டி.எஸ்.பி. சண்முகம், நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி காப்பகம் நடத்தி வருவதும் மற்றும் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ஷாஜியிடம் நடந்த விசாரணையில், பசியால் வாடிய மிசோராம், மணிப்பூர், அ‌ஸ்ஸாம் மாநில குழந்தைகளை ஏஜென்ட்டுகள் மூலம் கொண்டு வந்ததாக கூறினார். இதையடுத்து காப்பகத்துக்கு சீல் வைத்து விட்டு அங்கிருந்த 76 சிறுவர்களையும் மீட்டு நெல்லை ச‌‌ந்‌தி‌ப்‌பி‌‌ல் உள்ள சரணாலயத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கன்யாகுமரியில் காமக்களியாட்டங்கள் பெருகுவது ஏன்? கன்யாகுமரியில் பலவித பிரச்சினைகள் உள்ளன. அங்கு கடற்கரை கிராமங்களில்அடிக்கடி  விடிய, விடிய சோதனை நடைபெற்று வருகிறது. மாவட்ட எல்லையான களியக்காவிளை, ஆரல்வாய் மொழி மற்றும் அஞ்சு கிராமம் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் சோதனை மேற்கொள்வது வழக்கமான விஷயம்தான். மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதும் சகஜம் தான். ஆனால், இப்படி குழந்தைகள் கடத்தல், விற்றல், காப்பகத்தில் வைத்தல் முதலியவை அவர்களுக்குட் தெரியாமல் போனது என்று விசித்திரமாக உள்ளது[7].

அஞ்சு கிராமத்தில் கள்ளக்காதலர்களால் பத்து குழந்தைகள் தவிப்பு[8]: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே மயிலாடிபுதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (42). இவரது மனைவி அம்மாபழம் (38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மயிலாடியை சேர்ந்தவர் ஹரிகோபால் (29). இவரது மனைவி விகிலா (25). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டதால் சந்திரசேகரனும், விகிலாவும், அவரவர் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மாயமாகி விட்டனர்[9]. மனைவி இல்லாமல் ஹரிகோபால் மூன்று குழந்தைகளுடன் தவிப்பதை பார்த்து, உறவினரான சந்திரன் என்பவர் அவருக்கும், குழந்தைகளுக்கும் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். இங்கு தங்கியிருந்த போது ஹரிகோபாலுக்கும், சந்திரனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை சந்திரன் கண்டித்ததால் ஹரிகோபால், சந்திரன் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் சந்திரனின் நான்கு குழந்தைகள் தாயில்லாமல் தவிக்கின்றனர். இதுபற்றி தனித்தனியாக அளிக்கப்பட்ட புகார்கள் பற்றி அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதபிரகாஷ்

© 17-11-2010


[1] தினமலர், பெண்ணை கடத்திய மதபோதகர் கைது, நவம்பர் 16, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127226&Print=1

[2] குமாரபுரம் (Kumarapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

[3] தினமலர், பெண்ணை கடத்திய மதபோதகர் கைது, நவம்பர் 16, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127226&Print=1

[4] வேதபிரகாஷ், குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்! 08-07-2010அன்றைய பதிவு,

https://christianityindia.wordpress.com/2010/07/08/justin-rabid-phedophile-beating-will-heum/

[5] Justine of Anjugramam is running the Arumai Packiam Manuel Orphanage Home at Poojapirai Junction. The Child Help Line (1098) received a complaint on June 28, saying that the children in the home were being illtreated.

[6] கன்யாகுமரியில் தொடர்ந்து இப்படி கைதுகள் நடக்கும்போது, எப்படி இப்படி பல காபகங்கள் அனுமதி இல்லாமல் நடக்கக் கூடும்?

[7] குற்றவாளிகளுக்கும், அவர்களை அதரிக்கும் அதிகார வர்க்கத்தினரும் உள்ளனர் என்று வெளிப்படையாகத் தெரிகின்றது.

[8] கள்ளக்காதலர்களால் பத்து குழந்தைகள் தவிப்பு, Wednesday , 28th April 2010 08:45:57 AM

http://www.tamilkurinji.com/news_details.php?/%E……..%E0%AE%AA%E0%AF%81/&id=10105

[9] இவர்கள் எல்லோரும் கணவன்-மனைவி, கள்ளக் கணவன்-மனைவி, கணவன்-கள்ள மனைவி, கள்ளக் கணவன்- கள்ள மனைவி, என்றெல்லாம் இருந்து சமூகத்தை சீரழிக்கும் கோடாலிகளக இருக்கின்றன என்று தெரிகிறது. இருப்பினும், ஒருவேளை காசுக்காகக் குழந்தைகளை பெற்றெடுத்து, வளர்த்து, விற்கும் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “ஜூலையில் கைதான ஜஸ்டின் நவம்பரில் பெண்ணை காரில் கடத்துவது எப்படி?”

 1. K. Venkatraman Says:

  In other cases, courts say, that if the convicted comes out, he might destroy evidences etc., how then, this habitual offender was given bail?

  That the people involved have been aiding and abetting such criminals is very easy to understand.

  Therefore, there is a reason to doubt how they aid and abet?

  What they get in reciprocation?

 2. M. Nachiappan Says:

  இந்த ஜஸ்டின் பெரிய ஆளாக இருப்பான் என்று தெரிகிறது.

  ஜாமீன் வாங்கியதிலிருந்தே, உள்ளூர் அதிகாரிகள், போலீஸ் முதலியோர் அவனுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

  மேலும், அதில் அதிகமானவர்கள் கிருத்துவர்கள் என்பதனால், வழக்கம் போல விஷயங்கள் வெளியே வரக்கூடாது என்று மறைக்க பாடுபடுவதும் நன்றாகவே தெரிகிறது.

  இல்லையென்றால், செய்த குற்றத்தையே, திரும்ப- திரும்ப செய்து வருவது, கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளியே வந்து அதே குற்றத்தைச் செய்வது, முதலியன, அங்கு சட்டம் சரியாக செயல்படவில்லை என்று நன்றாகவே தெரிகிறது.

  பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் முதலியோரை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

  • M. Nachiappan Says:

   இதெல்லாம் ராஜா சொன்னது போல இருக்கிறது. நான் எல்லாமே பிரதம மந்திரிக்குத் தெரிந்துதான் செய்தேன், என்றால், அவருக்குத் தெரியாமல், எதுவும் நடக்கவில்லை என்றாகிறது. இங்கும் அப்படித்தான் போலும்!

 3. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/11/17/543-habitual-sex-offender-kidnaps-woman/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: