கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!

கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!

பாதிரியார்களில் அங்கி / உடை அவிழ்க்கப்படுதல் / கழட்டப்படுதல் என்றால் என்ன? பாதிரியார்கள் இப்படி ஏடாகூடமாக செக்ஸ், பாலியல், வன்புணர்ச்சி, கற்பழிப்பு, மோசடி, ஃபிடோஃபைல், ஃபிராரட்,….. என எக்கச்சக்கமாக, கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் போது, அவர்களது அங்கிகள் அவிழ்க்கப்படும். அதனை அவர்கள் டிஃப்ராக், அன்ஃப்ராக், அல்லது லைசைஸ்வ்/  defrock, unfrock, or laicize என்பார்கள்[1]. கிருத்துவ பிரிவுகளில் எல்லாமே இந்த முறை உள்ளது. எப்படி ஒரு பாதிரி, பாதிரியாக நியமிக்கப் படும் போது, அதற்காக உடை / அங்கி அணிவித்து பதவி கொடுக்கிறார்களோ, அவ்வாறே, இப்படி குற்றங்களில் மாட்டிக் கொள்ளும் போது, அந்த அங்கிகளை / உடைகளை கழட்டச் சொல்வார்கள்[2]. அவர்கள் மத சம்பந்தமான எந்த காரியங்களையும் செய்வதற்கு தள்ளி / விலக்கி வைக்கப் படுகிறார்கள்.

அங்கி / உடை கழட்டப்பட்டு காட்சியளித்த ராஜரத்னம்; ராஜரத்னம் பேன்ட்-சர்ட்டுடன் வந்திருக்கும் கோலம் அவரது அங்கி / உடை கழட்டப்பட்டுவிட்டது என்பதைக் காட்டுகிறது. அதாவது முறைப்படி பதவி பறிக்கப்பட்டு விட்டது என்று தெரிகிறது. ஏனெனில், போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்காக அவிழ்த்து வைத்துவிட்டு  வந்தார் என்று சொல்லமுடியாது, அப்படி, எந்த பாதிரியும், தன்னுடைய நிலையை விட்டுக் கொடுத்து வரமாட்டான். இருப்பினும் சர்ச் அதனை வெளிப்படையாக சொல்லாதது ஆச்சரியமாகத்தான் உள்ளது. எப்படியிருப்பினும், இந்த காமுகர்கள் எல்லாருமே, காம இச்சையில் பெண்களை, கன்யாஸ்திரிக்களை, இளம் பெண்களை, சிறுமியர்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்யும் போது, செக்ஸ் ரீதியில் புணையும் போது, கற்பழிக்கும் போது உடைகளை கழட்டியிருப்பார்கள் / அங்கிகளை அவிழ்த்திருப்பார்கள்.

ராஜரத்னத்ததற்கு மருத்த பரிசோதன: 10-11-2010 அன்று காலை 8 மணிக்கு பாதிரியார் ராஜரத்தினம் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் கோர்ட்டு உத்தரவுபடி கையெழுத்திட்டார். அதன்பிறகு போலீசார் ராஜரத்தினத்தை திருச்சி பெரிய மிளகுபாறை அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு ஆண்மை பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன் அறிக்கையை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் பாதிரியாரை திருச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1ல் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு பாதிரியார் ராஜரத்தினம் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராஜரத்னம் வீரியத்துடன் உள்ளாராம்: ஆணுக்கு ஆண்மை உள்ளதா இல்லையா என்பதனை அவனது செமன் எனப்படுகின்ற திரவத்தை சோதனைக்குட்படுத்தி அறியப்படும்[3]. இப்பொழுதெல்லாம், வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ளும் அளவிற்கு “கிட்டுகள்” எல்லாம் கிடைக்கின்றன[4]. திருச்சி பெரிய மிளகுபாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டதும்,  விந்து பரிசோதனை செய்ய ராஜரத்னத்தை “மாதிரி” கொடுக்கச் சொன்னார்கள். அவ்வாறே மாதிரி கொடுத்ததும், அதனை லெபொரட்டிரியில் சோதனை செய்து பார்த்தார்கள். அங்கு டாக்டர் ரவிக்குமார் மற்றும் குழுவினர், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர்[5]. விந்து எண்ணிக்கைப்படி, ராஜரத்னம் வீரியத்துடன் / ஆண்மையுடன் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. கோர்ட் மூலம் தெரிவிக்கப்படும் என்பதால், “பாதிரியார் ஆண்மை அல்லாதவர் என்று கூறமுடியாது”, என, டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[6]. அதாவது பாதிரியார் ஆண்மையுடன் இருக்கிறார் என்று கூறமுடியும் என்றாகிறது. மற்ற விஷயங்கள் தெரிவர மேலும் சோதனைகள் செய்து கண்ட்பிடிக்கப்படும்.

வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது: கிருத்துவ பாதிரிகள் மற்றவர்கள் அடிக்கடி வெளிநாடு சென்று வருவது வழக்கம். முன்ஜாமீன் அளிப்பதிலும்[7] இழுபறி இருந்தது[8], பிறகு கொடுக்கப்பட்டுள்ளது[9]. அதனால், முன்ஜாமீன் பெற்ற பாதிரியார் ராஜரத்தினம், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான பாதிரியார், தன் பாஸ்போர்ட்டை, வக்கீல் மூலம் ஒப்படைத்தார்.

வேதபிரகாஷ்

© 11-11-2010


[1] Constitution & Canons, Together with the Rules of Order, For the government of the Protestant Episcopal Church in the United States of America, Otherwise Known as The Episcopal Church. New York: Church Publishing Incorporated. 2006. pp. 171. http://www.churchpublishing.org/general_convention/pdf_const_2006/Title_IV_EcclDiscipline.pdf.

[2] “Appendix 4, General Synod Canon XVIII – Discipline”. The Anglican Diocese of Eastern Newfoundland & Labrador. http://www.anglican.nfol.ca/forms/constitution/Appendix%204.pdf. Retrieved 23 September 2010.

[3] http://infertility.about.com/od/infertilitytesting/a/spermcounttest.htm

[4] http://infertility.about.com/b/2010/03/01/at-home-fertility-test-for-men.htm

[5] தினமலர், கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு ஆண்மை சோதனை, நவம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=123904

[6] தினமலர், சென்னை பதிப்பு, வியாழன், 11-11-2010, பக்கம்.7.

[7] https://christianityindia.wordpress.com/2010/10/28/rape-accused-catholic-priest-yet-to-be-arrested/

[8] https://christianityindia.wordpress.com/2010/11/02/catholic-rape-accused-hearing-adjourned/

[9] https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!”

  1. M. Nachiappan Says:

    இவரை என்னவென்று சொல்லலாம்?

    பலான பாதிரி, பரவசமான பாதிரி, ராஜலீலை ராஜரத்னம், கொக்கோக பாதிரி, கத்தோலிக்கக் காமுகன், காமுகக் கத்தோலிக்க சாமியார், …………….என்றெல்லாம் குறிப்பிடலாமா?

    அசிங்கப் பாதிரி, ஆபாசப் பாதிரி, ……………………என்று வர்ணிக்கலாமா?

    ஊடகங்கள் “கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரி” என்றுதான் மிகவும் ஜாக்கிரதையாக குறிப்பிடுகிறார்கள்! இதைத்தவிர வர்ணனைகள் எதுவும் இல்லை!

    அதாவது, புகாரில் சிக்காமல் இருந்தால், புண்ணியமான பாதிரிதான் போல!

    வாழ்க ஊடகங்களின் செக்யூலரிஸம்!

  2. M. Nachiappan Says:

    கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியாருக்கு ஆண்மை சோதனை
    பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010,22:48 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=123904

    திருச்சி : கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் சிக்கிய பாதிரியார் ராஜரத்தினத்துக்கு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.

    திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக பாதிரியார் ராஜரத்தினம் மற்றும் அவருக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்த மூன்று பாதிரியார் மீது, ஆண்டிமடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ்மேரி (31), கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நீக்கியது. புகாரின்படி, “போலீசார் கைது செய்து விடுவரோ’ என பயந்த பாதிரியார் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், “கோட்டை மகளிர் போலீசில் ஆஜராகி, போலீசாரின் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தபின், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்’ என, தீர்ப்பளித்தனர்.கடந்த 8ம் தேதி, கோட்டை மகளிர் போலீசில் ஆஜரான பாதிரியார் ராஜரத்தினத்தை நேற்று முன்தினம் மாலை, போலீசார் திருச்சி ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    “போலீசாருடன் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்; தினம் காலையும், மாலையும் கோட்டை மகளிர் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் முன்ஜாமீன் வழங்கினார்.அதன்படி, நேற்று காலை 7.30 மணிக்கு, பாதிரியார் ராஜரத்தினத்தை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் ரவிக்குமார் மற்றும் குழுவினர், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர். பிறகு கோட்டை போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாதிரியார், கையெழுத்திட்டபின் புறப்பட்டுச் சென்றார்.

    பாதிரியாருக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கையில், “பாதிரியார் ஆண்மை அல்லாதவர் என்று கூறமுடியாது’ என, டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்ஜாமீன் பெற்ற பாதிரியார் ராஜரத்தினம், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான பாதிரியார், தன் பாஸ்போர்ட்டை, வக்கீல் மூலம் ஒப்படைத்தார்.

  3. கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்! « இந்தியாவில் கிருத்துவம Says:

    […] [5] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது, வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!, https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catho… […]

  4. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catho… […]

  5. எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்ச Says:

    […] வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது,வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!,https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catho… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: