பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!

பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!

தூயவளனார் கல்லூரி முதல்வர் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்[1]: திருச்சியில், புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி (St.Joseph’s College[2]) முதல்வர் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த கற்பழிப்பு புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில், மிகவும் பழமையான, புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதல்வராக ராஜரத்தினம் உள்ளார். இவர் மீது, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார். ப்ளாரன்ஸ் மேரி (28), நேற்று முன்தினம் இரவு, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு மற்றும் கருக்கலைப்பு புகார் அளித்தார்[3].

Jesuit community - 2008-09

Jesuit community – 2008-09

ப்ளாரன்ஸ் மேரி புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ஆர். ராஜரத்தினம் எஸ்.ஜே, (Rev.Dr.R.Rajarathinam SJ) அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுத்து விட்டார்[4]. அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். இதனால், 2008ம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தேன்[5].

Rajaratnam, Principal St.Joseph, Trichy

Rajaratnam, Principal St.Joseph, Trichy

கருகலைத்த ராஜரத்தினம், ஆபாச படம் எடுத்து மிரட்டுதல்: இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார். தென்னூரில் உள்ள கே.எம்.சி.மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க வைத்தார்[6]. திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, “இனிமேல் என்னை பார்க்கக் கூடாது; இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது’ என மிரட்டினார். அவருக்கு ஆதரவாக பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகியோரும் சேர்ந்து, என்னை மிரட்டினர். இதுகுறித்து பாதிரியார் சார்ந்த சபையில் புகார் தெரிவித்தும், நியாயம் கிடைக்கவில்லை. மேலும் , “என் வாழ்க்கையையும், கண்ணியத்தையும், கற்பையும் இழக்க செய்து என்னை நடு ரோட்டில் நிறுத்திய பாதிரியார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும் பாதுகப்பு கொடுக்க வேண்டுகிறேன்”, இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது[7]. இதையடுத்து கோட்டை மகளிர் போலீசார், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் மிரட்டல் ஆகிய இருபிரிவுகளிலும், அவருக்கு துணையாக இருந்த மூன்று பாதிரியார்கள் மீது மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்தனர். இதையெடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வலர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பிளாரன்ஸ் மேரியை நேற்றூ போல்கீஸ் பாதுபாப்போடு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். திருச்சி எ-1 ஜுடிஸியல் மேஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவரை ஆஜர் செய்தனர். அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடத்த மாஜிஸ்டிரேட் ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார். இன்று புதன்கிழமை சோதனை நடக்கிறது[8].

ராஜரத்தினம்-ப்ளாரன்ஸ்மேரி

ராஜரத்தினம்-ப்ளாரன்ஸ்மேரி

ராஜரத்தினத்தை சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்[9]: இந்நிலையில், “கற்பழிப்பு புகார் கூறப்பட்டுள்ள தூய வளனார் கல்லூரி முதல்வர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு, அவர் சார்ந்த சபையில் முக்கிய பதவி உயர்வு, விரைவில் வரவுள்ளது. அப்பதவிக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வரக்கூடாது என்பதற்காக, கல்லூரியிலேயே மெஜாரிட்டியாக இருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து செய்யும் சதி’ என, முதல்வர் ராஜரத்தினம் தரப்பினர் கூறி வருகின்றனர். பல முக்கிய பிரபலங்கள் படித்த கல்லூரியின் முதல்வர் மீது கற்பழிப்பு புகார் எழுந்து, போலீசார் வழக்கு பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது[10].

பிளாரன்ஸ் மேரி

பிளாரன்ஸ் மேரி

ராஜரத்தினத்தை கைது செய்ய கோரி ஆர்பாட்டம்[11]: இதற்கிடையில் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினத்தை கைது செய்யக் கோரி, மக்கள் கலை இயக்கிய கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்துக்குக் காவல்துறை அனுமதி தரவில்லை என்று தெரிவித்துள்ள ராஜா, “தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று பாமக சார்பிலும் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தை கைது செய்யக் கோரி,  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருச்சி மாநகர பாமக மாவட்டச் செயலாளர் திலீப் குமார் அறிவித்துள்ளார்.

Principal-rajarathinam-with-former-president-kalam

Principal-rajarathinam-with-former-president-kalam


[1] தினமலர், தூயவளனார்கல்லூரிமுதல்வர்மீதுகன்னியாஸ்திரிகற்பழிப்புபுகார், அக்டோபர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105227

[2] St.Joseph’s College is an affiliated First Grade College of the Bharathidasan University. It was established in 1844 by the Fathers of Society of Jesus (The Jesuits). http://www.sjctni.edu/

[3] http://timesofindia.indiatimes.com/india/Alleging-rape-nun-complains-against-Tiruchi-college-head-/articleshow/6738840.cms

[4] http://expressbuzz.com/states/tamilnadu/tn-case-against-principal-for-raping-nun/214696.html

[5] http://www.ndtv.com/article/cities/tiruchirapalli-nun-says-college-principal-raped-her-59275

[6] http://thatstamil.oneindia.in/news/2010/10/13/trichy-st-joseph-college-principal-rajarathinam.html

[7] http://www.dailythanthi.com/article.asp?NewsID=600299&disdate=10/13/2010

[8] http://www.dailythanthi.com/article.asp?NewsID=600299&disdate=10/13/2010

[9] தினமலர், திருச்சிதூயவளனார்கல்லூரிமுதல்வர்சஸ்பெண்ட், அக்டோபர் 13, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105786

[10] http://ibnlive.in.com/generalnewsfeed/news/college-principal-removed-from-post/409300.html

[11] http://www.inneram.com/2010101311152/condemn-demo-against-paster-raped-nun

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

11 பதில்கள் to “பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!”

  1. Margaret Rosaline Says:

    His face proves that he is a criminal and capable of doing anything.

    The woman no doubt has innocent looks, but it is unfortunate that she has yielded to him for some reasons.

    The point is how is that 60 years man could have such relations with 30 years woman, who is just like his daughter?

    • Wilfred Amudha Ganesan Says:

      When the bishops, pastors and other jesuits and high priests come to young girls and women asking for sex, what they would do?

      Moreover, it is not the first time, it happens.

      Te bishops, pastors and priests have been raping young girls and women all the way!

      People read or see them on the TV and forget.

      Even, here also this felloow has been …..ing for the last five / six years and now only the issue is coming out!

  2. கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் எதிரொலி: ராஜரத்தினம் வெளியே, செபஸ்டியன் உள்ளே – தொடரும் மர்மங Says:

    […] [3] வேதபிரகாஷ், பாதிரியார் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு, கருகலைப்பு, போனில் ஆபாச படமெடுப்பு!, https://christianityindia.wordpress.com/2010/10/13/பாதிரியார்-மயக்க-ம… […]

  3. K. Venkatraman Says:

    The face itself shows that he has been crooked, wicked and cunning.

    His eyes shows that he has the qualities of trechery, lust and aggression.

    On the other hand, the face of Florence Mary shows mild, innocence, but behind her eyes, there is determined strong mind shows that she is prepared to do anything.

    In any case, the christians have been spoiling the society and they have not learned the lessons from the past.

    Some 25-30 years back, a Christian priest raped and killed his own daughter-in-law and such lewd and lust activities have been continuing.

    • Wilfred Amudha Ganesan Says:

      The Chuch should immediate action to correct themselves instead of following western culture or the Pope, as the Pope could not do anything with the raping bishope / priests in different countries.

      What best he could do is simply aking “apology” all the way, wherever, he goes!

      One day, when he comes to India or otherwise, he would ask for APOLOGY for raings, that is all!

  4. கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்! « இந்தியாவில் கிருத்துவம Says:

    […] [1] https://christianityindia.wordpress.com/2010/10/13/catholic-priest-drugs-rapes-aborts-takes-porn-vide… […]

  5. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

    […] https://christianityindia.wordpress.com/2010/10/13/catholic-priest-drugs-rapes-aborts-takes-porn-vide… […]

  6. maria Says:

    sammadam illamal than cheythara? Did she tell anythng abt that…Pls dont spoil the name of catolic church..May God bless everyone…

    • vedaprakash Says:

      The Church should be first cleaned thoroughly devoid of such inhuman, illegal and heinous activities.
      There have been many Christian priests, pastors, bishops involved in such heinous crimes – sex related, pedophile, land grabbing, money-swindling, cheating etc.
      There is no meaning in justifying such sins in the name of religion.
      Whoever commits sin has to face the punishment with the Day of Judgment.
      I do not think that God would have two different courts one for ordinary people and another for pastors, bishops etc.

  7. mani Says:

    evai anaithum kattukkathai

    • vedaprakash Says:

      “இவை அனைத்தும் கட்டுக்கதை” என்று சொல்லியிருக்கிறீர்கள்.

      இவ்விஷத்தைப் பொறுத்த வரைக்கும், நிறைய விவரங்கள், ஆதாரங்கள் உள்ளன.

      ஏற்கெனெவே கோர்ட்டிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: