“பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்!

பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்!

புதிய பாலியல் புகார்[1]: பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு புகார் பதிவானதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலித் கிறிஸ்துவ அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது[2]. துண்டு பிரசுரங்களை வினியோகிக்கும் அவ்வமைப்பினர், “ராஜரத்தினத்துக்கு எதிராக செயல்படும் சில பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்‘ என, கூறி வருகின்றனர். அதாவது தலித் அல்லாத பாதிரிகளும் அத்தகைய செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், இஈன அந்தந்த கன்னியாஸ்திரிக்கள் புகார் கொடுக்கவில்லை …………….போன்ற கேள்விகள் எழுகின்றன. இவ்வாறு செக்ஸ் விஷயங்களைக்கூட சாதிய பார்வையில் பார்ப்பது, அணுகுவது ஆராய்ச்சிக்குரியது. கிருத்துவர்கள் ஒன்று என்றால், குற்றம் நடந்துள்ளது பற்றி கவலைக் கொள்ளவேண்டுமே தவிர சாதிப்பிரச்சினை எடுத்துவருவதால், போன கற்ப்பு திரும்பி வந்துவிடுமா அல்லது குற்றம் சரியாகிவிடுமா என்று யோசித்தால் நன்றாக இருக்காது.

கட்டாய கருக்கலைப்புக்கு வலியுறுத்திய ராஜரத்தினம் மீது, மேலும் ஒரு பிரிவில், வழக்கு: இருமுறை விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் (20-10-2010) நடந்த வழக்கு விசாரணையில்,  கருக்கலைப்பு உள்ளிட்டவை குறித்து, ப்ளாரன்ஸ் மேரி விரிவாக எழுதிய கடிதம் ஒன்று, நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,  தனியார் மருத்துவமனையில் கட்டாய கருக்கலைப்புக்கு ப்ளாரன்ஸ் மேரி உள்ளாகியுள்ளது தெரிந்தது. கட்டாய கருக்கலைப்புக்கு வலியுறுத்திய ராஜரத்தினம் மீது, மேலும் ஒரு பிரிவில், வழக்கு பதிவது குறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பு மாற்றுக்கருத்து கொண்ட செய்திகள் வெளியானதை நினைவு கொள்ள வேண்டும்[3].

பாதிரியார் ராஜரத்தினம், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று பாதிரியார்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; மொத்தம் நான்கு பாதிரியார்கள் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேன்மேலும் வழக்குகள் பதிவாகின்றன:

  1. ஆர். ராஜரத்தினம், முன்னாள் முதல்வர் (R. Rajaratnam, former principal of St. Joseph’s College, Tiruchi)
  2. எம். தேவதாஸ், ஜெஸ்யூட் கல்லூரிகளின் தலைவர் (M. Devadoss, chairman of the Governing Bodies of Jesuit Colleges in Tamil Nadu.)
  3. சேவியர் பிரான்சிஸ்,
  4. சேவியர்

இதில் வேடிக்கையென்னவென்றால், எம். ஏ. சேவியர் / எம். ஆரோக்யசாமி சேவியர் எஸ்.ஜே விபச்சாரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறாராம். குழந்தைகள் கடத்தல் மற்றும் விபச்சாரம் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிடுள்ளார்[4]. முன்னமே ஒரு கட்டுரையில் விளக்கியபடி, சில குறிப்பிட்ட மனிதர்களிடம், எந்த விஷயத்தை எதிர்ப்பது போலக் காட்டிக் கொள்கிறார்களோ அந்த விஷயத்தில்தான் அதிகமான ஈடுபாடு இருக்கும். ஆக, இப்பொழுது இந்த பாதிரிகள் செக்ஸ் பாதிரி ராஜரத்தினத்திற்கு சார்பாகவும், எதிராகவும் இருப்பது போல செயல்படுகிறார்கள். ஆனால், அவர்களுடைய பலவீனம் செக்ஸ் என்பது வெளியாகிறது.

பெண்களுக்காக செயல்படும் கிருத்துவ அமைப்புகள் – அவற்றால் ஏற்படும் நன்மை-தீமைகள்: இங்கெல்லாம் பெண்களுக்காக பல சேவைகள், நல்லா காரியங்கள் எல்லாம் நடந்து வருகின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்நிய பாதிரிகள் மற்றும் உள்ளூர் பாதிரிகள் வரும்போது, அவர்களை மகிழ்விக்க கன்னியாஸ்திரிக்கள் அவர்களுக்கு சேவை செய்ய பணிக்கப் படுகின்றனர்.

  • Franciscan Sisters of the Immaculate Heart of Mary ~ FIHM
  • Salesian Missionaries of Mary Immaculate ~ SMMI
  • Congregation of the Sisters of St. Anne, Trichy ~ SAT
  • Sisters of the Cross of Chavanod ~ SCC
  • Society of St. Anne, Chennai ~ SSA
  • Congregation of Teresian Carmelites ~ CTC
  • Franciscan Sisters of St. Joseph ~ FSJ
  • Franciscan Servants of Mary ~ FSM
  • Daughters of Mary of Providence ~ DSMP
  • Sisters of Charity of Mary ~ SCSM
  • Bethlemite Sisters ~ BS
  • Canossian Daughters of Charity ~ FDCC
  • Congregation of Immaculate Conception ~ CIC
  • Daughters of Mary Immaculate ~ DMI
  • Sisters of Good News Society ~ SGN
  • Franciscan Sisters of St. Aloysius Gonzaga ~ FSAG
  • Sisters of the Sacred Heart of Jesus ~ SSHJ
  • Sisters of St. Joseph of Cluny ~ SJC
  • Mothers of Sorrows Servants of Mary (Servites) ~ OSM
  • Franciscan Sisters of Our Lady of Bon Secours ~ FBS
  • Sisters of the Presentation of the Blessed Virgin Mary ~ PBVM
  • Franciscan Sisters of the Presentation of Mary ~ FSPM
  • Missionary Sisters of Incarnation ~ SMI
  • Order of Discalced Carmelites ~ OCD
  • Sisters of St. Anne (Bangalore) ~ SAB

அந்நிலையில்தான் அந்த ஜெஸுவைட் பாதிரிகள் தங்களது காம-இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லது ருசி கண்ட பூனைகள் புதியதான பெண்களை அனுபவிக்க சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அதை அவர்கள் தவறவிடுவதில்லை. பல நேரங்களில் கன்னியாஸ்திரிக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல காரணங்களுக்காக மிரட்டப்படுவதால் அடங்கிப் போகவேண்டியதாக உள்ளது. மேலும் இறையியலை அவர்களது மனங்களில் அதிகமாக ஊட்டி அவ்வாறு இணங்கச் செய்கிறார்கள்.


[1] தினமலர், திருச்சி கல்லூரி முதல்வர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவா?, அக்டோபர் 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111237

[2] இவ்வாறு செக்ஸ் விஷயங்களைக்கூட சாதிய பார்வையில் பார்ப்பது, அணுகுவது ஆராய்ச்சிக்குரியது. கிருத்துவர்கள் ஒன்று என்றால், குற்றம் நடந்துள்ளது பற்றி கவலைக் கொள்ளவேண்டுமே தவிர சாதிப்பிரச்சினை எடுத்துவருவதால், போன கற்ப்பு திரும்பி வந்துவிடுமா அல்லது குற்றம் சரியாகிவிடுமா என்று யோசித்தால் நன்றாக இருக்காது.

[3] பரிசோதனை முடிவில், “ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது‘ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

[4] Fr M. A. Xavier SJ, Child Trafikking and Flesh Trade in the New (Economic) Order, in South Indian Historical Views, St. Joseph College, Trichy, Vol.1, March 2003, pp.51-59,

குறிச்சொற்கள்: , , , , , , , ,

10 பதில்கள் to ““பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்!”

  1. vedaprakash Says:

    வேறு வாழ்க்கை பிடிக்காததால் கன்னியாஸ்திரி வேலைக்கு வந்த நான், வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன்; பிளாரன்ஸ்மேரி கடிதம் ஐகோர்ட்டில் தாக்கல்
    மாலைமலர், வியாழன், 21 அக்டோபர் 2010

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவருடைய மகள் பிளாரன்ஸ்மேரி (வயது 31), கன்னியாஸ்திரி.

    திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக பிளாரன்ஸ்மேரி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாதியார் ராஜரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதே போன்று ராஜரத்தினத்துடன் சேர்ந்து கொண்டு பிளாரன்ஸ்மேரிக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தேவதாஸ், ஜோ சேவியர், சேவியர்வேதம் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது கன்னியாஸ்திரி சபையின் தலைவர் சார்பில் வக்கீல்கள் முகைதீன்பாட்சா, சண்முகம் ஆகியோர் ஆஜராகி, பிளாரன்ஸ்மேரியை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கும் முன்பு அவர் எழுதிக் கொடுத்ததாக கூறப்படும் 4 பக்க கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த கடிதத்தில் பிளாரன்ஸ் மேரி கூறி இருப்பதாவது:- “கடந்த 2004-ம் ஆண்டு முதல் பாதிரியார் ராஜரத்தினத்துடன் பேச ஆரம்பித்தேன். அதன்பிறகு 2007-ம் ஆண்டு முதல் அவரை பார்ப்பதற்காக செல்வேன். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    எனக்கு விருப்பம் இல்லாதபட்சத்திலும் கூட அவருடன் பழக ஆரம்பித்தேன். அவர் என்னிடம் பேசாமல் போய் விடுவாரோ என்று பயந்து நான் அவருடைய(பாதிரியார் ராஜரத்தினம்) ஆசைக்கு என்னை உட்படுத்திக் கொண்டேன். கடவுள் மேல் ஆணையாக எனக்கு இவற்றின் (உடல் உறவு வைத்துக்கொண்டதில்) மேல் ஆசை இல்லை. அவருடைய ஆசையை நிறைவேற்ற என்னை நான் ஆளாக்கினேன். 2008-ம் ஆண்டு அரங்கேற்றம் என்ற நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக எனது கற்பை இழந்து விட்டேன். ஒரு மாதத்துக்கு பின்பு திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தேன்.

    அப்போது கேட்ட தகவல், உயிரோடு இருப்பதை விட இறந்து விடலாம் போல் இருந்தது. பல போராட்டங்களுக்கு மத்தியில் என் சகோதரியிடம் விஷயத்தை சொன்னேன். என் சகோதரி கண்ணீர் விட்டார். என்னை அடித்து திட்டினார். என்னை மன்னித்து விடு என்று சகோதரியிடம் கதறினேன். ஏதோ தெரியாமல், குழியில் மாட்டிக்கொண்டு தடுமாறினேன். அதன்பிறகு மாத்திரை சாப்பிட்டேன். சுகம் அடைந்தேன். வேறு வாழ்க்கை பிடிக்காததால் தான் இங்கு(கன்னியாஸ்திரி சபைக்கு) வந்தேன்.

    இங்கேயும் எனது வாழ்க்கையை பறிகொடுத்து விட்டேன் என்ற ஏக்கம் என்னை வாட்டி வதைத்தது. எனது மனம் சிறிது, சிறிதாக குத்திக்கொண்டே இருந்தது. பல தடவை நடந்த சம்பவத்துக்காக பாவமன்னிப்பு கேட்டு பரிகாரம் தேடினேன். அதன்பிறகு இனி எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று முடிவு எடுத்தேன். நான் செய்தது மிகப்பெரிய துரோகம். அன்று முதல் இன்று வரை எந்த ஒரு பாதிரியாரிடமும் நான் அதிகமாக பேசுவது இல்லை. யாரையும் பார்ப்பதும் இல்லை. இந்த சுகம் தான்(கன்னியாஸ்திரியாக இருப்பது) எனது வாழ்க்கை என்பதை மறக்கவில்லை. உங்களிடம் (கன்னியாஸ்திரி சபைத் தலைவி) கோடி முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் இனி கடவுளின் பிள்ளை என்பதை மறக்க மாட்டேன். இந்த உலகம் நிலையானது அல்ல. கடவுள் தான் நிலையானவர்.” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் பிளாரன்ஸ்மேரி எழுதியது தானா அல்லது பிளாரன்ஸ்மேரியிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி, கன்னியாஸ்திரி சபையில் உள்ளவர்களே எழுதிக் கொண்டார்களா என்பதை பிளாரன்ஸ்மேரியிடம் உறுதி செய்ய வேண்டி இருப்பதாக, அவரது தரப்பு வக்கீல் சங்கர்கணேஷ் தெரிவித்தார். மேலும் இந்த கடிதத்தை பார்க்கும்போது, தன்னை கன்னியாஸ்திரி சபையில் இருந்து நீக்கி விடக்கூடாது என்ற அடிப்படையில் நடந்த சம்பவங்களை மறைத்து விட்டு, மன்னித்து விடுங்கள் என்ற கோணத்தில் பிளாரன்ஸ்மேரி கடிதம் எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது. இதுகுறித்தும் பிளாரன்ஸ்மேரியிடம் கேட்க வேண்டியது உள்ளது. எனவே அதற்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

  2. vedaprakash Says:

    நெல்லை கிருத்துவ பள்ளியில் மாணவிகளை ஜட்டியுடன் ஆபாச நடனம் ஆட சொன்ன கிருத்துவ ஆசிரியன் கைது

    திருநெல்வேலி : மாணவிகளை ஆபாசமாக ஆடச்சொன்ன ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை அடுத்துள்ளது கட்டளை கிராமம். இங்கு சி.எஸ்.ஐ.,கிறிஸ்தவ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அரசு உதவிபெறும் டி.டி.டி.ஏ.,துவக்கப்பள்ளி உள்ளது. இதன் தலைமையாசிரியராக பணியாற்றும் சாமுவேல்ஞானதுரை49 என்பவர் பள்ளிக்கு குடிபோதையில் வருவாராம். கடந்த 28ம் தேதி 5ம் வகுப்பு மாணவிகளை ஜட்டியுடன் நடனமாட கூறியுள்ளார். ஆசிரியரின் வற்புறுத்தலால் நடனமாடிய மாணவிகள் இதுகுறித்து பெற்றோர்களிடம் புகார் கூறினர். இந்த பிரச்னை குறித்து கல்விதுறை அதிகாரிகள் ராமர், கலைச்செல்வி ஆகியோர் மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் நடத்திய விசாரணையில் ஆசிரியரின் நடவடிக்கைகள் உண்மை என தெரியவந்தது. சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசிரியர் சாமுவேல்ஞானதுரை மீது 354பெண்களை மானப்பங்கப்படுத்துதல் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கல்விதுறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

  3. Wilfred Amudha Ganesan Says:

    The Jesuits have done much harm to the Indian society since the Goa Inquisition.

    In fact, many Indians do not know the detalis of the Goa inquisition

  4. vedaprakash Says:

    Case against principal

    Staff Reporter, Wednesday, Oct 13, 2010
    http://www.hindu.com/2010/10/13/stories/2010101361170300.htm

    TIRUCHI: The Fort All Women Police Station has registered a case against the Principal of St. Joseph’s College, Rev. Fr. R. Rajarathinam, on the charge of raping a woman and later threatening her in 2006.

    Three more persons have also been cited as accused in the case.

    Police sources said the woman in her complaint charged that Rev. Fr. Rajarathinam had raped her in the college guest house and threatened her after taking her photographs. The other accused too had threatened her, according to the complaint.

    A case under Section 376 (rape) and 506 (1) has been registered.

  5. K. Venkatraman Says:

    As I analyzed in the previous response, this is only a gimmick to divert the attention.

    The PDK, MKIK etc., have been paid gangsters and they work accordingly without any principles.

    The DMK would be supporting cleverly, as the Church might work through its head also with obvious connections.

  6. கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்! « இந்தியாவில் கிருத்துவம Says:

    […] [6] https://christianityindia.wordpress.com/2010/10/22/jesuit-sex-scandal-trichy/ […]

  7. கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்! « இந்தியாவில் கிருத்துவம Says:

    […] [6] https://christianityindia.wordpress.com/2010/10/22/jesuit-sex-scandal-trichy/ […]

  8. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] https://christianityindia.wordpress.com/2010/10/22/jesuit-sex-scandal-trichy/ […]

M. Nachiappan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.